எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஏண்டி வாய தொறயேன்டி. அண்ணா பாரு எவ்ளோ அழகா ஆஆஆ வாங்கிக்குறான். நீ ஏண்டி இப்டி என்ன படுத்துற தன் மடியில் மீது அமர்ந்துள்ள தன் இரண்டு வயது மகள் நக்சத்திராவை திட்டி கொண்டிருந்தாள் வன்ஷி. நக்சத்திராவோ உர்ரென்று முகத்தை வைத்து கொண்டு வாயை திறக்காமல் அமர்ந்து இருந்தாள். அவள் வன்ஷியின் மடியில் இருக்க அவளின் அருகில் சோபாவில் அமர்ந்து வன்ஷி ஊட்டும் உணவை சாப்பிட்டு கொண்டிருந்தான் நான்கரை வயது சூர்யா. குழந்தை கலைந்த பிறகு வன்ஷி சிறிது நாட்கள் கவலையாக இருக்க அநேரத்தில் சூர்யா தான் அவளை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தான். மாறன் அவள் அருகில் இருந்து ஆறுதல் அளிக்க அதிலிருந்து வெளியே வந்தவள் பழையபடி தன் பிஸ்னசை நடத்த தொடங்கினாள். மாறனுடன் அவள் காதல் வாழ்க்கை நல்முறையில் செல்ல இரண்டு மாதத்தில் மீண்டும் கருவுற்றாள். இந்த முறை முதலில் மாறனிடம் கூற அவன் அவளை தூக்கி சுற்றி ஒரு வழி செய்துவிட்டான். அவள் பிரசவத்தில் அவளை விட அவன் தான் மிகவும் துடித்துப்போனான். அவளின் அலறலுக்கு நடுவே குழந்தையின் அழுகுரல் கேட்க மாறனுக்கு உடல் எல்லாம் புல்லரித்துவிட்டது. தன் மகளை தன் நெஞ்சோடு அனை...