எனக்கெனவே நீ பிறந்தாய் 32
தனதுஅலுவலகத்தினுள் நுழைந்த மாறனை பார்த்த அனைவரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்ல அதை சிறு சிரிப்புடன் ஏற்று கொண்டு தன் அறையினுள் நுழைந்தான் மாறன்.
லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவனின் மனது காலையில் தன்னவள் செய்த வேலையையே நினைத்து கொண்டிருந்தது.
**** **** **** ****
காலை,
கண்ணாடி முன்பு நின்று சட்டை பட்டன் போட்டு கொண்டிருந்தான் மாறன். அப்பொழுது அவன் பின்னே இருந்து அவனை கட்டிக்கொண்டாள் அவன் காதல் மனையாள்.
அதில் மெலிதக சிரித்தவன் அவளை தன் முன்புறம் இழுத்து நிறுத்தினான்.
அவள் சிணுங்கி கொண்டே அவன் கழுத்தை சுற்றி கைகோர்த்தாள்.
அவள் நெற்றி மூட்டியவன் என்ன வேனும் என் ஜானு செல்லத்துக்கு,
அது....அதுவந்து... என்று வெட்கப்பட்டுக் கொண்டே அவன் சட்டை பட்டனை திருக்கினாள் வன்ஷி.
அதை ரசித்தவன் அடியேய் என் சட்டையை கிழிச்சிறாதடி. ஆபிஸுக்கு வேற போகணும் என்று கூற அவள்
ஹான் ரொம்ப தான் என்று கழுத்தை
வெட்டி இதழ் சுழித்தாள்.
அதை பார்த்து சிரித்தவன் அவள் கீழ் உதட்டை பிடித்திழுத்து அதில் முத்தம் ஒன்றை வைத்தான். அவன் இதழை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவன் முக்கை பிடித்து ஆட்ட ஹாஹாஹா வலிக்குதுடி பொண்டாட்டி என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
போதும் போதும் உடனே ரொமான்ஸ் ஆரம்பிச்சிருவீங்க என்று கூறியவாறு அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவனுக்கு டை கட்டி விட ஆரம்பித்தாள்.
அவள் கள்ளனோ அவள் முகத்தில் விழும் முடி காற்றைகளை ஒதுக்கி அவள் முகத்தில் தன் மூச்சு காற்று
படரவிட்டவாறு குறும்புகள் செய்ய அதை மனதில் ரசித்தவள் வெளியே செல்ல கோபம் கொண்டாள்.
அவனை கிளப்பியவள் அவன் கை பிடித்தாள்.
என்னடா. என்ன ஆச்சுமா? எதையோ சொல்லணும்னு நினைக்குற. ஆனா சொல்ல மாட்டேங்குற. என்ன ஆச்சு. ஏதாவது பிரச்சனையா?
அவள் இல்லையென தலையாட்ட அப்புறம் என்னமா? உடம்பு சரி இல்லையா. வயிறு வலிக்குதா?இன்னைக்கு உனக்கு பீரியட்ஸ் டேட் கூட இல்லையே. அப்புறம் என்ன?
அதில் சிரித்தவள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். அதை ஒரு கிஃப்ட்ன்னு கூட சொல்லலாம். நம்ம வாழ்க்கையோட பெரிய கிஃப்ட்.
அப்டி என்ன கிஃப்ட் அது. எங்க காட்டு பாக்கலாம்.
ம்ஹும் இப்போ இல்ல ஈவினிங் காட்றேன். இல்ல இல்ல உங்களுக்கு கொடுக்குறேன். இப்போ நீங்க சமத்து பையனா ஆபீஸ்க்கு போய்ட்டு ஈவினிங் சீக்கிரம் வந்துருங்க. உங்களுக்காக நா வைட் பன்னிட்டு இருப்பேன் என்று கூற சரி தான். நீ ஒரு முடிவு பண்ணிட்டா அதை யாராலும் மாத்த முடியாது. என்ன பண்றது. ஈவினிங் வரைக்கும் வைட் பண்ணி அந்த கிஃப்ட் வாங்கிக்குறேன். அதுக்கு அப்புறம் என்ன காக்க வச்சதுக்கு நைட்டு உனக்கு பனிஷ்மெண்ட் தரேன் என்று அவன் கண்ணடித்து கூற அவன் கன்னத்தை வலிக்குமாறு கிள்ளி போதும் போங்க டைம் ஆச்சு என்று அவன் முதுகில் கை வைத்து அவனை தள்ளி கொண்டு வந்தாள்.
அவனும் சிரித்தவாறே அவளிடம் விடை பெற்று அலுவலகத்துக்கு வந்தான்.
***** ***** ******
அதை இப்பொழுது நினைத்து சிரித்தவனின் போன் அலற அதை காதில் வைத்தான் மாறன்.
என்ன தேவமாறுதன் எப்டி இருக்க என்று தீராவின் குரல் ஏளனமாக ஒலித்தது.
நா நல்லா தாண்டா இருக்கேன் என்***##@@@.
டேய் டேய் எவ்ளோ தைரியம் இருந்தா என்ன அசிங்கமா பேசுவ என்று எகிறினான் தீரான்.
ஏன்டா**##@@.நீயே ஒரு தெரு பொறுக்கி நாய். உனக்கே இவ்ளோ திமிரு இருக்கும் போது எனக்கு எவ்ளோ திமிரு இருக்கும் என்று திமிராக கூறினான் மாறன்.
இதோ இந்த திமிரு தாண்டா உன் கிட்ட எனக்கு புடிச்சதே. ஆனா இந்த திமிரு இன்னும் கொஞ்ச நேரத்துல உன் கிட்ட இருந்து காணாம போய்டும் என்று தீரன் புதிர் போட
மாறனின் புருவம் சுருங்கியது.
என்னடா சத்தத்தையே காணோம். நா சொல்றது புரியலையா? சரி சரி உனக்கு புரியுற மாதிரியே சொல்றேன் என்றவன் உன்னோட ஆசை பொண்டாட்டி அதான்டா மிசஸ் தேவமாறுதன் இப்போ என் கஸ்டடில
இருக்கா என்றவனின் பார்வை சேரில் கைகால் கட்டபட்ட நிலையில் இருந்த தேவான்ஷியை நோக்கியது.
அவ்ளோ அடங்கா கோபத்துடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
அதில் அதிர்ந்த மாறன் டேய் என்று கத்த டேய் டேய் கத்தி கத்தி செத்துறாதடா. நீ என் கையால சாவனும். ஏன்டா சாமி இந்த தீரன் மேல கை வச்சோம்ன்னு நீ துடி துடிச்சு சாவனும் என்றவன் தேவான்ஷியின் கன்னத்தில் பளாரென அறைய தேவாவாவாவாவா என்று அலறினாள் வன்ஷி.
ஜானுனுனுனு என்று கத்தியவன் டேய் அவ மேல உன் கை பட்டுச்சு உண்ண கண்ட துண்டமா வெட்டி போட்றுவேண்டா என்று அறையே அலறும் அளவிற்கு கர்ஜித்தான்.
அதில் தீரனே ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டான். அவன் அருகில் இருந்த விக்னேஷிற்கு உயிரே போய்விடும் போல இருந்தது.
இருந்தும் தைரியத்தை வரவழைத்து கொண்ட தீரா டேய் அடங்குடா. என்னடா உன் பொண்டாட்டி இவ்ளோ பெரிய முட்டாளா இருக்கா. அவ புள்ளைய சாரி சாரி உங்க புள்ளைய கடத்திட்டேன்னே ஒரு கதை விட்டேன். அத நம்பி என்ன தேடி வந்து இப்போ என் கிட்ட மாட்டிக்கிட்டா. சோ சேட் அவன் உச்சு கொட்ட மாறன் கோபத்தில் பல்லை கடித்தான்.
உன் பொண்டாட்டி உனக்கு உயிரோட வேணும்னு நீ நினைச்சா உடனே நா சொல்ற அட்ரஸ்க்கு கிளம்பி வா. உனக்கு பத்து நிமிஷம் டைம். அதுக்குள்ள நீ வரல உன் பொண்டாட்டி உயிர் இருக்காது என்றான்.
சரி எங்க வரணும் என்று நிதானமாக
மாறன் கேட்க ***##@@@ இடத்துக்கு வந்துரு. அங்க தான் உன் அழகு பொண்டாட்டி இருக்கா. வா வாடா என்று கத்தியவன் போனை அனைத்து தேவான்ஷியை பார்க்க அவள் கண்ணில் திமிருடன் அவனை நோக்கினாள்.
அதில் கோபம் கொண்டவன் வேகமாக அவள் அருகில் சென்று ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்தான்.
என்னடி இவ்ளோ திமிரு உனக்கு?. உன் புருஷன் வந்து உண்ண காப்பாத்திருவான்னு பகல் கனவு கானாத. அவன் இங்க வந்த அடுத்த நிமிஷம் அவன் பொணமாகிடுவான்.
அதுக்கு அப்புறம் உன்னையும் நா ஆசைப்பட்ட மாதிரி அனுபவிச்சு உண்ண கொல்லுவேண்டி.நீ பன்ன பெரிய தப்பு என்ன தெரியுமா? அந்த மாறனை கல்யாணம் பன்னது தான். அதுக்கான தண்டனை தான் உன்னோட சாவு டி என்று கூற அவள் சிரிக்க ஆரம்பித்தாள்.
அதில் கோபம் கொண்ட தீரா அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.
அதில் அவள் உதட்டில் இருந்து ரத்தம் வழிந்தது.
அவள் அப்பொழுதும் சிரித்து கொண்டே இருக்க அவள் முடியை கொத்தாக பிடித்தவன் என்னடி உண்ண கொள்ள போறேன்னு சொல்றேன் நீ சிரிக்குற. சாக போறோம்னு உனக்கு பயம் இல்ல என்று கத்த டேய் ***த்த அடங்குடா.
நா எதுக்குடா பயப்படனும். என்ன சொன்ன. நீ அவரை கொல்ல போறியா?***##@@ நீ தாண்டா சாக போற. என்னோட தேவா இங்க வந்து உங்க எல்லாறையும் நார் நாரா கிழிச்சு தொங்க விட போறாரு.
மவனே நீ செத்தடா என்று அவள் கூற ஏளனமாக சிரித்த தீரா ஒஹ் அவன் என்ன கொன்னுடுவானா? பாக்கலாம்டி. யார் யாரை கொல்ல போறாங்கன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுரும் என்றான் தீரா.
அதில் சத்தமாக சிரித்த வன்ஷி எப்படியும் நீ சாக போற. அதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டு சாவு என்று அவள் கூற தீராவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
என்னடா யோசிக்குற. நானே சொல்றேன். உன்னோட **##@பிரின்ட்ஸ் அந்த மூணு நாய்ங்க விஷ்வா, ரித்தேஷ், மதன் மூணு பேரையும் போட்டு தள்ளுனது நா தான் என்று திமிராக கூற தீராவும் விக்னேஷும் அதிர்ந்தனர்
என்னடா பாக்குற. ஆமா நா தான் அவனுங்கள கொன்னேன். என் கையால தான் அவனுங்கள துடிக்க துடிக்க கொன்னேன் என்று ஆங்காரமாக கூறி சிரித்தாள் வன்ஷி.
அதில் சினம் கொண்ட தீரா அவளை மீண்டும் கன்னத்தில் அறையை ***த்த நீ தைரியமான ஆம்பளையா இருந்தா என்னோட கை கட்ட அவுத்து விட்டுட்டு அடிடா பாப்போம் என்று அவள் கண்ணில் ரவுத்திரம் பொங்க கூற தீராவும் விக்னேஷும் ஒரு அடி பின்னே நகர்ந்தனர்.
என்னடா பயமா இருக்கா? இது தாண்டா எனக்கு வேணும். உன் சாவு பயம் உன் கண்ணுல தெரியுது. எதிரியோட கண்ணுல சாவு பயத்த காட்டி அவனை கொல்றது தான் இந்த தேவான்ஷியோட ஸ்டைல் என்று வன்ஷி கூற விக்னேஷ் டேய் நம்ம போய்டலாம்டா. எனக்கு என்னவோ தப்பா தெரியுது. அவன் வரதுக்குள்ள இங்க இருந்து போயிடலாம் என்று பயத்தில் கூறினான்.
நீ இதுக்கு மேல தப்பிக்கவே முடியாது. ஏன்னா என் புருஷன் உங்கள விட மாட்டான். சரி சாகுறதுக்கு முன்னாடி ஏன் உங்க பிரின்ட்ஸ் செத்தானுங்க,அப்புறம் நீங்க ஏன் சாக போறீங்கன்னு உனக்கு தெரிஞ்சிக்க வேணாமா என்று வன்ஷியின் குரல் நக்கலாக ஒலித்தது.
தீரனின் கோபம் பன்மடங்கு உயர அவளை அடிக்கும் நோக்கில் அவன் முன்னேற அவளின் காலை ஓங்கி தரையில் அடித்தால் வன்ஷி. அதில் அந்த குடோனே அதிர்ந்து அந்த இடத்தில் புழுதி கிளம்பியது.
அவள் முகம் பெண் சிங்காமாய் மாறி கோபத்தின் அளவை எதிரொலிக்க தீரனே பயந்து ஒரு அடி பின்னே சென்றான்.
நீ ஏன் சகா போற தெரியுமா என்று அவள் கர்ஜிக்க இருவரும் நடுங்கி போயினர்.
நீ சாக போறதுக்கு காரணம் நதியா டா என்று அவள் மீண்டும் கர்ஜித்தாள்.
அந்த பெயரை கேட்ட உடன் தீரனிற்கு
பயம் தொற்றி கொண்டது.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க ஐஞ்சு பேரும் சேர்ந்து நாசம் பண்ணி கொன்னிங்களே. அந்த நதியா தான் உன்னோட சாவுக்கு காரணம். அவ ஸ்ரீ ஸ்ரீன்னு உன்கிட்ட சொல்லிட்டே இருப்பாலே. அந்த ஸ்ரீயே நா தாண்டா என்று கூற தீரனும் விக்னேஷும் அதிர்ந்தனர்.
நாங்... நாங்க அவள கொல்லல.
நா.... நா... அவள் காதலிச்சேன் என்று திக்கி திணறி தீரன் கூறும் போதே "ஏய்ய்ய்ய்ய்” என்ற தேவான்ஷியின் கர்ஜனையில் நடுங்கி போனான் தீரன்.
நீ அவள காதலிச்சியா ஹான் சொல்லுடா நீ அவள காதலிச்சியா என்று கத்த அவனுக்கு இதயமே நின்று விடுவது போல் இருந்தது.
பொறுக்கி எச்சகலை நாயே. காதல்ன்னு சொல்லி காதல அசிங்கப்படுத்தாத டா. பாவம்டா அவ. ஒண்ணுமே தெரியாத சின்ன குழந்தை. அவள போய் என்று கட்டுகளை அவள் கோபத்தில் அவிழ்க்க முயற்சித்தாள்.
இன்னொன்னு தெரிஞ்சிக்கோ. சூர்யாவை பெத்தவ நா இல்ல. அவனை பெத்தவ நதியா என்று கூற தீரன் கண்கள் விரிந்தது.
உன்னோட உயிர் நீர்ல உருவானவன் தாண்டா சூர்யா. ஆனா ஒருநாளும் இந்த உண்மையை அவன் கிட்ட நா சொல்ல மாட்டேன். ஏன்னா அவன பெத்தது வேணா நதியாவா இருக்கலாம். ஆனா அவனோட அம்மா இந்த தேவான்ஷி தேவமாறுதன் மட்டும் தான் என்று கர்வமாக கூறியவள் அதே மாதிரி அவனை உருவாக்குனது மட்டும் தான் நீ. ஆனா அவனோட அப்பா என்னோட தேவா மட்டும் தான்.
அவள கொன்ன உங்களை எல்லாம் பழிவாங்க தாண்டா நா காத்துட்டு இருந்தேன். நினைச்சா மாதிரி அந்த மூணு நாய்கள போட்டு தள்ளிட்டேன். இப்போ மீதி இருக்குறது நீங்க இரண்டு பேரு மட்டும் தான். ஆனா நா உங்களா கொல்ல மாட்டேன். என்னோட தேவாவே உங்க வெட்டி வீசிடுவாறு. இந்நேரம் இங்க வந்துருப்பாரு. உன்னோட சாவு காலம் நெருங்கிடுச்சு அபிதீரன் என்று வன்ஷி கூறி கொண்டிருக்கும் போதே தீரனின் அடியாள் ஒருவன் அவள் காலடியில் வந்து விழுந்தான்.
அதை பார்த்து விக்கினேஷும் தீரனும் பின்னே நகர "வந்துட்டான். என்னோட புருஷன் வந்துட்டான். இனிமே உங்கள யாரலையும் காப்பாத்த முடியாது” என்று அங்காரமாக
சிரித்த வன்ஷி வாயிலை நோக்கி கண் காட்ட அங்கு மாறனும் கண்ணில் தீப்பொறியுடன் கை சட்டையை மடக்கியவாறு வேட்டையாடும் சிங்காமாய் நின்று கொண்டிருந்தான்.
பழி வெறி படலம் தொடரும்.....
Comments
Post a Comment