எனக்கெனவே நீ பிறந்தாய் 1

 

மாளிகை போன்ற அந்த நான்கு மாடி கட்டிடம் பளிச்சென்ற தோற்றத்துடன் வீற்றிருந்தது. வேலையாட்க்கள் மட்டுமே  நூற்றுக்கு மேற்பாட்டோர் இருப்பர். சுற்றி எத்திசையில் பார்த்தாலும் பச்சை பசேலென வீட்டை சுற்றி தோட்டம். தோட்டத்திற்கு நடுவில் அந்த மாளிகை அமைந்துள்ளது.

காம்பவுண்டில் காரின் ஹாரன் சத்தம் கேட்க காவலாளி ஓடி சென்று கதவை திறந்தான். கிட்டத்தட்ட இருபது கார்கள் வீட்டுக்குள் நுழைய வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு காரின் அருகில் பணிவுடன் நின்றனர்.

முதலில் இறங்கிய காவலாளி ஒருவன் ஒரு காரின் கதவை திறந்துவிட அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள்.
கண்ணில் ஒரு திமிர், சிரிக்க மறந்த உதடுகள் எப்பொழுதும் கோபம் குடிகொண்டிருக்கும் உணர்வுகள் துடைத்த முகம், ஒருவரை பார்த்த உடன் எடை போடும் குணம் முழுதாக சொல்ல வேண்டுமென்றால் மனித உருவில் உள்ள ஒரு லேடி ரோபோர்ட். அவள் தேவான்ஷி.

இவளின் இந்த குணம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான்
அவளிடம் வந்தது. இதற்கான
காரணம் ? இனி வரும் காலங்களில் அறிவோம்.

அவளுக்கென்று அவளை பாதுகாக்க எப்பொழுதும் அவளை சுற்றி நூறு கார்ட்ஸ் இருப்பர். ஆனாலும் அவளோ
யாரையும் நம்பமாட்டாள். ஏனெனில் அவளுக்கு ஆண்களின் மீது அவ்வளவு
வெறுப்பு. ஆண்கள் என்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பது அவள் எண்ணம்.

இருபத்திமூன்று பருவநங்கை. பால்வண்ண நிறங்கொண்டவள்.
இடைவரை நீண்ட கூந்தலை போனிடைல் போட்டு கருப்பு ஸ்கர்ட் வெள்ளை  டீஷர்ட் அணிந்து நவீன கால அர்னால்டு போல தோற்றம் கொண்டு இருந்தாள்.

அவள் வாழ்வில் நம்புவது அவள் தந்தையை ராகவனை மட்டுமே. அவள் சிறுவயதில் அவளின் தாய் பணத்திற்காக வேறொருவனுடன்
சென்று விட தேவான்ஷியின் தந்தையை அவரது உறவினர்கள் வேறு ஒரு திருமணம் செய்ய வற்புறுத்தினர். ஆனால் சிறுகுழந்தையான இவளின் நலனிற்காக  அவர் அவ்வாறு செய்யாமல் இவளை வளர்ப்பதிலும் தனது பிஸ்னசை உயர்த்துவதிலும் முனைப்பு காட்டினார்.

அதன் விளைவாக இப்பொழுது இந்தியாவின் டாப்10 கம்பெனிகளில் மூன்றாவது இடத்தில் ராகவனின் D.V. இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. தன் மகளின் பெயரான தேவான்ஷி என்பதை D.V
என்று வருமாறு பெயர்வைத்தார்.

அனைவரும் தேவான்ஷிக்கு  மரியாதையாக வணக்கம் தெரிவிக்க எப்பொழுதும் போல  இறுகிய முகத்துடனே அதை சிறு தலையைசைப்புடன் ஏற்றுக்கொண்டு வீட்டீற்குள் நுழைந்தாள்.

அவள் வீட்டீற்குள் நுழைய அவளை இன்பமுகத்துடன் வரவேற்றுஅனைத்து கொண்டார் ராகவன். காரணம் லண்டனில் நடந்த இன்டெர்நேஷனால்
கான்பிரென்சில் பங்கேற்று தன் கம்பெனிகளின்  சிறப்புகளை விளக்கி
தனக்கான இடத்தை பிடித்த இப்பொழுது ஒரு பெரிய பிஸினஸ்வுமனாக உருவெடுத்து
தன் தந்தைக்கு ஓய்வளித்து
கம்பெனியை ஒற்றை பெண்ணாக
சிறப்புடன் வழி நடத்தி கொண்டிருக்கிறாள்.

அந்த கான்ப்ரன்சில் ஒரு பெரிய ப்ரொஜெக்டை  கைவசப்படுத்திவிட்டு
ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தான் வீடு திரும்பி இருக்கிறாள்.

ராகவன்: அம்முமா எப்படிடா இருக்க?உன்ன பார்த்து ஒரு வாரம் ஆச்சு.சரியா சாப்ட்டியா இல்லையா. உடம்பு இளச்சி
போய் இருக்கு. உன்ன தனியா விட்டுருக்க கூடாது. வேலை வேலைனு உடம்ப எப்டி ஆக்கி வச்சிருக்க பாரு என்று பாசத்தை கொட்டினார் அந்த அன்பு தந்தை.


தேவான்ஷி: ப்பா ஐ அம் குட். எனக்கு எந்த ப்பிரச்சனையும் இல்லை. நா நல்லா தான் இருக்கேன். ஜஸ்ட் என்ன பார்த்து ஒன் வீக் தான் ஆகுது. அதுக்குள்ள ஏன் இவ்ளோ ஃபீல் பண்றீங்க. இதுல ஒரு நாளைக்கு ரெண்டு வீடியோ கால் வேற. அப்டி இருந்தும் ஏன்ப்பா கவலப்படுறீங்க.

ராகவன்: ரெண்டு வீடியோ கால் பண்றது உன்மை தான் . ஆனா டூ
டேஸா நீ நார்மல் கால் கூட பன்னலையே என்று முகத்தை திருப்பினார்.

தேவான்ஷி: சரி சரி கோவப்படாதிங்க.
எனக்கு நிறைய ஒர்க் ப்பா அதான் கால் பன்ன முடில்ல. ப்ளீஸ் மனிச்சிடுங்க என்று இருகாதையும் தன் இருகைகளால் பிடித்து மன்னிப்பு யாசிக்க பாசத்துடன் அவள் தலையை கோதினார்.

ராகவன்: சரி டா தங்கம். நீ என்ன ஈஸியா சமாளிச்சிட்ட. ஆனா உள்ள இருக்குற இனொருத்தர எப்டி சமாளிக்க போன்ற? என்று கேலியுடன் வினவ அய்யோயோ அவரை மறந்துட்டேன். இதோ இருங்க. கால்ல விழுந்தாவது பேசி சமாதனம் பன்னிறனும் என்று வேகவேகமாக ஓட
ராகவனும் சிறு சிரிப்புடன் அவள் பின்னே மேலே சென்றார்.

அந்த அரண்மனை போன்ற வீட்டில் மூன்றாவது தளம் முழுவதும் தேவான்ஷியுடையது.
அவள் தற்காப்பு கலைகளிலும் சிறந்தவள் என்பதால் ஜிம், லைப்ரரி,
அவளுக்கான ஆபிஸ் ரூம், என் அனைத்து சகல வசதிகள் உடன் அந்த மூன்றவது தளம் இருக்கும்.

தனது அறையில் அவள் நுழைய அவள் பின்னே ராகவனும் நுழைந்தார்.
அங்கே கட்டிலின் மேல் ஒரு உருவம் சுவற்று புறம் திரும்பி கைகளை கன்னத்தில் வைத்துக்கொண்டு கோப முகத்துடன் அமர்ந்து இருந்தது.

செல்லக்குட்டி என்று அழைக்க அந்த உருவம் திரும்பவே இல்லை. பட்டுக்குட்டி என்று அழைக்க எந்த பதிலும் இல்லை. அம்மா கிட்ட பேச மாட்டீங்களா தங்கபுள்ள என்று கேட்க
அப்பொழுதும் அமைதியாக இருக்க வன்ஷி ராகவன் புறம் திரும்பினாள். பாவமாய் அவரை பார்க்க அவர் எனக்கு இதுக்கும் சம்பந்தமே இல்லப்பா என்பதை போல வேறுபுறம்
திரும்பி கொண்டார்.

அதில் உதட்டை பிதுக்கியவள் அந்த உருவத்தை மெல்ல மெல்ல நெருங்கி அதன் முன்பு மண்டியிட்டு அமர்ந்தாள்.
சாரிடா செல்லம். ரொம்ப வேலை அதிகம். அதான் போன் பன்ன முடில்ல. அம்மா கிட்ட பேச மாட்டீங்களா பட்டு என்று கேட்க அவளை பாய்ந்து அணைத்துக் கொண்டது அந்த சின்ன ரோஜா மொட்டு. அவன் சூர்யா. தேவான்ஷியின் ஆருயிர் புதல்வன்.
ஒன்றரை வயதுடைய சூர்யா தன் தாய் போலவே பிடிவாத குணம் கொண்டவன். அவனிற்கு எது வருமோ வராதோ ஆனால் கோபம் மட்டும் மூக்கின்மேல் வரும். அவள் தாயின் அனைத்து குணத்தையும் உள்ளடக்கியவன்.

மிகவும் சுட்டி தனம் மிகுந்த குழந்தை.
தாய் என்றால் அவனுக்கு உயிர். வன்ஷிக்கும் தன் மகன் தான் தன் உலகம். அவள் வாழ்வதே அவனுக்காக தான்.

வன்ஷி: சாரிடா தங்கபுள்ள. அம்மா மேல கோவமா?

சூர்யா: போ பேசாத. நா உன் கிட்ட கோபம். என் கூத நீ பேதவே இல்ல. நா அதுதேன்(அழுதேன்) தெதியுமா? என்று தன் மழலை மொழியில் கோபம் கொள்ள அவனை வாரி அணைத்து முத்த மழை பொழிந்துவிட்டாள் பேதை.

இனிமே அம்மா பேசாம இருக்க மாட்டேன். அம்மா கிட்ட நீங்க பேசலனா அம்மா அழுவேன் என்று அவள் போலியாக கண்ணை கசக்க அதை உண்மை என நம்பிய சிறு மொட்டு அவள் கையை விலக்கி அம்மா நான் உன்கிட்ட பேதுவேன். நீ அழாத. அப்பலம் (அப்புறம்) சூர்யாவும் அதுவான் (அழுவான்)என்று கண் கலங்கி கூற அவன் கண்ணீரை துடைத்து நெற்றியில் முத்தமிட்டவள்
என் செல்லம் என்று அவனை கொஞ்சி தீர்த்தாள்.

இதனை பார்த்த ராகவனுக்கு மனம் குளிர்ந்து போனது. அன்று முழுவதும்அவனுடன் நேரத்தை செலவிட்டு அவனுக்கு உணவூட்டி அவனை தன் நெஞ்சில் சாய்த்து கதை கூறி உறங்க வைத்தவள் அவனை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்துவிட்டு தன் ப்ரைவேட் அறையில் நுழைந்தாள்.

நுழைந்தவள் அங்கே சுவரில் மாட்டபட்டிருக்கும் ஒரு படத்திற்கு முன்பு நின்று அதனை வெறித்து பார்த்தாள்.
கண்டிப்பா உனக்கு பன்ன சத்தியத்தை நிறைவேத்துவேன். அந்த நாய்ங்கள
பழி வங்குவேன். விட மாட்டேன் ஒருத்தனையும் விட மாட்டேன். துடிக்க துடிக்க கொள்ளுவேன். அதுக்கான நாள் ரொம்ப தூரத்துல இல்ல என்று தான் மனதினுள் சபதம் எடுத்து கொண்டாள்.

****************

அண்ணா எழுந்திரிங்க. டைம் ஆச்சு. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நீங்க எத்தனை கம்பனியோட
எம்.டி. நீங்களே இப்டி தூங்கிட்டு இருந்தா எப்டி. அண்ணா என் செல்ல அண்ணால. ப்ளீஸ் எழுந்திரு என்று கெஞ்சி கொண்டிருந்தாள் ஆராத்யா.

ஆரு ப்ளீஸ். டோன்ட் டிஸ்ட்ரப் மீ. நைட் தூங்கவே லேட் ஆகிடுச்சுமா. இன்னைக்கு மீட்டிங் கேன்சல் பன்னிடு
என்று கூறிவிட்டு போர்வையை தலை வரை போர்த்தி கொண்டு உறங்க தொடங்கினான் தேவமாறுதன்.

நோ நோ அண்ணா. வாய்ப்பில்ல ராஜா. நீ இப்போ எழுந்துக்கல. நா உன் மூஞ்சில தண்ணிய ஊத்திடுவேன் என்று அவனை மிராட்டவே வேறு வழியின்றி உம்மென்ற முகத்துடன் எழுந்து அமர்ந்தான்.

அவனை பாத்ரூமில் தள்ளி கதவை சாத்தியவள் அவனுக்கான உடைகளை தயார் செய்துவிட்டு கீழே சென்றாள்.
வெளியே வந்தவன் முழு பிஸினஸ்மேனாக தயார் ஆகி  வந்தான். சிறிது நேரத்திற்கு முன்பு குழந்தை போல் நடந்து கொண்டவன் இவன்தானா என்று என்னும் அளவிற்கு அவன் தோற்றம் மாறி இருந்தது.

இருபதிஆறு வயது கட்டிளங்காளை.
தன் சொந்த முயற்சியால் இன்று பல கம்பணிகளின் உரிமையாளன். தாய் தந்தையை பதிமூன்று வயதில் இழந்து தன் சொந்த முயற்சியினால் ஸ்காலர்ஷிப்பில் படித்து தன் ஒரே ஆசை தங்கையுடன் வசித்து வருகிறான்.

அவன் முழு சந்தோஷமே அவன் தங்கை ஆராத்யா மட்டுமே. ஒரு விபத்தில் தாய் தந்தையை இழக்கும் பொழுது அவன் தங்கை எட்டு வயது குழந்தை. அன்றிலிருந்து அவன் தங்கைக்கு இவனே தாய் மற்றும் தந்தையாக இருந்து அனைத்தையும் செய்வான். அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டுமென்று நினைப்பவன்.

உணவு அருந்தி கம்பெனிக்கு புறப்பட்டவன் நேராக தன் அறையினுள் நுழைந்தான். அவனுக்கான அன்றைய நிகழ்ச்சிகளை அவன் பி.ஏ ஆரத்தியா கூறினாள்.  அவள் தான் அவன் பி.ஏ.
அவளது ஆசை ,தான் ஒரு சக தொழிலாளியாக இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட பிறகே பிஸ்னல் உலகில் நுழைய
வேண்டும் என்பது தான்.

இதை மாறனிடம்(தேவமாறுதன் ரொம்ப பெருசா இருக்கு. சோ செல்லமா மாறன்னு கூப்டுக்கலாம்.
ஷப்ப்ப்பா எப்டிலாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு.ஈஈஈஈ😁😁😁😁)
கூறும்போது அவன் தன் தங்கையை நினைத்து பெருமை கொண்டான்.
அவள் ஆசை படியே தன் பி. ஏ ஆக்கி அவளுக்கு பிஸ்னஸ் பற்றி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

அன்றைய அனைத்து மீட்டிங்கையும் முடித்து ,தனக்கான ப்ரொஜெக்ட்டை
கைப்பற்றி தன் தங்கையுடன் வீடு திரும்பியவன்  இரவு உணைவை தவிர்த்து தன் அறையில் உள்ள பால்கனியில் நின்று இருட்டை வெறித்து கொண்டிருந்தான்.

திடிரென்று அவன் மனதில் அவன்
வாழ்வில் மறக்கமுடியாத அந்த நிகழ்வு தோன்ற தனிமையை தேடி வந்துவிட்டான்.

நதியா சாரிடா. என்ன மனிச்சிறு. நா உன்ன பாதுக்காக்கல. என்ன நம்பி வந்த உன்ன நா கை விட்டுட்டேன்.என்ன மனிச்சிருமா என்று மானசீகமாக அவளிடம் மனதில் மன்னிப்பி வேண்டினான்.

அப்படி அவன் வாழ்வில் என்ன நடந்து?
யார் இந்த நதியா? ஏன் மாறன்
அவளை பாதுகாக்கவில்லை. அதற்கான காரணம். இனி  அறிவோம்............

***************************

சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்

இன்பம் இரவுதான்
எல்லாம் உறவுதான்

என்று அந்த கட்டிடத்தின் நான்கு மூலைகளிலிலும் பாடல் காதை கிழிக்குமாறு ஒலிக்க உள்ளே ஐந்து ஆண்கள் மது கோப்பையுடம் போதையின் பிடியில் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தனர்.

டேய் மச்சா இன்னைக்கு வரவ நல்ல பீஸா இருக்கணும். நேத்து வந்தவ ரொம்ப மொக்கடா. ஒரு ஸ்ட்ரக்சர் கூட இல்லை. சரியா கம்பனி குடுக்கல. இன்னைக்கு எவன் நல்ல பீஸா கொண்டு வரிங்களோ அவனுக்கு நல்ல செட்டில்மெண்ட் கிடைக்கும் என்று கீழ் தரமாக கூறினான் அபிதீரன்.

உலகில் உள்ள அனைத்து தீயபழக்க
வழக்கங்களையும் உள்ளடக்கியவன்.
பார்த்த பெண்களை எல்லாம் கட்டிலில் பந்தாடும் மனித உருவில் உள்ள மிருகம். இன்றும் அதே போல் ஒரு பெண்ணை தன் பசிக்கு இரையாக்க போகிறான். அவனுடன் அவன் தோழமை என்று சுற்றும்   ரித்தேஷ்,விஷ்வா, விக்னேஷ் மற்றும் மதன் என்னும் நான்கு வெறிநாய்கள் அதே வேலையை செய்ய போகிறார்கள்.

விஷ்வா: மச்சா இன்னைக்கு புது பீஸ் மாட்டல டா. ஒரு ஒன் நைட் ஸ்டன்ட் தான் வரா. ப்ளீஸ் அட்ஜஸ்ட் பன்னிக்கோ. நாளைக்கு அந்த பொம்பள கிட்ட சொல்லி பிரேஷ் பீஸ் ரெடி பண்றேன்.

மதன்: ஏன்டா எப்பையுமே அங்கதான் புதுசு புசுசா டெய்லி பொண்ணுங்கள கொண்டு வராங்களே. அப்போ இன்னைக்கு அதே மாதிரி வந்துருக்கும்ல. அதுல ஒன்ன கேக்க
வேண்டியது தானே.

விஷ்வா: இன்னைக்கு புதுசா எவளும்
வரலையாம். அதான் பழைய பீஸ அனுப்புறாங்க.

தீரன்: இன்னைக்கு ஒருநாள் தான். நாளைக்கு இது தொடர்ந்துச்சுனா வேற இடத்துல ரெடி பண்ணிடு. புரியுதா?

சரி மச்சா என்று அவன் கேவலமாக இளிக்க அவனுடன் மற்ற ஈனபிறவிகளும்  சேர்ந்து சிரித்தனர்.

அவர்களுக்கு எப்பொழும் ஒரு விபசார விடுதியில் இருந்து தினமும் ஒரு பெண் என்று அனுப்பி வைக்கபடுவர். வரும் பெண்களில் சிலர் உயிருடன் திரும்புவார். பலர் உயிரில்லா உடம்பாக
ஆகிவிடுவர் இந்த காமவெறி பிடித்த மிருக்கங்களினால்.

அபிதீரன் தன் அதிகார சக்தியால் எந்த விடயமும் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்வான். இதற்கு அவன் தந்தையும் துணை. அவன் தாய் ஒரு வாயில்லா பூச்சி. தன் மகனை சரியாக வளர்க்கவில்லையே என்று பரிதவிக்கிறது அந்த தாய் உள்ளம்.
கண்ணுகெட்டிய  பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் என்ன ப்ரோயோஜனம்.

தேவான்ஷியின் பழி வாங்கும் எண்ணம் நிறைவேறுமா? தேவமாறுதன் செய்த தவறு என்ன? காம வெறிபிடித்த மிருங்கங்கள் அழிக்கப்படுமா?................

பழி வெறி படலம் தொடரும்..............


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....