எனக்கெனவே நீ பிறந்தாய் 10
மறுநாள் விடியலில் முதலில் விழித்த வன்ஷி தன் அருகில் தூக்கத்தில் கூட தன்னை விடாது அணைத்து உறங்கும் மாறனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
தந்தையும் மகனும் உறங்கும் அழகை ரசித்தவள் அவனிடம் இருந்து பிரிந்து குளியலறை புகுந்தாள்.
குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட ஒரு டவலை தலையில் கட்டிக்கொண்டு மெல்லிய சிகப்பு நிற காட்டன் புடவையை அணிந்து கொண்டு வெளியே வந்தவள் அப்பொழுது ஒரு காட்சியை கண்டு அப்படியே நின்றாள்.
அங்கு மாறனின் கட்டை விரலை தன் வாயில் வைத்து சப்பியவாரே அவன் மார்பின் மேல் உறங்கிக் கொண்டிருந்தான் சூர்யா. அதை பார்த்த வன்ஷிக்கு சொல்லமுடியா உணர்வு மனதை தாக்கியது. தலையை தட்டி நினைவுக்கு வந்தவள் கண்ணாடி முன்பு நின்று தலையை காய வைக்க ஆரம்பித்தாள்.
இரண்டு பக்க முடி எடுத்து அதை சிறு கிளிப்பில் அடக்கியவள் மஞ்சள் தாலியை சேலையினுள் போட்டு கொண்டாள். நெற்றியில் சிறு போட்டு ஒன்றை வைத்தவள் கண்ணில் மை வைத்தாள். பின்பு நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க செல்லும் போது ஒரு கரம் பின்னிருந்து அவள் இடையை சுற்றி வளைத்து அவளை அணைத்துக்கொண்டது.
அந்த கரத்திற்கு உரிமையானவனை அறிந்து கொண்ட வன்ஷி கண்ணாடி வழியே அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் இதழ் உரசியவாறு நீ என்னோட பொண்டாடியா என் கூட இப்டி இருக்கணும்னு எனக்கு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா?. டுடே ஐ அம் வெரி ஹாப்பி என்றவன் அவளை திருப்பி அவள் உச்சியில் குங்குமத்தை வைத்து நெற்றியில் முத்தமிட்டு குளிக்க சென்றுவிட்டான்.
அவன் கூறியதை கேட்டு அவள் குழப்பம் அடைந்தாள். இவன் பணத்திற்காக தான் நம்மை திருமணம் செய்துகொண்டான். அதற்கு காதல் என்று பெயர் வைக்கிறானே.
ரொம்ப நாள் ஆசை என்று கூறுகிறான். ஒரு வேலை நம்மை இவன் உண்மையில் விரும்பிக்கிறானா இல்லை அனைத்தும் நடிப்பா என்று அவள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க சூர்யாவின் ம்மா என்ற சிணுங்களில் தன் யோசனைகளை விடுத்து அவனிடம் ஓடினாள்.
துயில் கலைந்து எழுந்த சூர்யா கண்களை திறவாமலேயே அவளை நோக்கி கைகளை நீட்ட அவனை தூக்கிக்கொண்டால் வன்ஷி.
குளித்து முடித்து வெளியே வந்த மாறன் உடை மாற்றுவதற்காக தன் ஆபிஸ் அறையினுள் நுழைந்துகொண்டான்.
பின்பு சூர்யாவை தூக்கி கொண்டு குளியலறை சென்றவள் எப்பொழுதும்
போல அவன் வாலுத்தனங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவனை குளிக்க வைத்து தயார் செய்து வெளியே அழைத்து வர மாறன் அங்கிருந்து எப்போதோ கிளம்பி இருந்தான்.
இவர் எங்க போனாரு என்று யோசித்தவறே சூர்யாவை தூக்கி கொண்டு கீழே வந்த வன்ஷியை வரவேற்ற ஆராத்யா அவளிடம் இருந்து சூர்யாவை வாங்கி கொண்டாள்.
டேய் குட்டி பையா. நேத்து என்னமா அழுகுற நீ. நீ அழுறத பார்த்து உங்க அப்பாவே வந்து உண்ண கூட்டிட்டு போயிட்டாரு என்று ஆராத்யா அவன் கன்னத்தை கிள்ள அழகாய் சிரித்தான் சூர்யா குட்டி.
ஆராத்யா பாட்டிலில் இருந்த பாலை அவனுக்கு புகட்ட போக உனக்கு எதுக்கு சிரமம் ரித்யா. நா அவனுக்கு கொடுத்துக்குறேன். நீ சாப்பிடு என்றால் தேவான்ஷி. இதுல என்ன சிரமம் இருக்கு அண்ணி. நா அவனுக்கு பால் கொடுத்துக்குறேன். நீங்க முதல்ல உட்கார்ந்து சாப்பிடுங்க என்றவள் அவளை அமர வைத்து அவளுக்கு உணவு பரிமாறினாள். உங்க அண்ணா எங்க ரித்யா. ஆளையே காணோம் என்று வன்ஷி கேள்வி எழுப்ப தெரில்ல அண்ணி. நா காலைல இருந்து பாக்கல
என்றாள். அண்ணி என்று ஆரத்தியா அழைக்க அவளை பார்த்தாள் வன்ஷி.
நீங்க என்ன ரித்யான்னு கூப்பிடறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இனிமே இப்படியே கூப்பிடுறீங்களா என்று கேட்க சிறு சிரிப்புடன் தலையசைதால் வன்ஷி.
டைனிங் டேபிளின் மீது சூர்யாவை அமர வைத்து ஆராத்யா அவனுக்கு பாலை புகட்ட அவன் த்தை. ஏக்கு பால் வேணாம். ஏக்கு அது பிதிக்காது. வேணாம் என்று தன் பிஞ்சு கைகளால் தன் வாயை மூடி கொண்டான்.
செல்லம் கொஞ்சம் குடிடா. இது குடிச்சா உடம்பு ரொம்ப ஸ்டென்ரத். ப்ளீஸ் என் பட்டுக்குட்டில கொஞ்ச குடிடா என்று கெஞ்ச அவனோ அடம்பிடித்து கொண்டிருந்தான்.
சூர்யா அடி வாங்க போற நீ. அத்தை சொல்றாங்கல. ஒழுங்கா பால குடி என்று அதட்ட அவன் உதட்டை பிதுக்கி அழ தயாரானான். அவன் கண்ணில் இருந்து நீர் கீழே விழும் முன் அவனை தூக்கி கொண்டான் அவனின் தந்தை.
ஜானு இப்போ எதுக்கு அவனை திட்டுற. அவன் சின்ன பையன். அப்டி தான் சொல்லுவான். நாம தான் அவன் கிட்ட பேசி எப்படியாவது அவனை சாப்பிட வைக்கணும் என்றவன் தன் தாயையே கண்ணீருடன் பார்த்து கொண்டிருக்கும் சூர்யாவின் முகத்தை
தன்னை நோக்கி திருப்பினான்.
சூர்யா செல்லம் அப்பா சொன்னா கேப்பீங்க தன. நீங்க ரொம்ப ஸ்ட்ராங் பாய் ஆகணும் தான என்று கேட்க அவன் விசும்பலும் ஆமென தலையாட்டினான்.
அப்போ நீங்க பால குடிச்சா தான் அத்தை சொன்ன மாதிரி ஸ்ட்ராங் ஆக முடியும். அப்புறம் எல்லாரையும் டிஸ்யூம் டிஸ்யூம் பன்ன முடியும் சென்று செய்கையுடம் செய்து காட்ட கல கலவென சிரித்த சூர்யா அழகாக எல்லா பக்கமும் தலையாட்டினான்.
பின்பு அவனுக்கு பாலை புகட்டிய மாறன் சிறிது நேரம் கழித்து இட்லியை
பிசைந்து ஊட்ட அதையும் சமத்தாக
சாப்பிட்டான் சூர்யா. பின்பு ஆராத்யாவிற்கும் மாறன் ஊட்ட வன்ஷி வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள். ஏனென்று தெரியாமல் பெண்ணின் உள்ளம் அவன் தனக்கும் அவ்வாறு ஊட்டுவானா என்று ஏங்க ஏங்கிய மனதிற்கு கடிவாளம் இட்டு மறைத்தாள் வன்ஷி.
சிறிது நேரத்தில்
வீட்டிற்கு நிறைய பார்சல்கள் வந்து இறங்க வன்ஷியும் ஆராத்யாவும் என்னவென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு வந்தவன் சூர்யாவுடன் சோபாவில் அமர்ந்தான். வந்த ஆட்களில் ஒருவன் டேபிளில் மீது சூர்யாவிற்கு ஏற்ற அனைத்து உடைகளையும் எடுத்து வைத்தான்.
சூர்யா கண்களை விரித்து அனைத்து உடைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு தேவான்ஷிக்கு தேவையான அனைத்து விதமான உடைகளும் வந்து இறங்க இந்த முறை கண்களை விரிப்பது வன்ஷியின் முறையாயிற்று.
இதற்க்காக தான் காலையில் வேகமாக வெளியே சென்றுள்ளான் என்பதை அறிந்துகொண்டள்.
என்ன அண்ணா எல்லருக்கும் பார்த்து பார்த்து வாங்கிருப்பீங்க போல. நாங்கலாம் நியாபகத்துல இருக்குறோமா என்று கேலி செய்திட அவளிற்கும் சேர்த்து வாங்கிய உடைகளை காட்டினான் மாறன். அதை பார்த்து சிரித்தவள் அண்ணான்னா அண்ணா தான் என்று அவன் கழுத்தை கட்டி கொண்டாள்.
அதை பார்க்க பிடிக்காத சூர்யா அவள் கைகளை விலக்கி போ இது என்னோத அப்பா. நீ எதுக்கு கத்திப்பிதிக்குற என்று சிறு மூக்கு சிவந்து கோவம் கொண்டு வினவ அடேய் இவரு முதல்ல எனக்கு அண்ணாடா. அப்புறம் தான் உனக்கு அப்பா. என்னோட அண்ணன நா அப்டி தான் கட்டி புடிப்பேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று மீண்டும் அவனை கட்டிக்கொண்டாள்.சூர்யா அவள் கையை எடுத்து விட்டு என்னோட அப்பா என்று கூற அவள் என்னோட அண்ணா என்று ஒருபுறம் கூற இவர்களின் சிறுபிள்ளை தனமான சண்டையை ரசித்து கொண்டிருந்த மாறன் இருவரையும் இருபக்கமும் அனைத்து நீங்க ரெண்டு பேருமே எனக்கு குழந்தைங்க தான். இனிமே சண்டை போட கூடாது என்று கூற இருவரும் சமாதானம் அடைந்து ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டனர்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த தேவான்ஷிக்கு எரிச்சலாக இருந்தது. எப்டி தான் எல்லாரையும் ஈஸியா மயக்குறான்னு தெரில்ல. அவனோட நடிப்புல யாரு வேனா மயங்கலாம். ஆன இந்த தேவான்ஷி மயங்க மாட்டா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அண்ணி என்ன நின்னுகிட்டே இருக்கீங்க. அண்ணா உங்களுக்காக ட்ரெஸ்லாம் வாங்கிட்டு வந்துருக்காரு. நீங்க அவருக்கு ஏதும் ஸ்பெஷலா குடுக்கலையா என்று குறும்பாக வினவ அவள் காதை பிடித்து திருகிய மாறன் வயசுக்கு ஏத்த மாதிரி பேசணும்.பேச்சை பாரு என்று கூறியவன் மேலும் அவள் காதை திருக
சூர்யா அதை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.
என்ன பார்த்தா சிரிக்கிற உன்ன என்ன பண்றேன்னு பாரு என்று ஆராத்யா சூர்யாவை துரத்த அவன் தத்தி தத்தி வீட்டையே சுற்றி ஓடினான்.
ஆரு பார்த்து தம்பி விழுந்துற போறான் என்று கத்திய மாறன் தேவான்ஷியிடம் வந்து அவளை இடையோடு பிடித்து தன்னோடு இறுக்கி கொண்டான்.
அதில் நெளிந்தவள் மாறன் என்ன பண்றீங்க. யாராவது பாத்துற போறாங்க விடுங்க என்று கூற என் பொண்டாட்டிய நா கட்டிப்புடிக்குறேன். எவன் என்ன கேப்பான் என்றவன் பாப்பா தங்கச்சி சொன்னது கேட்டியா?. நா ட்ரெஸ்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். என்ன கொஞ்சம் கவனிக்க கூடாதா அவள் இதழ் நோக்கி குனிய அவனை தள்ளி விட்டு அறையை நோக்கி அவனின் காதல் ராட்சஸி.
நீ எங்க போனாலும் உண்ண விட மாட்டேன் பாப்பா என்றவன் அவளை துரத்திக்கொண்டு பின்னே ஓடினான்.
அவள் வேகமாக உள்ளே சென்று கதவை அடைக்கும் முன்பு உள்ளே சென்றவன் அவளை தள்ளி சுவற்றில் சாய்த்தான். மேல் மூச்சு கீழ் வாங்க இமைகளை பட படவென பட்டம் பூச்சு அடித்துக்கொண்டிருக்கும் அவளை பார்க்கும் பொழுது அவனுக்கு காதல் உணர்வு அதிகரித்தது.
சேலையில் ஒளிந்திருந்த அவள் பால் வண்ண வெற்றிடையில் தன் கை வைத்து அவன் இறுக்க அவளுக்கு உடம்பு தூக்கி போட்டது. தன் மூச்சு காற்றை அவள் முகத்தில் படறவிட்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். பின்பு கண்கள் கன்னம் மூக்கு கழுத்து என ஒரு இடம் விடாமல் முத்தமிட்டவன் அவள் இதழை வஞ்சமின்றி கொய்தான். முதலில் அதிர்ந்தவள் விழி விரித்து அவனை பார்த்தாள்.அவன் மேலும் மேலும் அவள் இதழில் தேன் குடிக்க மெது மெதுவாக தன் கண்களை மூடி கொண்டாள். அவளின் ஒரு கை அவன் கேசத்தினுள் நுழைந்து கோதிக்கொண்டிருக்க மற்றொரு கை அவன் சட்டையை இறுக பற்றி இருந்தது.
நேரம் நீண்டு கொண்டே போக விருப்பமின்றி அவள் இதழை விட்டவன்
அவள் இன்னும் கண்கள் மூடி அதே நிலையில் இருக்க பித்தேறி போனவன் மீண்டும் இதழோடு இதழை சேர்த்தான்.
தன் பழி எண்ணம் விடுத்து அந்த நேரத்தில் மாறனின் ஜானுவாக மாறி அவனுக்கு இசைந்து கொடுத்தாள் தேவான்ஷி
******* ******** ******
இங்கு ஒருவன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் ரத்தகளரியாக அந்த குடோனில் உள்ள ஒரு தூணில் கட்டப்பட்டு இருந்தான்.
பழி வெறி படலம் தொடரும்..........
Comments
Post a Comment