எனக்கெனவே நீ பிறந்தாய் 5

தேவமாறுதன் தேவான்ஷியின் திருமணத்தை மிக பெரிய அளவில் விமர்சையாக செய்ய வேண்டும் ராகவன் கூற அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள் வன்ஷி.

தேவான்ஷி: ப்பா எங்க கல்யாணம் சிம்பிள்ளா ரிஜிஸ்டர் ஆபிஸ்ல பன்னிடலாம். 


அனைவரும் எதற்கு இவள் இவ்வாறு கூறுகிறாள் என்று புரியாமல் இருக்க யதர்விற்க்கோ கோவம் உச்சம் கொண்டு இருந்தது.

ராகவன்: ஏன்மா. ஏன் சிம்பிள்ளா பன்ன சொல்ற. நீ என்னோட ஒரே பொன்னு.உன்னோட கல்யாணத்தை பெரிய அளவுல பண்ணனும்னு எனக்கு ஆசை இருக்காதா?

வன்ஷி:எனக்கு உங்கா ஆசை புரியுதுப்பா. ஆனா இப்போ நீங்க கல்யாணத்தை பெரிய அளவுல பன்ன நினைச்சா எங்க கல்யாணம் நடக்க குறைஞ்சது ஒரு மாசத்துக்கு மேல ஆகும். என்னால அதுவரைக்கும் அவரை பிரிஞ்சி இருக்க முடியாதுப்பா.
ஆதான் அப்டி சொன்னேன். தப்பா சொல்லிருந்தா சாரிப்பா.


அவளின் இந்த வார்த்தைகளை  கேட்ட 
தேவமாறுதனுக்கு  வானில் பறப்பது போல இருந்தது. என்னவள் இந்த அளவிற்கு  தன்னை நேசிக்கின்றாளா?
என்று காதல் கொண்ட மனம் அறிவிழந்து இழந்து யோசித்தது.


ராகவன்: இதுல தப்பா நினைக்க என்னடா இருக்கு.நீ சொன்ன இந்த ஒரு வார்த்தை மூலமே நீ அவரு மேல வச்சிருக்க அளவுகடந்த அன்ப புரிஞ்சிக்க முடியுது. உன்னோட 
விருப்பபடியே சிம்பிள்ளா கல்யாணம் வச்சிக்கலாம். அனா ரிஜிஸ்டர்ஆபிஸ்ல வேணாம். கோவில்ல வச்சிக்கலாம்.


தேவான்ஷி: சரிப்பா. அது உங்க விருப்பம். 

ராகவன்: தம்பி. நீங்க என்ன சொல்லறீங்க. உங்களுக்கு இதுல சம்மதமா?

மாறன்: இன்னும் ஏன் சார் தம்பினு கூப்பிடுறீங்க. மாப்பிள்ளைன்னு கூப்பிட்டா சந்தோசப்படுவேன். எனக்கு இதுல முழு சம்மதம். வான்ஷியோட விருப்பம் தான் என்னோட விருப்பம்.


இதனை கேட்ட ராகவன் மகிழ்ச்சியுடன்
ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. எங்க குடும்ப ஜோசியர் கிட்ட பேசி ஒரு நல்ல நாள் குறிச்சிட்டு உங்களுக்கு சொல்றேன் என்றார்.

மாறன் மகிழ்ச்சியுடன் தலையாட்ட அவன்  கால்களை யாரோ சுரண்டுவது போல்  தோன்ற கீழே குனிந்து நோக்கினான்.

அங்கு குண்டு குண்டு குளோப் ஜாமுன் போன்ற கன்னத்துடன் தன் கோலிகுண்டு கண்களை உருட்டி கொண்டு குட்டியாக ஷார்ட்ஸ் அண்ட் ட்ஷர்ட் போட்டு வாயில் விரல் வைத்து சப்பியவாறு நின்று கொண்டிருந்தான் சூர்யா என்கிற சூர்ய தேவன்.


நீ தான் என்னோத அப்பாவா? என்று சூர்யா கேட்க மாறன் என்ன நினைத்தானோ சட்டென்று அவனை தூக்கி  தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

அவன் மார்பில் புதைந்து இருந்த சூர்யா தன் தலையை தூக்கி அவனை பார்த்து நா கேத்ததுக்கு நீ இன்னும் ஆன்சர் சொல்லல என்று வினவிட ஆமடா செல்லம் நா தான் உன்னோட அப்பா என்று கூற ஐ நீ தான் என்னோத அப்பாவா? ஜாலி ஜாலி என்று கிளுக்கி சிரித்தவன் அப்பா என்று மாறனை அழைக்க இனம் புரியாத உணர்வு அவனை தாக்கியது. 


சூர்யாவை தோளில் சாய்ந்து கொண்டவனுக்கு ஏனென்று தெரியாமல் அவன் கண்கள் கலங்கியது. 


சூர்யா: ஏன் அதுவுற? ப்பா அதுவாத. 

மாறன்: அப்பா அழுவுலடா செல்லம். கண்ல தூசி விழுந்துருச்சு.

அப்பிதியா. அம்மா எனக்கு தூசி விதுதுந்துருச்சுனா ஊதி விதும்.இரு நானும் உனக்கு ஊதி விதுறேன் என்று கூறியவன் அவன் கன்னங்களை தன் பிஞ்சு கைளால் பிடித்து கண்களில் ஊதினான்.


அந்த பிஞ்சு மொட்டின் பாசத்தை பார்த்து நெகிழ்ந்து போனவன்
அவன் முகம் முழுவதும் முத்தமிட்டான்.
சூர்யாவும் பதிலுக்கு முத்தமிட தெரியாமல் அவன் கன்னத்தை எச்சிலாகினான்.

அப்பா இவதோ நாள் நீ எங்க போன? ஏன் என்ன பாக்க வதல என்று தன் குட்டி உதட்டை பிதுக்கி சோகமாக கேட்டவனை கண்ட மாறனுக்கு மனம்
கனத்தது.


தேவமாறுதன்: சாரிடா செல்லம் அப்பாக்கு முக்கியமான வேலை வந்துடுச்சு. அதான் போய்ட்டேன். இனிமே எங்க போனாலும் உன்னையும் அப்பா கூட்டிட்டு போறேன். ஒகேவா?


சூர்யா“அப்பா இனிமே நீ என் கூத தான இதுப்பியா. என்ன வித்து போக மாட்டல" என்று வினவ “இனி என் செல்லக்குட்டி கூட தான் நான் இருப்பேன். அவனை விட்டு எங்கையும் போக மாட்டேன்."என்று அவனை அனைத்து கொண்டான் தேவமாறுதன்.

இதனை பார்த்த  ராகவனுக்கு மனம் நிம்மதியை பெற தேவான்ஷியும், யதர்வனும் கோவத்தில் நின்று கொண்டிருந்தனர்.

மாறன் அருகில் இருந்த ஆராத்யா சூர்யாவிடம் வந்தாள்.

ஹாய் அப்புக்குட்டி என்று அவள் கூற அவள் யாரென தெரியாமல் தன் தந்தையை நோக்கினான் சூர்யா.


மாறன்: அப்பு இது உன்னோட ஆராத்யா அத்தை. உன் கிட்ட ஜாலியா பேசுவாங்க என்று கூற ஆமடா பட்டு. நா
தான் உன்னோட அத்தை. அத்தை கிட்ட வாங்க என்று அவனை நோக்கி கைநீட்ட அவன் தேவானஷியை நோக்கினான்.

அவள் போ என்று தலையாட்ட ஆராத்யாவின் கைகளுக்கு தாவினான் சூர்யா. அவனுக்கு முத்தமிட்டு செல்லம் கொஞ்சியவள் நேராக தேவான்ஷியிடம் சென்றாள்.

ஹாய் அண்ணி என்று அவள் அழைக்க தேவான்ஷி அவளை புரியாது பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவள் எங்க அண்ணன கல்யாணம் பன்னிக்க போற நீங்க எனக்கு அண்ணி தான என்று ஆராத்யா வினவ புன் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள் வன்ஷி.


அண்ணி இதுவரைக்கும் உங்கள நான் டிவில தான் பார்த்துருக்கேன். நேருல பாக்கும் போது ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆராத்யா.


அதற்கும் அவள் சிறியதாய் சிரிக்க சூர்யாவும் வன்ஷியின் மறுக்கன்னத்தில் முத்தமிட்டான்.

(மீ: இத பார்த்த ஒருத்தனுக்கு காதில் புகை வராத குறை தான். அது யாருன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் சொல்லிடுறேன் வேற யாரும் இல்லைங்க. நம்ம வில்லன் தேவமாறுதன். சாரி சாரி இவன ஹீரோன்னு சொல்றதா? இல்ல வில்லனு சொல்றதா? எப்படியோ ஒன்னு. ஆக மொத்ததுல சொல்லியாகிச்சு. 

இப்போ நெக்ஸ்ட் போவோம். யாரு பெத்த புள்ளையோ. ரொம்ப நேரமா விறச்சிக்கிட்டு நின்னுகிட்டு இருக்கு. ஓஓ நம்ம போலீஸ்கார தம்பி யதர்வன்.

அடேய் தம்பி கொஞ்சம் பொறுமையா இருப்பா. விட்ட நம்ம ஹீரோவ ச்சி வில்லன ஐயோ நாக்கு ரோலிங் ஆகுதே. அட இந்த தேவமாறுதன 
கண்ணாளையே எரிச்சிருவ போல இருக்குது. கொஞ்சம் கூல் ஆகு தம்பி.

அய்யோ மொறைகுறானே. சரிடா யப்பா கண்ணை உருட்டாத. வெளிய வந்து விழுந்துட போகுதே.


போலீஸ் தம்பி: அடியேய். நீ இன்னும் போகலையா? ஒழுங்கா ஓடிரு இல்ல


மீ: இல்லனா என்னடா பண்ணுவ. சாம்புமவனே. ஆள பாரு. நல்ல காட்ஸில்லாக்கு பேண்ட் ஷர்ட் போட்ட மாதிரி.


போலீஸ் தம்பி: அடிங் யாரை பார்த்து காட்ஸில்லானு சொல்ற.


மீ: உண்ண தாண்டா சொன்னே தக்காளி மண்டையா.

போலீஸ் தம்பி: கொப்பன் மவளே உன்னகொல்லமா விடமாட்டேன்டி

மீ: போட டேய் போடா நா வந்தா தான. நா அப்டியே கைலாச போக போறேன். டாட்டா👋👋👋👋).

**********   *********   **********



தேவான்ஷியின் அறை,

பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு? அவன் யாரு என்னன்ன தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்டி உன்னால இதை செய்ய முடிஞ்சிது. இன்னைக்கு உன்னோட இந்த நிலைமைக்கு காரணமே அவனும் அவன்கூட இருந்த அந்த  அஞ்சு நாய்களும் தான். என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்படி எல்லாம் செஞ்சிட்டு இருக்க என்று கத்தி கொண்டிருந்தான் யதர்வன்.


வன்ஷியோ அவனை அசட்டை செய்தவ்வாறு தன் மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாள்.


ஸ்ரீ நா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ என்னடான்னா மொபைல பாத்துட்டு இருக்க என்று கோவத்தில் அவள் கையில் இருந்து போனை பிடுங்கினான் யதர்வ்.

இப்போ என்ன பன்னனும்னு சொல்ற என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கூலாக கேட்டவளை வெறியாய் முறைதான் யதர்வ்.


பைத்தியம் புடிச்சவளே. ஏன் இப்படி என்ன காண்டேத்துற. எனக்கு வெறி ஆகுது என்று அவன் பொங்க லீசன் யதர்வ். எந்த ஒரு விஷயத்தையும் நா காரணம் இல்லாம பன்ன மாட்டேன்.
இந்த கல்யாணமும் அதே மாதிரி தான்.
எந்த விஷயத்தியும் நா சொல்லிட்டு செய்ய மாட்டேன். என்னோட ஸ்டைல் வேற. போக போக உனக்கு புரியும்.
இதுக்கு மேல பேசுறதுக்கு ஒன்னும் இல்ல. இனி ஒன்லி  ஆக்ஸன் தான்.
வெய்ட் அண்ட் வாட்ச் என்று கூறியவள்
அவனுடைய பதிலுக்கு எதிர்பாராமல்
தனக்கே உரிய திமிரான நடையுடன் வெளியே நடந்தாள்.

ஹாலில் சூர்யா தன் மழலை மொழியில் மாறனுடன் விளையாடி கொண்டிருந்தான்.

அப்பா இங்க பாது. இது என்னோத தாமி என்று ஒரு கரடி பொம்மையை காட்டி அவனிடம் விளக்கி கொண்டிருந்தான்.

செல்லம் இன்னைக்கு அப்பா, நீ, அம்மா எல்லாரும் சேர்ந்து வெளிய போலாம். அப்பா உனக்கு நிறைய பொம்மை, சாக்லட் அப்ரோ ஸ்னாக்ஸ்லா வாங்கி தரேன். அப்புறம் நம்ம பீச்க்கு போய் ஜாலியா விளையாடலாம் என்று கூற ஐ அப்பா ஜாலி ஜாலி நம்ம போதாம் போதாம் என்று குதித்து கொண்டிருந்தவனை அனைத்து பிடித்து கொண்டிருந்தான் தேவமாறுதன்.

அப்பொழுது தேவான்ஷி கீழே வர அவளுக்கு பின்னால் யதர்வன் வந்தான். மாறனிடம் வந்த வன்ஷி , மாறன் இது யதர்வன். என்னோட க்ளோஸ் பிரண்ட் . சென்னை கமிஷனரா இருக்கான் என்று அவனை அறிமுகப்படுத்த மாறன் சிநேகமாக புன்னகைத்து அவனுக்கு கைநீட்டினான்.

யதர்வ் அப்படியே நிற்க வன்ஷி அவனுக்கு கண்காட்ட அவனும் பதிலுக்கு கைகுலுக்கினான்.

மாறன்: ஜானு நம்ம மூணு பேரும் வெளிய போகலாம். உனக்கு ஒகேவா?

முதலில் வேண்டாமென சொல்ல நினைத்தவள் சூர்யாவை நோக்கினான். அவனும் தன் தாய் என்ன சொல்ல போகிறாள் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுக்காகவாவது போக வேண்டும்என்று நினைத்தவள் வேறு வழி இன்றி ஒப்புக்கொண்டாள்

வன்ஷி: ஓகே மாறன் போகலாம். எனக்கு எந்த பிரோப்ளேமும் இல்ல.


ராகவனிடம் திரும்பியவன் மாமா நா இவங்கள வெளிய கூட்டிட்டு போகலாமா? என்று கேட்க உங்க பொண்டாட்டியயம் உங்க புள்ளையையும் கூட்டிட்டு போக என்கிட்ட எதுக்கு அனுமதி கேக்குறீங்க
மாப்பிள்ளை. நீங்க தாராளமா கூட்டிட்டு போங்க என்றார்.


அதில் மகிழ்ச்சி அடைந்தவன் தாங்க்ஸ்
மாமா என்று கூற இதுக்கு ஏன் மாப்பிளை தாங்க்ஸ்லாம் சொல்லறீங்க. பத்திரமா போய்ட்டு வாங்க என்று கூற ஆராத்யா உடன்
இருவரையும் அழைத்து கொண்டு
சென்றவன் போகும் வழியில் ஆத்யாவை வீட்டில் விட்டுவிட்டு தேவான்ஷி மற்றும் சூர்யாவுடன் காரில் பறந்துவிட்டான்.


***********      *********      **********


இங்கு தீரனின் வீட்டில் ஒரு பெண்ணின் அலறல் நான்கு மூலைகளிலும் எதிரொலித்து கொண்டிருந்தது.

அந்த பெண்ணின் கதறலை எல்லாம் கண்டு கொள்ளாத அந்த மிருகம் தன் உடல் பசிக்கு அந்த பேதையை உணவாக்கி கொண்டிருந்தது.

தேவான்ஷி மாறனை  திருமணம் செய்து கொள்ள போவதை தன் எடுப்புடிகள் மூலம் அறிந்து கொண்டவன் வெறி பிடித்த மிருகமாய் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினான்.
“எவ்ளோ தைரியம் இருந்தா அவ அந்த தேவமாறுதன கல்யாணம் பன்னிப்பா.
நா விட மாட்டேன். விடவே மாட்டேன். ஏய் தேவான்ஷி நீ எனக்கு சொந்தமானவடி. உண்ண அவனுக்கு நா விட்டு கொடுத்துடுவனா? நெவர்.உண்ண அனுபவிக்காம விட மாட்டேண்டி" என்று கர்ஜித்தவன்
தன் உடல் தேவைக்காக ஒரு பெண்ணை அனுப்பி வைக்குமாறு அந்த விபச்சார விடுதியில் சொன்னவன் கண்ணில் பட்டால் அவள் . தீரன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணின் மகள் வதிக்கா. தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட அவள் தாய் வயிற்று பிழைப்புகாகவும் தன் மகளின் படிப்பிற்காகவும் அந்த  வீட்டிற்கு
வேலைக்கு வந்தார். கல்லுரி முடிந்து தன் தாயிற்கு உதவி செய்வதற்காக அவன் வீட்டீற்கு வந்தவளை  வலுக்கட்டாயமாக தன் அறைக்கு தூக்கி வந்தவன் அவள் கை காலினை கட்டிலில் கட்டி அவள் ஆடைகளை களைத்து  தன் ஆண்மையை அவளிடம் காட்ட சிறு பெண்ணவள் துடித்து போனாள். பல மணி நேரமாக அவளை புசித்து கொண்டிருந்த தீரன் என்னும் மிருக்கத்திடம் போராடியவள் ஒரு நிலைமைக்கு மேல் முடியாமல் மயங்கிட  அவளை நாசமாக்கியது
அந்த மனித மிருகம்.

இனி வதிக்காவின் நிலை?..........


இங்கு தீரனால் வரப்போகும் பிரச்சனைகளை அறியாமல் தன் மகனும் அவன் தந்தையும் கடல் அலையில் விளையாடுவது மனதில் தோன்றிய மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் தேவான்ஷி....


பழி வெறி படலம் தொடரும்.......



Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....