எனக்கெனவே நீ பிறந்தாய் 7
D.V இண்டஸ்ட்ரீஸ்,
தியாஷ்: மேம் நா உங்க கிட்ட கொஞ்சம் பர்ஸ்னலா பேசலாமா?
தேவான்ஷி: சொல்லு தியாஷ். என்ன விஷயம்.
தியாஷ்: மேம் அது வந்து....
தேவான்ஷி: கால் மீ ஸ்ரீ. இப்போ நா உன்னோட பிரிண்ட். உன்னோட பிரிண்ட நீ எப்டி கூப்டுவன்னு உனக்கு மறந்துருச்சா என்ன? என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள் வன்ஷி.
அதை மறக்க முடியுமா என்ன என்று சிரித்தவன் ஸ்ரீ நா உன் கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்
என்றவன் வதிக்காவை பற்றியும் அவளுக்கு தீரனால் நடந்த கொடுமைகள் பற்றியும் கூறினான்.
கொதித்தெழுந்து விட்டாள் வன்ஷி. மீண்டும் ஒரு பெண்ணின் வாழ்வு தீரனால் சிதைக்க பட்டுவிட்டதா என்பதை அறிந்தவளுக்கு கோவத்தை கட்டுப்படுத்த தெரியவில்லை.
அனைத்து பொருட்களையும் கீழே தள்ளி உடைத்தவள் மூர்க்கமாக கார்டெயின்கள் முதற்கொண்டு அனைத்தையும் கிழித்து எறிந்தாள்.
தியாஷிற்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.
அவளை பிடித்து இழுத்து சோப்பாவில் உட்காரவைத்தவன் ஸ்ரீ ரிலாக்ஸ் .கன்ட்ரோல் யூவர் செல்ப். நீ இப்டி கோபப்படுறதுனால ஒரு ப்ரோயோஜனமும் இல்ல.நம்மளோட ஏய்ம் இப்போ தீரன கொல்றது மட்டும் தான் அதை முதல்ல செஞ்சி முடிப்போம் என்ற தியக்ஷய் பார்த்தவள் அவனை மட்டும் இல்ல அவனோட அந்த தேவமாறுதன், விக்னேஷ்,விஷ்வா, ரித்தேஷ், மதன் எல்லாரையும் அழிப்பேன் என்றாள்.
அவள் கூறியதை கேட்டு அதிர்ந்த தியாஷ் ஸ்ரீ நீ என்ன பேசுரன்னு புரிஞ்சி தான் பேசுறியா? தேவமாறுதன் உன்னோட என்று ஏதோ கூற வந்தவனை வன்ஷி அனல் பார்வை பார்க்க அந்த பார்வையில் தியாஷ் ஒரு நிமிடம் பயந்துபோனான்.
நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு நல்லாவே புரியுது. நா அவனை விரும்பி கல்யாணம் பண்ணிக்க போறான்ன்னு நீ நினைச்சா அது உன்னோட முட்டாள் தனம். அவனோட அழிவுக்கான முதல் படி தான் இந்த கல்யாணம். அதை நியபகத்துல வச்சிக்கோ என்றவள் வேகமாய் அறையை விட்டு வெளியேறினாள்.
********* ********** *********
ஆபிசில் தன் அறையில் அமர்ந்து கோப்புகளை சரி பார்த்துக்கொண்டிருந்த தேவான்ஷியின் இன்டர்காம் ஒலி எழுப்ப அதை ஆன் செய்து காதில் வைத்தவள் “தேவான்ஷி ஹீயர்" என்க அந்த புறம் என்ன கூறப்பட்டது கோவத்தில் இவள் முகம் சிவந்து.
(மீ: அட இந்த புள்ளைக்கு இதுவே வேலையா போச்சுப்பா. எப்ப பாத்தாலும் கோவப்பட்டுகிட்டே கிடக்குது. இதுல கண்ணு வேற மிளகா தூள் தேய்ச்ச மாதிரி அப்போபப்போ
சிவந்து போய்டுது.
ஐய்யகோ மறுபடியும் முறைக்குறாளே. நமக்கு எதுக்கு வம்பு. கோவத்துல எதையாவது தூக்கி அடிச்சிட்டானா நம்ம முகரகட்ட தான் டேமேஜ் ஆகும்.
ஆல்ரெடி டேமேஜ் ஆனா மாதிரி தான் இருக்குனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. நீங்க எல்லாரும் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சி சத்தமா சொல்லிடீங்க பட்டூஸ்😂😂😂😂.
சரி சரி பேக் டு த கதை).
வர சொல்லுங்க என்றவள் மீண்டும் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்க முகத்தை சதாரணமாக வைத்துக்கொண்டு யெஸ் கம் ஹின் என்றாள்.
உள்ளே நுழைந்தவன் வேறு யாரும் இல்லை. அது அபிதீரனே.
வன்ஷி: வாங்க மிஸ்டர். அபிதீரன் உட்காருங்க.
அவளுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தான் தீரன்.
வன்ஷி: என்ன மிஸ்டர் தீரன். திடிர்னு வந்துருக்கீங்க. என்ன விஷயம்.
அவனோ அதை எல்லாம் காதில் வாங்காமல் அவள் உடல் அங்கங்களை அளவிட்டு கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டவள் புன்னகையுடன்
அவன் முன்பு சொடக்கிட ஹான் என்ன சொன்னிங்க என்றான் தீரன்.
(இந்த பொண்ணு என்ன அவன் பாக்குறதுக்கு சிரிக்குதுன்னு நீங்க நினைக்கலாம். சில பெண்கள் இந்த மாதிரி பார்வைக்கு ஆளாகும் போது குனிகுறுகி போய்டுவாங்க. நோட் த பைண்ட் சில பெண்கள் மட்டும் தான்.
ஆனா நம்ம வன்ஷி தான் லேடி அர்னால்டு ஆச்சே. அதான் கம்பீரமா
அவன் கிட்ட பேசுறா. வேற ஒன்னும் இல்லப்பா).
அது வந்து வன்ஷி என்று பேச வந்தவனை இடை நிறுத்தியவள் கால் மீ தேவான்ஷி என்று கால் மேல் போட்டு திமிராக அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
உள்ளக்குள் கோபம் எழ அதை கட்டுப்படுத்தியவன் செயற்க்கையான சிரிப்புடன் உங்களுக்கு விஷ் பன்னிட்டு போலாம்னு வந்தேன் தேவான்ஷி என்று அவன் கூற முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் மேலே சொல் என்பதை போல அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அது எதுக்குனா உங்களுக்கு மேரேஜ்
பிக்ஸ் ஆகிருக்குன்னு கேள்விப்பட்டேன் அதான் விஷ் பன்னிட்டு போலாம்னு வந்தேன் என்றான்.
ஒஹ் என்று ஒரு புருவத்தை உயர்த்தியவள் அப்போ நீங்க பிஸினஸ் ரிலேட்டடா எந்த டவுட்ஸும் கேக்க வரல.
ரைட் என்று கேட்க அவளுக்கு பதில் என்ன கூறுவதென்று தெரியாமல் விழித்தான்.
நீங்க வந்த வேலை முடிஞ்சுச்சுனா நீங்க கிளம்பலாம் மிஸ்டர் அபிதீரன் என்றவள் தன் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினாள்.
உனக்கு இருக்குடி. என்னையவே அசிங்க படுத்துறல. உண்ண என்ன பண்ண போறேன்னு மட்டும் பாரு .உண்ண என் கால்ல விழவைக்கல நா அபிதீரன் இல்லடி என்று மனதில் கருவிகொண்டவன் அவள் அறையைவிட்டு வெளியேறினான்.
********* ******* *******
இன்று தேவான்ஷி,தேவமாறுதனின் திருமணம். தேவான்ஷியின் வீட்டில் அவளது அறையில் சூர்யாவை தன் மடியில் அமர்த்தி தயார் ஆகி கொண்டிருக்கும் தேவான்ஷியை பார்த்துக்கொண்டிருந்தாள் ஆராத்யா.
சூர்யாவும் தன் தாயை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான். தேவான்ஷியின் உதவிக்காக தேவமாறுதன் தான் ஆரத்யாவை அங்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தான்.
ஆரத்யாவின் கையை சுரண்டிய சூர்யா அத்த அம்மா எங்க போகுது என்று கேட்க ஏன்டா? ஏன் இப்டி கேக்குற என்றால் ஆராத்யா.
இல்ல அம்மா எங்கேயோ வெளிய போது போல. ரெடி ஆகித்து இதுக்கு
என்று கேட்க ஆமாடா செல்லம் அம்மா வெளிய தான் போறாங்க. அவங்க கூடவே நான் சூர்யா செல்லம் தாத்தான்னு எல்லாரும் போறோம் என்று கூற ஓட்டை பல்லை காட்டி சிரித்தவன் எங்க போதோம் என்றான்.
எல்லாரும் கோவிலுக்கு போறோம்டா பட்டு என்று அவள் கூற அப்போ அப்பா வதலையா என்று தான் மழலையின் கேட்க அப்பாவும் தான் வராறு. இன்னைக்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம் அதன் கோவிலுக்கு போறோம் என்றால் ஆராத்யா.
கல்.. கல்யாதமா. அப்பதினா என்ன என்று வாயில் வார்த்தை வாராமல் திக்கி திணறி கேட்டவனை அனைத்துக்கொண்டவள் அப்படினா இனிமே அம்மா அப்பா நீ அப்ரோ நானு எல்லாரும் ஒன்னவே இருக்க போறோம்னு அர்த்தம் என்று கூற ஐ அப்போ அப்பா எப்பவும் என்கூதவே
இதுப்பரா என்று சூர்யா வினவ அமாடா தங்கம் .உன்னோட அப்பா என் செல்ல குட்டி கூட தான் இருப்பாரு என்று அவனுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தாள்.
இதை அனைத்தையும் ஒரு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த தேவான்ஷியின் மனதின் ஓரத்தில் வலித்தது. தன் மகன் அப்பா அப்பா என்று உருக்குகிறான். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவன் தந்தையுடன் அவனால் வாழமுடியாதே
என்று நினைக்கும் பொழுதே அவள் மனம் ரணமாய் வலித்தது.
தேவான்ஷியை மும்முரமாய் அழகுபடுத்தி கொண்டிருந்தாள் வதிக்கா. ஆம் வதிக்காவை பற்றி தியாஷ் கூறியவுடன் அவளை நேரில் சந்தித்து பேசிய வன்ஷி அவளிற்கு ஆறுதல் கூறிஅவளை திடமாக்கினாள். அதன் விளைவு இன்று வன்ஷியின் திருமணத்தில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கிறாள் வதிக்கா.
முழுவதுமாக தனக்கு நடந்த கொடுமையை அவளால் மறக்க முடியவில்லை என்றாலும் அதில் இருந்து வெளி வர முயற்சி செய்துகொண்டிருக்கிறாள் வதிக்கா. அதுவும் தேவான்ஷி அளித்த தைரியத்தினால் தான்.
வன்ஷியை முழுவதுமாக தயார் செய்தவள் ஒரு முறை அவளிற்கு அனைத்தும் சரியாக உள்ளதா என்று பார்த்தாள்.
(ஹீரோயின வர்ணிக்குற வேலைய நா அப்புறம் பண்றேன்பா. இப்போ போய் நம்ம ஹீரோவா பாத்துட்டு வந்துருரலாம். ஓடி வாங்க ஓடி வாங்க🏃🏼♀️🏃🏼♀️🏃🏼♀️🏃🏃).
********* ******* ********
வடபழனி முருகன் கோவில்,
தேவமாறுதன் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அவன் அழைப்பு விடுத்திருக்க அவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
அவ்வப்பொழுது சூர்யாவை பற்றியும், தேவான்ஷியை பற்றியும் போனில் தொடர்புகொண்டு ஆராத்யா மூலம் தெரிந்து கொண்டான்.
அனைவரும் காரில் வந்து இறங்க மாறனின் கண்களோ தேவன்ஷியை தேடியது. காரில் இருந்து இறங்கிய சூர்யா தத்தி தத்தி நடந்து வந்து மாறனின் கால்களை கட்டிக்கொண்டான். குட்டி வெள்ளை வேஷ்டி அணிந்து பச்சை நிற சட்டையை அணிந்து இருந்தான் சூர்யா. அவனை தூக்கி முத்த மழை பொழிந்து மாறன் இறுதியாக இறங்கும் தன் தேவதையை பார்த்து பிரமித்து போனான்.
ரோஸ் நிற பட்டுசேலையில் கோல்டன் பார்டர் வைத்து அதற்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து மெல்லிடையில் ஒட்டியாணம் அணிந்து, காதில் ஜிமிக்கி அசைந்தாட பூ போன்ற பாதத்தை தரையில் ஊன்றி நடந்துவந்தாள்.
அவனின் தோலை பிடித்து உலுக்கிய சூர்யாவின் செய்கையில் தன்னிலை அடைந்தான் மாறன். ப்பா நா எப்பிதி
இதுக்கேன் என்று சூர்யா வினவ என்னோட சிங்க குட்டிக்கு என்ன குறைச்சல். அப்டியே ராஜா மாதிரி இருக்கடா என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான் தேவமாறுதன். வெட்கம் வந்து அவன் தோளில் சாய்ந்துக்கொண்டான் சூர்யதேவன்.
அனைவரும் கோவில் உள்ளே சென்றனர். மனமேடையில் தேவமாறுதன் கம்பீரமாய் அமர்ந்திருக்க அவன் மடியில் அமர்ந்திருந்தான் சூர்யா. அய்யர் மந்திரம் சொல்லி கொண்டிருக்க அவர் கூறும் மந்திரங்களை கவனாமாக தானும் கூறி கொண்டிருந்தான் மாறன்.
அவன் மடியில் இருந்த சூர்யா நானும் சொல்வேன் என்று கூறி ஏதேதோ உளறிக்கொண்டிருந்தான். பின்பு தேவான்ஷி அழைத்துவரப்பட்டு
அவன் அருகில் அமரவைக்கபட்டாள்.
தந்தையும் மகனும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை வெறுமையுடன் பார்த்து கொண்டிருந்தாள் வன்ஷி.
பின்பு அய்யர் தாலி எடுத்து கொடுக்க“இனிமே உன்ன யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ஜானு. நீ எனக்கு சொந்தமனவ. வாழ்நாள் முழுக்க உன்னையும் நம்ம பையனையும் சந்தோஷமா பாத்துக்குவேன் ஜானுமா" என்று மனத்தில் உறுதி எடுத்துக்கொண்டவன் அனைவரின் ஆசியுடனும் தன்னவள் கழுத்தில் மங்கல்யத்தை காட்டினான் தேவமாறுதன். மூன்றாவது முடிச்சியை ஆரத்தியா போட திருமணம் இனிதாய் நடந்தேறியது.
ஆனால் அவன் கொடுத்த வாக்கை அவனே மீற போகிறான் என்பதை அவன் அறியவில்லை. தேவான்ஷியோ “நீ என் கழுத்துல கட்ற இந்த தாலி சீக்கிரமே என் கழுத்தை விட்டு இறங்க போகுதுடா. இதை யார் நினைச்சாலும் மாத்த முடியாது" என்று நினைத்துக்கொண்டாள்.
இருவரும் வெவ்வேறு மனநிலையில் இந்த திருமணத்தை ஏற்று கொண்டிருக்க யார் நினைப்பது நடக்கும்....
விழுந்தனடி உன்னில்....
விடுபட முடியவில்லையே.......
கைதியாய் வாசம் செய்கிறேன்......
உன் கண்கள் என்னும் சிறையில்....
பழி வெறி படலம் தொடரும்......
Comments
Post a Comment