எனக்கெனவே நீ பிறந்தாய் 8

மாறன் தேவான்ஷியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆகிக்கொண்டான். அனைவரும் அட்ச்சதை தூவி ஆசிர்வதித்தனர்.

அவள் நெற்றி வகுட்டில் குங்குமம் இட்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவள் ஏதோ ஒரு மயக்கத்தில் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டாள். பின்பு இருவேறு அக்கினியை சுற்றி வந்தனர்.
மாறனிற்கு முன்ப சூர்யா குட்டி அவன் விரலை பிடித்தவாறு அவனும் சேர்ந்து அக்கினியை சுற்றினான்.

தன்னவள் பட்டு பாதத்தை தன் தொடை மீது வைத்து அவள் விரலில் முத்தமிட்டு மெட்டியை அவளுக்கு அணிவித்தான். இதனை பார்த்த ஓவென கத்தி ஆர்பரித்தனர். பின் ராகவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவர் ஆனந்த கண்ணீருடன் இருவரையும் ஆசிர்வதித்தார்.


பின்பு கோவில் சன்னிதானத்தில் முருகரை வணங்கிவிட்டு அனைவரும்
மாறனின் வீட்டிற்கு காரில் புறப்பட்டனர். வீட்டை அடைந்தவுடன்
வேகமாக உள்ளே சென்ற வதிக்காவும்
ஆராத்யாவும் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தனர்.

சூர்யாவை தூக்கி கொண்ட தேவமாறுதன் தன் மனையாளின் தோல் மீது கைபோட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான். அதன் பின்பு மூவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்கபட்டது.

தேவமாறுதனின் வீட்டினுள் நுழைந்த தேவான்ஷியின் மனதில் “இது உன்னோட வாழ்க்கைக்கான ஆரம்பம் இல்ல தேவமாறுதன். உன்னோட அழிவுக்கான ஆரம்பம்" என்று நினைத்துகொண்டு வலது காலை எடுத்து உள்ளே வைத்து வீட்டினுள் நுழைந்தாள்.

மணமக்கள் இருவரும் சோபாவில் அமர சூர்யா தத்தி தத்தி நடந்து மாறனை நோக்கி கை நீட்ட அவனை முத்தம் கொஞ்சி தன் மடி மீது அமர்த்தி கொண்டான் மாறன்.
இருவருக்கும் பால் பழம் கொடுக்கப்பட தான் சாப்பிட்டு விட்டு தேவான்ஷிக்கு
தன் கையால் பால் பழத்தை ஊட்டிவிட்ட
மாறன் தன் மகனிற்கும் அதை ஊட்டிவிட தொடங்கினான்.

இதனை அனைவரும் பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க தேவான்ஷிக்கு ஏனோ இதை பார்க்கும் பொழுது எரிச்சலாக இருந்தது. எப்பொழுதும் அம்மா அம்மா என்று தான் பின்னே சுற்றி வரும் தன் மகன் இன்று பழகிய கொஞ்ச நாளே ஆன மாறனிடம் கொஞ்சிக் கொள்வது கோவத்தை உருவாக்கியது.

அண்ணி இப்போ நீங்க என்னோட ரூமில் வந்து ரீசப்ஷன்க்கு ரெடி ஆகிக்கோங்க. அண்ணா அவரு ரூம்ல ரெடி ஆகுவாரு என்றால் ஆராத்யா.

அவளும் சரி என தலையாட்ட வீட்டு வேலையாட்களிடம் சூர்யாவிற்கு பால் கொண்டுவருமாறு கூறிவிட்டு அவனை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றான் மாறன்.


அன்று மாலை மாறனின் வீட்டு  தோட்டத்தில் மேடை  அமைக்கபட்டு
அது மலர்களால் அலங்கரிக்க பட்டிருந்தது. கீழே அனைவரும் அமர்வதற்காக இருக்கைகள் போட பட்டிருந்தனர். மாறனின் அரண்மனை வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருக்க ஒரு டீ.ஜே பாட்டு போட்டு ஆர்பரித்து கொண்டிருந்தது.

முதலில் மாறன் மேடைக்கு அழைத்துவரப்பட்டான். கருப்பு நிற கோட் சூட்டில் கம்பீரமாய் மீசையை முறுக்கி கொண்டு ஆண் காளையை போல உதட்டில் தவழ்ந்த சிரிப்புடன் நின்றிருந்தான்.

தன்னவளின் வருகைக்காக விழி மேல் விழி வைத்து அவன் எதிர்பார்த்திருக்க, அவனின் எதிர்பார்ப்பை வீணாகாமல் வந்து சேர்ந்தாள் அவன் காதல் தேவதை.

சிவப்பு நிற லாங் ஃப்ராக்கில் அழகு மயிலென வெள்ளை நிற ஆபரனங்கள்
அணிந்து அளவான ஒப்பனையுடன் அவன் அருகில் வந்து நின்றாள். அவள் அருகில் தன்னை போலவே குட்டி கருப்பு கோட் சூட்டில் நின்றிருந்த சூர்யாவை தூக்கி கொண்டவன் அவளை தன்னுடன் சேரத்து அணைத்துக்கொண்டான்.

பின்பு அனைத்து தொழில்துறை நண்பர்கள் மற்றும் வி.ஐ.பி வாழ்த்து தெரிவித்து சென்றனர். அப்பொழுது டி.ஜெ பாடல் ஒலித்தது.

தியாஷ் பாட ஆரம்பித்தான்,


காதல் காத்திலேறி ஆச ஊறி ஒதற வைக்க வந்தாளே மருகி நின்னாளே....

உச்சி நிலவ போல உச்ச ஏத்தி உசுர மூட்டி விட்டாளே எளக வச்சாளே...
என்று தியாஷ் ஆட ஆரம்பிக்க அவனுடன் ஆராத்யாவும் சேர்ந்து ஆடினால்,

அழகா முத்தத்தில் மனச கொழுத்தவா சிக்குற உதட்ட சுளிக்க யப்போ..... யப்போ..... என்று அவன் வதிகாவை பார்த்து பாட அவள் சிரித்தபடி நின்றாள்.

வெரசா டக்குனு திமிர அடக்கவா சிறுக்கி சிரிப்பில் உருக
யப்போ யப்போ....

யாத்தி....யாத்தி....நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன் என்று பாடி ஆராத்யாவும் தியாஷும்  வதிகாவை ஆட இழுத்தனர்.

யாத்தி... யாத்தி....என மயக்கும் சுந்தரியே

யாத்தி.... யாத்தி...உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன்

யாத்தி.. யாத்தி...என முறுக்கும் முந்திரியே... என்று தியாஷ் பாடிக்கொண்டிருக்கும் பொழுது 


கரிச்சான் குருவியோன்னு கனவுல கூவையில தினுசா உன் மழையிலநான் நனஞ்சேனே.... என்று வதிக்கா பாடி ஆட தியாஷ் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

வளையல் ஒரசையில சந்திரன சிணுங்க வச்சேன்
வெட்கப்பட்டு செவ செவக்குற வெத்தல கண்ணாலே...... என்று ஆராத்யா பாடி முடிக்க

என்ன அடிச்சு அடி தொவச்சு நீ அலசி எடுக்குற ....
முந்தி மடிப்பில் என்ன மடிச்சு உலையை மூட்டி தாகம் ஏத்துற... என்று வதிகாவை பார்த்து தியாஷ் பாட அவள் அவனை செல்லமாக முறைத்தாள்.

யாத்தி... யாத்தி... நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன்
யாத்தி... யாத்தி...என மயக்கும் சுந்தரியே........
யாத்தி... யாத்தி...உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன்

யாத்தி ...யாத்தி....என முறுக்கும் முந்திரியே..... என்று வந்திருந்த உறவினர்களுடன் அனைவரும் ஆடி மகிழந்த்தனர்.

பின்பு அந்த இடமே இருட்டாக
திடீரென்று ஒரு இடத்தில் வட்ட வடிவில்
வெளிச்சம் ஒளிர தொடங்கியது.

அங்கு மாறன் நின்று கொண்டிருக்க அவன் சொடக்கிட்டவுடன் ஒரு ஹிந்தி பாடல் ஒலிக்க துவங்கியது.

ஹே ராத்தே ஹீ மோஸம் தீ கா கினாரா யே சஞ்சல் ஹவா........ என்று பாடியவாறு தேவான்ஷியிடம் வந்தவன்
அவளை தன்னை நோக்கி இழுத்தான்.

மீண்டும் பாடினான்,

ஹே ராத்தே ஹீ மோஸம் தீ கா கினாரா யே சஞ்சல் ஹவா........ 

கஹா தோ திலோனி கீ மில் கர் 
கபின ஹோங்கே கபி ஹம் ஜூதா.......
என்று அவன் பாட அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் வன்ஷி.

ஹே ராத்தே ஹீ மோஸம் தீ கா கினாரா 
யே சஞ்சல் ஹவா........

யே கியா பாத்து ஹை ஹாஜ்
கீ சாந்தினி மே...... அவன் காதலுடன் நோக்க பென்னவள் அவன் பார்வையில் மயங்கி நின்றாள்.

யே கியா பாத்து ஹை ஹாஜ்
கீ சாந்தினி மே......

ஹே ஹம் கோ கையே
பியார் கீ ராகினி மே...... இப்பொழுது அவனை அவள் விழி விரித்து பார்க்க அவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

யே பாஹு மேன் பாஹே
யே பங்கி நிகஹீன்
ல ஆனே லோக ஜிந்தாகி கா மஸா....

ஹே ராத்தே ஹீ மோஸம் தீ கா கினாரா யே சஞ்சல் ஹவா........
என்று அவன்  முட்டியிட்டு அவள் அவள் கரம் பிடித்து அவள் கையில் முத்தமிட்டு அவளை கைகளில் ஏந்தி கொண்டான்.

அனைவரும் ஓவென கத்த அவன் தன்னிலை அடைந்து அவளை கீழே இறக்கினான். 

சூர்யாவிடம் வந்த மாறன் அவனை தூக்கி தன் தோள்களில் அமர வைத்து பாட தொடங்கினான்,

எட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும் அப்பன்காரன் நான் அல்ல டா
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும் நண்பன் நானடா
என்று அவனை தூக்கி பாட அவன் அழகாய் சிரித்தான்.

உங்கப்பன் மவனே வாடா...
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான் டா....
என்று அவன் கன்னத்தில் இதழ் பதிக்க அவனும் தன் தந்தையின் கன்னத்தில் எச்சில் ஆக்கினான்.

வாடா உங்கப்பன் மவனே வாடா 
உன் முத்தம் போதும் பிறந்த பலன நான் அடைவேன் டா

வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா 
நாம ஒன்னா சேர்ந்து க்லப்கு போய் தான் கலக்கலாம் டா என்று படி மாறன் தேவான்ஷியை பார்க்க இவ்வளவு நேரம் இருவரையும் ரசித்து கொண்டிருந்தவள் கடைசி வரியில் அவனை முறைத்தாள்.

வாடா இனி நம்ம நேரம் தான் டா
உலகத்த ஆல போரதே நம்ம தான் டா
என்று பாடி அவளை தூக்கி போட்டு பிடித்து விளையாடினான்.


அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தான் யதர்வன் ( சகி ஒருத்தவங்க கேட்டத்தின் பேரில் யதர்வனை கொண்டு வந்துட்டேன்.)
இங்கு நடந்து கொண்டிருப்பதை பார்த்தவன் கோவத்தில் முகம் சிவந்து நின்றான்.

அவனிற்கு தேவான்ஷியின் மீது
கோவம் கரை புரண்டு வந்தது.ஆனால் அதை வெளிக்காட்டாமல் மேடைக்கு ஏறினான்.பின்பு பூங்கொத்தை அவர்கள் இருவருக்கும் அளிக்க மாறன் அவனுக்கு கைகொடுக்க யதர்வன் முகத்தில் படிந்த இறுக்கத்துடன் கைகொடுக்க அவன் நட்பாய் யதர்வனை அனைத்து கொண்டான்.

தேவான்ஷியை திரும்பி ஒரு பார்வை பார்த்த யதர்வ் எதுவும் பேசாமல் இறங்கி சென்றுவிட்டான். தேவான்ஷியும் அமைதியாக நின்று கொண்டாள்.

அங்கே ஒருவன் கையில் பூங்கொத்துடன் கிஃப்ட் பாக்ஸுடன்
உள்ளே நுழைந்தான். அவனை பார்த்தவுடன் தியாஷிற்கு கோவம் முகத்தில் தாண்டவம் ஆடியது. 
அங்கு வந்தது வேறு யாரும் இல்லை. தீரன் தான். ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த வதிக்கா தெரியாமல் அவன் மீது மோதி விட்டாள். அவனை பார்த்தவுடன் அவள் கை கால்கள் பயத்தில் நடுங்கியது. தீரன் வஞ்ச புன்னகையுடன் அவளை நெருங்க வதிக்காவிற்கு தூணாக நடுவில்
நின்றான் தியாஷ். 

அவனை அலட்சசியமாக பார்த்த தீரன் அவ்விடம் விட்டு அகன்றான். இன்னும் நடுங்கி கொண்டிருந்த வதிகாவை அனைத்து ஆறுதல் படுத்தியவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

மேடையில் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்த தேவான்ஷியின் முகம் மாற தொடங்கியது. மேலே வந்தவன் அவளுக்கும் மாறனிற்க்கும் வாழ்த்து தெரிவிக்க  அவள் வரவழைத்த புன்னகையுடன் வாங்கி கொண்டாள்.
ஆனால் மாறனோ அவனை எரித்துவிடுவது போல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்து கட்டியனைப்பது
போல் வந்தவன் அவன் காதறுகில் என்ன மச்சா ரொம்ப சந்தோஷமா இருக்க போல. இருக்க கூடாதே. இந்த தீரன் உண்ண சந்தோஷமா இருக்கவும் விட மாட்டான். வரேன் மச்சா. பாய் என்றவன் கிளம்பி சென்றுவிட்டான்.

இதனை கேட்ட தேவமாறுதனுக்கு உள்ளம் எரிமலையாய் கொதிக்க  முயன்று அதை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தான்.

யதர்வன் தன் கண்ணில் பட்ட தீரனை அடிக்க செல்ல தியாஷ் அவனை தடுத்து ஆசுவாசப்படுத்தினான்.


பழி வெறி படலம் தொடரும்........

Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....