எனக்கெனவே நீ பிறந்தாய் 12
என்ன ஏன் ஏமாத்துன? என்று மாறன் வினவ தேவான்ஷிக்கு அதிர்ச்சியில் நெஞ்சம் படபடத்தது. ஒரு வேளை இவனுக்கு நம்மள பத்தி தெரிஞ்சிருச்சோ? இப்போ என்ன பண்றது என்று மனதிற்குள் நினைத்திக்கொண்டிருந்தால் வன்ஷி.
அவன் வேகமாக அவளை சுவற்றில் தள்ளி கைகளால் அணைகட்டினான்.
கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல என்று குரலை உயர்த்த அவள் பயத்தில் எச்சில் கூட்டினாள். மா...மாறன். நீங்... நீங்க என்ன சொல்லறீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. நா எதுக்கு உங்கள ஏமாத்தனும் என்று அவள் வினவ என்கிட்ட உன் நடிப்பை காட்டாத. உன் நடிப்பை நம்பி ஏமாந்து போறவன் நான் கிடையாது என்று அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க அவளுக்கு என்ன கூறுவதென்ற தெரியவில்லை.
இல்லைங்க நா....அது வந்து... அவள் எதேதேதோ உளற அவள் கன்னங்களை தன் இருகைகளால் பற்றியவன் எனக்கு திருப்பி கொடு என்றான்.
வன்ஷி: என்....என்ன திரு....திருப்பி கொடுக்கணும் .
மாறன்: நா மார்னிங் கொடுத்ததை திருப்பி கொடு.
வன்ஷி: மார்னிங் என்ன கொடுத்தீங்க.
நா மார்னிங் கொடுத்த கிஸ்ஸுக்கு ரிப்ளை கிஸ் கொடு. என்று அவள் கூற அவளுக்கு பயம் விலகி அவனை முறைத்து பார்த்தாள். இதை தான் சொன்னீங்களா? நா வேற ஏதோன்னு நினைச்சிட்டேன் என்றாள் வன்ஷி.
கடன்காரி மார்னிங் என்ன ஏமாத்திட்டு
போயிட்ட. ஆனால் இப்போ நா விட மாட்டேன். எனக்கு ரீப்ளை கண்டிப்பா வேணும். திருப்பி கொடுடி. ஆமா வேற என்ன நினைச்ச நீ என்று அவன் குறும்பாக வினவ அவன் பேச்சில் அவள் நாணத்தால் தலை குனிந்தாள்.
அவள் தலையை நிமிர்த்தியவன் என் பொண்டாட்டி எப்பவும் தலை குனிய கூடாது. அவ எப்பவும் தலை நிமிர்ந்து இருக்கனும் புரியுதா என்று அவன் வினவ அவனின் பேச்சில் கட்டுண்டு இருந்தவள் சரியென தலையை ஆட்டினாள்.
சரி சரி ஏதேதோ பேசி என்ன டைவர்ட்
பண்ணாத. ஒழுங்கா கிஸ் குடுடி இல்ல.....இல்லனா என்ன பன்னுவீங்க என்று அவள் பதிலுக்கு கேட்க நா கேட்டுட்டுலாம் இருக்க மாட்டேன். டேரக்ட்டா ஆக்சன்ல இறங்கிடுவேன் என்று அவன் கண்ணடித்து அவளை நெருங்க அவன் எண்ணம் புரிந்தவள் அவனை தள்ளிவிட்டு குளியலறை புகுந்துகொண்டாள்.
இப்போ என்கிட்ட இருந்து தப்பிச்சிட்ட
ஜானு. ஆன கண்டிப்பா என்கிட்ட ஒரு நாள் மாட்டுவ. அன்னைக்கு கண்டிப்பா உன்ன விடமாட்டேன் என்று கத்தினான்
மாறன். உள்ளே சென்று கதவை பூட்டியவள் கதவிலேயே சாய்ந்து நின்றாள். அவளுக்கு மெல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
அவள் மனதில் ஏராளமான கேள்விகள் தோன்றியது. கண்ணாடியில் தன்னை தானே பார்த்து பேசிக்கொண்டாள்.எனக்கு என்ன ஆச்சு. நா ஏன் இப்டி இருக்கேன். நா அவனை பழிவாங்க தான் வந்தேன். ஆனா இப்போ என்ன பன்னிட்டு இருக்கேன். அவன் என்ன நெருக்கும் போது அதை ஏன் நா தடுக்கல. அவனோட தொடுதல் ஏன் எனக்கு புடிச்சிருக்கு. ஐயோ கடவுளே. எனக்கு பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்கே. இல்ல இல்ல இது நடக்க கூடாது. நா அவனை பழி வாங்கணும். அது தான் என்னோட எண்ணம். அதை நா மறக்க கூடாது என்று தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தாள்.
குளித்து முடித்தவள் வெளியே வர
மாறன் உறங்கி கொண்டிருந்தான்.
சூர்யாவை அறையில் தேடியவள் அவன் இல்லாமல் போகவே ஆரத்யாவின் அறைக்கு அவனை தேடி சென்றாள். அங்கு சூர்யாவும் ஆராத்யாவும் விளையாடி கொண்டிருந்தனர்.
ரித்யா டைம் ஆச்சு இன்னும் தூங்களையா நீ என்று வன்ஷி வினவ இல்ல அண்ணி துக்கம் வரல. அதான் சூர்யா கூட விளையாடிட்டு இருந்தேன் என்றாள். ஆல்ரெடி லேட் நைட் ஆகிடுச்சி. ஒழுங்கா தூங்கு. முதல்ல நீ சாப்டியா என்று அவள் அக்கறையாக வினவ அந்த அக்கறையில் தன் தாயின் அன்பை கண்டாள் ஆராத்யா.
சட்டென்று அவள் கண்கள் கலங்கிவிட அதை பார்த்த வன்ஷி பதறி போனாள்.
அவளிடம் வேகாமக சென்றாள். என்னாச்சு ரித்யா ஏன் அழற. நா ஏதும் தப்பா பேசிட்டனா என்று கேட்க அப்டிலாம் இல்ல அண்ணி. இந்த மதிரி அண்ணாக்கு அப்புறம் நீங்க தான் அக்கறையா கேக்குறீங்க. நீங்க அப்டி கேட்ட உடனே அம்மா நியாபகம் வந்துருச்சு. எனக்கு என்னோட அம்மா அப்பா முகம் கூட நியாபகம் இல்ல.
அவங்க ரெண்டு பேரும் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க.
அப்போ எனக்கு எட்டு வயசு. அண்ணாக்கு பதிமூணு வயசு. என்ன இவ எட்டு வயசு பொண்ணுன்னு சொல்ற. ஆனா அம்மா அப்பா முகம் நியாபகம் இல்லாங்குறனு நீங்க நினைக்கலாம். ஆன எனக்கு எங்க அம்மா அப்பா முகம் கொஞ்சம் தான் நியாபகம் இருக்கு. அவங்க ரெண்டு பேரும் போனதுக்கு அப்புறம் அண்ணா தான் எனக்கு எல்லாமுமா இருந்தான்.
ஸ்கூல்ல என்கூட படிக்குற பசங்களுக்கு எல்லாம் அவங்க அம்மா தான் சாப்பாடு ஊட்டுவாங்க. நா அதையே ஏக்கமா பார்த்திட்டு உட்க்கார்ந்திருப்பேன். அப்போ அண்ணா தான் எனக்கு அம்மா மாதிரி சாப்பாடு ஊட்டி விடுவான். அப்புறம் ரிப்போர்ட் கார்டுல சைன் போட பேரண்ட்ஸ் கூட்டிட்டு வர சொல்லுவாங்க. ஆனா அண்ணா தான் எனக்கு அப்பான்னு சொல்லி சைன் போடுவான். அவனுக்குள்ள எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிகவே மாட்டான். பார்ட்டைமல வேலைக்கு போய்ட்டே ஸ்கூல் படிச்சான். ஸ்கலர்ஷிப்ல காலேஜ் முடிச்சான். என்னையும் நா ஆசைப்பட்ட எம்.எஸ்.சி படிக்க வச்சான். அப்புறம் லோன் வாங்கி பிஸினஸ் ஸ்டார்ட் பன்னான். இப்போ இந்த நிலமைல இருக்கான். எல்லாரும் அவங்களுக்கு
புடிச்ச ஹீரோ விஜய் சூர்யானு செல்லுவாங்க. ஆனா எனக்கு என்னோட அண்ணா தான் அம்மா, அப்பா, ஹீரோ, கடவுள் எல்லாமே என்று கூறி கண்ணீர் வடித்தால்.
இதை அனைத்தையும் கேட்ட வன்ஷிக்கு மாறனின் மேல் ஏதோ ஒரு இனம் புரியா எண்ணம் தோன்றியது.
ஆரத்யாவின் கண்களை துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள் வன்ஷி. அதில் மகிழ்ந்து அவளை கட்டிக்கொண்டாள் ஆராத்யா. அவள் முதுகை தடவி ஆசுவசப்படுத்தியவள்
இங்க பாரு ரித்யா உங்க அண்ணா உனக்கு அப்பானா நா உனக்கு அம்மா.உன்னோட அம்மாக்கு நீ அழறது புடிக்கல. இனிமே நீ இப்டி அழக்கூடாது. புரியுதா என்று கூறியவள் சூர்யாவிடம் செல்லம் உன்னோட அத்தை அழுவுறாங்க பாரு. அழ கூடாது அத்தைனு சொல்லு செல்லம் என்று கூற ஆரத்யாவிடன் தாவிய சூர்யா அவள் கண்களை துடைத்து த்தை அதுவாத. சிரிசிரி என்று அவளுக்கு கீச்சுகீச்சு மூட்டினான் சூர்யா. அதில் சிரித்த ஆரத்தியா அவனை அணைத்துக்கொண்டாள்.
சரி சரி போதும். நீ போய் தூங்கு ரித்யா. நா சூர்யாவை தூக்கிட்டு போய் துங்க வைக்கிறேன் என்று அவனை வாங்க போக அண்ணி சூர்யா என்கூடவேஇருக்கட்டுமே. ப்ளீஸ் என்று கெஞ்ச சூர்யாவும் அவளுடன் இருப்பதாக கூறினான்.
சரி என்றவள் தங்கள் அறைக்கு வர அவள் கண்டது என்னவோ குழந்தைபோல உறங்கும் தன்னவனை தான். அவன் அருகில் சென்று படுத்தவள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க தூக்கத்தில்
புரண்டவன் அவள் அருகில் உருண்டுசென்று அவள் மார்பில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.
அவனின் திடீர் செயலில் அதிர்ந்தவள் அப்படியே இருக்க அவன் மேலும் அவளுடன் ஒன்றி குழந்தை போல அவன் முகத்தை அவள் மார்பில் தேய்த்து நன்றாக அவள் மார்பில் முகம் புதைத்து உறங்க தொடங்கினான். அவளிற்கு இப்பொழுது சூர்யாவிற்கு இவனிற்கு எந்த வித்தியாசமும் இல்லை என்று தோன்றவே அவன் தலையை கோதியவாறு சிறு புன்னகையுடன் அவளும் உறங்க தொடங்கினாள். அநேரத்தில் அவள் பழி உணர்ச்சி எங்கே போனது என்று அவளுக்கே தெரியவில்லை.
******** ********* ********
வதிகாவின் வீடு,
இங்கு தரையில் குறுகி வயிற்றை பிடித்துக்கொண்டு படுத்திருந்தாள் வதிக்கா. பெண்வளுக்கு மாதம் மாதம் தோன்றும் பிரச்சனை வந்துவிட அநேரத்தில் தன் தாயின் அரவணைப்பிற்காக ஏங்கியது அவளின் உள்ளம். எப்பொழும் இந்த வலி வரும் பொழுது அவள் தாய் தான் அவள் உடனிருந்து அவளை கவனித்துக்கொள்வார். ஆனால இப்பொழுது அவர் இல்லை என்று நினைக்கும் பொழுது அவளிற்கு கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது.
அவள் அப்படியே படுத்திருக்க அப்பொழுது ஒரு கரம் அவளை கையில் எந்தியது. யாரென்று அவள் திடுக்கிட்டு விழிக்க அங்கு தியாஷ் இருப்பதை கண்டு மனம் நிம்மதியடைந்தது. அவளை கட்டிலில் கிடத்தியவள் சமையலறை சென்று சூடு தண்ணீரில் வெந்தயம் கலந்து அதை அவளை குடிக்க வைத்தான்.அவள் குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைத்துவிட்டு அவளை கை தாங்களாக கழிப்பறை கூட்டி சென்றவன் அவளை குளித்து வருமாறு கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
அவளுக்கு தேவையான பொருட்களை தயார் செய்துவிட்டு வெளியே சென்று விட தனக்கு தேவையான பொருட்கள் உள்ளதை பார்த்து அவனை நினைத்து பூரித்துப்போனாள் வதிக்கா.
பின்பு தலையில் ஈரத்துடன் வெளியே வந்தவளை அமர வைத்து தலையை காயவைத்தவன் அவளுக்கு சமைத்த உணவுகளை தட்டில் போட்டு எடுத்துவந்து ஊட்ட ஆரம்பித்தான்.
முதலில் மறுத்தவள் அவன் முறைத்த முறைப்பில் அமைதியாக உண்டுமுடித்தாள்.
அவளை தன் மடியில் படுக்க வைத்து அவளின் தலை கோத அவள் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தாள்.
இப்போ எதுக்கு அழற. அதான் நா இருக்கேன்ல. இனி நீ எப்பவும் அழக்கூடாது. உனக்கு அம்மாவா அப்பாவா எல்லமுமா நா இருப்பேன்.
நா அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன். நீ என்ன எத்துகிட்டாலும், எத்துலைனாளும்
நா உனக்கு பாதுகாப்பா எப்போமே இருப்பேன். எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு என்றவன் அவளுக்கு தட்டிக்கொடுக்க தாயின் அரவனைப்பும், தந்தையின் பாதுகாப்பும் ஒரு சேர உணர நிம்மதியாய் கண்யர்ந்தால் பேதை.
அன்று முழுதும் அவளுடன் இருந்து அவளுக்கு தேவையான அனைத்தும் செய்து அவளுக்கு தாயுமானவனாக மாறிபோனான் ஆண்மகன்.
பழி வெறி படலம் தொடரும்............
Comments
Post a Comment