எனக்கெனவே நீ பிறந்தால் 16
பார்க்கில் ஒரு மரத்தில் சாய்ந்து நின்றிருதாள் ஆரத்தியா. அவளுக்கு முதுகு காட்டியபடி போலீஸ் உடையில் நின்றிருந்தான் யதர்வன்.
என்னோட காதல் ஏன் உங்களுக்கு புரியமாட்டேங்குது. நா உங்கள உண்மையா காதலிக்குறேன். அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க என்று ஆராத்யா யதிர்விடம் கேட்க அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
உங்கள தான் கேட்குறேன். அமைதியா இருந்தா என்ன அர்த்தம். என்னோட காதல் ஏன் உங்களுக்கு புடிக்கல? இந்த கேள்விக்கான பதில் இன்னைக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும் என்றாள் ஆராத்யா.
தோ பாரு. எனக்கு காதல் மேல நம்பிக்கை இல்லை என்று அவன் கூற ஒரு நிமிஷம். காதல் மேல நம்பிக்கை இல்லையா? இல்ல என் மேல நம்பிக்கை இல்லையா? என்ற அவளின் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று அவனுக்கு தெரியவில்லை.
ஏற்கனவே ஒருவள் காதல் என்று நம்பியதால் தான் தற்போது அவளுக்கு இந்த நிலைமை நேர்ந்தது. அப்படி இருக்கும் பொழுது என்னால் எப்படி காதலை நம்ப முடியும் என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தான் யதர்வ்.
ஆராத்யா: என்னோட கேள்விக்கு இன்னும் பதில் வரல.
கைகளை கட்டிக்கொண்டு அவளை நேருக்கு நேராக பார்த்தவன், நீ என்ன கேள்வி கேட்ட, “காதல் மேல நம்பிக்கை இல்லையா? இல்ல என் மேல நம்பிக்கை இல்லை”ன்னு தான
கேட்ட. உன்னோட கேள்விக்கு பதில் இது தான். இதை நல்லா உன் மண்டைல ஏந்திக்கோ.எனக்கு காதல் மேலயும் நம்பிக்கை இல்ல. உன் மேலையும் இந்த வார்த்தைய நல்லா கேட்டுக்கோ உன் மேலையும் நம்பிக்கை இல்லை என்று கூற பெண்ணவளின் கண்களில் இருந்த கண்ணீர் ஊற்றாய் பெருக்கெடுத்தது.
உள்ளத்தை யாரோ கத்தியால் கிழிப்பது போல் வலித்தது. தன்னவனின் வாயிலிருந்து இப்படியொரு வார்த்தையை கேட்கவா என் காதல் கொண்ட மனது இவ்வளவு நாட்கள் காத்திருந்தது. இந்த வார்த்தையையா தன் மனம் எதிர்பார்த்தது. இந்த நொடியே தன் தன் உயிர் தன்னைவிட்டு பிரிந்து விட கூடாதா என்று தோன்றியது பேதையவளுக்கு.
தன் கண்களை துடைத்துக்கொண்டவள் இப்போ நா என்ன பன்னா என் மேல உங்களுக்கு நம்பிக்கை வரும் என்று கேட்டவளை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தவன் ஹ்ம்ம் வேணும்னா ஒன்னு பண்ணு என்றவன் தன் பாக்கெட்டினுள் கைகளை விட்டு உள்ளிருந்து ஒரு கத்தியை எடுத்தான்.அவன் பாதுகாப்பிற்காக இந்த கத்தியை எப்பொழுதுமே தன்னுடன் வைத்திருப்பான்.
அவள் அவனையே பார்த்திருக்க அவள் முன்பு அதை நீட்டியவன் உன்னோட காதல் உண்மைனா, உன்னோட இந்த காதல் மேல நம்பிக்கை எனக்கு வரணும்னா இதோ இருக்கே இந்த கத்தி, இந்த கத்தியால் உன் கைய கிழிச்சிக்கோ. அப்போ நம்புறேன் உன்னோட காதல் உண்மைன்னு. என்று அவன் கூறிய அடுத்த நொடி அதை பிடுங்கியவள் சரமாரியாக தன் மணிக்கட்டில் கிழித்தாள். கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.
அவன் அதிர்ந்து பதறிவிட்டான். அவள் அவ்வாறு செய்யமாட்டாள் என்று நினைத்திருந்தவன் அவளின் திடீர் செய்கையில் நிலைகுலைந்து போனான்.
என்ன காரியம் பண்ணிட்டடி பைத்தியகாரி என்று அவள் கன்னத்தில் அவன் பளார் பாளாரென அவன் அறைய, ஏற்கனவே ரத்தம் வெளியேறியத்தில் மயக்கத்தில் இருந்தவள் அவன் கைகளில் துவண்டு சரிந்தாள். அவளின் கைகளில் இருந்து வழிந்த ரத்தத்தை தன் கைக்குட்டையால்
கட்டியவன் அவளை அள்ளி தூக்கிகொண்டு தன் காரிற்க்கு ஓடினான். அவளை சீட்டில் அமரவைத்தவன் தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க அவள் தன் மெதுவாக கண்விழித்தாள்.
அவள் விழித்ததை பார்த்தவன் ஃப்ர்ஸ்ட் எய்டு பாக்ஸை திறந்து அவள் கையில் கட்டு போட ஆரம்பித்தான்.
இப்போவாவது என்னோட காதல் உங்களுக்கு உண்மைன்னு புரியுதா என்றவளை மீண்டும் ஓங்கி அறைந்தான். பைத்தியமாடி உனக்கு. ஏன் இப்டி என்னோட உயிர வாங்குற. நா நிறைய விஷயத்தை வாழ்க்கைல பார்த்துட்டேன். அதனால் தான் காதல் வேணாம்னு இருந்தேன். அதானல தான் உன் கிட்ட இருந்தும் ஒதுங்கி இருந்தேன். ஏண்டி ஏன்? என்று தான் தலையை அழுத்த கோதி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன், நா உனக்கு அப்டி என்ன பண்ணிட்டேன். எதுக்கு என்ன இந்த அளவுக்கு நேசிக்குற என்றவனை ஏறிட்டு பார்த்தவள் காதல் உருவத்தை பார்த்து வரது இல்ல. மனசை பார்த்து வரும். அதே மாதிரி நீங்க எனக்கு ஏதாவது ஹெல்ப் பன்னா தான் உங்க மேல எனக்கு காதல் வரணும்னு அவசியம் இல்லை. உங்கள முதல் தடவை பார்க்கும் போதே நீங்க எனக்குள்ள வந்துடீங்க. உங்களோட திமிரான பேச்சு, நடவடிக்கை, கம்பீரமான குணம் இதுதான் என்ன உங்கள காதலிக்க வச்சிது. என்னோட காதல் பொய் இல்லைங்க. என்ன நம்புங்க என்று கையெடுத்து கும்பிட்டு அழுதவளை வாரி அனைத்துக்கொண்டான் யதர்வன்.
அவளும் அவன் தோளில் முகம் புதைத்து அவனை கட்டிக்கொண்டு அழுதாள். இவளுடைய காதல் உண்மையானது. தனக்காக உயிரையே தியாகம் செய்யா தயாராக இருக்கும் இவளை இழக்க கூடாது என்று மனதில் தீர்மானித்தவன் உன்னோட இந்த காதலுக்கு நா தகுதியன்வனான்னு எனக்கு தெரியாது.உன்னோட அளவுக்கு என்னால் காதலிக்க முடியுமான்னு தெரியல. ஆனா என்னால் முடிஞ்ச அளவுக்கு என்னோட காதல உனக்கு கொடுப்பேன் என்று அவன் கூற அதில் மகிழ்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து உள்ளம் நிறைந்த காதலுடன் “ஐ லவ் யூ” என்று கூற அவன் நா என்னோட காதல சொல்ல மாட்டேன் . செயல்ல காட்றேன் என்று கண்ணடிக்க அவள் வெட்கத்தில் மேலும் அவனுடன் ஒன்றினாள்.
இனி தன் வாழ்வு இவளோடு தான். இவளை என்றும் கைவிடக்கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டு அவளை உச்சில் முத்தமிட்டு இறுக அணைத்துக்கொண்டான். அவளும் அவன் கன்னத்தில் வெட்கத்துடன் முத்தமிட்டு அவனுள் புதைந்து கொண்டாள்.
ஹாஸ்ப்பிட்டல் போலாமா என்று அவன் கேட்க வேண்டாமேன தலையாட்டியவள் எனக்கான மருந்து நீ தான் புருஷா என்று கூற அவளை காதலுடன் பார்த்தவன் அடுத்த நொடியே அவள் இதழில் கவி பாட ஆரம்பித்துவிட்டடான். அவளும் அவன் தலை கோதி அவனுக்கு ஒத்துழைப்பு வழங்க அவளை தன்னுடன் இறுக்கி பிணைத்துக்கொண்டான் போலீஸ் ரௌடி❤️❤️❤️❤️.
********* ********** **********
கட்டிலில் அமர்ந்து இருந்த வன்ஷிக்கு சகாலையில் நடந்த நிகழ்வே நினைவில் ஓடிக்கொண்டிருந்தது.
இந்த காஃபிகாக உயிர கூட தரலாம் என்ற மாறன் அதை தன் வாயருகே கொண்டு சென்றான். வன்ஷிக்கு பயத்தில் முகம் வெளிற தொடங்க சடாரென அந்த காஃபியை தட்டிவிட்டாள். நொடி பொழுதில் நடந்த நிகழ்வில் மாறன் திடுக்கிட்டு போனான்.
என்ன ஆச்சு பாப்பா. ஏன் காஃபியை தட்டிவிட்ட என்றவனை பார்த்தவளின் வாய் குழறியது. அது.... அதுவந்துங்க. அந்த கா...... காஃபில ஏதோ பூச்சு விழுந்துருச்சுபோல அதை இ......இப்போ தான் நா பார்த்தேன். அதான் தட்டிவிட்டேன் ஒரு வழியாக கூறிமுடித்தால் வன்ஷி.
அவள் முகத்தில் இருந்த பதற்றத்தை பார்தவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவளுக்கு அப்பொழுது அந்த அணைப்பு தேவைப்பட்டதால் அமைதியாக அவனை அணைத்துக்கொண்டாள்.
ஒன்னும் இல்லடா. ஒன்னுமில்ல. அதான் நா அந்த காஃபிய குடிக்கலள.
அப்புறம் ஏன் இவ்ளோ பதட்டப்படுற
என்று ஆசுவாசப்படுத்தினான்.
அவள் அப்பொழும் நடுங்கியவாறு இருக்க அவளின் மனதை மாற்றும் பொருட்டு அவளை வம்பிழுக்க எண்ணினான்.
ஏண்டி புருஷன் தலைவலின்னு சொன்னா காப்பி கொடுத்துட்டு, அதையும் நீயே தட்டிவிட்டுட்டு, இப்போ இப்டி உட்கார்ந்துட்டு இருந்தா என்ன அர்த்தம். ஹான் போடி போ.போய் உன்னோட புருஷனுக்கு ஸ்ட்ராங்கா ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வா. என் பட்டு பையன் ஸ்கூல்ல எனக்காக வெய்ட் பன்னிட்டு இடுபாம். நா போய் அவனை கூட்டிட்டு வரனும். ஓடு ஓடு போய் காஃபி எடுத்துட்டுவா ஓடு என்று விரட்ட உதட்டை சுழித்தவளின் முகத்தை கையில் அடக்கியவன் சுழித்த உதட்டை தன் இச்சுகளால் நிறைக்க ஆரம்பித்தான். அவனிடம் இருந்து தப்பியவள் கிட்டச்சனிற்கு ஓடியேவிட்டாள்.
இப்பொழுது,
அதையே நினைத்து கனவில் உழன்று கொண்டிருந்தாள் வன்ஷி. “என்ன அவனை லவ் பன்ன ஆரம்பிச்சிட்டோம்னு தோணுதா?” என்று ஒரு குரல் கேட்க திடுக்கிட்டு விழித்தாள் வன்ஷி. சுற்றி பார்வையை சுழலவிட அவள் எதிரே அவள் மனசாட்சி தோன்றியது.
ஏய் நீ.....நீ யாரு. பாக்க என்ன மாதிரியே இருக்க என்ற வன்ஷியை பார்த்து சிரித்த அவளது மனசாட்சி உனக்குள்ள இருக்குற நா,உன்ன மாதிரி இல்லாம வேற யாரு மாதிரி இருப்பேன் என்று கேலியாக வினவியது.
அதில் கோவம் கொண்டவள் நீ எதுக்காக இப்போ இங்க வந்துருங்க. உனக்கு என்ன வேணும். முதல்ல இங்க இருந்து போ என்று கத்த இரு இரு நா போக தான் போறேன். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் பேசனுமே என்றது.
என்ன விஷயம் என்ற வன்ஷியை, மாறன் மேல உனக்கு காதல் இல்லனா எதுக்கு அவனை காப்பத்துன? என்றது மனசாட்சி.
வன்ஷி: நா ஒன்னும் அவனை காப்பத்தல.ஏதோ ஒரு நியபகத்துல காஃபிய தட்டிவிட்டுட்டேன். அவ்ளோதான்.
மனசாட்சி: ஒஹ் அப்படியா. அப்படினா எதுக்காக அவன் நல்லா இருக்கணும்னு பூஜை பன்ன?
அது.....அது....... அதுவந்து என்று வார்த்தை வராமல் தடுமாறியவளை
பார்த்து சிரித்த அவளின் மனசாட்சி “நா சொல்லட்டா?” என்று கேட்க அவள் என்னவென்று சொல் என்ற ரீதியில் அதை பார்த்தாள்.
“இதுக்கு பேரு தான் காதல்”என்று மனசாட்சி கூற அவள் அதிர்ந்து விழித்தாள். என்ன பாக்குற நீ ஒத்துகிட்டாலும், ஒத்துகலைனாலும் அது தான் உண்மை என்றது.
இல்ல இல்ல நீ..... நீ பொய் சொல்ற. என்ன திசை திருப்ப பாக்குற. இதை நா நம்ப மாட்டேன் என்றால் வன்ஷி.
அப்படியா அப்போ இன்னைக்கு அவனுக்கு கொடுத்த விஷம் கலந்த காஃபிய ஏன் தட்டிவிட்ட. அவனை கொல்றது தான உன்னுடைய எண்ணம். இப்போ அந்த எண்ணம் எங்க போச்சு என்று கேட்க அவளிடம் பதில் இல்லை.
நீ அவனை லவ் பண்ற. லவ் பண்ற. லவ் பண்ற என்று மனசாட்சி கூறிக்கொண்டிருக்கும் போதே ஆமா நா அவரை லவ் பண்றேன் என்று இரு காதுகளையும் கைகளால் அடைத்துக்கொண்டு கத்தினாள் வன்ஷி.
அவள் மனசாட்சி அவளை பார்த்து சிரிக்க, நா அவரை காதலிக்குறேன். உயிருக்கு உயிரா காதலிருக்கிறேன். போதுமா என்றால் தேவான்ஷி. இதை என் கிட்ட சொல்றத விட்டுட்டு அவன் கிட்ட சொல்லி அவன் கூட சந்தோஷமா வாழுற வழிய பாரு என்று கூறிவிட்டு மறைந்தது.
இப்பொழுது ஒரு விஷயம் வன்ஷிக்கு புரிந்தது. அவன் இல்லாமல் நான் இல்லை. அவன் மீது காதல் கொண்டுள்ள என்னால் எப்படி அவனை கொல்ல இயலும்.இல்லை என்னால் முடியாது. என்னால் அவனை கொல்ல முடியாது. என்ன ஆனலும் சரி தான் அவனை பழிவாங்க தான் இந்த வீட்டிற்குள் வந்தோம் என்பதை அவனிட கூறி தன் காதலையும் அவனிடம் கூறிட வேண்டும். அதன் பின்பு அவன் முடிவு என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
அப்பொழுது அவளுக்கு ஒரு கால் வர அட்டெண்ட் செய்து காதில் வைத்தால் வன்ஷி. என்ன தேவான்ஷி உன் புருஷன் ரொம்ப நாளுக்கு வாழனும்னு விரதம்லா இருந்த போல. ஆன அதுக்கு ஒரு புரோஜனமும் இல்லமாக போக போது. ஏன்னா உன்னோட புருஷன் இன்னும் கொஞ்ச நேரத்துல சாக போறான். முடிஞ்சா காப்பதிக்கோ என்று கூறி காலை கட் செய்தது ஒரு குரல். தேவான்ஷிக்கு இதயமே நின்று விடும் போல ஆகியது.
பழி வெறி படலம் தொடரும்.............
Comments
Post a Comment