எனக்கெனவே நீ பிறந்தாய் 17

ஆரத்யாவை வீட்டில் விட வந்தான் யதர்வன். அவள் காரை விட்டு இறங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஓய் என்ன என்னையே பாத்துட்டு இருக்க. வீட்டுக்குள்ள போன்ற ஐடியா இல்லையா மேடம் என்றான் யதர்வ்.


ம்ஹும் என்று தலையாட்டியாவள் நா போ மாட்டேன். என்ன இப்போவே தாலி கட்டி உன் கூட கூட்டிட்டு போய்டு என்று அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் ஆராத்யா.


அடியேய் அதுக்குள்ள என்னடி அவசரம் உனக்கு. விட்டா இப்போவே ஃப்ர்ஸ்ட்  நைட் கொண்டாடலாம்னு சொல்லுவ போல. போடி அங்குட்டு. அவன் அவனுக்கு இங்க ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. இதுல இவ வேற என்று சலித்துகொண்டவனின் கன்னத்தை நறுக்கென்றுகடித்து வைத்தாள்.



ஆஆஆஆ என்று அலறியவன் ராட்சஸி ஏண்டி கடிச்ச. பைத்தியகாரி. வலிக்குதுடி என்று கன்னத்தை தேய்துகொண்டு பாவமாக சொன்னவனின் உதட்டை பிடித்து இழுதவள் ஹான் நீங்க எத்தனை பேர அடிச்சி துவச்சிருப்பீங்க. அவங்களுக்கும் இப்டி தான வலிச்சிருருக்கும். அப்போ நீங்க மட்டும் ஏன் கத்துறீங்க. உங்களுக்கு வந்தா ரத்தம். அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று உதட்டை பிடித்து ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தாள்.


அவளிடம் இருந்து தன் உதட்டை காப்பற்றியவன் அடியேய் நா அடிச்சவனுங்க எவனும் நல்லவனும் இல்ல. தியாகியும் இல்ல. ஒன்னா நம்பர்**##@@பசங்க. அவனுங்க தப்பு பன்றானுங்க. நா அடிக்குறேன். அவனுங்க பண்ற தப்ப சரி பன்ன தான் போலீஸ் நாங்க இருக்கோம். அது எங்களோட கடமை என்று யதர்வ் திமிராக கூற அவன் கூறிய அழகில் தன்னை தொலைத்தவள் அவனை ரசித்தவாரே அமர்ந்திருந்தாள்.



ஏண்டி விட்டா கண்ணாலையே கற்பழிச்சிடுவ போல. உன்கிட்ட இருந்து நா கொஞ்சம் தள்ளியே இருக்கணும். அது தான் என் கற்புக்கு நல்லது என்று தன் சட்டையை மறப்பதை போல பாவனை செய்ய ஐயோ ரொம்ப தான் என்று முகத்தை வெட்டி திரும்பியவள் சரி இவ்ளோ தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ள வரலன்னா எப்டி. உள்ள வந்து காஃபிகுடிச்சிட்டு போ என்று ஆராத்யா கூற ஏன் வெறும் காஃபி மட்டும் தானா. வேற ஏதும் ஸ்பெஷல் இல்லையா என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறே நெருங்கி அமர அவனின் நெஞ்சில் கைவைத்து வெட்கத்துடன் சிரித்தவாறே தள்ளி விட்டவள் அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் விருந்தே வைக்குறேன். இப்போ உள்ள வா என்றுவிட்டு காரைவிட்டு இறங்கினாள்.


அவனும் காரை விட்டு அவளுடன் வீட்டிற்குள் வந்தான். வன்ஷி எங்கடி என்ற யதிர்விடம் அண்ணி ரூம்ல இருப்பாங்கன்னு நினைக்குறேன். நீங்க போய் பாருங்க. நா உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வரேன் என்று கூறிவிட்டு பணியாளிடம் காஃபி எடுத்துவர சொல்ல கிட்சனிற்கு சென்றாள்.


வன்ஷியின் அறை,

உள்ள வரலாமா என்று குரல் கேட்க வா யதர்வ் என்ற அவனை வரவேற்றாள் தேவான்ஷி. உள்ளே வந்தவன் சோபாவில் அமர்ந்தான். 

தேவான்ஷி: என்ன விஷயம் யதர்வ். தீடீர்னு வந்திருக்க.

அவன் எவ்வாறு ஆராத்யா மீதான காதலை அவளிடம் சொல்வது தெரியாமல் தினறி கொண்டிருந்தசன்.
நீ ஏதோ சொல்ல நினைக்குற. அதை சொல்ல உன்னோட மனசு தடுக்குது. எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு என்றால் வன்ஷி.


தன் மனதில் உள்ளதை அறிந்துகொண்ட தன் தோழியை ஆச்சர்யமாக பார்த்தான் யதர்வ்.


ஸ்ரீ அது ....வந்து... நா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனு. அதை எப்டி சொல்றதுன்னு தெரில்ல. 


அவள் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.நா ஆராத்யாவ லவ் பன்றேன் என்று தன் மனதில் உள்ளதை ஒருவழியாக சொல்லிவிட்டான். அவள் கேள்வியாக அவனை நோக்க உன்னோட பார்வைக்கான அர்த்தம் எனக்கு புரியுது என்றவன் அவளும் என்னை காதலிக்குறா என்று கூறி காலையில் நடந்த  நிகழ்வுகளை கூறினான்.


அவளுக்கு மகிழ்ச்சியே தன் நண்பனின் வாழ்வு இனி நன்றாக இருக்கும்  எண்ணி உள்ளம் மகிழ்ந்தவள் காங்கிரட்ஸ். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிச்சிக்கிட்டு சந்தோஷமா வாழனும்.புரியுதா என்று வினவ அவனும் சரியென தலையாட்டினான்.


யதர்வ் நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணு என்ற வன்ஷியை சொல்லு ஸ்ரீ என்ப விஷயம் என்று கேட்டான் யதர்வ். தன் நெற்றியை அழுந்த தேய்த்தவள் நா  மாறான லவ் பன்ன ஆரம்பிச்சிட்டேன் என்று கூற அவளை அதிர்ந்து நோக்கினான் யதர்வன்.
நீ என்ன் பேசுராணு தெரிஞ்சி தான் பேசுறியா?என்ன ஆச்சு உனக்கு. நீ இங்க அவனை பழி வாங்க தான் வந்த. லவ் பன்றதுக்கு இல்ல என்று கூற ஐ நோ தட். பட் அவரை லவ் பண்றேன் என்று மீண்டும் அதையே கூற யதர்விற்கு கோவம் கொப்பளித்துக்கொண்டு வந்துவிட்டாது.


பயத்தியமா நீ. நா என்ன சொல்ற. நீ என்ன பேசுற. இன்னைக்கு உன்னோட இந்த நிலைமைக்கு காரணமே அவன் தான்.  ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நா பார்த்த வன்ஷி நீ இல்ல. அவளுக்கு கோபம்னாலே என்னனு தெரியாது. யாரையும் கஷ்டப்படுத்த மாட்டா. எப்பையுமே வாலு தனம் பன்னிகிட்டு ரொம்ப சுட்டிபொண்ணா இருப்பா. ஆனா நீ இப்போ...... என்று அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை.



அதை பத்தி பேச வேணாம் யதர்வ் என்று தடுத்தாள் தேவான்ஷி. பேசி தான் ஆகணும் ஸ்ரீ. இப்போ பேசலன்னா வேற எப்பவுமே பேச முடியாம போய்டும் என்றான் யதர்வ்.
இங்க பாரு யதர்வ் நா அவரை காதலிக்குறது உண்மை. நீ கூட தான் ஆரத்யாவை லவ் பன்ற. அவ உன்னோட எதிரி மாறனோட தங்கச்சின்னு தெரிஞ்சி தான லவ் பன்ற. அப்போ நா அவர காதலிக்குறத நீ தப்புன்னு எப்டி சொல்லலாம் என்ற அவளின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. 


நா என்னோட மனசை திறந்து சொல்றே யதர்வ். எனக்கு அவரு மேல இருந்த காதல இன்னைக்கு தான் நா ரியலைஸ் பண்ணேன். அவரை கொல்லனும்ன்னு நினைச்சி அவரு குடிக்குற காப்பில விஷத்தை கலந்தேன் என்று கூறியவள் ஆனா அத அவருக்கு கொடுக்க என்னோட மனசு ஒத்துகல. ஏதோ ஓன்னு தடுத்துச்சு. அப்டி இருந்தும் என்னோட மனசை கல்லாகிக்கிட்டு அதை அவர்கிட்ட கொடுத்தேன். ஆனாலும் என் மனசு ஏதோ ஒரு விஷயத்தை எனக்கு சொல்ல துடிச்சிகிட்டே இருந்துச்சி. அவரு அதை குடிக்க போற நேரத்துல என்னையே அறியாம அதை நா தட்டிவிட்டுட்டேன். அப்போ எனக்கு அவருக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு தான் தோணுச்சு. அப்போ இருந்து புரிஞ்சிது அவரு மேல நா வச்சிருந்த காதலோடு அளவு என்னனு என்று அனைத்தும் கூறி முடித்தாள் வன்ஷி.


இதை அனைத்தையும் கேட்க்கொண்டுருந்த ஒரு உருவம் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது.
என்ன ஆனாலும் சரி. இன்னைக்கு என் மனசுல இருக்குற காதலையும், நா அவர பழிவாங்க தான் வந்ததேன்ற விஷயத்தையும் சொல்லபோறேன்.
அதுக்கு அப்புறம் அவரு என்ன எத்துகிட்டா சந்தோஷமா அவருக்கூட வாழுவேன். ஒரு வேளை ஏத்துகலன்னா அவர் கூட வாழ்ந்த நாட்களோட நினைவோட வாழந்து முடிச்சுறுவேன் என்று வன்ஷி கூற யதர்விற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


அப்பொழுது தேவான்ஷிக்கு ஒரு போன் கால் வர அதை அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள் வன்ஷி.
என்ன தேவான்ஷி ரொம்ப சந்தோஷமா இருக்க போல. உன் புருஷன் கூட ரொம்ப நாள் வாழனும்னு பூஜை எல்லாம் பண்ணிருக்க. ஆனா
அது எல்லாம் வேஸ்ட் ஆக போகுது. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் சாக போறான். முடிஞ்சா உன் ஆசை புருஷன காப்பதிக்கோ என்று காலை கட் செய்தது ஒரு குரல்



வன்ஷிக்கு இதயமே நின்றுவிடுவது போல் ஆகிவிட்டது. பயத்தில் அவள் முகம் வெளிறியது. கையில் இருந்த மொபைல் நழுவி கீழே விழ அவள் பேயறைந்தார் போல் நின்றிருந்தாள்.ஸ்ரீ என்ன ஆச்சு. யார் பேசுனா என்று கேட்க  அவளுக்கு கண்களில் இருந்து பொல பொலவென
கண்ணீர் அருவியாய் கொட்டியது. யதர்வ் தேவா.....என்னோட தேவா.....என்று 
வார்த்தை வராமல் தடுமாறினாள்.

அதிலேயே அவள் மாறனை தான் அவ்வாறு கூறுகிறாள் என்பதை அறிந்து கொண்டவன் மாறனிற்கு ஏதோ ஒரு ஆபத்து போல என்பதை புரிந்துகொண்டான். 

ஸ்ரீ ஸ்டாப் க்ரைங். முதல்ல நார்மல் ஆகு. யாரு என்ன சொன்னாங்கன்னு
பொறுமையா சொல்லு என்றான்.
அவன் கூறியதில் சற்று ஆசுவாசம் அடைந்தவள் தன்னை நிதான படுத்திக்கொண்டாள்.

கண்களை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள், யாரோ ஒருத்தன் தேவாவ இன்னும் கொஞ்ச நேரத்துல கொள்ள போறேன்னு சொன்னான் என்று கூற அவன் யாருன்னு உன்கிட்ட சொன்னனா? என்ற யதர்வின் கேள்விக்கு இல்லையென தலையாட்டியவள் யாருன்னு தெரியல. ப்ளீஸ் யதர்வ். எப்படியாவது என்னோட தேவாவ காப்பாத்து என்று கெஞ்சினாள். அவள் கைகளை பிடித்துக்கொண்டவன் ஸ்ரீ ஜஸ்ட் ரீலாக்ஸ். நா பாதுக்குறேன். நீ கவலை படாத என்று அவன் கூறி கொண்டிருக்கும் போதே வன்ஷிக்கு மீண்டும் ஒரு கால் வரவே அவள் மிரண்டு போய்விட்டாள்.


அவளை கண்களால் தைரியமூட்டியவன் காலை ஸ்பீக்கரில் போட்டான். பேசு என்று கண்ணால் சைகை காட்ட தொண்டையை விழுங்கி கொண்டு ஹாலோ என்றாள். ஹெலோ மேடம்.நா மாறன் சார் கம்பெனில ஒர்க் பண்றேன். சார் போன கார் ஆக்சிடெண்ட்ஆகிடுச்சு.
*****ஹாஸ்ப்பிட்டல்ல சார அட்மிட் பண்ணிருக்கோம். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வரமுடியுமா என்றான் ஒருவன்.


தேவா என்று தேவான்ஷி அலற அவளை அமைதிப்படுத்தியவன் நாங்க உடனே வரோம். அதுவரைக்கும் அவரை பார்த்துக்கோங்க என்றவன் அவளையும் ஆராத்யாவையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான். செல்லும் வழியெல்லாம் கண்ணீரில் கரைந்தபடியே இருந்தாள் தேவான்ஷி.


ஹாஸ்பிட்டலினுள் மூச்சிரைக்க ஓடியவள் கண்டது வதிக்காவின் தோளில் அழுது அழுது சோர்ந்து உறங்கி இருந்த சூர்யாவை தான்.
யதர்வ் முதலில் தியாஷிற்கு தகவலை சொல்ல வதிக்காவுடன் வெளியில் இருந்தவன் அவளை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டான்.


அவனை தன் கையில் தேவான்ஷி வாங்க தன் தாயின் ஸ்பரிசத்தில் எழுந்தான் சூர்யா. ம்மா ப்பா ப்பா என்று தேம்பியவனை தன் நெஞ்சோடு அணைத்தவள் மொவுனமாக கண்ணீர் வடித்தாள். மேடம் நா தான் உங்களுக்கு கால் பண்ணேன். நா ஈவினிங் அந்த வழியா போகும் போது தான் சாரோட கார் மரத்துல மோதி இருந்தத பாத்தேன். ஓடி போய் பார்த்த தம்பி அழுதுட்டு இருந்தான். சாரோட தலை ஸ்டியரிங்ல மோதியதுனால மயக்கத்துல  இருந்தாரு. குடிப்பையன்
சீட் பெல்ட் போட்டுருந்ததுனால அவனுக்கு அடிப்படல. உள்ள சார்க்கு ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு. நீங்க கவலைபடாதீங்க. சார்க்கு ஒன்னும் ஆகாது என்று கூறினான். அதற்குள் ராகவனும் அங்கு வந்து சேர்ந்தார்.


ஓகே ரொம்ப நன்றி. நீங்க போங்க நாங்க பாதுக்குறோம் என்று யதர்வ் கூற அவன் விடைபெற்று சென்றுவிட்டான். டாக்டர் வெளியே வர டாக்டர் அவருக்கு இப்போ எப்டி இருக்கு என்று அழுகையுடன் வினவினாள் வன்ஷி. பயப்பட ஒன்னும் இல்ல. தலைல சின்ன காயம் தான். கைல கொஞ்சம் சிராய்ப்பு. மத்தபடி ஒன்னும் இல்ல என்றார் மருத்துவர்.

நாங்க போய் இப்போ அவரை பார்க்கலாமா என்று தியாஷ் கேட்க யா ஷுயர்.  இன்னைக்கே கூட டிஸ்சார்ஜ் பன்னிக்காலம். நோ ப்ராப்லம் என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
அனைவரும் உள்ளே செல்ல கண்மூடி படுத்திருந்தான் தேவமாறுதன்.


சூர்யாவின் அப்பா என்ற அழைப்பில்  கண்விழித்தவன்  அனைவரும் இருப்பதை பார்த்தான். ப்பா ப்பா என்று  மாறனிடம் தாவிய சூர்யா கண்களில் கண்ணிர் வழிய அவன் முகத்தை தன் பிஞ்சு கைகளால் பிடித்து எதோ பேச முயன்று  கொண்டிருந்தான். ஒன்னும் இல்லடா செல்லம். என் பட்டுப்பையன் ஏன் அழறீங்க. அப்பாக்கு ஒன்னும் இல்ல. அழக்கூடாது. சரியா எங்க சிரிங்க பாப்போம் என்று அவனிடம் பேசிக்கொண்டிருந்தான் மாறன்.
பார்த்து வண்டி ஒட்டிருக்கலாம்ல மாப்பிள்ளை என்ற ராகவனிடம் எனக்கு ஒன்னும் ஆகல மாமா. நீங்க பதட்டப்படாதிங்க என்றான் மாறன்.

அண்ணா உங்களுக்கு ஒன்னும் இல்லையே. நங்களாம் எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா என்று அவன் ஒருதோளில் சாய்ந்துக்கொண்டாள்
ஆரத்தியா. எனக்கு ஒன்னு இல்லடா. நா நல்லா தான் இருக்கேன் என்ற மாறனைஅண்ணா வலி ஏதும் இருக்கா. டாக்டரை வர சொல்லவா என்று வதிக்கா கேட்க லைட்டா தான்மா பெயின் இருக்கு. கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும் என்ற மாறனிடம் எப்டி ஆக்சிடெண்ட் ஆச்சு என்று கேட்டான் யதர்வ். 

டேய் போலீஸ்காரா இப்போ கூட உன் மச்சானுக்கு உடம்பு எப்டி இருக்குன்னு உனக்கு கேக்க தோணால. போலீஸ் புத்தி வேலை செய்யுது பாத்தியா என்று கின்டல் செய்த மாறனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைதான் யதர்வ். 


கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா விலங்காதவனே என்ற யதர்வின் கோபத்தில் பாசம் நிறைந்து இருப்பது அனைவருக்கும் புரிந்தது. சரி சரி
விட்டா கண்ணாலையே எறிச்சிடுவ போல இருடா சொல்றேன் என்றவன் சூர்யாவை கூட்டிட்டு வரும் போது
அப்போசீட்ல ஒரு லாரி ரொம்ப வேகமா வந்துச்சு. நா முதல்ல சாதாரணமா இருந்துட்டேன். கிட்ட வரும்போது தான் அந்த லாரி எங்க இடிக்க வர மாதிரி தோணுச்சு. சட்டுன்னு வண்டிய திருப்பும் போது கன்ட்ரோல் இல்லாம கார் மரத்துல மோதிரிச்சு. நல்ல வேலை சூர்யாவுக்கு எதுவும் ஆகல என்றவன் மீண்டும் சூர்யாவை கொஞ்ச ஆரம்பித்துவிட்டன.

அனைவரும் அவன் சூர்யாவின் மீதி பாசத்தை கானும்போது பிரமிப்பாக இருந்தது. அனைவரும் அவர்களுக்கு தனிமை தர என்னி சூர்யாவை வாங்கி கொண்டு சென்றுவிட்டனர். மெதுவாக அவன் அருகில் வந்த வன்ஷி அவனையே கண்ணீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் கைபிடித்து தன் அருக்கே இழுத்தவன் அவளை தன்னுள் புதைத்து விடும் அளவுக்கு இறுக்கி கட்டிக்கொண்டான். 

இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையும் அவளை உடைத்துக்கொண்டு வெளிவந்தது. அவன் நெஞ்சில் புதைத்து அவள் கதறி அழுக பொறுமையாக அவள் முதுகை நீவியவாரு இருந்தான் மாறன்.

அவள் அழுகை மெது மெதுவாக குறைய அவள் முகத்தை நிமிர்த்தியவன் அழுது வீங்கி போன கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டான்.
அவள் கண்களில் முத்தமிட அவன் முகத்தை தன் இருகைகளால் பிடித்தவள் அவன் முகம் முழுவதும் முத்தமிட ஆரம்பித்தாள். அவளின் தலையை சாய்த்து இதழை கவ்விக்கொண்டான் கள்வன். அவளும் அவனுக்கு தோதாய் சாய்த்து இசைந்துகொடுக்க முத்த போர் நீண்ட நேரம் நீடித்தது.  தன்னவள் மூச்சு காற்றுக்கு ஏங்குவதைஅறிந்தவன்  எ விருப்பமே இல்லாமள் அவளை தன் இதழ் சிறையில் இருந்து விடுவித்தான் மாறன்.

அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன் போதும் அழுதது. பக்கா சகிக்கல பாப்பா என்று அவளை வெறுப்பேற்ற அவனை சரமாரியாக அடித்தால் தேவான்ஷி.

பின்பு அவனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துவந்தனர்.

******    *******   *******


தீரனின் வீடு,

தீரன் அடித்த அடியில் கீழே விழுந்தான் அந்த லாரி டிரைவர். ஏன்டா அவனை ஒரே அடியா அடிச்சு நசுக்கிட்டு வாடான்னு சொன்னா கிடைச்ச வாய்ப்பை மிஸ் பன்னிட்டு வந்துருக்க##@@*** என்று கத்திக்கொண்டிருந்தான் தீரன்.

சார். நா அவனை அடிக்க தான் சார் வேகமா போனேன். ஆனா அதுக்குள்ள அவன் வண்டிய திருப்பிட்டான். அதான் சார் இப்டி ஆகிடுச்சு. இந்த ஒரு தடவை மனிச்சிருங்க சார். என்று அந்த டிரைவர் கெஞ்ச அவனை எட்டி உதைத்தான். என் கண்ணு முன்னாடி நிக்காத. இங்க இருந்து போ என்று அவன் கர்ஜிக்க அவன் பதறியடித்து கொண்டு ஓடினான்.

ச்சை என்று டேபிளில் குத்த, தீரா அந்த மாறன் பொழச்சிட்டான். அவன் பையனையும் காப்பதிட்டான் என்று விக்கி கூற கோவத்தில் பொருட்களை எல்லாம் அடித்து நொறுகியவன் பீரை திறந்து குடிக்க ஆரம்பித்தான். விட மாட்டேன்டா. உண்ண சதோஷமா இருக்க விடமாட்டேன். அந்த தேவான்ஷி எனக்கு சொந்தமானவ.அவள உனக்கு விட்டு கொடுக்கமாட்டேன் என்று வீடே அதிர கத்தினான் தீரன்.


********    ********    *******


மாறனை வீட்டிற்குள் அழைத்து வந்தனர். அவனை ரூமிற்கு அழைத்து செல்ல முயன்ற வன்ஷியை ஒரு நிமிஷம் நில்லுங்க என்று தடுத்தால் ஆரத்தியா.


என்ன ரித்யா எதுக்கு நிக்க சொல்ற. என்ன விஷயம் என்று வன்ஷி வினவ அவள் எதிரே வந்தவள் எதுக்கு என்னோட அண்ணனா கொல்ல பார்த்தீங்க என்ற கேள்வியை அனைவரும் ஒருநிமிடம் அதிர்ந்தனர்.


ஆரு நீ என்ன பேசுற ஜானு எதுக்கு என்ன கொள்ள பாக்கணும் லூசு மாதிரி பேசாத என்று அவளை அடக்கினான் மாறன். நா ஒன்னும் பொய் சொல்லல அண்ணா. உண்மைய தான் சொல்றேன் என்றாள்  ஆரத்தியா.


என்ன உண்மைய சொல்ற. ஹான்.சரி உன் வழில வரேன். அவ என்ன கொள்ள பார்த்தான்னு நீ சொல்ற. அதுக்கு ஆதாரம் இருக்கா என்று கேட்ட மாறனை ஏன் இல்ல. அதை அவங்க வாயாலையே சொல்லுவாங்க என்றவள் நேராக வன்ஷியிடம் சென்றாள்.

அவளது முகத்தை பார்க்க முடியாமல் கீழே குனிந்தாள் தேவான்ஷி.எதுக்கு அண்ணா குடிக்க இருந்த காஃபில விஷம் கலத்தீங்க என்று தேவான்ஷிக்கு என்ன பதில் கூறுவதென்ற தெரியவில்லை.


இதுக்கு மேலையும் என்கிட்ட மறைக்கணும்னு  நினைக்காதிங்க. உங்க  ஃப்ரண்ட் கிட்ட நீங்க பேசிட்டு இருந்ததை நா கேட்டுட்டேன் என்று கூற யதர்வும் சேர்ந்து அதிர்ந்தான். அவனை ஒரு பார்வை பார்த்த ஆரத்தியா இப்போ உண்மைய சொல்ல போறியா இல்லையா என்று கத்த அவளை ஓங்கி அறைந்தான் மாறன். அனைவரும் அதிர்ந்து அவனிடம் அனைவரையும் கைநீட்டி தடுத்து நிறுத்தினான்.

எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட ஜானுவ  மரியாதை இல்லாம நீ, வா போன்னு பேசுவ. இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுன கொன்னுடுவேன் என்று விரல் நீட்டி எச்சரித்தான் மாறன். 

நீ என்ன அடிச்சே கொன்னாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை. ஆனா இவங்க தான் உண்ண கொள்ள பார்த்தாங்க என்று ஆரத்தியா கூறிக்கொண்டிருக்கும் போதே ஆமா நா தான் உன்ன கொல்ல நினைச்சேன் என்று வீடே அதிர கத்தினாள் தேவான்ஷி.


அனைவரும் அதிர்ந்து அவளை நோக்க மாறனிற்கு இதயமே ஒரு நிமிடம் தன் துடிப்பை நிறுத்தியது போல் தோன்றியது. அவளையே உறைந்து பார்த்தான் தேவமாறுதன்


பழி வெறி படலம் தொடரும்..........



Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....