எனக்கெனவே நீ பிறந்தாய் 18
அவளுக்கு முதல் கல்யாணம் நடக்கல என்று ராகவன் கூற ஆர்த்தியா அதிர்ச்சியுடன் அவரை திரும்பி பார்த்தாள்.
ஆமாம்மா தேவான்ஷிக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்றவர் அதன் பிறகு நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.
******** ********** ****
நதியா சென்றவுடன் வீட்டிற்க்கு வந்த தேவான்ஷிக்கு எதோ தவறாக நடக்கிறது என்று தோன்ற கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.
காலையில் எழுந்த நதியாவிற்கு உடல் ரணமாய் வலித்தது. அந்த அளவிற்கு இரவு முழுவது அந்த ஐந்து மிருங்களும் அவளை வேட்டையாடி இருந்தது. அங்கு அங்கு உடலில் காயங்கள் இருக்க தன் நிலையை நினைத்து அழுது தீர்த்தாள்.
எப்படியாவது இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும் என்று ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடினாள். அப்போது அந்த அறையில் ஒரு லேண்ட்லைன் இருப்பதை பார்த்தவள் வேகமா அதில் தேவான்ஷிக்கு அழைத்தாள்.
இரவு முழுவதும் தூங்காத வன்ஷி விடியலில் உறக்கத்தை தழுவினாள்.
அப்பொழுது போன் வர அதை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவள் ஹெலோ என்று கூற ஸ்ரீ நா ஏமாந்து போய்ட்டேண்டி. என்னோட வாழ்கையே
நாசமா போயிடுச்சு என்று நதியா கதறி அழுக வன்ஷிக்கு தூக்கி வாரிபோட்டது.
என்.... என்னடி சொ.....சொல்ற. முதல்ல அழறது நிறுத்து. என்ன நடந்துச்சுன்னு பொறுமையா சொல்லு என்று கூற தனக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதாள் நதியா.
தனக்கு தீரவினாலும் அவனது நண்பர்களினாலும் நடந்த கொடுமைகளை கூறி கதறினாள் நதியா. ஆனால் அவள் செய்த தவறு மாறனை பற்றி கூறாதது தான்.
தீரனின் மீது கட்டுகடங்கா கோபம் பொங்க ***த்த எவ்ளோ தைரியம் இருந்தா அவன் இப்டி பண்ணிருப்பான். நீ இப்போ முதல்ல அழாத. உன் மேல தப்பு இல்ல. நீ இப்போ எங்க இருக்கன்னு சொல்லு. நா அங்க வரேன் என்று தேவான்ஷி கூறி கொண்டிருக்கும் போது. நா இப்போ அவனோட கெஸ்ட் ஹவுஸ்ல இருகேண்டி. அது****ஏரியாவுல இருக்கு. மாறன் அண்ணா கூட என்று அவள் கூறும்போதே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் தீரன்.
அதில் அவள் கையில் இருந்த லேண்ட்லைன் கீழே விழுந்தது
அவளும் சேர்ந்து கீழே விழுந்தாள்.
திடீரென கால் கட் ஆகவே இந்த புறம் தேவான்ஷி ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு மனதில் பயம் ஊற்றெடுத்தது. தனக்கு என்ன ஆனலும் கவலையில்லை. ஆனால் அவள் ஒன்றும் தெரியாத குழந்தையாயிற்றே. கடவுளே இப்போது நான் என்ன செய்வேன் என்று பதறி அவள் கூறிய இடத்திற்கு கிளம்பினாள்
தேவன்ஷி.
அவள் முடியை பிடித்து தூக்கியவன் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த யாருக்கோ போன் பண்ணி இன்ப்ரமஷன் கொடுத்துட்டு இருப்ப. நீ முதல்ல இங்க இருந்து உயிரோட வெளிய போறியான்னு பாருடி என்றவன் விஷ்வாவிற்கு கண்ணை காட்ட அவன் கையில் ஒரு கத்தியை கொடுத்தான் விஷ்வா.
அதில் மிரண்டவள் ப்ளீஸ் என்ன விட்ரு. நா இங்க நடந்ததை யார்கிட்டயும் சொல்லமாட்டேன். எங்கையாவது கண்காணாத இடத்துக்கு போய்டுறேன். என்ன விட்ரு ப்ளீஸ் என்று அவள் கெஞ்ச நீ இங்க இருந்து உயிரோட வெளிய போனா தான வேற ஊருக்கு போவ. உன்னோட பொணம் கூட இங்க இருந்து வெளியே போகாது என்று கூறியவன் கத்தியால் அவளை குத்த போக அவனை தடுத்து கீழே தள்ளிவிட்டாள். அங்கிருந்த பூ ஜாடியை
கொண்டு அனைவரையும் தாக்கியவள் அந்த வீட்டை விட்டு வெளியேறி உயிரை காப்பாற்றி கொள்ள வேக வேகமாக ஓடினாள்.
டேய் என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க. அவள புடிங்கடா என்று தீரா கத்த அனைவரும் அவளை துரத்தி கொண்டு ஓடினர்.அவர்களிடம் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று பேதை தன் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினாள். பசியினாலும் நேற்று அந்த அரகர்களினால் ஏற்பட்ட கொடுமையினாலும் பெண்வளால் ஒரு அளவிற்கு மேல் ஓட முடியவில்லை.
கடவுளே அவளுக்கு எதுவும் ஆகி கூடாது. நீ தான் அவள காப்பத்தனும் என்று மனதில் அழுதாவறு அவள் கூறிய இடத்தை அடைந்தாள் தேவான்ஷி. அதீத சோர்வினால்
மயக்கம் ஏற்பட அதை பொருட்படுத்தியவாறு ஓடினாள் நதியா.திடீரென கண்கள் சொக்க எதிரே வரும் லாரியை அவள் கவனிக்கவில்லை.
வேகமாக வந்த லாரி அவள் மீது மோத தூக்கிவீசபட்டாள் நதியா.
அப்பொழுது அவளை அங்கு தேடிக்கொண்டு வந்த தேவான்ஷி நதிஈஈஈஈஈஈஈ என்று அலறியவாறு
அவளிடம் ஓடினாள். கீழே விழுந்த பெண்வளுக்கு தலையில் இருந்து ரத்தம் வெளியேற உடல் முழுவது பாதி சிதைந்து போனது.
அவளிடம் ஓடிய தேவான்ஷி நதி...... நதி
என்ன பாருடி கண்ணை தொறந்து என்ன பாரு என்று கதறி அழுதாள்.
கண்களை திறந்து பார்த்தவள் உன்ன நம்பி ஒரு உயிரை ஒப்படைச்சிட்டு போறேன். பத்திரமா பாத்துக்கோ என்றவாறு கண்களை மூடினாள். ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நதி நதி கண்ணை தொற...... என்று கதற அவளிடம் ஒரு அசைவும் இல்லை.
அவளை துரத்தி கொண்டு வந்த தீரா
அவள் லாரியில் மோதியதில் இறந்துவிட்டால் என்று நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டான். அவனுடைய கேட்டநேரம் அப்பொழுதும் அவன் தேவான்ஷியின் முகத்தை பார்க்கவில்லை.
******* ******** *******
********ஹாஸ்ட்டல்,
பித்துப்பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள் தேவான்ஷி. அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. ஒரு அசைவும் இல்லாமல் பொம்மை போல இருந்தாள். மூன்று மணி நேரமாக உள்ளே நதியாவிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கொண்டிருந்தது.
அவள் அருகில் கண்ணிவிட்டவாறு அமர்ந்திருந்தார் ராகவன். தான் பெற்றெடுக்கவில்லை என்றாலும் உணர்வால் அவள் தன் மகளாயிற்றே.
பெறாத தந்தையின் மனம் துடித்து போனது. யதர்வும் தியாஷும் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர்.
கற்சிலை போல் அமர்ந்திருப்பவளை பார்த்தவர்களுக்கு கவலையாக இருந்தது.
டாக்டர் வெளியே அவசரமாக அவரிடம் ஓடினார் ராகவன். ஆனால் வன்ஷி பொழுது அமைதியாகவே அமர்ந்து இருந்தாள். டாக்டர் என்னோட பொண்ணுக்கு இப்போ எப்டி இருக்கு பதறியவாறு கேட்க சார் நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோங்க சார் என்று டாக்டர் கூற ராகவனுக்கு பயம் தொற்றி கொண்டது. டாக்டர் என்ன ஆச்சுன்னு முதல்ல சொல்லுங்க என்று கண்ணீரோடு கேட்க யூவர் டாட்டர் ஹாஸ் பீன் கேங் ரெப்டு என்று கூற அய்யோ டாக்டர் என்ன சொல்லறீங்க என்று அழுதார் ராகவன்.
ப்ளீஸ் சார் கொஞ்சம் பொறுமையா கேளுங்க நா சொல்றது எல்லாமே உண்மை. உங்க பொண்ண கூட்டு பலாத்காரம் பன்னிருக்காங்க. அது மட்டும் இல்ல இப்போ அவங்க டூ மந்த்ஸ் பிரக்னன்ட் என்று கூற அதிர்ந்து போனார். இதை கேட்ட யதர்வும், தியாஸும் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்டர் நீங்க என்ன சொல்லறீங்க. என்க நதி தப்பான பொண்ணு கிடையாது. இப்டி நடக்க வாய்ப்பே இல்லை என்று யதர்வ் கோவத்தில் கத்த டாக்டர் ப்ளீஸ் இன்னொரு முறை அவளை செக் பண்ணுங்க என்று தியாஷ் கூறினான். சார் நாங்க நல்லா செக் பண்ணி தான் சொல்றோம். எங்கள நீங்க நம்பலாம் என்றார் டாக்டர்.
இன்னொரு விஷயம் இருக்கு. அவங்கள கேங் ரேப் பண்ணிருந்தாலும் நல்ல வேலையா அவங்க வயித்துல இருக்குற குழந்தைக்கு எதுவும் ஆகல. ஆக்சிடெண்ட் ஆகி கீழ விழும் போது கூட கைய வயித்துல வச்சிட்டு தான் விழுந்துறுகாங்க. அதனால குழந்தைக்கு எந்த அடியும் படல
ஆனா அவங்க என்று அவர் அதற்கு மேல் தயங்க டாக்டர் ஏன் தயங்குறீங்க. தயவு செஞ்சு என்னனு சொல்லுங்க என்று ராகவன் கதற டாக்டர் பட் யூவர் டாட்டர் ஆஸ் கோன் இன் டு ய கோமா (your daughter has gone into a coma) என்றார்.
ஐயோ என் பொண்ணு நெஞ்சை பிடித்து கொண்டு சேரில் அமர்ந்தார். சார் ப்ளீஸ் காம் டவுன். ஆனா அவங்க வயித்துல வளர்ற குழந்தை ஹெல்தியா இருக்கு. சோ குழந்தை நல்லா வளர்ச்சி அடைஞ்சதுக்கு அப்புறம் ஆபரேஷன் பண்ணி வெளியே எடுத்துடலாம். அதுக்கு அப்புறம் நீங்க விருப்பப்பட்டா அவங்க உடல் உறுப்புகள தானம் பண்ணுங்க என்றார் டாக்டர்.
அனைவருக்கும் என்ன கூறுவதென்றே தெரியவில்லை. கண்ணீர் வடித்தவாறு இருக்க எனக்கு இதுல சம்மதம் என்று கூறினாள் தேவான்ஷி. அவ்வளவு நேரம் கல்லாய் சமைந்து இருந்தவள் இப்போது தான் வாயை திறந்தாள்.
எழுந்து மருத்துவரிடம் வந்தவள் நீங்க சொன்னபடியே பண்ணுங்க டாக்ட்ர்.
எனக்கு இதுல முழு சம்மதம் என்று கூற ஓகே மேடம். அவங்க டெலிவரி வரைக்கும் இங்கையே இருக்கட்டும். அப்போ தான் குழந்தையோட குரோத் செக் பன்னி ட்ரீட்மெண்ட் பன்ன முடியும் என்று கூற அது உங்க விருப்பம் என்றதோடு முடித்துக்கொண்டாள்.அவளுக்கு புரிந்த ஒரே விஷயம் நதியா தீராவின் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள் என்பது மட்டுமே.
டாக்டர் சென்றுவிட தன் தந்தையிடம் வந்தால் தேவான்ஷி. அப்பா என்று உணர்வற்று அழைத்தவள் நா ஒரு முடிவு எடுத்தா சரியா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ கடைசியா என் கிட்ட கேட்ட விஷயம் குழந்தைய நல்லா பாத்துக்கனுன்றது தான் அதை நா பண்ணனும்னு நினைக்குறேன். இதுல யரோட பேச்சையும் நா கேக்க மாட்டேன் என்றவள் அதோடு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அதன் பின் வந்த நாட்களில் அவளே
நதியாவை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டாள். ஒரு நிமிடம் கூட அவளை விட்டு பிரியவில்லை. அவளுக்கு செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலையையும் அவளே செய்தாள். நாட்கள் செல்ல செல்ல வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து ஆரம்பித்தது .
குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பித்ததில் இருந்து அதிக நேரம் குழந்தையுடன் பேசுவாள். குழந்தையும் தன் ஆசைவை அவளுக்கு காட்டிக்கொண்டே இருந்தது. யதர்வும்
தியாஷும் நதியாவின் நிலையை எண்ணி மிகுந்த கவலையில் தள்ளபட்டிருந்தனர்.
இவ்வாறு நாட்கள் ஓட நதியாவிற்கு ஒன்பதாவது மாதம் முடிந்த நிலையில் அவளது உடல் நிலையில் பிரச்சினைகள் தோன்றியது. அவளை பரிசோதித்த டாக்ட்ர் உடனே குழந்தையை ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும் கூற அதற்க்கு ஒப்புக்கொண்டனர். ஆப்ரேஷம் செய்து குழந்தையை வெளியே எடுத்தவர்கள் முதலில் குழந்தையை தேவான்ஷியிடம் கொடுக்க இவ்வளவு நாட்கள் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வெளிவந்தது.
குழந்தையை நெஞ்சோடு அனைத்து கதறினாள். பிஞ்சு கை கால்களை அசைத்து சிரித்த குழந்தை அவள் முகத்தை தன் பிஞ்சு கைகளால் பிடித்து விளையடியது. அதை பார்த்து சிரித்தவள் என்ன பட்டு பாக்குறீங்க. இனிமே நா தான் உன்னோட அம்மா. உங்க அம்மா என்ன விட்டு போன மாதிரி நீங்க என்ன விட்டு எப்பவும் போக கூடாது சரியா என்று அழுகையுடன் குழந்தையிடம் வினவ அதற்கு துள்ளி துள்ளி தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது.
அதன் பிறகு நதியாவின் உடல் உறுப்புகள் தனம் செய்யப்பட்டது. குழந்தைக்கு சூர்யா தேவன் என்று பெயரிட்டவள் பெற்று எடுக்காத குழந்தை செல்வத்திற்கு தாயனாள்.
அதன் பிறகு சூர்யாவே அவளது முழு உலகமாகி போனான். ஆண்கள் என்றெலே தவறானவர்கள் என்று நினைக்க ஆரம்பித்தாள்.
அவள் நம்பிய மூன்று ஆண்கள் யதர்வ், தியாஷ் மற்றும் அவளின் தந்தை ராகவனை மட்டுமே. ஆனால் அவளே அறியாத விஷயம் அவள் மனதில் தேவமாறுதன் அவளின் தேவாவாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டான்
என்பதை தான். அவன் மீது கொண்ட காதலை மனம் உரைத்தாலும் பழி வெறி கொண்ட மூளை அதை ஏற்கமறுத்தது.
தன் தோழியின் இறப்பிற்கு காரணமானவர்களை பழி வாங்க வேண்டும் என்று துடித்தாள். அதற்கு தான் முதலில் ஒரு நல்ல பிஸினஸ்வுமனாக உருவெடுக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் பேர் புகழை விட இன்னும் புகழை சம்பாதிக்க வேண்டும். அதன் பிறகு ஒருவர் விடாமல் அனைவரையும் ஒழித்து கட்ட வேண்டும் என்று முழு மூச்சாக பிஸ்னஸில் இறங்கினாள்.
அவள் செய்த தவறு நதியாவின் நிலைக்கு மாறனும் காரணம் என்று நினைத்தது தான். நதியா கடைசியாக
கூறிய வார்த்தை மாறன் என்பது தான்.
நதியா “மாறனை தீராவிடம் இருந்து மாறனை காப்பாற்று” என்று கூறுவதற்க்காக அவன் பெயரை இறுதி வார்தையாக கூறினாள். ஆனால் அதை முழுவதுமாக கூறுவதற்க்குள் தீரா லேண்ட்லைனை பிடுங்கி உடைத்ததால் அதன் பிறகு தேவான்ஷியிடம் நதியாவால் பேச முடியவில்லை. அதை தவறாக புரிந்துகொண்ட வன்ஷி பழி வாங்கும் படலத்தில் மாறனையும் இணைத்துவிட்டாள்.
அதன் பிறகு அவனை திருமணமும் செய்துகொண்டு பழிவெறியுடன் அவன் வீட்டினுள் நுழைந்தாள்.
இதை அனைத்தியும் ராகவன் கூறி முடித்தார். அனைவரும் அமைதியாக இருந்தனர்.
பழி வெறி படலம் தொடரும்..........
Comments
Post a Comment