எஎனக்கெனவே நீ பிறந்தாய் 19

ராகவன் தேவான்ஷியின் கடந்த காலத்தை பற்றி கூறி முடிக்க அங்கு பலத்த அமைதி நிலவியது. 


ராகவன் நேராக மாறனிடம் மாப்பிள்ள என் பொண்ணு வேணும்னு இதை பண்ணிருக்க மாட்டா. அவளுக்கு நதியா மேல அளவுகடந்த பாசம் இருந்துச்சு.  நதியாக்கு ஏதாவது ஒன்னும் இவளால தங்கிக முடியாது. திடீர்ன்னு அவ இறந்து போனதை இவளாள ஏத்துக்க முடில்ல. நதியாவோட நிலைமைக்கு காரமானவங்காள பழி வங்கணும்னு நினைச்சி இப்டி பண்ணிட்டா. அவ பன்ன தப்புக்கு நா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகுறேன். அவள மனிச்சிடுங்க மாப்பிள்ளை என்று ராகவன் கையெழுத்து கும்பிட்டு அழுக மாறன் சிலை போல் நின்றிருந்தான். அவன் முகத்தில் ஒரு உணர்ச்சி கூட வெளிப்படவில்லை.

ஆராத்யா நேராக தேவான்ஷியிடம் சென்றவல் அண்ணி நா என்ன ஏதுன்னு  தெரியாம உங்க மரியாதை குறைவா பேசிட்டேன். நீங்க இவ்ளோ பெரிய தியாகம் பண்ணிறுப்பீங்கன்னு
தெரியாம ஏதேதோ பேசிட்டேன் சாரி அண்ணி என்று அவளை அணைத்து கொண்டு அழுக அவ்வளவு நேரம் அழுகையை அடக்கி கொண்டிருந்தவள் 
பதிலுக்கு அவளை கட்டி கொண்டு கதறி அழுதாள்.

அழுது ஓய்ந்தவள் ஆரத்யாவை தன்னிடம் இருந்து விலக்கி தன் கண்ணீரை துடைத்து கொண்டு நேராக மாறனிடம் சென்றாள்.
அவன் எதிரே நின்றவள் அவனையே
பார்த்துக்கொண்டு நின்றாள்.


அவனோ அவளை கூட காவனிக்காது
தரையில் பார்வையை நிலைகுத்தி நின்றிருந்தான். நா பன்ன தப்புக்கு மன்னிப்பே கிடையாது. அது எனக்கே தெரியும். நா உங்களுக்கு பன்னது துரோகம். அது உங்களுக்குள்ள எவ்ளோ பெரிய வலிய ஏற்படுத்திருக்கும்னு எனக்கு தெரியும்.

நா இந்த வீட்டுக்குள்ள முதல் முதல்ல காலடி எடுத்து வைக்கும் போது உங்கள பழிவங்கனும்ற எண்ணத்தோட தான் உள்ள வந்தேன். ஆனா நீங்க என் மேலையும் என் பையன் மேலையும் வச்சிருந்த உண்மையான பாசமும், அன்பும் என்ன மாத்திருச்சு. என்னையே அறியாம உங்க மேல எனக்கு காதல் வந்துருச்சு. உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆகிறதுக்கு முன்னாடி என்னோட காதல உங்ககிட்ட சொல்லி என் மனசுல உங்க மேல இருக்குற பழி வெறியையும் சொல்லிடனும்னு நினைச்சேன். ஆனா அதுக்குகுள்ள என்னென்னமோ நடந்துருச்சு. ஆனா ஒன்னு சொல்றேங்க. நா உங்க மேல வச்சிருக்க காதல். அதை பொய்னு மட்டும் சொல்லி என்ன உயிரோட கொண்ணுடாதிங்க என்றவள் மடங்கி அமர்ந்து கதறினாள்.

உனக்கு பழி வாங்க போயும் போயும் என் காதலா கிடைச்சுது என்ற மாறனின் குரலில் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க நீ வேற என்ன காரணம் சொல்லிவேனாலும் என்ன கல்யாணம் பண்ணிருக்கலாம். போயும் போயும் என் காதலா கிடைச்சுது என்று அவன் மீண்டும் அதையே கேட்க  அவள் குனிகுறுகி போனாள்.


எல்லாமே முடிஞ்சிருச்சு. இதுக்கு மேல பேசுறதுக்கு ஏதும் இல்லை என்று அவன் அவள் கண்களை பார்த்து கூற அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வண்டிந்த வண்ணம் அவன் முகத்தியே பார்த்துக்கொண்டிருந்தாள்.


மாப்பிள்ளை நா சொல்றதப கொஞ்சம்
என்று ராகவன் கண்ணீருடன்  கூற வரும் பொழுதே அவரை கை நீட்டி தடுத்தவன் நா சொன்னா சொன்னது தான். என்னோட பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. எப்போ காதலன்ற பேருல என்ன ஏமாத்துணியோ அப்பாவே நா செத்துட்டேன். உயிர் இல்லாத ஜடத்துக் கூட வாழ்ந்து என்ன பண்ண போற என்று தேவான்ஷியை நோக்கி கேட்டவன் இன்னும் ரெண்டு நாள்ல டிவோர்ஸ் பேப்ர்ஸ்  வரும். சைன் பண்ணி கொடுக்குற. அதுக்கு அப்புறம் உனக்கு எனக்கு எந்த சம்மந்தமும் இல்ல. நீ இங்க விருப்பப்பட்டா இருக்கலாம். இல்லனா இப்போவே கூட கிளம்பி உங்க வீட்டுக்கு போகலாம். அவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி நீ யாரோ. நா யாரோ என்று மாறன் கூற அண்ணா என்ன பேசுற நீ. அண்ணி தான் ஏதோ தெரியாம என்று ஆர்த்யா கூறும்போழுதே மாறன் ஒரு ஒரு பார்வை  பார்க்க அவள் பயத்தில் பின்னே நகர்ந்தாள். இது வரை அவன் அவ்வாரு அவளிடம் நடந்து கொண்டது இல்ல. கோவமாக  திட்டியது கூட இல்லை. இன்று அவன் முறைத்த முறைப்பில் அமைதியானால் ஆர்த்யா.

தியாஷ், மாறா அவ ஏதோ தெரியாம பண்ணிட்டாடா. ப்ளீஸ் அவள மனிச்சிறு என்று கூறும்பொழுதே அவனை கை நீட்டி தடுத்தவன் இது எங்களுக்குள்ள நடக்குற விஷயம். யாரும் இதுல தலையிட தேவையில்லை என்று கூற அவன் அமைதியானான்.


வெளியே செல்ல திரும்பியவன் இதுக்கு நீ என்ன கொன்னுருக்கலாம் என்று தேவான்ஷியிடம் கூறிவிட்டு விறு விறுவென வெளியே சென்று விட்டான். கார்ட்ஸ் யாரும் தன் பின்னே வேண்டாம் வர வேண்டாம் என்று கூறியவன் காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.

தேவான்ஷி அதிர்ச்சியுடன் அவன் சென்ற திசையை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். அவன் கூறிய வார்த்தைகள் காதில் ஒளித்து கொண்டே இருந்தது. அப்படி என்றால் மாறனுடனானா தன் வாழ்க்கை அவ்வளவு தானா. இனி தன்னவனுடன்
தன்னால் இருக்க முடியாதா?. அவன் மார்பில் சாய்ந்து கதை பேச முடியாதா? அவன் அன்பு மழையில் நனைய முடியாத? அவன் காதல் பார்வை தன்னை தீண்டாதா? அனைத்தும் முடிந்து விட்டதா? என்று மனதிற்குள் கதறியவள் வெளியில் உணர்வற்ற ஜடமாய் நின்று கொண்டிருந்தாள்.


எவ்வித உணர்வும் இன்றி ஒரு கீ கொடுத்த பொம்மை போல் மாடியில் உள்ள தன் அறையை நோக்கி நடந்தாள். அனைவருக்கும் என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
நேராக யதர்வனிடம் சென்ற தியாஷ் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தான். அனைவரும் பதறி அவனை தடுத்தனர். என்ன விடுங்க. எல்லாம் இவனால் தான் வந்துச்சு. இவ்ளோ பிரச்சனைனைக்கும் இவன் தான் காரணம். அவ தான் ஏதோ பழி வாங்குறேன், அது இதுன்னு சொல்லிட்டு இருந்தா இவனுக்கு எங்க போச்சு புத்தி. இப்போ பாருங்க என்ன
ஆச்சுனு என்று தியாஷ் கத்த யதர்வன் தரையை பார்த்தவாறு அமைதியாக இருந்தான்.


ஆரத்தியாவிற்கு தன்னவனை  அவ்வாறு காண மனது வலித்தது. ஆனால் அவன் செய்த தவறை அவளால் மன்னித்து ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆயிரம் இருந்தாலும் தன் அண்ணனை கொல்ல நினைத்தான் என்று நினைக்கும் பொழுது அவன் மீது கோவம் வந்தது. 
அவனுக்கு ஆறுதல் கூற நினைத்த மனதை அடக்கி கொண்டாள்.



சார் கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ். யதர்வ் அண்ணா தெரிஞ்சே எதுவும் பண்ணல. அவரும் தேவான்ஷி மேடம் மாதிரி தான் நினைச்சிருக்காறு. அவரு மேல எந்த தப்பும் இல்ல. ப்ளீஸ் சார் கொஞ்சம் அமைதியா இருங்க என்று கூறவே சற்று ஆசுவாசம் அடைந்தான்.

ராகவன் உடைந்து போய் அமர்ந்து விட்டார். தன் மகளின் வாழ்வு இனியாவது நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்க அவளின் வாழ்வு பாதியில் முடிந்து விட்டதே என்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். மாமா நீங்க பயப்படாதிங்க. நா அண்ணா கிட்ட பேசுறேன். அவன் ஏதோ கோவதுல பேசிட்டு போறான். ப்ளீஸ் நீங்க எதுவும் மனசுல வச்சிக்காதீங்க என்று கூற இல்லம்மா இதுக்கு மேல நம்ம நினைச்சாலும் அது நடக்காது. எல்லாம் போச்சி என் பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே என்று தலையில் அடித்து கொண்டு அழுதார்.அவரை எப்படி தேற்றுவது  என்று தெரியாமல் அனைவரும் தவித்தனர்.


காரில் வேகமாக சென்று கொண்டிருந்த மாறனின் கண்களில் இருந்து விடாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் காரில் இருந்து கீழே இருங்கினான். என்ன நினைதானோ தெரியவில்லை ஜானுனுனுனுனுனு
என்று வானமே இடிந்து விழும் அளவிற்கு கத்தினான்.


மண்டியிட்டு கதறியவன் ஏண்டி ஏன்?ஏன் இப்டி பன்ன. உண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேன்டி. என்னோட உயிரே நீ தாண்டி. ஏண்டி என்ன ஏமாத்துன?நா என்னடி பாவம் பண்ணேன். என்னோட மனசை ஏன் குத்தி கிழிச்ச? ஏன் என்னோட இதயத்தை உடைச்ச? கடவுளே இப்போ நா என்ன பண்ணுவேன். நீ இல்லாம என்னால இருக்க முடியாதே. நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சி கூட பாக்க முடியல டி.  நா என்ன பண்ணுவேன் என்று குரல் கிழியும் அளவிற்கு கத்தி கதறினான் தேவமாறுதன்.

இங்கு மாறனின் அறையில் அவனது படத்தை பார்த்துக்கொண்டிருந்தவள் அவ்ளோ தான்ல. நா உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு புடிக்காதவளா போய்ட்டேன். நீங்க இல்லாம என்னல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது தேவா. நா இல்லாம உங்களால இருக்க முடியும்ல. அதான் என்ன போக சொல்லிடீங்க. எனக்கு நீங்க வேணும் தேவா. நீங்க இல்லன்னா நா செத்துருவேன் என்று அழுது கறைந்தாள் மாறனின் ஜானு.

இதை எதையும் அறியாமல் தன் அத்தையின் அறியில் சிரித்தவாறு உறங்கி கொண்டிருந்தான் சூர்ய தேவன்


பழி வெறி படலம் தொடரும்......

Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....