எனக்கெனவே நீ பிறந்தாய் 31
யாது ஏன்டா இப்டி படுத்துற. நிறைய வேலை இருக்கு விடு என்று கட்டிலில் அவனிடம் இருந்து விடுபட போராடி கொண்டிருந்தாள் ஆராத்யா.
ம்ஹும் முடியவே முடியாது ஆராமா. உன்னை விடுற ஐடியாவே எனக்கு இல்லை. நீ என்கூட தான் இருந்து ஆகணும் என்று மீண்டும் அவள் மார்பில் குழந்தை ஆனான் யதர்வ்.
டேய் நைட்டெல்லம் என்ன துங்கவிடவே இல்ல. கண்ணு எல்லாம் எரியுது.விடுடா. நா உனக்கு சமைக்கனும். சார்க்கு ஸ்டஷனுக்கு போற எண்ணம் இல்லையா. ஒழுங்கா எழுந்திரி என்று அவன் முகத்தை தன் மார்பில் இருந்து விலக்க நினைக்க பலன் என்னவோ பூஜ்யம் தான்.
அவ்வளவு இறுக்கமாக அவளை பிடித்த இருந்தான் அந்த விடாகண்டன்.
டேய் யாது. என் செல்லம்ல, என் பட்டுல்ல, ப்ளீஸ்டா எழுந்திரி.
முடியாது. நைட்டு பாக்கி இன்னும் மிச்சம் இருக்கு. அதை செட்டில் பன்னிட்டு நீ கிளம்பு என்று இருவர் மீதும் மீண்டும் போர்வையை போற்றி அவளை ஆள தொடங்கும் நேரம் சிவ பூஜையில் நுழைந்த கரடியாய் அவன் மொபைல் ஒலித்தது.
பென்னவள் தன்னவனின் நிலையை கண்டு சிரிக்க இருடி உண்ண அப்புறம் வச்சிக்குறேன் என்றான்.
மொபைல் விடாமல் அடித்து கொண்டே இருக்க அதில் வெறியானவன் அவளை விலக்கி மொபைலை எடுக்க அதில் மாறனும் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
யாரு யாது?
வேற யாரு. உன்னோட அண்ணன் தான் என்றவன் போனை ஆன் செய்தான்.
சொல்லுடா என்ன விஷயம் மாறா.
டேய் எவ்ளோ நேரம் கால் அடிக்குறேன். உனக்கு கால் எடுக்க இவ்ளோ நேரமா. என்ன புடுங்கிட்டு இருந்த நீ.
டேய் டேய் டேய் நா போலீசுடா. உன் தங்கச்சி புருஷன். அதுக்காகவாவது
கொஞ்சம் மரியாதை கொடுடா.
ஆமா உனக்கு அது ஒன்னு தான் கேடு. விளங்காத வெங்காயம்.
எதேய் வெங்காயமாமாமாமா?
ஆமாடா டொமெட்டோ மண்டையா?
டேய் மரியாதை ரொம்ப தேயுது.
அப்டி தாண்டா தேயும். உண்ண எல்லாம் டெரர் பீஸுன்னு நா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ எவ்ளோ பெரிய காமெடி பீஸுன்னு இப்போ தான் தெரியுது.
டேய் நா ஒன்னும் காமெடி பீஸ் கிடையாது. உன்னோட தங்கச்சி கிட்ட கேட்டு பாரு நா காமெடி பீஸா இல்ல டெரர் பீஸான்னு அவ சொல்லுவா என்றவன் அவளை பார்த்து மீசையை திருகி கண்ணாடித்து கூற அதில் வெட்கமடைந்த ஆராத்யா ச்சீ போடா லூசி என்று மெதுவாக வெட்கப்பட்டு கூறிவிட்டு அவன் சட்டையை தேடி எடுத்து போட்டுகொண்டு குளியலறை புகுந்தாள்.
டேய் எப்படியோ போடா. நா இப்போ போன் பன்னது வேற விஷயத்துக்கு.
என்னடா. அப்டி என்ன முக்கியமான விஷயம்.
பொங்கல் வருதுடா. கல்யாணத்துக்கு அப்புறம் வர முதல் பொங்கல். நம்மளுக்கு தல பொங்கல் வேற. எல்லாரும் ஒண்ணா கொண்டாடனும்னு ஆசைபடுறேன்.
உன்னால முடிஞ்ச ஆராவ கூட்டிட்டு இங்க வந்துடுறிய?
டேய் இதுல என்ன இருக்கு. வாடான்னு சொன்னா வர போறேன்.
ரெண்டு நாளுக்கு முன்னாடியே வந்துடுறோம். சந்தோஷமா கொண்டாடுறோம் ஒகேவா.
ரொம்ப சந்தோஷம்டா. அப்புறம் இன்னொரு விஷயம் டா. சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான். இருந்தாலும் சொல்றேன். ஆராவா நல்லா பாத்துக்கோடா. அவ சின்ன பொண்ணு. தப்புக்கு பன்னா சொல்லி திருத்து. அப்பா அம்மா பாசத்துக்கு ஏங்குனவ. நா அவளுக்கு எல்லாமுமா இருந்தேன். இனிமே நீ தான் அவள நல்லா பாதுக்கணும் என்று மாறன் உணர்ச்சி பூர்வமாக கூற நீ சொல்லி தான் எனக்கு அது தெரியனுமா. அவ என்னோட ஆராடா. அவள நா நல்லா பாத்துக்குவேன். நீ கவலைபடாத. நாங்க கிளம்பி வரோம்.
சரிடா நா வச்சிடுறேன் பை என்ற மாறன் காலை கட் செய்ய இங்க யதர்வை பின்புறம் இருந்து கட்டி கொண்டா ஆரா என்ன அண்ணா கிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தீங்க. என்ன விஷயம் என்று கேட்க அவளை தன் முன்பு நிறுத்தியவன் பொங்கலுக்கு உன் அண்ணன் நம்மள அங்க வர சொல்லிருக்கான். எல்லரும் ஒண்ணா கொண்டாடலாம்னு சொன்னான்.
அதில் மகிழ்ச்சி அடைந்தவள் சூப்பர்ங்க. நம்ம போலாம் யாது என்றவளை அணைத்தவன் போலாம். ஆனா உண்ண கூட்டிட்டு போறதுல எனக்கு என்ன பெனிஃபிட்.
டேய் போலீஸ்காரா. இதுல கூட உன் புத்தி எப்டி வேலை செய்யுது பாரு என்று அவன் கன்னத்தை தன் கையால் செல்லமாக இடித்தாள் ஆரா.
அதெல்லாம் விடு. நா கேட்டதுக்கு பதில் சொல்லு. எனக்கு லஞ்சம் கொடு. நா கூட்டிட்டு போறேன் என்று அவன் அவள் இதழை பார்த்து கூற அவன் எண்ணம் புரிந்தவள் எக்கி அவன் இதழை கவ்வி கொண்டாள்.
அவள் இடை பிடித்து தூக்கியவன் அவளை கட்டிலில் போட துள்ளி எழுந்தவள் அவனை விலக்கிவிட்டு ஓட முயற்சிக்க அவள் முந்தானை பிடித்து இழுக்க அவன் மீது மோதி நின்றாள். கண் பார்த்து காதல் கதை பேசியவன் அவள் இதழை முற்றுகையிட்டு அவளை மீண்டும் மஞ்சத்தில் சரித்து அவளிடம் தன் தேடலை தொடங்கினான்.
******* ******** ********
தேவா நில்லுங்க சாப்பிட்டு போங்க. உங்க பையன கூட சமாளிச்சிரலாம். உங்கள சமாளிக்க முடியல என்று தங்கள் அறையில் மாறனின் பின்பு கையில் சாப்பாடு தட்டுடன் சுற்றி கொண்டிருந்தாள்.
பாப்பா இம்பர்ட்டெண்ட் மீட்டிங் இருக்குமா. நா அப்புறம் சாப்பிடுறேன்
என்று கையில் ஆபிஸ் பைலை தூக்கி கொண்டு அறையையே சுற்றி கொண்டிருந்தான்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் டேய் தேவா என்று கத்த சடாரென அவன் திரும்பினான்.
வேகமாக அவளிடம் வந்தவன் அவள் தலை உடல் என ஆராய்ந்தான்.
என்ன பன்ற என்று வன்ஷி கேட்க இல்ல ஜானு தலைல ஏதாவது அடிப்பட்டுருச்சானு பார்த்தேன்.
ஏன் எனக்கு எதுக்கு அடிப்படனும்.
அது இல்லை. உன்னோட செல்ல தேவாவ நீ போடா வாடான்னு சொன்னியா. அதான் ஒரு வேலை மண்டைல அடிபட்டு பைத்தியம் ஆகிட்டியோன்னு நினைச்சேன்.
மூக்கு சிவந்து பத்திரகாளியாக மாறியவள் அவன் கையில் இருந்த பைலை பிடிங்கி அவனை அடிக்க தொடங்கினாள்.
அதை தடுத்தவம் ஏய் போதும்டி. விட்டா கொன்னுடுவ போல. என்ன ஆச்சு என் செல்லத்துக்கு. எதுக்கு இவ்ளோ கோவம் என்று அவளை தன் மடியில் அமர்த்தி அவன் கேட்க
இப்டி சாப்பிடாம இருந்தா உடம்பு என்ன ஆகுறது. உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா...... என்ன பத்தியும் சூர்யாவை பத்தியும் யோசிச்சி பாத்திகங்களா என்று அவள் சோகமாக அடி லூசு பொண்டாட்டி என்று அவள் முகம் நிமிர்த்தியவன் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்மா நா சாப்பிடல. கொஞ்சம் ஒர்க் அதிகம். அதான் ரீசன். இப்போ என்ன சாப்பிடணும் அவ்ளோ தான. சரி ஊட்டிவிட்டு. ஆஆ என்று வாய் திறக்க அதில் சிரித்தவள் அவனுக்கு உணவு ஊட்ட ஆரம்பித்தாள். உணவோடு சேர்த்து அவள் விரல் சுவையும் சுவைத்தவன் பாப்பா நம்மளுக்கும் யதர்வ் ஆராவுக்கு தல பொங்கல் வருது. அதான் அவங்கள நம்ம வீட்டுக்கு வர சொல்லிட்டேன். ராகவன் மாமா தியஷ் வதிக்கா எல்லாரும் வருவாங்க. இந்த வருஷ பொங்கல் நம்ம எல்லாரும் சேர்ந்து கொண்டாடலாம் என்றான்.
ரொம்ப சந்தோஷம் தேவா. எல்லாரும் எப்போ வருவாங்க.
நாளைக்கு வந்துருவாங்கடா.
ஹ்ம்ம் சரி தேவா. வீட்டில கொஞ்சம் கிளின்ங் ஒர்க் இருக்கு. அதெல்லாம் பண்ணனும். நீங்க ஆள் அனுப்பி விடுங்க.
சரிமா அனுப்புறேன். நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு. நா மீட்டிங் முடிச்சிட்டு கால் பண்றேன். இப்போ கிளம்புறேன் என்றவன் கிளம்ப வாசல் வரை சென்று அவனுக்கு நெற்றி முத்தமளித்து அவனை வழி அனுப்பி வைத்தாள் வன்ஷி.
***** ***** ******
பொங்கல் திருநாள் அதிகாலையில் எழுந்து வன்ஷி தன்னவனை காண மாறனோ சூர்யாவுடன் சேர்ந்து கவிழ்ந்து உறங்கி கொண்டிருந்தான். அவனின் மேல் முதுகில் சூர்யா உறங்கி கொண்டிருந்தான்.
அதை பார்த்து சிரித்தவள் குழந்தையை கீழே இறக்கி படுக்க அதில் லேசாக அசைந்த சூர்யா தூக்கத்தில் மாறனை தேடினான்.அதே நேரம் மாறனும் சூர்யாவை தேடினான். உறக்கத்தில் இருவரும் மீண்டும் அனைத்தும் கொண்டு உறங்க ஆரம்பித்தனர்.
இருவரையும் முத்தமிட்டவள் குளித்து முடித்து தன்னவன் தனக்காக வாங்கிய அழகிய சிகப்பு பட்டு சேலையை கட்டி கொண்டு தன்னை அலங்கரித்து கொண்டாள்
இடைவரை நீண்ட கூந்தலை பின்னலிட்டவள் மாறனின் அருகில் சென்று அவனை எழுப்பினாள்.
கண்களை சுருக்கி விழித்தவன் தன் முன்பு நிற்கும் மனைவியை கண்ணிமைகமல் பார்த்து கொண்டிருந்தான். அதில் வெட்கமடைந்த வன்ஷி சைட் அடிச்சது போதும். இன்னைக்கு தான் பொங்கல். இவ்ளோ நேரமா தூங்குறது. போங்க போய் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க என்று அவனை எழுப்பி குளியலறையில் தள்ளினாள்.
பின்பு சூர்யாவை எழுப்பினாள். அப்பொழுது உள்ளே வந்தாள் ஆராத்யா.
என்ன அண்ணி இப்போ தான் எழுந்தீங்களா என்று அவள் கேட்க நா முன்னாடியே எழுந்துட்டேன் ரித்யா. உன்னோட அண்ணன் தான் லேட். இதோ இப்போ சூர்யாவை வேற ரெடி பண்ணும். நீங்க எல்லாரும் ரெடி ஆகிட்டிங்களா?.
இல்ல அண்ணி. உங்க அருமை தோழன் இன்னும் தூங்கிட்டு தான் இருக்காரு என்று யதர்வை கூற அதில் சிரித்தவள் சரி சரி நீயும் பொய் ரெடி ஆகு. புடவையை மட்டும் கட்டிட்டு வந்து நிக்குற. போ போய் ஜிவல்ஸ் எல்லாம் போடு என்று கூறியவள் வதிக்கா ரெடி ஆகிட்டாள என்று கேட்டு கொண்டிருக்கும் போதே நா ரெடி அண்ணி என்று கத்தியவரே வந்தால் வதி.
ஏய் வாயாடி எதுக்கு இப்டி கத்துர. காது வலிக்குது என்று அவள் கன்னத்தை கிள்ளினாள் வன்ஷி.
அதெல்லாம் அப்டி தான் அண்ணி என்றவள் சூர்யா செல்லம் என்று அவனை வன்ஷி கையில் இருந்து வதிக்கா வங்க அவள் கைக்கு வந்தவன் அவள் தோளில் சாய்ந்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
அதில் ஆரா அண்ணி நானும் வதியும் சூர்யாவை ரெடி பன்றோம். நீங்க ரெடி ஆகுங்க என்று கூற சூர்யாவின் நெற்றியில் இதழ் பதித்த வன்ஷி அவ்ர்களுடன் அவனை அனுப்பி வைத்தாள்.
குளித்து முடித்து வெளி வந்த மாறன் கண்ணாடியின் முன்பு தயார் ஆகி கொண்டிருந்த வன்ஷியை பின்னிருந்து அனைத்து கொண்டான்.
அவன் கை மீது தன் கை வைத்து இன்னும் இறுக்கி கொண்டவள் அவனை கண்ணாடி வழியே பார்த்து சிரிக்க அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் தானே அவளை அலங்கரிக்க தொடங்கினான்.
கழுத்தில் ஒரு செயின், கை முழுவதும் கண்ணாடி வளையளை அணிவித்து விட்டவன் அவள் காதில் கம்மலை போட்டுவிட்டான்.
கூந்தலில் நீண்ட மல்லி சரத்தை வைத்தவன் அதில் ஒரு முனையை அவள் முன்புறம் போட்டுவிட்டான்.
காலில் கொலுசு அணிவித்தவன் கீழே அமர்ந்து அவள் புடவை மடிப்பை
சரி செய்து அவள் வயிற்றில் முத்தமிட்டான்.
அதில் கூச்சமடைந்தவள் அவள் முகத்தை தள்ளிவிட வேண்டுமென்றே அவள் இடையை அழுத்தமாக கடித்தான்.
ஸ்ஸ்ஸ்ஸ் என்று அவள் உதட்டை கடிக்க அவள் உதட்டில் ஒரு கடி வைத்தான் கள்வன்.
அவனை விலக்கியவள் அய்யா சாமி ஆள விடுங்க. நானே ரெடி ஆகிக்குறேன். நீங்க ஒன்னும் பன்ன வேணாம் என்று அவள் கூற மெலிதாக சிரித்தவன் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டான்.
அவள் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக்காட்ட அதிலும் வைத்துவிட்டான்.
இப்பொழுது தயார் செய்வது வன்ஷியின் முறையாயிற்று. அவன் செய்யும் சேட்டைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவனை தயார் செய்தவள் அவனுடன் கீழே வர அனைவரும் பொங்கல் வைப்பதர்காண வேளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
தோட்டத்தில் அடுப்பு வைக்கபட்டு பானை வைத்தனர்.பெண்கள் மூவரும் சிகப்பு பட்டு சேலையில் ஒரே போல் இருக்க ஆண்கள் வெள்ளை பட்டு வேஷ்டி சட்டையில் மிளிர்ந்து கொண்டிருந்தனர். சூர்யாவிற்கு குட்டி வேஷ்டி சட்டை அணிவிக்க பட்டிருந்ததது. ராகவனுகு மாறன் அழைப்பு விடுத்திருக்க முதலில் மறுத்தவர் பின்பி மாறனின் வற்புறுத்தியதின் பேரில் அங்கு வந்திருந்தார்.
சூர்யா வன்ஷியிடம் இருக்க அவள் பொங்கல் வைப்பதற்கு கடினமாக இருக்கும் என்று அவனை வாங்கி கொண்டான் மாறன். நல்ல நேரம் பார்த்து ராகவன் கூற பால் பொங்கி வர வன்ஷி குலவை இட ஆண்கள் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டனர்.
பின்பு சூரிய பகவானுக்கு பொங்கல் படைக்கபட்டது. சூர்யா கரும்பு கேட்க வேஷ்டியை மடித்து கட்டிய மாறன் கால் முட்டியில் வைத்து கரும்பு உடைத்து அவனுக்கு உண்பதர்காக சிறிது சிறிதாக கொடுத்தான். அவனை ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தாள் வன்ஷி. சாதாரண உடையிலேயே கம்பீரமாக இருப்பவன் இன்று வேஷ்டி சட்டையில் ஆண் காளையாக தெரிய அவனை ரசித்து கொண்டிருந்தாள் வன்ஷி.
சூர்யா சப்பு கொட்டி கரும்பை உண்டான். கரும்பு புடிச்சிருக்கா பட்டு என்று மாறன் சூர்யாவிடம் கேட்க தன் முத்து பற்களை காட்டி சிரித்தவன் மாறனின் கழுத்தோடு கட்டி கொண்டு ரொம்ப புதிச்சிருக்கி ப்பா. செம்ம டெஸ்ட் தெதியுமா என்று கூறி சிரித்தான். அவன் வாயில் இருந்த வழிந்த கரும்பு சாற்றை தன் புடவை முந்தானையில் துடைத்துவிட்டாள்.
மாறன் தான் உண்ட கரும்பை வன்ஷியிடம் கொடுக்க அவளும் அவன் வாய் வைத்து கடித்த இடத்திலேயே அவளும் கடித்து உண்டாள். இதை மாறன் காதலுடன் பார்த்து கண்ணடித்தான்.
தியாஷ் வதிகாவின் சீண்டுவதும் யாரும் இல்லா நேரம் இடுப்பை கிள்ளுவதுமாய் இருந்தான். அதில் வதிகாவின் முகம் அந்தி வானமாய் சிவந்தது.
யதர்வ் பற்றி சொல்லவே வேண்டாம். சாதாரணமாகவே ஆராமா ஆராமா என்று அவள் பின்னே சுத்தி கொண்டிருப்பான். இன்று தன் கையுடன் அவள் கையை சங்கிலி போட்டு கட்டியது போல் அவனுடனே அவளை பிடித்து கொண்டு திரிந்தான்.
இதை எல்லாம் ராகவன் மனநிம்மதியுடன் பார்த்து அகம் மகிழ்ந்துகொண்டிருந்தார்.
****** ****** *****
என்ன அசிங்கப்படுத்திட்டு நீ அங்க சந்தோஷமா இருக்கியா. விட மாட்டேன்டா. உண்ண சந்தோஷமா என்னைக்கும் இருக்க விடமாட்டேன்.
எல்லாம் முடிய போகுது. உன்னோட சந்தோஷமான வாழ்க்கை முடிவுக்கு வர போகுது மாறன் என்று மனதினுள் வன்மமாய் பேசி கொண்டான் தீரன்.
பழி வெறி படலம் தொடரும்......
Comments
Post a Comment