விழிதனில் எனை ஆட்கொண்டவளே 10
கோசலை நீ என்ன பண்றேன்னு புரிஞ்சுதா எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கியா ரத்தனோட நிலைமை இப்ப என்னன்னு உனக்கு தெரியும்தானே? அப்புறம் எந்த நம்பிக்கையில நீ அந்த பொண்ண இங்க தங்க சொல்ற இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.... என்று கணேஷ் தன் மனைவியிடம் கத்திக் கொண்டிருக்க நான் பண்றது எல்லாமே சரிதாங்க இன்னும் எவ்வளவு நாளைக்கு அவன் அந்த ஓடிப்போனவளை பத்தி நெனச்சுக்கிட்டு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்க முடியும்.... என் பிள்ளைக்கு ஒரு வாழ்க்கை வேணாமா அவதான் என் புள்ள வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டாளே இனி எதுக்கு அவளை பத்தி யோசிக்கணும்... தேவையில்ல.... அவ இனிமே இந்த குடும்பத்துக்கு தேவையே இல்லை.... இனி இந்த குடும்பத்தோட மருமக திகழினி தான் அதை யார் நினைச்சாலும் மாற்ற முடியாது.... என்று கோசலை அழுத்தமாக கூற அடுத்த நொடி அவரை அடிக்க கை ஓங்கி இருந்தார் கணேஷ் . அதில் பயந்து போன கோசலை தன் கணவரை கலங்கிய கண்களுடன் நோக்கினார்.
ஆம் கணேஷ் கை ஓங்கிய நொடியே கோசலையின் கண்கள் கலங்கிவிட்டது தன் கணவரா தன்னை அடிக்க கை ஓங்கியது என்று. ஏனெனில் திருமணமான இத்தனை நாட்களில் ரத்தத்தின் திருமணம் அன்று மட்டும்தான் அவர் அவரை கைநீட்டி அடித்து இருந்தார் அதன் பின்பு மீண்டும் இன்று அடிக்க கை ஓங்கியது எண்ணி மனம் உடைந்து போனார் கோசலை. ஓங்கிய கையை அப்படியே நிறுத்திக் கொண்ட கணேசுக்கு தன் மனைவியின் கண்ணீர் வேதனையை தந்தாலும் கோபத்தில் அதை மறந்தவர் கையை வேகமாக கீழே இறங்கி உதறி கொண்டு தன் மனைவியை பார்த்து கோபமாக முறைத்தார். என்னடி நானும் பாத்துட்டே இருக்க ரொம்ப ஓவரா பேசிட்டே இருக்க .... என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல... அங்க கல்யாணம் மண்டபத்தில் என்ன நடந்ததுன்னு உனக்கு ஞாபகம் இருக்கு தானே கொஞ்சம் கூட அறிவே இல்லாம அதுக்கு அப்புறமா இப்படி பேசிட்டு இருக்க ... நீ பண்றது எவ்வளவு மோசமான காரியம் தெரியுமா.... என்ன புள்ள பாசத்துல எல்லாத்தையும் மறந்துட்டியா இல்ல புள்ள பாசம் கண்ணை மறைச்சிருச்சா .... என்று கணேஷ் கோபமாக கத்த ஆமா புள்ள பாசம் கண்ணை மறைச்சிருச்சு தான் .... எனக்கு என் புள்ள சந்தோஷமா வாழனும் ஒரே ஒரு புள்ளைய பெத்து வச்சிருக்கேன்..... அவன் வாழ்க்கை இப்படி நிக்கதியா நிக்குறத பாத்துட்டு என்னால எப்படி அமைதியா இருக்க முடியும் பெத்த வயிறு பத்தி எரியுதுங்க .... என்று வயிற்றில் அடித்துக் கொண்டு கோசலை கதற அவரின் நிலை கண்ட கணேஷுக்கு மனம் வேதனையாக இருந்தது. மெதுவாக அவரை தன்னோடு அணைத்துக் கொண்டு அவள் தலையை கோதி கொடுத்தவர் இங்க பாரு கோசல இப்போ நீ கோவத்துல இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க... ஆனா நீ பண்றது எல்லாமே தப்பு தான் அதை உன் மனசு புரிஞ்சுக்கிட்டாலும் உன் மூளை ஏத்துக்க மாட்டேங்குது இதுதான் உண்மை.... அவசரமா எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் முடிவு பண்ணாதே முதலில் அந்த பொண்ணு அக்னி எங்க இருக்கான்னு தேடி கண்டுபிடிப்போம்.... அவ வந்த பிறகு ஒரு பேசி முடிவு எடுக்கலாம்.... என்று கூற மீண்டும் ஆவேசமாக தன்னிடம் இருந்து அவரை பிரித்து தள்ளியவர் முடியாது அந்த அக்னி திருப்பி இங்க வந்தாலும் என்னால அவளை என் மருமகளா ஏத்துக்க முடியாது ....அவர் என் பிள்ளை கூட வாழவும் முடியாது... என்று கோசலை கற்ற பாக்கறேண்டி உனக்கே இவ்ளோ திமிரு இருக்கும்போது எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.... அந்த பொண்ண திருப்பி இங்க கூட்டிட்டு வந்தே தீருவேன் அதுக்கப்புறம் அந்த பொண்ணா அவன் கூட வாழுதா இல்லையான்னு அவளும் அவனும் சேர்ந்து முடிவு பண்ணிக்கிட்டும்.... என்று கூறியவர் வேகமாக அங்கிருந்து செல்ல தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டார் கோசலை. இதையெல்லாம் அறைவாசலில் கண்ணீருடன் கைகளை பிசைந்து கொண்டு நின்று பார்த்துக் கொண்டிருந்த திகழினி கணேஷ் வருவதை கண்டு ஓரமாய் ஒதுங்கிக் கொள்ள செல்லும் முன்பு அவளை ஒரு அழுத்தமாய் பார்வை பார்த்தவர் வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட அறைக்குள் நுழைந்த திகழினி மேடம் .. என்று அவள் அருகே சென்று அவர் தோலை தொட அவளை நிமிர்ந்து பார்த்தவர் பாத்தியா இந்த மனுஷன் எப்படி பேசிட்டு போறார் என்று பார்த்தியா.... மண்டபத்தில் அத்தனை பேருக்கு முன்னாடி என் புள்ளையை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போனவ இவருக்கு முக்கியமா தெரியுறா. என் பையன் அங்க எப்படி அவமானப்பட்டான்னு
எனக்கு மட்டும் தான் தெரியும் அவன் அந்த நிலைமையில பார்க்கும்போது ஒரு அம்மாவா என் மனசு எவ்வளவு துடிச்சிருக்கும்ன்னு இவரு ஏன் புரிய மாட்டேங்குது... என்று கோசலை கண்ணீருடன் கூற மேடம் சொல்றன்னு தப்பா எடுத்துக்காதீங்க ஒரு தாயா உங்களோட ஆதங்கம் எனக்கு புரியுது. ஆனா ஒரு தந்தையா அவரோட மனசுல என்ன இருக்குங்கிறது என்னால புரிஞ்சுக்க முடியுது .... தன் பிள்ளையோட வாழ்க்கை இப்படி நட்டாத்துல நிக்குதுனு அவருக்கும் மன வேதனை கொடுத்து இருக்கு அதனால தான் அவரு இப்படி பேசுறாரு. .. அவரு சொல்றதுல எந்த தப்பும் இல்லையே அக்னி மேடம் இங்கே வரட்டும் அதுக்கப்புறம் எதுனாலும் பேசி முடிவு எடுத்துக்கலாம் அது மட்டும் இல்ல உங்க புள்ள என்மேல இப்போ அதே பழைய காதலோடு இருக்கிறாரா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.... அவர் என்ன வெறுத்துட்டாரு மேடம்... வெறுத்த ஒருத்தர மேல எப்படி நம்மளால பாசம் காட்ட முடியும் இப்ப அவரும் அதே நிலைமையில தான் இருக்காரு.... தயவு செஞ்சு நீங்க என்ன அவரோட சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறது மறந்துடுங்க ... என்று கண்ணீரும் வேதனையுமான கூறிவிட்டு அவள் வெளியே செல்ல இப்பொழுது அங்கு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவளை கண்கள் சிவக்க இருந்தான் ரத்தன்.
*** **** *** **** **** ****
அக்னி தான் செய்திருந்த அனைத்து ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு மேனேஜரின் அறைக்குள் நுழைய அவளை நிமிர்ந்து பார்த்தவர் அவளின் சோர்ந்த முகம் கண்டு குழம்பிய வண்ணம் அவளை நோக்கினார் அதுவும் அவள் நேற்று அணிந்திருந்த அதை உடை இப்பொழுதும் அணிந்திருப்பதை கண்டு குழம்பிப்போனவர் வாங்க மிஸ் அக்னி என்ன ஆச்சு ஏன் உங்க முகம் இவ்வளவு டயர்டா இருக்கு... ஆமா இந்த டிரஸ் நேத்து நீங்க வியர் பண்ணி இருந்தது தானே.... என்று அவர் எதுவும் புரியாமல் குழம்பிய வண்ணம் கேட்க அவரின் கேள்விக்கு பதில் கூறாமல் இந்தாங்க சார் நேத்து நான் தப்பா பண்ணி இருந்தா எல்லா வொர்க்கையும் சரி பண்ணிட்டேன் இத உங்க கிட்ட கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்.... என்று அவர் முன்பு பேப்பர் அடங்கிய பைலை வைத்தவள் திரும்பி நடக்க அக்னி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நீங்க பாட்டுக்கு போறீங்க ஏன் இப்படி எல்லார்கிட்டயும் டிஸ்ரெஸ்பெக்ட்டாவே நடந்துக்குறீங்க.... என்ன ஆச்சு உங்களுக்கு என்ன பிரச்சனை.... என்று அவர் கோபமாக கேட்க எதுக்கு சார் நான் உங்களுக்கெல்லாம் ரெஸ்பெக்ட் கொடுக்கணும் நேத்து அத்தனை பேருக்கு முன்னாடி அவர் என்ன அசிங்கப்படுத்தும் போது நீங்க எனக்கு ஃபேவேரா ஒரு வார்த்தை கூட பேசல நான்தான் அப்பாலஜிஸ் பண்ணிட்டேனே அப்புறமும் எதுக்கு என்னை மேல மேல காயப்படுத்தனும்... உங்க கம்பெனியில் வேலை பார்த்தா நாங்க எல்லாம் உங்களோட அடிமையா இல்ல உங்க வீட்டு நாயா நீங்க எவ்வளவு அடிச்சாலும் எவ்வளவு திட்டினாலும் உங்க பின்னாடி வாலாடிட்டு வர்றதுக்கு.... என்று அவள் கோபமாக கேட்க அவள் கூறியதை கேட்டு தலையில் அடித்துக் கொண்டவர் அக்னி நீங்க இப்பவும் புரியாம தான் பேசுறீங்க.... நீங்க பண்ணது தப்புன்னு நீங்க ஒத்துக்கிட்டீங்க அதுக்காக சாரி கேட்டீங்க பட் சாரி யார்கிட்ட கேட்டீங்க என்கிட்ட கேட்டீங்க ....உங்க கிட்ட வொர்க் கொடுத்தது யாரு மிஸ்டர் கிங்.... அதுல நீங்க செஞ்சு தப்பை அவரு உங்ககிட்ட திருப்பி சுட்டிக்காட்டும் போது நீங்க அவர்கிட்ட மன்னிப்பு கேட்காம என்கிட்ட கேக்குறீங்க இதுவே உங்களோட தப்புன்னு உங்களுக்கு புரியலையா.... என்று அவர் கேட்க சார் என்ன சார் நீங்க புரியாம பேசுறீங்க ....என்று அவள் கூற வரும்போது முதல்ல நான் சொல்லி முடித்துடுகிறேன் உங்களுக்கும் அவருக்கும் ஒத்துப் போகலைன்னு எனக்கு தெரியும் கொஞ்ச நாளைக்கு உங்கள அவரோட டீம்ல தான் போடணும்னு எனக்கு மேல் இடத்தோட ஆர்டர் ....அதனாலதான் நான் அவரோட டீம்ல உங்கள போட்டு இருக்கேன்.... அதான் முதல்ல புரிஞ்சுக்கோங்க.... என்று கூற என்னது மேல் இடத்தோட ஆர்டர் சொல்றீங்க என்ன அவரு டீம்ல போட சொல்லி உங்களுக்கு யாரு ஆர்டர் போட்டது.... என்று அ கோபமாக கேட்க அதை சொல்றதுக்கு எனக்கு எந்த ரைட்சும் கிடையாது.... அதனால அத பத்தி என்கிட்ட கேக்காதீங்க பட் நீங்க கிங்கோட டீம்ல தான் வேலை பார்த்து ஆகணும். இதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும் இனி ஒரு தடவை இந்த மாதிரி ஏதாவது பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ள வந்ததுன்னா நான் சிவியரா யார் மேல தப்பு இருக்கோ அவங்க மேல ஆக்சன் எடுக்க வேண்டியதா இருக்கும்.... என்று அவர் கோபமாக கூற எதுவும் பேசாமல் வேக வேகமாக அறையை விட்டு வெளியே வந்த அக்னி யார் அது மேல் இடம்னு சொல்றாங்க யாரா இருக்கும்.... என்ன எதுக்கு இந்த சதிகாரனோட டீம்ல போடுறதுக்கு ஆடர் போட்டிருப்பாங்க.... என்று தனக்குள்ளே நினைத்து குழம்பிக் கொண்டே அவள் வெளியே வர அந்நேரம் கிங் அவள் முன்பு பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளில் வைத்துக்கொண்டு நின்று இருந்தான் நெஞ்சை நிமர்த்தி. யோசித்துக் கொண்டே வந்தவள் அவன் நெஞ்சில் முட்டி அப்பாஆஆ... என்று தலையில் தேய்த்துக் கொண்டு யாருடா அது... என்று கோபமாக நிமிர்ந்து பார்க்க அங்கு கிங் நின்றிருப்பதை கண்டு புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவள் கோபமாக முகத்தை சுழித்துவிட்டு அங்கிருந்து நகர தன் ஒற்றைக் கரத்தால் தன்னை தாண்டி சென்றவளின் கரத்தை இறுக பிடித்து இருந்தான் அவன்... அவள்
சட்டென்று கோபம் பொங்க அவனை நிமிர்ந்து பார்க்க தலையை மட்டும் திருப்பி அவளை பார்த்தவன் உனக்கு ஹாஃப் டே லீவ் கொடுக்கிறேன்.... வீட்ல போய் ரெப்ரஷ் ஆயிட்டு கொஞ்சம் தூங்கிட்டு வா அதுக்கப்புறம் மதியத்துக்கு மேல இங்க வந்து ஒர்க் பாத்துக்கோ... என்று அவன் உணர்ச்சிகள் அற்ற குரலில் கூற அதைக் கேட்டு அவனை புருவம் சுருக்கி பார்த்தவள் அடுத்த நொடி வீம்பாக தேவையில்ல.... என்றாள். அவள் கூறியதை கேட்டு பற்களை கடித்தவன் எப்பவும் சொல்றது அக்சப்ட் பண்ணிக்கிற பழக்கம் உனக்கு கிடையாதா சொன்னத மட்டும் செய் இப்ப நீ வீட்டுக்கு போற.. போய் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா மதியத்துக்கு மேல் ஆபீஸ்க்கு வர... இதுக்கு மேல எதுவும் பேசாத... என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து செல்லும் சமயம் ஹாய் பேபி... என்று ஓடி வந்து அவனை கழுத்தோடு தன் உடல் எல்லாம் அவன் மீது படும்படி இருக்க அணைத்துக் கொண்டாள் ஒரு இளம் யுவதி
அவளும் அதே கொரியா நாட்டை சேர்ந்தவள் தான். அவளை இடையோடு அணைத்துக் கொண்ட கிங் ஹாய் ஹனி.... எப்படி இருக்க ரொம்ப நாளாச்சு உன்னை பார்த்து உன்னுடைய பிரதர் மேரேஜ் ஈவன்ட்டெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா... என்று அவன் கேட்க அவனிடமிருந்து பிரிந்தவள் எஸ் பேபி எல்லாமே நல்லபடியா முடிஞ்சுது. என்ன சொன்ன டேட்டை விட ஒரு டூ டேஸ் எக்ஸ்ட்ராவா லீவ் எடுக்க வேண்டி நிலைமை வந்துருச்சு... அதனாலதான் வர முடியல எப்படி இருக்க.... என்னடா நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணி ரெண்டு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள ரொம்ப அழகா மாறிட்டா... என்று அவன் தலைமுடியை கலைத்துக் கொண்டு அந்த பெண் கூற ஏய் நான் எப்பவுமே அழகு தானு உனக்கு தெரியாதா இந்த அழகை பார்த்து தானே நீ என்கிட்ட விழுந்த... என்று என் தலையை கோதிக் கொண்டே கூற அவர்களின் நெருக்கத்தை கண்டு முகத்தை சுழித்துக் கொண்டு நின்றிருந்தாள் அக்னி . அவளால் தான் அங்கிருந்து நகர முடியாது ஏனெனில் கிங்கின் கரங்களில் சிறைப்பட்டு நின்று கொண்டிருந்தாள் அவள். இப்பொழுதும் நினைத்தாலும் அவன் கரத்தை உதவி தள்ளி விட்டு அவளால் செல்ல முடியூம்... ஆனால் அப்டி செய்ய தோணவில்லை அவளுக்கு .....
தொடரும்....
Comments
Post a Comment