எனக்கெனவே நீ பிறந்தாய் 1
மாளிகை போன்ற அந்த நான்கு மாடி கட்டிடம் பளிச்சென்ற தோற்றத்துடன் வீற்றிருந்தது. வேலையாட்க்கள் மட்டுமே நூற்றுக்கு மேற்பாட்டோர் இருப்பர். சுற்றி எத்திசையில் பார்த்தாலும் பச்சை பசேலென வீட்டை சுற்றி தோட்டம். தோட்டத்திற்கு நடுவில் அந்த மாளிகை அமைந்துள்ளது. காம்பவுண்டில் காரின் ஹாரன் சத்தம் கேட்க காவலாளி ஓடி சென்று கதவை திறந்தான். கிட்டத்தட்ட இருபது கார்கள் வீட்டுக்குள் நுழைய வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு காரின் அருகில் பணிவுடன் நின்றனர். முதலில் இறங்கிய காவலாளி ஒருவன் ஒரு காரின் கதவை திறந்துவிட அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள். கண்ணில் ஒரு திமிர், சிரிக்க மறந்த உதடுகள் எப்பொழுதும் கோபம் குடிகொண்டிருக்கும் உணர்வுகள் துடைத்த முகம், ஒருவரை பார்த்த உடன் எடை போடும் குணம் முழுதாக சொல்ல வேண்டுமென்றால் மனித உருவில் உள்ள ஒரு லேடி ரோபோர்ட். அவள் தேவான்ஷி. இவளின் இந்த குணம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அவளிடம் வந்தது. இதற்கான காரணம் ? இனி வரும் காலங்களில் அறிவோம். அவளுக்கென்று அவளை பாதுகாக்க எப்பொழுதும் அவளை சுற்றி நூறு கார்ட்ஸ் இருப்பர்....
Comments
Post a Comment