விழிதனில் எனை ஆட்கொண்டவளே 6
ரத்தனின் வீட்டின் முன்பு வாசலில் நின்றிருந்த பெண்ணை கண்ட வேலை செய்யும் ஆள் ஒருவன் அவளிடம் என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருக்க அவளோ ரத்தனை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் இங்க பாருமா அனுமதி இல்லாமல் இங்கு யாரும் வரக்கூடாது.... அதுவும் நீ சின்னய்யாவை பாக்கணும்னு சொல்ற எதுக்காக அவரை பாக்கணும்னு கேட்டாலும் என்கிட்ட சொல்ல மாட்டேங்குற ....அப்புறம் எப்படி நான் அவர இங்க வர சொல்ல முடியும் ....என்று அந்த வேலையால் அவளிடம் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது சத்தம் கேட்டு வெளியே வந்தார் ரத்தனின் தந்தை கணேஷ். மணி யார் அந்த பொண்ணு எதுக்காக நம்ம வீட்டுக்கு வந்திருக்கு.... அந்த பொண்ண எதுக்கு வெளில நிக்க வச்சு பேசிகிட்டு இருக்க நீ... என்று அவர் அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்துவாறே கேட்க வேகமாக அவர் அருகே சென்று பணிவாக குனிந்து நின்ற மணி என்னும் வேலையால் அய்யா இந்த பொண்ணு நம்ம சின்னையாவ பாக்கணும்னு வந்திருக்கு... எதுக்கு பாக்கணும்னு கேட்டாலும் காரணம் சொல்ல மாட்டேங்குது அதுதான் என்ன ஏதுன்னு கேட்டுட்டு இருந்தேன்... என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பெண்ணை திரும்பிப் பார்த்த கணேஷ் இங்க வாம்மா.... என்று அவளை அழைத்தார் சாதாரணமாக. ஆனால் அவளுக்கு தான் இவ்வளவு நேரம் இருந்த தைரியம் சென்று ஒரு வித பரிதவிப்பு தோன்றியது அவள் உள்ளே செல்லலாமா? வேண்டாமா.... என்று மனதுக்குள்ளையே விவாதம் நடத்திக் கொண்டிருக்க என்னம்மா கூப்பிட்டு இவ்வளவு நேரம் ஆகுது இன்னும் வராமல் ஏன் நின்று இருக்க.... இங்க முதல்ல உள்ளவா... என்றும் மீண்டும் கணேஷ் அழைக்க வேறு வழி இன்றி தயங்கி தயங்கி வீட்டுக்குள் நுழைந்தாள் அவள்
அவள் அவர் எதிரே வந்து கைகளை பிசைந்தவாறு நிற்க யாருமா நீ.... உனக்கு என்ன வேணும் .... எதுக்காக ரத்தனை நீ பாக்கணும்னு சொல்ற.... என்று இப்போது அவர் கேட்க அது வந்து.... என் பேரு.... அது..... என்று அவள் தயங்கிக் கொண்டிருக்கும் பொழுதே இங்க எதுக்குடி வந்த.... என்று ரத்தத்தின் கர்ஜனை குரலில் உடல் தூக்கி வாரி போட்டது அவளுக்கு. கணேஷோ தன் மகனின் கோபத்தில் அவரே ஒரு நிமிடம் துணுற்று எழுந்து நின்றவர் டேய் என்னடா இது.... ஒரு பொண்ணு கிட்ட இப்படியா கத்துறது அந்த பொண்ணே உன்ன தான் பார்க்க வந்திருக்கு.... எதுக்காக அந்த பொண்ணு கிட்ட இவ்வளவு கோவமா பேசுற நீ.... என்று கணேஷ் தன் மகனை அடக்க இவளை யாரு முதல்ல வீட்டுக்கு விட்டது முதல இவளை வெளியே போக சொல்லுங்க.... இந்த வீட்டுக்குள்ள வரதுக்கு தகுதியே இல்லாதவ இவ... என்று கோபமாக தான் அணிந்திருந்த சட்டையின் கைப்பகுதியை மடித்துக்கொண்டே கீழே இறங்கி வந்தவன் முதல்ல வெளிய போடி...என்று அவள் முழங்கையை பிடித்து இழுத்து கீழே தள்ள அவள் விழும் செல்லும் முன்பு அவளை தாங்கி பிடித்தார் ரத்தனின் தாய் கோசலை.
அவனின் செயலில் கடகடவென்று அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கீழே இறங்க அதை கண்டு பரிதவித்துப் போனார் கோசலை. டேய் ஒரு பொம்பள புள்ள கிட்ட இப்படியே நடத்துகிறது.... என்னடா ஆச்சு உனக்கு... எதுக்கு இந்த பொண்ண இப்படி கீழ தள்ளுற நீ .... என்று அவர் கோபமாக கேட்க என்கிட்ட எதுவும் கேட்காதீங்க முதல்ல இவளை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்க ....இவ முகத்தை பார்த்தாலே எனக்கு பத்திகிட்டு எரியுது.... இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க நின்னாலும் உன்னை விட்டு அங்கேயே பொதச்சிடுவேன் மரியாதையா வெளியே போடி .... என்று அவன் எகிறி கொண்டே செல்ல அவனை அடக்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது கணேஷுக்கு
ரத்தா கொஞ்சம் வாய மூடிட்டு அமைதியா இரு.... நாங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ பாட்டுக்கு கத்திக்கிட்டு இருந்தா அப்புறம் எங்களுக்கு இங்க என்ன மரியாதை ஒழுங்கு மரியாதையா நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு .....இந்த பொண்ணு யாரு உன்ன பாக்கணும்னு தான் இந்த பொண்ணு வந்து இருக்கு எதுக்கு அந்த பொண்ணு கிட்ட நீ இவ்ளோ மோசமா நடந்துக்கிற.... என்று அவர் கேட்க நேத்து மண்டபத்துல ஒருத்தியை மனசார காதலிச்சேன்னு சொன்னேல ..... அந்த மேடம் இவங்கதான்.... என்று ஏளனமாக ரத்தன் கூற அதைக் கேட்டு அதிர்ந்து விட்டனர் அவன் பெற்றோர். டேய் என்னடா சொல்ற இந்த பொண்ணு தானா அது .....என்று கோசலை அதிர்ச்சியுடன் வினவ இன்னும் தலைகுனிந்தே நின்று இருந்தாள் அவள். ஆமாம்மா இவ தான் இவதான் என் வாழ்க்கையை அழிச்சவ... இவ்ளோ பொய் உண்மையா காதலிச்சேன் பாருங்க என் புத்தியை செருப்பால அடிக்கணும் இவளை காதலிச்ச பாவத்துக்காக இன்னொரு ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு நரகத்தில் வாழற மாதிரி துடிச்சிட்டு இருக்கேன்.... இவ முகத்தை பார்க்க பார்க்க எனக்கு இன்னும் வெறி ஏறுது மரியாதையே அவளை முதல்ல இங்கிருந்து போக சொல்லுங்க.... என்று மீண்டும் மீண்டும் ரத்தன் மீண்டும் மீண்டும் கத்திக்கொண்டே இருக்க அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் கணேஷ். அவரின் செயலில் அதிர்ந்து கோசலை அய்யோ என்னங்க என்ன பண்றீங்க அவனை எதுக்கு அடிக்கிறீங்க.... என்று பதட்டத்துடன் கேட்க வாய மூடு நீ.... எதுவும் பேசாத.... நேத்து இந்த பொண்ணுகாகா தான் அக்னியே வேண்டாம் என்று அத்தனை பேருக்கு முன்னாடி சொன்னான்... இன்னிக்கு அந்த பொண்ணே வந்து நிற்கும்போது ஏன் இவன் இப்படி அந்த பொண்ணு கிட்ட மோசமா நடந்துக்குறான்னு எனக்கு புரியல ....இவனை இப்படி வளர்த்து வச்ச உன்ன தான் நாலு போடு போடணும்.... என்று கோபமாக கணேஷ் பத்த அம்மாவ எதுக்கு தேவை இல்லாம இதுல இழுக்கறீங்க ....எனக்கு இவ இங்க இருக்கிறது சுத்தமா பிடிக்கல அவ முகத்தை பார்க்கும் போது எனக்கு அவ மேல இருக்குற கோவம் ஜாஸ்தி ஆகிட்டே போகுது தயவு செஞ்சு முதல்ல அவளை இங்க இருந்து போக சொல்லுங்க இல்லன்னா அவளை ஏதாவது நான் கண்டிப்பா பண்ணிடுவேன்.... என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுது நான் போயிடுறேன்... என்று அழுகை குரலில் கூறிய அந்தப் பெண் அங்கிருந்து நகரம் முற்பட அவளை தடுத்த கோசலை ஒரு நிமிஷம் நில்லுமா நீ பாட்டுக்கு வந்த என் பையன கோபப்படுத்திட்டு கிளம்பிட்டே இருக்க.... முதலில் என்ன நடந்தது என்று தெளிவாக என்கிட்ட சொல்லு அப்பதானே எங்களால ஒரு முடிவு எடுக்க முடியும் இன்னிக்கு என் புள்ள வாழ்க்கையை இழந்து நிற்கிறான் அதுக்கு நீயும் ஒரு காரணம்தான்.... அது இல்லன்னு உன்னாலே சொல்ல முடியாது.... முதல்ல உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனைன்னு சொல்லு .... என்று அவர் கூற அ....ம்....மா.... என்று கோபத்தில் கத்தினான் ரத்தன். அவன் இங்கு இருக்கும் வரை நிச்சயம் அந்த பெண்ணிடம் எதையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்த கோசலை கணேசனிடம் கண்காட்டிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு செல்ல அதை கண்டு கோபத்தில் தலையை அடித்துக் கொண்டு வேகமாக வீட்டில் இருந்து வெளியேறினான் ரத்தன். கணேஷ் தான் பாவம் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார்
**** **** **** **** ****
அக்னி தன் கேபிநில் அமர்ந்து வேகமாக தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலைகளை செய்து கொண்டிருக்க அந்நேரம் அவள் முன்பு வந்து நின்றான் வூ. அவனை கண்டும் காணாதது போல் வேலை செய்து கொண்டிருக்க அக்னி உன்னை கிங் அவனோட கேபின்க்கு வர சொன்னான் அக்கனி... உன்கிட்ட எதுவும் முக்கியமான விஷயம் பேசணுமாம்... என்று அவன் கூற அதை காதில் கேட்டும் கேளாதது போல் அவள் வேலை செய்து கொண்டிருக்க வூவுக்கு எங்கேயாவது சென்று சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்று தான் தோன்றியது அவளின் செயலில். அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கிறானே, அவள் இங்கே வெளிப்படையாகவே கிங்கை தவிர்ப்பதையும் தான் ஏறி கொண்டே செல்லும் கிங்கின் கோபத்தையும். அதை கண்டவனுக்கு இவங்க இரண்டு பேருக்கும் நடுவுல நான் ஏன் மாட்டிக்கிட்டு சாகணும் கடவுளே முதல்ல இவங்க டீம்ல இருந்து வேற டீம்க்கு மாறனும் ....அப்பதான் எனக்கு நிம்மதி... என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் இங்கே பார் அக்னி உனக்கும் அவனுக்கும் நடுவுல ஆயிரத்தெட்டு பிரச்சனை இருந்தாலும் இங்கே அவன் உன்னோட டீம் லீடர்... அதனால அவனுக்கான மரியாதையும் நீ கொடுத்து தான் ஆகணும் சொல்ல வேண்டியது என்னோட கடமை நான் சொல்லிட்டேன் இதுக்கு மேல உன் விருப்பம்.... என்று கூறிவிட்டு வூ அங்கிருந்து நகர அவன் கூறியதை கேட்டு அலட்சியமாக தோல்களைக் குலுக்கி விட்டு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினாள் அக்னி
அடுத்த பத்தாவது நிமிடம் அவள் டேபிளின் மீது ஒரு ஃபைல் டொம்மேன்று விழ அதில் பதறிப் போனவள் யார் என்று கோபமாக நிமிர்ந்து பார்க்க அங்கு கைகளை மார்புக்கே குறுக்கே கட்டிக்கொண்டு நின்று இருந்தான் கிங் அவளை அழுத்தமாக பார்த்தவாறு . ஒரு நொடி அவன் பார்வையில் தடுமாறியவள் பின்பு தன்னை சமன் செய்து கொண்டு நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு அவனை தெனாவட்டாக பார்க்க அவள் முன்பிருந்த நாற்காலியில் இழுத்துப் போட்ட அமர்ந்த கிங் கால் மேல் கால் போட்டு தெனாவட்டாக அமர்ந்தான். அவள் அப்பொழுதும் அமைதியாக அவனே பார்த்துக் கொண்டிருக்க இங்கு வேலை செய்யுறதுக்கு தான நீங்க இந்தியால இருந்து வந்தீங்க ....என்ற அவனின் அழுத்தமான கேள்வியில் அவள் புருவம் சுருக்கி அவனை பார்க்க கொடுத்த வேலையை ஒழுங்கா செய்யாம உங்களுக்கு வேற என்ன கிழிக்கிற வேலை இங்க இருக்கு .... என்று அவன் அடுத்த கர்ஜித்த சத்தத்தில் உள்ளுக்குள் தூக்கி வாரி போட்டது அவளுக்கு. வேலை செய்து கொண்டிருந்த அனைத்து பணியாளர்களும் அவர்களின் வேலையை நிறுத்தி விட்டு இவனின் சத்தத்தில் திரும்பி பார்க்க அதில் அவளுக்கு தான் அவமானமாக போனது. சார் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.... நீங்க என்னோட டீம் லீடர் தான். .. என் இந்த அளவுக்கு பேசுவதற்கு உங்களுக்கு எந்த ரைட்சும் கிடையாது... என்று அவளை அழுத்தமாக கூற ஷட் அப் யூ இடியட்... நான் உன்னோட டீம் லீடர் அதுக்கான ரெஸ்பெக்ட்ட எனக்கு கொடுத்த தான் ஆகணும் .... அந்த பேசிக் சென்ஸ் கூட உனக்கு இல்லையா.... Did your parents teach you to respect everyone like this?... என்று அவன் காட்டு கத்தலாய் கத்த அவன் கூறிய வார்த்தைகளில் அவமானத்தில் முகம் கருத்த நின்றாள் அக்னிமித்ரா தலை குனிந்து.
தொடரும்....
Comments
Post a Comment