காவலனோ காதலனோ 10

மிஸ்டர் ராவணன் நான் ரணதீர் வர்மன் பேசுறேன் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் நீங்க எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்றீங்களா உங்களை நான் மீட் பண்ணனும்... என்று வர்மன் தன் கணீர் குரலில் கேட்க ராவணன் சிறிது நேரம் யோசித்தவன் உங்களுக்கு எந்த இடம் கன்வினியன்ட்டா இருக்கும்ன்னு சொல்லுங்க அங்க ரெண்டு பேருமே மீட் பண்ணலாம் ....என்றான் ஆளுமை குரலில் ராவணன். அவனின் ஆளுமையை வைத்தே வர்மனுக்கு ஆத்திரேயனின் குணம் எப்படி இருக்கும் என்று நன்றாக புரிந்து விட இதழ் ஓரம் அதிசயமாக ஒரு சிரிப்பை வெளியிட்டவன் இன்னும் 10 மினிட்ஸ்ல பிலேஸை பிக்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு லொகேஷன் ஷேர் பண்றேன்.... என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் வர்மன் ராவணன் காதில் இருந்து மொபைலை எடுத்தவுடன் யாருடா அது... என்று கேட்டான் சைத்ரன்.  நீ சொன்னியே அந்த பெரிய ஆளு ரணதீர் வர்மன் அவர்தான் கால் பண்ணி இருந்தாரு.... என்று சாதாரணமாக ராவணன் கூறிவிட்டு காபியை மீண்டும் மீண்டும் அருந்த துவங்க அவன் கூறியதை கேட்டு விழி விரித்து அவனைப் பார்த்தான் சைத்ரன்..என்னடா இவ்ளோ சாதாரணமா சொல்ற அவருக்கு என்ன பிரச்சனை போயிட்டு இருக்குனு உனக்கு தெரியும் தானே... இந்த மாதிரி நேரத்துல உன்னை எதுக்கு மீட் பண்ணனும்னு சொல்றாரு அவரு ....என்று அவன் ஆச்சரியமாக கேட்க தெரியலையே மீட் பண்ணனும்னு சொன்னாரு ஓகேன்னு சொல்லிட்டேன்.... இடத்தை பிக்ஸ் பண்ணிட்டு லொகேஷன் ஷேர் பண்றேன்னு சொல்லி இருக்காரு அப்புறம் போய் பாக்கலாம் ....என்று அவன் கூற அந்நேரம் மிருஷிகா மிடுக்காக படிகளில் இறங்கி வந்தாள் அவள் காலடி ஓசை கேட்டு ராவணன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் எப்பொழுதும் போல் அவளின் கம்பீரத்திலும் அழகிலும் ஒரு நிமிடம் அவளை ரசித்து பார்த்துவிட்டு அடுத்த நொடியே தன் முகத்தை இறுக்கமாக மாற்றிக் கொண்டவன் மீண்டும் தன் கவனத்தை பேப்பரில் திருப்பினான் 

மிருஷிகா அவனை கண்டுகொள்ளாமல் வெளியேற முற்பட இன்னிக்கு உன் கூட ஆபீஸ்க்கு நான் வரல எனக்கு முக்கியமாக ஒருத்தரை மீட் பண்ணனும் அதனால நீ இன்னைக்கு டிரைவர் கூட போயிடு... என்று அவளை தடுத்து நிறுத்தும் விதமாக ராவணன் கூற முதல்ல இன்னிக்கி உன் கூட வரேன்னு நான் சொல்லவே இல்லையே அதனால் நீ என் கூட வந்தாலும் வரலனாலும் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது அண்ட் நீ சொன்னாலும் சொல்லலனாலும் நான் டிரைவர் கூட தான் போக போறேன்.... என்று முகத்தில் அடித்தது போல் மிருஷிகா கூறிவிட்டு விடுவிடுவென்று அங்கிருந்து நகர மிருஷி என்னடி இப்டி பேசுற.... என்று  ஆர்ஷிகா கத்தும் பொழுது அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேக வேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் மிருஷிகா செல்லும் அவளை ராவணன் அழுத்தமாய் பார்த்தவாறு அமர்ந்திருக்க அவன் தொடையில் தட்டி விடுடா எல்லாமே சீக்கிரம் சரியாகும்... ஆதுவ நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் அவன் இங்க வந்தாலே எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும்.... என்று நண்பனுக்கு ஆறுதல் கூறினான் சைத்ரன் ஆனால் அவன் கூறியதை கேட்டு எந்த பதிலும் கூறாமல் அழுத்தமாய் அமர்ந்து இருந்தான் ராவணன்.


இந்த ரூம்ம லாக் பண்ணாம இந்த சாவிய இங்கேயே வச்சுட்டு போறேன் உன்னால முடிஞ்சா என்ன மீதி இங்கே இருந்து வெளியே போய் காட்டு பார்ப்போம்.... என்று தெனாவட்டாக கூறிவிட்டு ஆத்திரேயன் அந்த அறையில் இருந்து வெளியேற அவன் கூறியதைக் கேட்டு ஆச்சரியத்தில் விழிகளை விரித்தாள் சைத்தாலி. அடுத்த நொடி அவள் கண்கள் சாவி இருந்த டேபிளின் மீது திரும்ப குடுகுடு என்று ஓடி சென்று அந்த சாவியை கையில் எடுத்துக் கொண்டவளுக்கு மகிழ்ச்சியில் உள்ளம் ஆர்ப்பரித்து. எப்படியாவது இங்கிருந்து நம்ம வெளியே போயிடணும் இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? யாருக்கும் அடங்காதவ இந்த ரணதீர் வர்மனோட பொண்ணு ... இவனுக்கு மட்டும் அடங்கிடுவேனா என்ன... வாய்ப்பே இல்ல.... முதல்ல இந்த இடத்தை விட்டு வெளியே போய் ஹாஸ்பிடல்ல நடந்த விஷயம் எல்லாத்தையும் அப்பாகிட்ட சொல்லணும் இல்லனா பிரச்சனை பெருசாகிட்டே போகும்.... எல்லாத்தையும் சரியா செஞ்சு முடிக்கிறதுக்குள்ள இந்த இடியட் என்ன இங்க கடத்திட்டு வந்து வச்சுட்டான்... எல்லாம் என் நேரம் ...என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டவள் வேக வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேற அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான் ஆத்திரேயன். இவளின் காலடி சத்தம் கேட்டு அவன் அவளை நிமிர்ந்து தெனாவட்டாய் பார்க்க அவனுக்கு எதிர்பார்வையை தெனாவட்டாக வீசியவள் விடுவிடுவென்று   அவனை தாண்டி அந்த வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வர அந்த இடத்தை கண்டு அதிர்ந்து போனாள். சுற்றிலும் அடர்ந்த காடு ஆபத்தாய் அவளுக்கு காட்சியளிக்க எங்கெங்கோ கேட்டா விலங்குகளின் சத்தத்தில் இவளுக்கு பயத்தில் எச்சில் தொண்டையில் இறங்க மறுத்தது 

அப்பொழுது தான் அவளுக்கு நேற்று அந்த வயது முதிர்த்த பெண்மணி சுற்றிலும் காடு சூழ்ந்த இடம் இது... என்று கூறியது ஞாபகம் வரவே தலையில் அடித்துக் கொண்டாள் தன் அதி புத்திசாலித்தனத்தை எண்ணி. கடவுளே நேத்து அந்த பாட்டி சொன்னத எப்படி நான் மறந்தேன் ஐயோ இப்போ எப்படி இங்கிருந்து வெளியே போகிறது... இந்த இடத்தை பார்க்கும்போதே பயமா இருக்கு அந்த ரூமுக்குள்ள இருக்கிற வரைக்கும் கூட ஒன்னும் தெரியல போல.... இங்க வந்து வெளியே நின்ன பிறகு தான் இந்த இடம் எவ்வளவு மோசமானது என்று தெரியுது ஐயோ ஏதேதோ சவுண்ட் வேற வருது ...பேசாம திரும்பி உள்ள போயிடலாமா .... என்று அவள் ஒரு மனம் நினைத்துக் கொண்டிருக்க மறுனமோ  அப்படி மட்டும் நீ பண்ணினா உன்ன விட ஒரு தொட நடுங்கி இந்த உலகத்துல வேற யாருமே இருக்க மாட்டாங்க அவன் கிட்ட அவ்வளவு சண்டை போட்டு வெட்டி வீராப்பா பேசிட்டு வந்துட்டு இப்ப வெக்கங்கெட்ட போய் திருப்பி வீட்டுக்குள்ள போக போறியா.... என்று அவள் மறுமனம் காரி துப்ப எப்படியாவது இந்த இடத்தில் இருந்து நம்ம வெளியே போயிடனும் அதுதான் இப்ப நம்மளோட குறிக்கோள்.... இவன் என்ன காரணத்துக்காக நம்மளை கடத்தி கொண்டு வந்து வச்சிருக்க்கான்னு தெரியாது ஒருவேளை நம்மளுக்கு விஷயம் தெரிஞ்சதுனால அந்த ஃபிராட் கூட்டத்துல சேர்ந்த எவனோ ஒருத்தன் என்ன கடத்த சொல்லி கூட இவன்கிட்ட சொல்லி இருக்கலாம் அதனால இவனும் என்னை கடத்தி கொண்டு வந்து இங்க வச்சி இருக்கலாம்.... நான் இங்கே இருக்கிறது நல்லதே கிடையாது முதலில் இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போகணும் அப்பதான் என்னால இங்கு நடக்கிற அநியாயம் அக்கிரமங்களை இந்த உலகத்துக்கும் சட்டத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்ட முடியும்... என்று அவள் தனக்குள்ளேயே வீரவசனம்  பேசிக்கொண்டு அவள் விடுவிடுவென்று அங்கிருந்து ஓடினாள் ஏதோ ஒரு திசையில். 

செல்லும் வழி எங்கும் அவள் பயத்தில் ஏதாவது விலங்கு வருகிறதா.... என்று பார்த்து கொண்டே ஓட கால் இடறி விழுந்துவிட்டாள் ஒரு இடத்தில்... அதில்  அவள் வயிறு  அங்கிருந்த மரக்கட்டையில்  மோதி விட சுரீரென்று தோன்றிய வலியில் அம்மாஆஆஆஆ அலறினாள். வலி தாங்க முடியவில்லை அவளால்.. வலி தாங்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீரே வந்துவிட தவழ்ந்தவாறே ஓரமாக ஒரு மரத்தடியில் சாய்ந்தவளுக்கு வலி தாங்க முடியவில்லை... வயிற்றை பிடித்து கொண்டு அவள் அழுது கொண்டிருக்க அந்நேரம் அவள் அருகில் கேட்ட உறுமல் சத்தத்தில் உடல் தூக்கி வாரி போட நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிரிச்சியில் கண்கள் விரிந்தது. அவள் எதிரே அவளை வேட்டையாடும் முனைப்பில் ஒரு கருஞ்சிறுத்தை அகோரமாக நின்று இருக்க அதை கண்டு ஆஆஆஆ..... என்று மேலும் அலறினாள் பெண்ணவள். அவள் அலறல் சத்தத்தில் கோபம் கொண்ட சிறுத்தையான அவளை வேட்டையாட குறி வைத்து அவள் மீது பாய பயத்தில் அம்மாஆஆ.... என்று கத்தி கொண்டே கண்ணை முடியவளுக்கு வாழ்வு முடிந்துவிட்டது என்று தன் தோன்றியது அந்நேரம்.


***** **** ***** **** ****

ரணதீர் வர்மன் ஒரு பெரிய  ஹோட்டலில் ராவணனின் வருகைக்காக காத்து கொண்டிருந்தான். அது சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்து கொண்டவர்கள் மட்டுமே வருகை புரியும் மிகப்பெரிய பிரபலமான ஹோட்டல். அந்த மிகப்பெரிய அறையில் வர்மன் ராவணனுக்காக காத்து கொண்டிருக்க அப்போது பாடிகார்ட்  ஒருவன் கதவை திறக்க கருப்பு நிற உடையணிந்த பாடிகார்ட்ஸ் புடை சூழ உள்ளே நுழைந்தான் ராவணன். அவனுடன் வந்தான் சைத்ரன்.


அவனை கண்ட உடன் வர்மன் அவனை எழுந்து நின்று கை நீட்ட மிடுக்குடன் கை நீட்டிய ராவணன் தன்னை அறிமுகப்படுத்த  முனையை உங்களை பத்தி எனக்கு தெரியும் மிஸ்டர் ராவணன். உங்களை பத்தி தெரியாம இங்க யாரும் இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல... என்றான் வர்மன் கம்பீர குரலில். அவன் கூறியதை கேட்டு லேசாக இதழ் வளைத்த ராவணன் இது உங்களுக்கும் பொருந்தும் மிஸ்டர் வர்மன்.... உங்களை தெரியாம இங்க யாரும் இல்ல... ஆனா உங்க முகம் தான் சரியா பார்த்த நியாபகம் இல்ல எனக்கு.... என்று ராவணன் கூற நம்ம அதிகமா நம்ம முகத்தை வெளிக்காட்டிக்க விரும்பல.... அதனால என்னை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்ல.... உட்காருங்க.... என்று பேசி கொண்டே தன்  முன்பு இருந்த இருக்கையை கை காட்டி வர்மன் கூற அதற்கு ஒரு சிறு தலை அசைப்புடன் அவன் எதிரே அமர்ந்தான் ராவணன். சைத்ரன் நிற்க உட்காருமாறு அவனை பணித்தான் ராவணன். வர்மன் அவனை கண்டு புரியாமல் பார்க்க இவன்  என்னோட நண்பன் அண்ட் என் மனைவியோட அக்கா கணவன்... என் கூடவே எப்பவும் இருக்குறவன் இவன்.... என்று ராவணன் சைத்ரன் வர்மனை பார்த்து கை குலுக்கினான்.

எதுக்காக வர்மன் என்னை பார்க்கனும்னு சொன்னீங்க... என்ன விஷயம் என்று நேராக ராவணன் கேட்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்...  என்னோட பொண்ணை யாரோ கடத்திட்டாங்கன்னு உங்களுக்கு நியூஸ் வந்துருக்கும்...  என்று வர்மன் கூற அதை ஆமென்று தலை அசைத்தான் ராவணன். என் பொண்ணை கடத்துனது  வேற யாரும் இல்ல... உங்க பையன் மிஸ்டர் ராவண் ஆத்ரேயன் தான்.... என்று வர்மன் சாதாரணமாக கூற அதை கேட்டு சைத்ரன் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க ராவணன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக அவனை பார்த்து கொண்டிருந்தான் அழுத்தமாக.



தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....