காவலனோ காதலனோ 2

ராவணனின் வீடு சைத்திரன் வீட்டு ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க ஆளில் மாற்றப்பட்டிருந்த ஆதி கேசவன் மற்றும் ஊர்மிளாவின் புகைப்படத்திற்கு பூமாலை சூட்டில் விளக்கு ஏற்று வைத்துக் கொண்டிருந்தாள் ஆர்ஷிகா. ஆம் ஊர்மிளா மற்றும் ஆதிகேசன் இருவரும் இயற்கை எய்தி விட்டனர் ஊர்மிளாவிற்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்ததால் அவர் வயது முதிர்வின்  காரணமாகவும் நோயின் தாக்கத்தினாலும் இறந்து விட தன் மனைவி இறந்த துக்கத்திலேயே தன் உயிரை துறந்து இருந்தார் ஆதி கேசவன்.  முதல் மனைவியின் இறப்பின் பொழுது பாதி மடிந்து இருந்தவர் இரண்டாவது மனைவியின் இறப்பில் இதற்கு மேல் தான்  உயிர் வாழ தேவையில்லை எனும் நிலைக்கு சென்று ஊர்மிளா இறந்த ஓரிரு நாட்களிலேயே தன் உயிரையும் தன் இரண்டு மனைவிகளின் காலடியில் சேர்ப்பித்துக் கொண்டார் இதில் மிகவும் பாதித்து போனது சைத்ரன் தான்.  சிறுவயதில் இருந்து தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பில் வளராதவன் வயது முதிர்ந்த பின்பாவது அவர்களுடன் காலத்தை கழிக்க வேண்டும் என்று எண்ணினான். என்ன தான் அவனுக்கு ஆதிக்கேசவனின் மீது கோபம் இருந்தாலும் ஒரு மகனாக தன் கடமையை அவன் சரிவர தான் செய்து வந்திருந்தான் ஆனாலும் ஆதிகேசவன் மற்றும் இரண்டு தாய்களின்  மரணம் அவனை கலங்க தான் வைத்தது.

சைத்ரன் தன் கண்ணாடியை சரி செய்தவாறு பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் கையில் இருந்து பேப்பர் படார் என்று பறிக்கப்பட்டது அதில் யார் என்று உணர்ந்து கொண்டவர் சிரிப்புடன் எதிரே தன் மகள்  இடுப்பில் கை வைத்து தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை நிமிர்ந்தும் பாராமல் மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பித்து விட அப்பா என்று பற்களை கடித்தாள் ஆர்த்திரிகா . என்னமா என்று எதுவும் தெரியாதது போல் அவர் நிமிர்ந்து பார்க்க துஷ்யந்த் மாமா என்னை இன்னிக்கு வெளில கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொல்லிட்டார்.... அவர்  கிட்ட நீ கொஞ்சம் பேசி என்னை வெளியில் கூட்டிட்டு போக சொல்லு எவ்வளவு தடவை கால் பண்ணாலும் இப்ப எடுக்கவே மாட்டேங்குறார்.... என்று அவள் கோபமாக கத்த நீ என்ன கேட்ட அவன் கிட்ட...  என்றார் அவர் தன் மகளின் குறும்பு அறிந்து. என்னப்பா இப்படி கேக்குற எனக்கு ஷாப்பிங் போகணும்னு தான் நான் அவரை வெளியே கூட்டிட்டு போக சொல்லி கேட்ட ... எவ்வளவு கெஞ்சினேன் தெரியுமா ஆனால் கல் நெஞ்சு காரன் கொஞ்சம் கூட மனசு இறங்கவே இல்ல ... என்று அவள் கூற அப்படியா என்று ஆச்சரியமாக தன் மகளை பார்த்தார் சைத்ரன்


அவர் தன்னை நம்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டவள் அவருக்கு அடுத்ததாக ஐஸ் வைக்கும் வேளையில் இறங்கிவிட்டாள். அப்பா அப்பா ப்ளீஸ்.... என்ன வீட்டை விட்டு பாடி கார்ட்ஸ் ஓட துணையில்லாமல் வெளியே போகக்கூடாது என்று சொல்லிட்டீங்க ஆனா துஷ்யந்த் மாமா கூட   போனா நான் சேஃபா போயிட்டு வந்துருவேன்னு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே எப்ப கூப்பிட்டாலும் கூட்டிட்டு போக மாட்டேங்குறாரு இன்னிக்கு ஒரே ஒரு நாளாவது அவரை கூட்டிட்டு போக சொல்லுங்க பா ப்ளீஸ் .... என்று அவள் கெஞ்ச ஆர்த்தி என்று ஒரு குரல் அப்பொழுது கோபமாக கேட்டது 


அது யார் என்பதை குரலை வைத்தே உணர்ந்து கொண்டவள் திரும்பி தன் தாயை பார்க்க அங்கு அவளுக்கு மேல் உக்கிரமாக அவனை முறைத்தவாறு நின்று இருந்தார் ஆர்ஷிகா என்னடி திமிரா உனக்கு ...அவனே இப்பதான் ஒரு பிசினஸ கையில் எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா மேல உயர்த்திட்டு வாரான் இந்த மாதிரி நேரத்துல உன் கூட வெளியே ஊர் சுத்தணும் அவனுக்கு தலையெழுத்தா என்ன... அவனுடைய நிலைமை புரிஞ்சு நீ எதுக்கு தேவை இல்லாம அவன கஷ்டபடுத்திட்டு இருக்க... உனக்கு அறிவு இருக்கா இல்லையா .... என்று ஆர்ஷிகா கத்த இப்ப எதுக்குக்கா இவ்வளவு கத்துற.... என்று கூறிக்கொண்டு மாடிப்படிகளில் கம்பீரமாக இறங்கி வந்தார் மிருஷிகா தாரகை. ஆம் வயது நாற்பத்தி ஐந்தை தொட்ட பொழுதிலும் இன்னும் இளமை குறையாமல் அதே கம்பீரத்துடன் ராவணனின் ராட்சஸி என்ற அடைமொழிக்கு ஏற்றவாறு கையில் ஒரு பக்கம் சரிய விட்டிருந்த  புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு அவர் இறங்கி வர எப்பொழுதும் போல அவளின் கம்பீரத்தில் அனைவரும் மெய்மறந்து போயினர் கீழே இறங்கி வந்தவள் சைத்ரன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஆர்த்தியை நிமிர்ந்து பார்க்க சித்தி ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்க நான் மாமா கிட்ட எவ்வளவு கேட்டாலும் அவர் வர மாட்டேன்னு சொல்லிட்டாரு.... என்ன தனியா போகுறதுக்கு அலோவ்ட் பண்ண மாட்டேங்கறீங்களே அட்லீஸ்ட் இந்த மாதிரி அவர் கூட போறதுக்காவது அலோவ்ட் பண்ணுங்க ப்ளீஸ் சித்தி.... என்று அவள் மீண்டும் கெஞ்ச ஆர்த்தி நீ வெளியே போகணும்னு நினைக்குறது தப்பு இல்ல ஆனா நம்ம பிசினஸ் எதிரிகள் எவ்வளவு பேர் இருக்காங்கனு உனக்கு தெரியும் தானே உன்னை இந்த நிலைமையில் தனியா விடுறது எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு நீ துஷ்யந்தை  துணைக்கு கூப்பிட்டது தப்பில்லை பட் அவனை கம்பெல் பண்ண பாத்தியா அதுதான் தப்பு ... அப்படி பண்ண கூடாது டா அடுத்தவங்களோட சூழ்நிலையும் புரிந்து நம்ம நடந்துக்கணும் .... என்று அவள் தலையை கோதிய வண்ணம் கூற போங்க எல்லாரும் அவருக்கே சப்போர்ட் பண்றீங்க எனக்கு ஒருத்தர் கூட இந்த சப்போர்ட் இல்லை... என்று கூறிக் கொண்டிருக்கும்போது அதான் வந்து தொலைஞ்சிட்டேனே... இப்ப நீ ஆர்ப்பாட்டத்தில் எனக்கு அங்க இருக்கணும்னு கூட தோணல சரியான டார்ச்சர் நீ... என்று கூறிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் கம்பீர ஆண்மகன் துஷ்யந்த். ருத்ரேஷ் மற்றும் யாமினியின் ஒரே புதல்வன் துஷ்யந்த்.  இப்பொழுதும் ராவணனின் பியேவாக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார் ருத்ரேஷ். 


ராவணன் எவ்வளவோ அவனிடம் கூறியும் இல்ல பாஸ் என்னால உங்களை விட்டு தனியா போக முடியாது எனக்குனு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது நீங்கதான்  ..  உங்கள விட்டு நான் சாகுற காலத்துல மட்டும் தான் பிரியணும் மத்தபடி உங்களை விட்டு நான் பிரியவே மாட்டேன்... என்று அவர் கூறிய பொழுது ராவணன் அவனை பெருமை பொங்க பார்த்தார் என்பது ஒரு தனி  விஷயம் . தந்தையின் குணத்தை பின்பற்றி அவளும் ராவணன் குடும்பத்திற்கு நல்ல விசுவாசியாக இப்பொழுதும் இருந்து வருகிறான் துஷ்யந்த். இவ்வளவு நாள் ராவணனின் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவன் இப்பொழுது தான் தனக்கென தனியாக ஒரு பிசினஸை ஆரம்பித்து அதை உயர்த்தும் எண்ணத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறான் . அவனைக் கண்டு கண்கள் மின்ன அவனை நோக்கி ஆர்த்தி எப்படி உன்னை வர வச்சுட்டேனா   ..கண்டிப்பா நான் இங்க ஹால்ல வந்து எல்லார்கிட்டயும் பேசும் போது விஷயம் ராவணன் சித்தப்பாவுக்கு போயிருக்கும் அவர் உடனே உனக்கு போன் பண்ணி இருப்பாரு வேற வழி இல்லாம நீங்க வந்துட்டேன் சரிதானே ... என்று அவள் கேட்கும் பொழுது என் பொண்ணு இவ்வளவு புத்திசாலியா இருப்பான்னு எனக்கு முன்னாடியே தெரியும் ... என்று கூறிக்கொண்டு படிகளில் கீழே இறங்கினார் ராவணன் விபீஷர். ஐம்பது ஐந்தை வயதை கடந்த போதிலும் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் கொஞ்சமும் உடல் கம்பீரம் குறையாது இன்னமும் பார்ப்ப 25 இளைஞரின் உடல் வாகுடன் இருக்கும் அவரை அனைவரும் மரியாதையுடன் நோக்க மிருஷிகா மட்டும் கோபம் கலந்த வெறுப்புடன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டார்


அதை கண்ட ராவணனுக்கு எப்பொழுதும் போல் தோன்றும் வேதனை தோன்றினாலும் உணர்ச்சிகள் அற்ற அவன் முகத்தில் அதை யாராலும் கண்டறிய முடியவில்லை அவன் கீழே இறங்கி வந்து அங்க போடப்பட்டிருந்த ஒற்றை நடு நாயகமான சோபாவில் காலமேல் கால் போட்ட அமர விருட்டென்று அங்கிருந்து எழுது வாசலை நோக்கி நடந்தாள் மிருஷிகா ஏய் எங்கடி போற சாப்பிட்டு போ இப்ப தானே கீழ இறங்கி வந்து அதுக்குள்ள எதுக்கு வெளியே போற.... என்று ஆர்ஷிகா கத்த அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் மிருஷிகா நடக்க ரிஷி நில்லு..... என்ற ராவணனின் கர்ஜனை சத்தத்தில் அப்படியே தன்னடையை நிறுத்தியவர் அவன் புறம் திரும்பாமல் நிற்க வெயிட் பண்ணு ரெண்டு பேரும் ஒன்னாவே ஆபீஸ்க்கு போகலாம்.... என்றார் அழுத்தமான குரலில் 


அடுத்த நொடி அவரிடம் இருந்து அம்பாய் வார்த்தைகள் விழுந்தது தேவையில்லை.... என்று கோபமான குரலில். அப்பொழுதும் அவர் ராவணன் புறம் திரும்பி பார்க்கவில்லை சொன்னதை செய் ரிஷி வெயிட் பண்ணு ஒண்ணா போகலாம்னு சொன்னேன் என் பேச்சை மீறணும்னு நினைக்காத .... என்று அவர் மீண்டும் கூற உன் பேச்சை மீறி நடக்காம இருப்பதினால தானே என் புள்ள என்ன விட்டு விலகி போயிட்டான்.... இதுவே அப்பவே உன்ன மீறி போயிருந்தா இன்னிக்கி என் புள்ள கூட சந்தோஷமா இருந்திருப்பேன்.... என்ற மிருஷிகாவின் கத்தலில் அனைவரும் வேதனையுடன் அவளை பார்த்தனர் என்றால் ஆர்த்தி மட்டும் பயந்து தாயின் பின்னே ஒளிந்து கொண்டாள்.  அத்தை ப்ளீஸ் கோபப்படாதீங்க மாமா இப்ப என்ன தப்பா சொல்லிட்டாரு வெயிட் பண்ண தானே சொன்னாரு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி இருந்து போகலாமே அவர மேலும் மேலும் கஷ்டப்படுத்தாதீங்க... என்று துஷ்யந்த் ராவணனுக்கு ஆதரவாக பேச அந்நேரம் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்த மிருஷிகா நீ வேணா உன் மாமாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இரு துஷ்யந்த் ஆனா எனக்கு அப்படி இருக்கணும்னு அவசியம் இல்ல யாருக்காகவும் காத்து இருக்கணும்னு அவசியம் இல்ல நான் கிளம்புறேன் ... என்று அவர் மீண்டும் திரும்ப அடுத்த நொடி அவள் கரத்தை இறுக்கி பிடித்திருந்தார் ராவணன் . எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் அவளை நெருங்கினார் என்று யாருக்கும் புரியாத பொழுது அவள் கரத்தை இறுக்கிப்பிடித்தவர் அவள் கண்களை அழுத்தமாய் நோக்க அதன்பின்பு எதுவும் பேசாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு நின்று கொண்டார் மிருஷிகா ஆர்த்தியை திரும்பி பார்த்தவன் நீ அவன் கூட வெளியே போகலாம் ஆர்த்தி ஆனா அதுக்காக அவன அப்படி டார்ச்சர் பண்ண கூடாது அவனோட சூழ்நிலை என்னங்கிறதை நீ புரிஞ்சு நடந்துக்கணும் ....அவனுக்கு முக்கியமான வேலைகள் எவ்வளவோ இருக்கும்போதோ என்னோட ஒத்த வார்த்தைக்கு அத எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்து நிற்கிறான் நான் அவளை இங்க வர சொன்னதுக்கான காரணம் எனக்கு உன் மேல இருக்கிற பாசம் அன்பு..... நீ முகம் சுனக்குன அத என்னால தாங்கிக்க முடியாது அவன் நான் சொன்ன உடனே இங்க வந்ததற்கான காரணம் என் மேல இருக்குற மரியாதை அன்பு... இது ரெண்டுத்துக்கும் வித்தியாசத்தை புரிஞ்சுக்கோ .... எப்பவுமே அடுத்தவங்களோட பாசத்தையும் அன்பையும் நம்ம நம்மளுக்கு சாதகமா பயன்படுத்திக்க கூடாது புரியுதா.... என்று ராவணன் அழுத்தமாக கூற புதிது சித்தப்பா இனிமே இப்படி பண்ண மாட்டேன்.... அவர தொந்தரவும் பண்ண மாட்டேன்... என்று அவள் மெல்லிய குரலில் கூறிவிட்டு தலையை தொங்க போட்டுக்கொள்ள அதற்கு மேல் எதுவும் பேசாமல் மிருஷிகாவும் இழுத்துக் கொண்டு வெளியே நடந்தார் ராவணன்.


தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....