பார்வை ஒன்றே போதுமே 33
தன்னவன் பேசி சென்ற வார்த்தைகள் அவளுக்கு மனதை வலிக்க செய்ய அதற்கு மேல் அறையில் இருக்க விருப்பம் இல்லாதவள் கீழே வந்தாள்.
அனைவரும் ஒன்றாக நின்று பேசி கொண்டிருப்பது தெரிய வர வந்தவள் ஷிவண்யாவின் அருகில் சென்று நின்றாள்.
அப்பொழுது மாமா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று சூர்யா கூற அவன் என்ன சொல்ல போகிறான் என்று உணர்ந்த துருவன் கண்களை சுழல விட அவன் கணித்தது போல் அங்கு நின்று கொண்டிருந்தாள் மானஸா..... இன்று அனைத்தை உண்மைகளையும் அனைவரிடமும் கூறி விட வேண்டும் என்று நினைத்தவன் மானஸாவை வரவழைத்து இருந்தான்.
என்ன விஷயம் சூர்யா... மேரேஜ் அரேஞ்சமெண்ட்ஸ் ஏதாவது சேன்ஞ் பன்னனுமா என்று மாறன் கேட்க எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை ப்பா என்றான் சூர்யா...........
அவனின் வார்த்தையில் அனைவர் முகமும் அதிர்ச்சியை தத்தெடுத்து. சூர்யா என்ன பேசிட்டு இருக்க என்று மாறன் அதட்ட நான் பேசி முடிச்சிடுறேன் ப்பா. இதுக்கு அப்புறம் பேச வாய்ப்பு இருக்குமானு எனக்கு தெரியல என்று சூர்யா கூற மாறன் ஏதோ சொல்ல வர அவரை தடுத்த ஆதிரன் நீ என்ன பேசனுமனு நினைக்குறியோ அதை பேசு சூர்யா. யாரும் உண்ண இங்க தடுக்க மாட்டாங்க என்று ஆதிரன் கூற ஒரு பெரு மூச்சு விட்ட சூர்யா எனக்கு கவிமதிய கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல மாமா.
நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன். என்னால அவளுக்கு துரோகம் பன்ன முடியாது என்று சூர்யா கூற கவி அவன் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவன் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது.
சூர்யா விளையாடாத... என்ன பேச்சு இதெல்லாம். லவ் அது இதுன்னு சொல்லிட்டு இருக்க. சின்ன வயசுளையே உனக்கும் கவிக்கு பேசி முடிச்சது தான. நீயும் அவ கிட்ட நல்லா தான பேசி பழகிட்டு இருந்த. இப்போ என்ன பிரச்சனை உனக்கு என்று தேவான்ஷி சூர்யாவை அதட்ட நீங்க பேசி முடிச்சிங்க அப்டிங்குறதுக்காக என்னால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது ம்மா. எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கனும். ஆனா எனக்கு இதுல துளி கூட விருப்பம் இல்லை.
என்றவன் தன் காதலை மனதினுள் போட்டு கொன்று நான் மானஸாவ தான் லவ் பண்றேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன் என்று சூர்யா கூற யாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கவியின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை.
மானஸா துருவனை மிதப்பாக பார்க்க துருவன் அவளை பார்த்து அலட்சியமாக இதழ் வளைத்தான். சூர்யா என்ன டா இதெல்லாம். இப்போ தான் உன் தங்கச்சி ஒரு ஆர்ப்பாட்டம் பன்ன. இப்போ நீயும் ஏன் பண்ற. ஏன்டா இப்டி எங்கள கொல்றீங்க என்று தேவான்ஷி புடவை தலைப்பை முகத்தில் பொத்தி அழுக நீங்க இந்த கல்யாணதுக்கு ஒதுக்கீட்டு தான் ஆகணும் ம்மா. வேற வழி இல்லை என்றான் சூர்யா. அவன் கூறியதில் கோபம் அடைந்த தேவான்ஷி அவன் அருகில் சென்று என்னடா மிரட்டுரியா..... நீ என்ன சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன். உனக்கும் கவிக்கு தான் கல்யாணம் நடக்கும் என்று தேவான்ஷி தீர்க்கமாக கூறிவிட அதில் அதிர்ந்த மானஸா இதற்கு மேல் விட்டால் சரி வராது என்று நினைத்தவள் அப்போ என்னோட நிலமை என்ன ஆகுறது ஆன்டி என்று கூற அவளை திரும்பி பார்த்த வன்ஷி இங்க பாரு மானஸா. நீ திடீர்னு நடுவுல வந்து பிரச்சினை பண்ணாத. என்னால கவியை மட்டும் தான் எங்க வீட்டு மருமகளா என்னால ஏத்துக்க முடியும்.... என்று தேவான்ஷி கூற அப்போ உங்க புள்ளை என்னோட வாழ்க்கைய நாசம் பன்னிட்டு இன்னொரு பொண்ணு கூட சந்தோஷமா வாழுவரா என்று குரலை உயர்த்தினாள் மானஸா.
அப்படி என்ன உன்னோட வாழ்க்கைய நாசம் பண்ணான் என் பையன் என்று தேவான்ஷி பதிலுக்கு கத்த என்ன கற்பழிச்சி என்னோட வாழ்க்கையை நாசம் பன்னது போதாதா என்று அவள் கத்த அவள் கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உங்க புள்ள என்ன காதலிக்குறேன்னு சொன்னது எல்லாம் பொய். குடிச்சிட்டு என்னோட விருப்பம் இல்லாம என்ன கற்பழிச்சிட்டான் உங்க பையன். அதை மறைக்குறதுக்காக என்ன காதலிக்குறேன்னு பொய் சொல்றான் என்று கூற தேவான்ஷி அவன் அருகில் சென்று அவன் சட்டையை பிடித்தார்.
டேய் அவ சொல்றது உண்மையா சொல்லு டா அவ சொல்றது உண்மையா என்று தேவான்ஷி அவன் சட்டையை பிடித்து உலுக்க கண்களை மூடி கண்ணீரை உள் இழுத்தவன் ஆமா...... அவ சொல்றது உண்மை தான். நான் தான் அவளை என்று நிறுத்தியவன் தன்னையே அருவருத்தவனாக அவளை....ரேப் பண்ணிட்டேன் என்று சூர்யா கண்களை மூடியவாறே கூற அதில் அவன் சட்டையை பிடித்திருந்த தேவான்ஷியின் கைகள் தானாய் தளர்ந்தது..
என்ன டா சொன்ன? ஒரு பொண்ண அவ விருப்பம் இல்லாம..... எப்படிடா உன்னால முடிஞ்சிது என்று அவனை அடித்தவர் உண்ண சொல்லி தப்பு இல்லடா நீ இந்த தேவான்ஷிக்கு தேவமாறுதனுக்கும் பொறந்தவனா இருந்துருந்தா நல்லவனா இருந்துருப்ப. நீ ஒரு கேடு கெட்டவனுக்கு பொறந்தவன் தான. என்று தேவான்ஷி கத்த ஜானுஊஊஊஊஊ என்று கத்திய மாறன் வாய மூடு. என்ன பேசிட்டு இருக்க என்று கத்த சூர்யா கண்களை சட்டென திறந்தவன் தாயையே விழி விரிய பார்த்தான். அவரின் வார்த்தை அவன் மனதில் கத்தியால் கிழிக்க ம்மா என்ன..... என்ன சொல்..... சொல்லறீங்க என்று கண்ணீருடன் திக்கி திணறி அவன் கேட்க ச்சீ என்ன அம்மான்னு சொல்லாத. உன் வாயால அந்த வார்த்தையை கேக்கும் எனக்கு அசிங்கமா இருக்கு. உன்ன சொல்லி தப்பு இல்ல. உன்னோட பிறப்பு அப்டி உண்ண இந்த உலகத்துக்கு கொண்டு வந்தவன் அந்த பொம்பள பொறுக்கி அபிதீரன் தான. அப்போ அவனோட குணம் தான உனக்கும் இருக்கும் என்று தேவான்ஷி கத்த வாய மூடுன்னு சொன்னேன் ஜானு. இல்லன்னா நான் என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது உறுமினார் மாறன்.
மாறன் அருகில் சென்ற சூர்யா ப்பா.... அம்மா சொல்றது பொய் தான. நான் உங்க பையன் தான ப்பா. அம்மா ஏன் இப்டி சொல்றாங்க. அம்மா கிட்ட சொல்லுங்க. நாங்க உங்க பையன் தான்னு அவங்கள சொல்ல சொல்லுங்க ப்பா என்று சூர்யா கண்ணிருடன் அவர் கைகளை பிடித்து கெஞ்ச அவனின் அழுகையை பொறுக்க முடியாத மாறன் நீ எங்க பையன் தாண்டா. யார் என்ன சொன்னாலும் எங்க பையன் தான் என்று அவனை அனைத்து ஆறுதல் படுத்தியவர் இதுக்கு மேல மறைக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்ல சூர்யா. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு. அப்போ தான் உனக்கு எல்லாம் புரியும் என்று கூற அவன் புரியாமல் அவரை பார்த்தான்.
சூர்யாவின் பிறப்பை பற்றி அவனுக்கு முழுதாக கூறினார் தேவமாறுதன். அவனின் தாய் நதியா என்பதும் அபிதீரன் என்னும் காயவனால் காதல் என்ற பெயரில் அவனிடம் கற்பை இழந்து அவன் நண்பர்கள் கூட்டத்தால் கற்பழிக்கப்பட்டு இறந்து போனவள் என்றும் பிறகு சூர்யாவை தேவான்ஷி தன் மகனாய் வளர்த்தது,தேவமாறுதன் தன் மகனாய் அவனை ஏற்று கொண்டது என அனைத்தையும் கூறி முடித்தார் மாறன். ( இதை பத்தி முழுசா எனக்கெனவே நீ பிறந்தாய் ஸ்டோரில கொடுத்திருப்பேன். அதை படிச்சா உங்களுக்கு புரியும். இதுல முழுசா சொல்ல முடியாத நிலைமை. ரொம்ப பெருசா போகும். அங்க படிச்சி பார்த்துக்கோங்க பா)
பெரியவர்களுக்கு இந்த விடயம் தெரியும் என்பதால் அவர்கள் அமைதியாக இருக்க சிறியவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்தது. துருவன் உட்பட அனைவருக்கும் இது புதிதே. சூர்யா அதை கேட்டு உடைந்தவன் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். அவனுக்கு மனம் முழுவதும் பாரமாய் இருந்தது... அவன் தாய் நதியா இறந்தது ஒரு சிறிய வலியை மட்டுமே அவனுக்கு ஏற்படுத்தியது. ஆனால் இத்தனை நாளை தன்னை பாராட்டி சீராட்டி வளர்ந்தவள் தன் தாய் இல்லை என்று நினைக்கும் போது அவனுக்கு கண்ணீர் பெரு கெடுத்தது
ஆஆஆஆ என்று கத்தியவன் ஏன்ப்பா. ஏன் என் கிட்ட இதை முன்னாடியே சொல்லல... அப்போவே சொல்லிருந்தா எனக்கு இன்னைக்கு இவ்ளோ கஷ்டம் தெரிஞ்சிருக்காதே.... என்ன ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விடுருந்தீங்கன்னா கூட எனக்கு இவ்ளோ வலிச்சிருக்காது ப்பா. ஆன இப்போ ரொம்ப வலிக்குது.. இங்க வலிக்குது ப்பா இந்து இதயத்தை காட்டி கூறியவன் தரையில் கைகளால் குத்தி அழுதான்.
அவன் கூறியதில் அதிர்ந்த வன்ஷி தன் வார்த்தை அவனை எந்த அளவிற்கு காய படுத்தி இருகிறது என்பதை உணர்ந்த அடுத்த நொடி அவனை தன் நெஞ்சோடு வாரி அணைத்து இருந்தார். சூர்யா என்னடா பேச்சு இதெல்லாம். அம்மா ஏதோ கோபத்துல புத்தி கெட்டு போய் அப்டி பேசிட்டேன்.. நீ என் புள்ள டா. உனக்கு அப்பா தேவமாறுதன் தான். அதே மாதிரி அம்மா தேவான்ஷி தான். புரிஞ்சிதா? அம்மாவ மனிச்சிருப்பா என்று தேவான்ஷி கதற அவரை கட்டி கொண்டு அம்மாஆஆஆஆ அழுதான் சூர்யா.
இதையெல்லாம் கண்டு சகிக்காத
மானஸா போதும் நீங்க அழுது டிராமா பன்னது. எனக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?. உங்க பையனால பாழா போன என்னோட வாழ்க்கைக்கு என்ன பதில்? என்று மானஸா மனசாட்சி இன்றி கேட்க ஒரு பெரு மூச்சு விட்ட அவளிடம் வந்த மாறன் சூர்யாக்கு உனக்கும் கல்யாணம் நடக்கும் ம்மா. என் பையன் மேல தான் தப்பு. நான் ஒத்துகிறேன். அதே தேதில உனக்கும் சூர்யாக்கு கல்யாணம் நடக்கும் என்று கூறியவர் ஆதிரனிடம் சென்று என்ன மன்னிச்சிருடா. எனக்கு வேற வழி தெரியல என்று ஆதிரனின் காலில் விழ செல்ல அனைவரும் பதறி கொண்டு அவர் அருகில் வர அவரை தடுத்து நிறுத்தினார் ஆதிரன்.
அவர் அருகில் வந்த துருவன் நீங்க சொன்ன தேதில கல்யாணம் நடக்கும் மாமா. ஆனா பொண்ணு மானஸா இல்ல என்னோட தங்கச்சி கவி என்று அவன் கூற அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த மானஸா ஏய் என்ன பேசிட்டு இருக்க. உன்னோட பிரண்ட் என்ன ரேப் பண்ணிடான்னு சொல்லிட்டு இருக்கேன். நீ அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பாக்குறியா? என்று அவள் வெடிக்க அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான் துருவன்.
அதில் அவள் சுருண்டு விழுந்தாள்.
பொம்பள புள்ள மேல கை வைக்க கூடாதுன்னு பார்த்துட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு பேசிட்டே போற. உன் நாடகத்தை என் கிட்ட காட்டாத. தொலைச்சிடுவேன் என்று விரல் நீட்டி எச்சரித்தான் துருவன். துருவா என்ன பழக்கம் இது பொண்ணு மேல கை வைக்குற என்று தேவான்ஷி அதட்ட அத்த இவள எல்லாம் இதோட விட்டுடனேன்னு சந்தோசப்படுங்க. எனக்கு வர கோபத்துக்கு இவளை கொன்னு போட்டாலும் தகாது என்று கண்கள் சிவக்க கூறினான் துருவன்.
ஏய் நீ என்ன வேணா பேசுவ. எவ்ளோ கேவலமான பொய் வேணாலும் சொல்லுவ. நாங்க அதை பார்த்துட்டு வாய மூடிட்டு இருக்கணுமா என்று அவன் கர்ஜிக்க அவள் பயந்து ஓடுங்கினாள். என்ன சொல்ற துருவா அவ என்ன பொய் சொன்னா என்று மாறன் புரியாமல் கேட்க சூர்யா இவ கிட்ட தப்பா நடந்துகிட்டான்னு சொன்னதே பொய் தான் மாமா... அப்டி எதுவும் நடக்கவே இல்ல. இவ பொய் சொல்ற என்று துருவன் சொல்ல அதுவரை தேவான்ஷியின் அணைப்பில் இருந்த சூர்யா துருவனிடம் வந்தான். என்ன சொல்ற துருவா? எனக்கு புரியல என்று சூர்யா கூற நீ எந்த தப்பும் பன்னலன்னு சொல்றேன் டா. இவளுக்கு உன் மேலையும் உன்னோட சொத்து மேலையும் ஒரு கண்ணு. உண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை முழுக்க சொத்து சொகத்தோட சந்தோஷமா வழலாம்னு திட்டம் போட்டு இப்டி பண்ணிருக்க. அன்னிக்கு நைட் நீ குடிச்சிட்டு போதைல கட்டில்ல விழுந்து தூங்கிட்ட. அதுக்கு அப்புறம் இவ பிளான் பண்ணி நீ அவளை ரேப் பன்ன மாதிரி செட் பண்ணிருக்க. நீயும் அதை நம்பி இவ்ளோ நாள் கஷ்ட்டப்பட்டுட்டு இருந்திருக்க என்றான்.
இல்ல இல்ல இவரு பொய் சொல்றாரு. இவரு சூர்யாவ காப்பாத்த இப்டி எல்லாம் சொல்றாரு என்று பயத்தில் உளறினாள். பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. நான் பக்கா ஆதாரத்தோட தான் பேசுவேன் என்றவன் முன்பே ஷிவாவிற்கு கால் செய்து வர சொன்னதால் அவனும் சரியாக அங்கு வந்து சேர்ந்தான்.
அவனிடம் சென்ற துருவன் ரிப்போர்ட் ரெடியா என்று கேட்க ஹ்ம்ம் ரெடியா இருக்கு டா. இந்தா என்று அவனிடம் கொடுத்தான் ஷிவா. அதை வாங்கியவன் அனைவரின் முன்பு வந்து நின்றான். தன் கையில் உள்ள ரீப்போர்ட்டை காட்டி இது சூர்யா இன்னும் வெர்ஜினா தான் இருக்கான்னு ப்ரூவ் பண்ணிருக்க ரிப்போர்ட் என்றவன் அதை மாறனிடம் கொடுக்க அதை பிரித்து பார்த்தார்
அதில் சூர்யா இன்னும் வெர்ஜின் தான் என்று போட்டிருக்க துருவா இதுல சூர்யா வெர்ஜினு போட்டுருக்க ப்பா என்று கூற ஆமென தலை ஆட்டியவன் மற்றவர் புறம் திரும்பி இதை ரெண்டு நாளுக்கு முண்ணாடி தான் எடுத்தோம். அபிக்கு நினைவு திரும்பின அன்னிக்கே நம்ம மாறன் மாமா வீட்டிக்கு போனோம்ல. அப்போ எங்க ரெண்டு பேரோட மேரேஜ் ஓட சூர்யா கவி மேரேஜ் பத்தி பேசும் போது சூர்யா ஓட முகம் மாறுனத நான் பார்த்தேன். அப்போவே எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு. பத்தா குறைக்கு இந்த மானஸா வேற அவன் ரூமுக்கு போனா. நானும் பின்னாடியே போய் பாக்கும் போது தான் இவ சூர்யா கிட்ட நல்லவ மாதிரி நடிச்சிட்டு இருந்தா. அப்போ தான் எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிச்சு.இவ கிட்ட தான் ஏதோ தப்பு இருக்குன்னு இவ பேசுனத வச்சே நான் கண்டுப்புடிசிட்டேன். அதுக்கு அப்புறம் நான் இவங்க ரெண்டு பேரும் பேசுரத கேட்டுட்டு யாருக்கும் தெரியாம அமைதியா வந்துட்டேன். இதை எப்டி சரி பன்றதுன்னு யோசிச்சு முதல் வேலைய சூர்யா க்கு வெர்ஜின் டெஸ்ட் எடுத்தேன் என்று கூறினான் துருவன்.
(அன்னிக்கு சூர்யா மானஸா பேசுனது கேட்டது அப்புறம் ஷிவா கிட்ட ஹாஸ்ப்பிட்டல்ல பேசுன உருவம் ரெண்டுமே துருவன் தான் பா)
இல்ல இல்ல இது உண்மை இல்லை. இவனே ரீபோர்ட்ட மாத்திட்டு இப்போ வந்து பொய் சொல்லிட்டு இருக்கான் என்று மானஸா ஏதாவது செய்து தப்பித்துவிடும் நோக்கில் பேச ஓஓஓ நீ அப்டி வரியா? சரி இந்த ரீபோர்ட்ட நீ பொய்ன்னு சொல்லாம். ஆனா நீயே வாய் வார்த்தையா வாக்குமூலம் கொடுத்ததுக்கு என்ன பதில் சொல்லுவா என்றவன் தன் மொபைலை ஆன் செய்து காட்ட அதில் அன்று கிளப்பில் தன் தோழியிடம் அவள் போதையில் உளறியது அனைத்தும் வீடியோவாக ஓடி கொண்டிருந்தது. அதை பார்த்தவளுக்கு மூச்சே நின்றுவிட்டது. அதை பார்த்த அனைவருக்கும் சூர்யாவின் மீது தவறு இல்லை என்று தெரிந்த உடன் தான் மூச்சே வந்தது.
தன் குட்டு வெளி பட்ட நிலையில் பயத்துடன் நின்று கொன்டிருந்தாள் மானஸா. அவள் அருகில் வந்த சூர்யா உண்ண அடிச்சா கூட பாவம்னு நினைக்குறேன். இவ்ளோ நாள் பண்ணாத தப்புக்கு நான் கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருந்தேன். உண்ண கொல்லுற அளவுக்கு வெறி வருது... இதுக்கு அப்புறம் எனைக்காவது என் கண்ணுல நீ பட்ட அது தான் உனக்கு கடைசி நாளா இருக்கு. கழுத்தை புடிச்சி வெளில தள்ளுறதுக்கு முன்னாடி நீயே ஒழுங்கு மரியாதையா வெளிய போய்டு என்று சூர்யா பல்லை கடித்து கொண்டு கூற அவன் அருகில் வந்த துருவன் அதான் சொல்லியாச்சுல. ஏதோ பாவம் பார்த்து உயிரோட விடுறேன். இல்லனா இந்நேரம் உன்னோட பொணம் தான் இங்கே கிடந்துருக்கும். வெளிய போ என்று கர்ஜிக்க அவமானத்தில் கருத்த முகத்துடன் அங்கிருந்து சென்றால் மானஸா.
சூர்யாவின் அருகில் வேகமாக அந்த ஷிவண்யா அவன் கை பிடித்து வெளியே அழைத்து வந்து கிழக்கு திசை நோக்கி ஒரு ஸ்டூலை போட்டு அமர வைத்தார். கவி உள்ள போய் குடத்துல தண்ணி எடுத்து வா என்று ஷிவண்யா சொல்ல அவனை பார்த்து கொண்டே சென்றவள் தண்ணீரை எடுத்து வந்தாள். அவளிடம் இருந்து குடத்தை வாங்கியவர் அவன் தலையில் தண்ணீரை முழுவதுமாய் ஊற்றினார். இன்னையோட உனக்கு வந்த எல்லா கஷ்டமும் உண்ண விட்டு விலகி போய்டனும் என்று மூன்று முறை தண்ணிரை அவன் தலையில் ஊற்றினார். அவன் அருகில் வந்த தேவான்ஷி தன் புடவை தலைப்பில் அவன் தலையை முகத்தையும் கண்ணீரோடு துடைத்து விட்டு தன் நெஞ்சோதி அணைத்து கொண்டார்.
அனைவருக்கும் மனசு லேசானது போல் இருந்தது.......
*** *** **** ***
பார்வை தொடரும்.......
Comments
Post a Comment