பார்வை ஒன்றே போதுமே 35

தான் பேச சென்று தன் தந்தையும் தாயும் நிராகரித்து விட்டால் தன்னால் தாங்கி கொள்ள முடியாது என்று  நினைத்தவன்  அமைதியாக படியேற சென்றான். துருவா என்று ஷிவண்யா அழைக்க ஒரு நிமிடம் நின்றவன் தன் பிரம்மை என்று நினைத்து கொண்டு மீண்டும் செல்ல முற்பட துருவா என்று மீண்டும் அழைத்தார் ஷிவண்யா.

அவன் சட்டென திரும்பி பார்க்க அவனை நோக்கி இரு கைகளையும் விரித்து வா என்று கண்ணீருடன் அழைத்தார் ஷிவண்யா. அவன் அமைதியாக அவரை பார்த்து கொண்டே  மெதுவாக அவர் அருகில் வந்தான். அருகில் வந்தவன் அவர் கையையும் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருக்க அவனின் செய்கையில் சிரித்த ஷிவண்யா அவன் முகத்தை கையில் எந்தினார்.

என்ன மன்னிச்சுறு துருவா. உன்னோட கஷ்டத்தை புரிஞ்சிக்காம நாங்களும் உண்ண காயப்படுத்திட்டோம். இன்னைக்கு அபி சொன்னதுக்கு அப்புறம் எங்க மேல இருக்குற தப்பு எங்களுக்கு புரிஞ்சிது. உன்னோட நிலமைல இருந்து பாக்கும் போது தான்  நீ பட்ட கஷ்டத்தை எங்களால உணர முடிஞ்சிது. எங்கள மன்னிச்சுறு ப்பா என்று ஷிவண்யா கண்ணீருடன் கூற அவர் கைகளை பிடித்து கொண்டவன் ம்மா என்ன பேச்சு இதெல்லாம். என்ன திட்டுறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. பிளீஸ் இப்டி எல்லாம் பேசாதிங்க என்று துருவன் சொல்ல அவனை கண்ணீருடன் கட்டி கொண்டார் ஷிவண்யா. அவர்களை பார்த்து கொண்டிருந்த ஆதிரன் துருவனின் அருகில் வந்து அவன் தோள் தொட அவரை பார்த்து மெலிதாக சிரித்தான் துருவன்.

அவனிடம் இருந்து விலகிய ஷிவண்யா நீ காலைல இருந்து எதுவும் சாப்பிடல. கண்டிப்ப மதியமும் சாப்பிடுருக்க மாட்ட. போய் கை கழுவிட்டு வா. சாப்பிடலாம் என்று கூற இல்ல ம்மா. பசிக்கல. வேணாம் என்று அவன் கூற கொஞ்சமா சாப்பிடு துருவா. சாப்பிடாம இருந்தா உடம்புக்கு என்ன ஆகுறது என்று அவர் கூற அவனின் மனதை புரிந்து கொண்ட ஆதிரன் விடு கண்ணம்மா. அவனை வற்புறுததாத என்று கூற சரி என்று தலை ஆட்டினார் ஷிவண்யா.

நீங்க எல்லாரும் சாப்டீங்களா ம்மா? என்று கேட்க சாப்பிடுற நிலமைல நாங்க யாரும் இல்லை ப்பா என்றார் ஷிவண்யா. அவரின் மன கஷ்ட்டத்தை புரிந்து கொண்டவன் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. அவ சாப்பிட்டாலா ம்மா என்று தீராவை பற்றி கேட்க இல்ல பா.  வேணம்னு சொல்லிட்டா. எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ஆனா கேக்கல என்று வருத்தத்துடன் ஷிவண்யா கூற அவ கிட்ட போய் மனசு விட்டு பேசு துருவா. அவ எதிர்பக்காத விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் நடந்துருச்சு. அதை அவ ஏத்துக்குறது கஷ்டம். பாவம் சின்ன பொண்ணு. நீ கொஞ்சம் பேசுனா அவளுக்கு அறுதலா இருக்கும் என்று ஆதிரன் கூற அவள் மதியம் பேசிய வார்த்தைகள் அவன் காதில் ஒலிக்க அதை நினைத்தவன் விரக்தி சிரிப்பை ஒன்றை உதிர்தான்.

சரி ப்பா. நான் பாத்துக்குறேன். நீங்க போய் தூங்குங்க என்றவன் தன் அறைக்கு சென்றான். அவர்கள் பேசு கொண்டிருந்ததை மேலே நின்று  பார்த்து கொண்டிருந்த அபி  நிம்மதியுடன தன் அறைக்கு சென்றான். தன் அறையின் உள்ளே சென்ற துருவா தன்னவளை  அறையில் தேட அவளோ பால்கனியில் நின்றிருந்தாள். ஒரு பெரு மூச்சு விட்டவன் அவள் அருகில் சென்றான். பால்கனி கம்பியை இறுக பற்றி கொண்டு இருளை வெறித்து கொண்டிருந்தவளை பார்க்கும் பொழுது அவனுக்கு மனது கணத்தது.

மார்க்கி என்று அழைக்க வந்தவன் வார்த்தையை அடக்கி நக்சதிரா என்று அவளை அழைக்க அவளிடம் பதில் இல்லை. அவள் அருகில் சென்று தானும் இருளை வெறித்தவன் எனக்கு தெரியும் நக்சதிரா. உன்னோட மனசு எவ்ளோ காயப்பட்டுருக்கும்னு என்னால் புரிஞ்சிக்க முடியுது. எல்லாத்தியும் மறக்குறது கஷ்டம் தான். ஆனா என்ன புருஞ்சிக்க முயற்சி பன்னு. என்னோட இடத்துல நீ இருந்திருந்தா நீயும் நான் பன்னதையே தான் நீயும் பன்னிரூப்ப. நான் பன்னது சரி ன்னு நான் சொல்லல. ஆனா அந்த தப்ப உணர்ந்து திருந்தி வந்துருக்கேன்.
என்ன புரிஞ்சிக்கோ பிளீஸ் என்றவன் இதுக்கு மேல நான் சொல்ல எதுவும் இல்ல. ஆனா ஒன்னும் மட்டும் தெரிஞ்சிக்கோ. நக்சதிரா இல்லனா துருவன் இல்ல. அவன் வாழுறதே அவனோட மார்க்கிகாக தான். இதை மட்டும் உன்னோட  மனசுல பதிச்சு வச்சிக்கோ என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்று சோபாவில் படுத்துவிட்டான்.

அவன் பேசியதை கேட்ட தீராவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்து. தன் நிலை எண்ணி மனதில் அழுதவள் இருளை வெறித்து கொண்டே நின்றாள். சோபாவில் படுத்தவன் வெளிவர துடித்த கண்ணீரை உள் இழுத்து தன்னவள் நிலையை எண்ணி கணத்த மனதுடன் உறக்கத்தை தழுவினான்.

*** **** **** **** ***** ****

பாப்புஊஊஊ என்று அதிர்ச்சியுடன் சூர்யா அழைக்க அவன் குரல் கேட்டு பட்டென திரும்பியவள் அவனை பார்த்து திருட்டு முழியுடன் வாயில் ஐஸை அதக்கியவாறு கன்னங்கள் உப்பி கொண்டு நின்று கொண்டிருந்தாள் சூர்யாவின் பாப்பு.....

கையில் உள்ள குல்பியை மறைத்தவள்  அதே  தோரணையில் நிற்க அதிர்ச்சியுடன் அவள் அருகில் வந்தவன் நீ இங்க என்ன பண்ணுற பாப்பு. அதுவும் இந்த நேரத்துல என்று அவன் கேட்க அவள் பதில் சொல்லாத இருக்க உன் கிட்ட தான் கேக்குறேன். வாய தொறந்து பதில் சொல்லு என்று அவன் மீண்டும் கேட்க அப்பொழுதுதான் அவள் வாயில் குல்பியை அதக்கி கொண்டு இருப்பதை பார்த்தவன் நைட் டைம்ல எதுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுற. சளி பிடிக்க போகுது பாரு என்று கூற வாயில் உள்ளதை முழுங்கியவள் இது ஐஸ்கிரீம் இல்ல மாமா. குல்பி என்று அறிவாளிதானமாய் பற்களை காட்டி கிளுக்கி சிரித்து அவள் கூற அவள் கூறியதை கேட்டு தலையில் அடித்து கொண்டவன் அவள் கையில் இருந்த குல்பியை பிடுங்கி கீழே போட்டான்.

( மை மைண்ட் வாய்ஸ்: குல்பி போச்சே. அடேய் வளந்து கெட்டவனே.. அதை எனக்காவது கொடுத்திருக்க வேண்டியது தானே டா வெண்ணெய்.  குல்பி ஓட அருமை என்னனு என்ன மாதிரி குல்பி பைத்தியத்துக்கு தான்டா தெரியும்.....)


ஐயோ என்னோட குல்பி என்று அவள் கத்த அவள் வாயை தன் கரங்கள் கொண்டு மூடியவன் சத்தம் போடாத டி. யாரவது வந்தா அவ்ளோ தான் என்று கூற அவன் கையை நறுக்கென்று கடித்தால் கவிமதி. அவுச் என்று அவன் கைகளை விலக்கி கொள்ள போட லூசு பயலே.... என்னோட குல்பியை ஏன்டா கீழ போட்ட. எனக்கு என்னோட குல்பி வேணும் என்று அவன் மார்பில் அவள் அடிக்க அவள் கைகளை தடுத்தவன் அவளை இழுத்து அணைத்து கொண்டான். அவன் சூடான் கண்ணீர் அவள் தோள்பட்டையை நனைக்க அவன் முதுகை வருடி கொடுத்தால் அவள்.

சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து பிரிந்தவன் ஐ யம் சாரி டா என்று கூற நீ ஏன் மாமா சாரி கேக்குற நான் தான் உன் கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு. உன் மனசை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். என்ன மன்னிச்சுறு மாமா என்று அவன் தோள் சாய்ந்து கொண்டாள் கவி. பால்கனி சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவன் அவளை தன் மடி மீது அமர்த்தி கொண்டான்.

அவளும் அவன் அவன் கழுதை சுற்றி கரங்களை கோர்த்து மீண்டும்  அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். உனக்கு என் மேல கோவம் இல்லையா பாப்பு என்று அவன் மெலிதான குரலில் கேட்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் எதுக்கு என்று கேட்க அது... நான்... மானஸாவ...... என்று அவன் வார்த்தை வராமல் திணற இதுல கோபப்பட என்ன இருக்கு மாமா. எனக்கு உண்ண பத்தி தெரியாதா? நீ கல்யாணம் வேணாம்னு சொன்ன உடனே நான் ரொம்ப உடஞ்சி போய்ட்டேன் தெரியுமா என்று கண்ணிருடன் வினவ அவளை இறுக கட்டி கொண்டான். அவன் அணைப்பில் ஆசுவாசம் அடைந்தவல் அவனை விட்டு விலகாது அந்த அணைப்பில் இருந்தவாறே ஆனா நீ மானஸா கிட்ட தப்பா நடந்துகிட்டன்னுசொல்லும் போது  என்னாலா அதை நம்ப முடியல மாமா. என்ன பொறந்ததுல இருந்தே நீ காதலிச்சிட்டு இருக்க. ஆனா காதலிக்குறவ தானேன்னு என்னையவே ஒரு நாள் கூட தப்பான நோக்கத்துல பார்த்தது கிடையாது. அப்டி இருக்கும் போது நீ அவள் கிட்ட அப்டி நடந்துக்கிட்டன்னு சொல்லும் போது அதை எப்டி நான் நம்புவேன் என்றால் கவி. அவள் கூறியதை கேட்டு அகம் மகிழ்ந்தவன் அவள் முகம் முழுவதும் மூச்சு முட்ட முத்தம் கொடுக்க அதனை முத்தங்கலையும் வெட்கத்துடன்  வாங்கி கொண்டாள்.
இறுதியாய் அவள் இதழில் இளைப்பாறியவன் அவள் இதழ் ரத்த சிவப்பாய் மாறிய பிறகே அவளை விடுவித்தான். அவன் முகத்தை பார்க்கும் திரணி இல்லாமல் அவனை அனைத்து கொண்டால் கவி.

ஆமா எப்டி டி இங்க வந்த. வீட்ல எப்டி இந்த நேரத்துல விட்டாங்க என்று கேட்க அவங்க எங்க விட்டங்க. நான் தான் யாருக்கும் தெரியாம சைலண்ட்ட ஓடி வந்துட்டேன் என்று கூற அடிபாவி. வண்டி எடுக்கும் போது சத்தம் கேக்கலையா? என்று அவன் கேட்க நான் எங்க வண்டில வந்தேன் என்று அவனிடம் கூற அப்போ எப்டி வந்த? பிரண்ட் கூட வந்தியா? அவங்க கீழ வெய்ட் பண்றாங்களா என்று மீண்டும் கேட்டான். அய்யோ இல்ல மாமா. நான் என்னோட சைக்கில்ல வந்தேன் என்றாள். எதேய் சைக்கிள்யா? என்று அதிர்ச்சியுடன் கேட்க அட ஆமா மாமா என்னோட சைக்கிளை ஷெட்டுல இருந்து யாருக்கும் தெரியாம பொறுமையா எடுத்துட்டு வந்துட்டேன் என்று கூற இன்னுமாடி சைக்கிள் எல்லாம் வச்சிருக்க என்று அவன் ஆச்சர்யமாக வினவ இருக்காதா பின்ன அப்பா நான் சிக்ஸ்த் படிக்கும் போது கிளாஸ் பர்ஸ்ட் வந்தோன்னு எனக்கு நான் ஆசைப்பட்டு கேட்ட  சைக்கிள் வாங்கி கொடுத்தாரு. அதை நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். அதை யாரையும் தொட கூட  விடமாட்டன். அதை இப்போ எடுத்துட்டு தான் உங்கள பாக்க வந்தேன் என்று சிறு பிள்ளை போல் கையை அசைத்து தலையை அசைத்து கூற அவள் கைகளை பிடித்து முத்தமிட்டு அவள் நெற்றி மூட்டினான் சூர்யா தேவன்.


****** ***** ****** *****

மறுநாள் காலை,

இடுப்பில் துண்டு கட்டி கொண்டு குளியல் அறையில் இருந்து  பாட்டு பாடி ஆடி கொண்டே  வந்தான் அபி.

🎶🎶🎶ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ.....

மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே மலம பித்தாதே.....
மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே மலம பித்தாதே....

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி

காலி காலி மொத்தத்துல அவனும் தான் காலி ஜாலி ஜாலி அடிபொலி.....

ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா.......
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ...........🎶🎶🎶🎶🎶



என்று தளபதி விஜய்யின் ஸ்டேப்பை போட்டு ஆடி கொண்டிருந்தவன் அதே ஸ்டெப்போடு திரும்பினான். அப்பொழுது அங்கு ஆரோஹி உள்ளே நுழைவதை கண்டு  மார்பை கை கொண்டு மறைத்தவாறு  அயோயோஓஓஓஓ பார்த்துட்டா பார்த்துட்டா என்று ரெமோ சிவகார்த்திகேயன் பாணியில் குதியோ குதியென்று குதிக்க அவனை இடுப்பில் டவலோடு அந்த நிலையில் எதிர்பார்க்கதவள் அம்மேஏஏஏஏ என்று கண்களை இரு கைகளால் மூடியவாரு கத்தினாள் ஆரோஹி.

பார்வை தொடரும்......


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....