பார்வை ஒன்றே போதுமே 38

இளஞ்சூரியன் காலை கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தது. காலையில் எழுந்த  தீரா கண்டது என்னவோ குழந்தை போல் கை கால்களை குறுக்கி கொண்டு சோபாவில் படுத்து உறங்கி கொண்டிருந்த தன்னவனை தான். அன்று திருமணம் முடிந்த இரவு அவளிடம் பேசியவன் தான். அதன் பிறகு அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை துருவன்.  ஒரே அறையில் இருந்தாலும் அவளின் முகத்தை கூட பார்க்க மாட்டான். காலையில் எழுந்து குளித்து முடித்து ஆபீஸிற்கு கிளம்புபவன் காலையில் உணவு கூட உண்ண மாட்டான். இரவு நேரம் கடந்து வீடு வருபவன் இரவு உணவையும் எடுத்து கொள்ளலாமலே உறங்கி விடுவான். ஏதோ ஒன்றை பறிகொடுத்தவன் போல் தாடி மீசையுடன் உடல் எடை குறைந்து முகம் பொலிவிழந்து சுற்றி கொண்டிருக்கிறான். 


அவனின் இப்படி என்றால் தீரா உண்ணாமல் உறங்காமல் பித்து பிடித்தவள் போல் இருந்தாள். ஷிவண்யாவிடம் கூட சரியாக அவள் பேசுவது இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால் மட்டுமே பதில் கூறுவாள். அறையின் உள்ளேயே அடைந்து கிடப்பாள். இருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களை தானே வருத்தி கொண்டு  இருந்தனர். சூரிய வெளிச்சம் முகத்தில் பட கண்களை சுருக்கி எழுந்தான் துருவன். அவள் முழித்து  இருப்பதை உணர்தவன் அவள் முகத்தை கூட காணாது குளியல் அறை புகுந்து கொண்டான். குளித்து முடித்து வந்தவன் உடையை மாற்றி கொண்டு தேவையான ஃபைல்களை சரி பார்த்து எடுத்து கொண்டு ஆபீஸிற்கு கிளம்பி விட்டான். தீரா அவன் எழுந்ததில் இருந்து அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள். அவன் அறையை விட்டு வெளியேறிய பிறகு விரக்தி சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு அவளும் குளிக்க சென்றுவிட்டாள்.


துருவன் கீழே வந்தவன் வெளியே செல்ல போக ஷிவண்யாவின் அழைப்பு அவனை நிறுத்தியது. அவன் அருகில் வந்த ஷிவண்யா இன்னைக்காவது சாப்பிட்டு போ துருவா. ஏன் இப்படி சாப்பிடாம உடம்பை கெடுத்துக்குற. உன்னோட நிலமையை பார்த்து நாங்க தினம் தினம் சாகணும்னு விரும்புறியா? என்று கண்ணீருடன் வினவ ம்மா என்ன பேசுறீங்க என்று அவன் அதட்ட நான் சொல்றது உண்மை தான பா. இந்த வீட்டோட முதல் வாரிசு டா நீ. உன் வாழ்கை என்ன  ஆகுமோங்குற கவலைலேயே நாங்க செத்துருவோம் போல என்று அவர் கூற அவர் அருகில் வந்த துருவன் அவர் கண்களை துடைத்து விட்டான். 

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ம்மா. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லி மனசை தேத்துறதுன்னும் தெரியல. என்னோட விதி படி என்ன நடக்கனும்னு இருக்கோ அதுவே நடக்கட்டும். இதை பத்தி யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க . இப்போ என்ன நான் சாப்பிடணும் அவ்ளோ தான. வாங்க சாப்பிடலாம் என்று அவரின் தோள் மேல் கை போட்டு அழைத்து வந்தவன் டேபிளில் அமர கண்களை துடைத்து கொண்டு உணவை பரிமாறினார் ஷிவண்யா.


அவன் உணவை உண்டு கொண்டிருக்கும் பொழுதே அங்கு வந்தாள் தீரா. வா தீரா மா. வந்து உட்கார சாப்பிடலாம் என்று கூற இல்ல அத்த நான் இன்னைக்கு விரதம். கோவிலுக்கு போய்ட்டு வந்து சாப்பிடணும் என்று கூற எதுக்கு இப்போ விரதம் எல்லா இருந்துட்டு இருக்க. உடம்பு ரொம்ப நல்லா இருக்குன்னு நினைப்போ என்று அபி அவளை கேட்டவரே வந்து அமர அபி அப்டி எல்லாம் சாமி விஷயத்தை சொல்ல கூடாது என்று ஷிவண்யா அவனை அதட்ட அதான என்ன திட்டலன்னா உனக்கு தூக்கமே வராதே  மம்மி என்று கூற டேய் சாப்பிடும் போது என்ன பேச்சு உனக்கு அமைதியா சாப்பிடு என்று துருவன் கூற  சாப்பிடு சாப்டுன்னா வெறும் தட்டையா சாப்பிடுறது. சோறு ஏதாவது வெச்சா தான சாப்பிட முடியும் என்று அவன் நொடிந்து கொண்டான்

அதில் அனைவரும் சிரிக்க தீரா அவனுக்கு உணவை தட்டில் வைத்தாள். தீராமா  நீயும் துருவனும் சேர்ந்து கோவிலுக்கு போய்ட்டு வாங்க என்ற ஷிவண்யா துருவனின் புறம் திரும்பி கண்ணா அவளை கோவிலுக்கு கூட்டிட்டு போ என்று கூற சாப்பிடுவதை பாதியில் நிறுத்தியவன் தீராவை திரும்பி பார்க்க அவள் எதையும் கவனிக்காதது போல் உணவை பரிமாறுவதிலேயே குறியாக இருந்தாள்.

அவளிடம் இருந்து கவனத்தை திரும்பியவன் இல்ல ம்மா. எனக்கு வேலை இருக்கு. நீங்க அபியை கூட்டிட்டு போக சொல்லுங்க என்று துருவன் கூற அய்யே எனக்கு வேற வேலை இல்லா பாரு. இந்த எடுப்புக்கு நான் துடுப்பு வேலை பாக்கனுமா? என்னலா முடியவே முடியாது. நான் வெளிய போறேன் என்று கூற டேய் சொல்றத  மட்டும் செய் அவளை நீ தான் கூட்டிட்டு போகணும் புரியுதா என்று குரல் உயர்த்தி துருவன் சொல்ல நீ சொல்றத எல்லாம் கேக்க முடியாது போடா பனை மரம் என்று அவனும் பதிலுக்குக்கு  கத்த இருவரும் சண்டையிடுவது போல் தோன்ற ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா என்று கத்தினாள் தீரா. இருவரும் அவள் குரலில் அமைதியாக யாரும் என்ன எங்கையும் கூட்டிட்டு போக தேவை இல்லை. நானே போய்கிறேன். தாலி கட்டி கூட்டிட்டு வந்தவருக்கே அக்கறை இல்லாத அப்போ மத்தவங்களை குறை சொல்றதுல ஒரு பிராயோஜனமும் இல்ல என்று துருவனை  முறைத்து கொண்டே கூறியவள் ஷிவண்யாவிடம் சென்று அத்த நான் போய்கிறேன் நீங்க யாரையும் கேக்க வேணாம் என்றவள் புடவையை மாற்ற அறைக்கு செல்ல முற்பட ம்மா சீக்கிரம் ரெடி ஆகி வர சொல்லுங்க. நானே கூட்டிட்டு போறேன் என்று துருவன் எங்கேயோ பார்த்து கொண்டு கூற இவ்ளோ அலுத்துகிட்டு எல்லாம் யாரும் என்னை  அழைச்சிட்டு போக வேணாம் என்று தீரா கூறினாள்.

துருவன் திரும்பி ஷிவண்யாவை முறைக்க தலையில் அடித்து கொண்ட ஷிவண்யா தீராவிடம் சென்று நீ போய் கிளம்பு. அவன் கூட்டிட்டு போவான் சீக்கிரம் போ என்று அவளை கிளம்ப அத்தம்மா நான் என்று அவள் கூற வர அடி வாடி மருமகளே என்று அவளை இழுத்து கொண்டு சென்றார்.


சிறிது நேரத்தில் தீரா கிளம்பி வர அவளை நிமிர்ந்தும் பாராது கிளம்பினான் துருவன். அபி நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டான். துருவன் அவளை அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக தானே அவன் சண்டை போடுவது போல் நடித்தான். இறுதியில் அவன் நினைத்தது போலவே நடக்க மனத்தினுள் சிரித்தான் அபி. காரில் இருவரும் கோவிலுக்கு கிளம்பினர். காரில் தீரா துருவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வர அவன் அதை கவனித்தாலும் அவள் புறம் திரும்பவில்லை.  கோவிலுக்கு முன் வண்டியை நிறுத்தி விட்டு அவன் இறங்க பின்னே அவளும் இறக்கினாள். இறங்கியவள் கோவிலை பார்த்த உடன் கண்கள் கலங்கியது. அந்த கோவிலில் தான்  துருவன் அவள் விருப்பமே இல்லாமல் தாலி கட்டினான். இப்பொழுதும் அதே கோவிலுக்கு தான் அவளை அழைத்து வந்திருந்தான். 

அவள் கண்கள் கலங்குவதை பார்த்த துருவனுக்கு மனம் வலித்தது. அவளுக்கு ஆறுதல் கூற சொல்ல தோன்றிய மனதை அடக்கி கொண்டான். பூஜை பொருட்களை வாங்கி கொண்டு இருவரும் கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கினர். வணங்கி முடித்து கோவில் படியில் அமர வர ஒரு வயதான பாட்டி இருவரிடமும் வந்தார். தீராவிடம் வந்தவர் புதுசா கல்யாணம் ஆனவங்களா மா நீங்க என்று கேட்க அவளும் ஆமென்று தலை அசைத்தாள். புதுசா கல்யாணம் ஆன பொண்ணு நெத்தி வகுட்டுல குங்குமம் வைக்காம இருக்க கூடாது டா என்று அவர் கூற அப்பொழுது தான் இதுவரை திருமணம் ஆன நாளில் இருந்து ஒரு முறையேனும் நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்காதது  அவளுக்கு நியாபகம் வந்தது. கையில் இருந்த குங்குமத்தை நெற்றி வைக்க செல்ல நீ ஒரு நிமிஷம் இருடா என்று அவளை தடுத்தார் அந்த பாட்டி. ஏன் பாட்டி என்ன ஆச்சு என்று அவள் கேட்க துருவனின் புறம் திரும்பிய பாட்டி நீ உன் பொண்டாட்டிக்கு குங்குமத்தை வச்சி விடு ப்பா என்றார்.

துருவன் என்ன செய்வதென்று தெரியாமல் தீராவை பார்க்க அவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். அவன் அமைதியாக நிற்க என்ன ப்பா அமைதியா இருக்க வச்சி விடு என்று மீண்டும் அவர் கூற வேறு வழி இல்லாமல் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகுட்டில் வைத்து விட்டான். அப்டியே தாலியிலையும் வச்சி விடு பா என்று பாட்டி கூற துருவன் தாலியில் எப்படி வைப்பது என்று கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தான். ஏனெனில் தாலியை அவள் உடையனுள் போட்டு இருந்தாள். அவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதை கூட அவள் கழுத்தில் புத்தம் புதிதாய் ஜொலித்து கொண்டிருந்த மஞ்சள் தாலியை வைத்து தான் கண்டு கொண்டார் அந்த முதியவர். நீ தாலிய வெளிய எடுத்து காட்டுடா கண்ணு என்று பாட்டி கூற அவனை பார்த்து கொண்டே தாலியை எடுத்து அவன் முன்பு  நீட்டினாள். அவனும் அவளை பார்த்து கொண்டே தாலியில் குங்குமம் வைத்து விட்டான்.

பின்பு தன்னிடம் இருந்த பூவை எடுத்து துருவனின் கையில் கொடுத்த அந்த பாட்டி உன் கையாலேயே அவளுக்கு இந்த பூவை வச்சி விடு என்றார். இதெல்லாம் எதுக்கு பாட்டி என்று துருவன் மறுக்க புது பொண்டாட்டிக்கு இதெல்லாம் பண்ணனும். வச்சி விடு என்றார். தீரா எதுவும் பேசாமல் அமைதியாக  அவன் பூவை வைத்து விடுவதற்கு எதுவாக திரும்பி நிற்க துருவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு அவள் தலையில் மல்லிகை பூவை சூட்டினான். இருவரும் சேர்ந்து தம்பதிகளாக பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வதம் வாங்கி கொண்டனர்.

ரெண்டு பேரும் நூறு வருஷம் புள்ள குட்டிகளோட சந்தோஷமா வாழனும் என்று வாழ்த்தியவர் தீராவின் நெற்றியில் முத்தமிட்டு விடை பெற்றார். கோவிலுக்கு வெளியே இருவரும் வரும் வேலை இளைஞர்கள் சிலர் தீராவை கிண்டல் அடிக்க தொடங்கினர். அதில் ஒருவன் மச்சான் பாருடா செம்ம ஃபிகரு. பாக்கவே சும்மா அள்ளுது டா என்று ஒருவன் கூற மற்றொருவன் டேய் கல்யாணம் ஆன பீஸு டா. புருஷன் கூட கோவிலுக்கு வந்துருக்கு என்று கூறினான். அவர்கள் கூட்டதில் இருந்த இன்னொருவன் கல்யாணம் ஆனா என்ன டா. இப்போ எல்லாம் புருஷன் இருந்தாலும் கழட்டி விட்டுட்டு வந்துடுறாளுங்க. ஆனா செம்ம ஸ்ட்ரேக்ச்சர் டா பொண்ணு என்றான். இவர்கள் பேசியதை கேட்ட கை முஷ்டிகள் முறுக அவர்களிடம் சென்றவன் அவர்களை போட்டு அடித்து விளாசி விட்டான். பொறுக்கி நாய்களா. எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட பொண்டாட்டிய தப்பா பேசுவீங்கா. சாவுங்கடா என்று மரண அடி அவன் அடிக்க அவர்கள் பேசியதை தீராவும் கேட்டு கொண்டு இருந்தவள் தன் கணவன் அவர்களை புரட்டி எடுப்பதை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள்.

அண்ணா அண்ணா விட்டுருங்க ண்ணா. தெரியாம பேசிட்டோம். விட்டுருங்க ண்ணா என்று அவர்கள் கெஞ்ச தெரியாம பேசுனீங்களா? ஹான் சொல்லுங்கடா தெரியாம பேசுனீங்களா என்று அடி வெளுத்து கொண்டிருந்தான் துருவன். ஐய்யோ யம்மா என்று அவர்கள் வலியில் கத்த 
துருவனை பிடித்து கொண்ட தீரா விடுங்க அதான் தெரியாம பண்ணிட்டோம்னு சொல்றாங்கல விடுங்க  பாவம் என்று கூற நீ பேசாத இவனுங்களை எல்லாம் சும்மா விட கூடாது என்று அவர்கள் மேல் மீண்டும் பாய அவனை பிடித்து கொண்டவள் டேய் போங்கடா. இல்லனா உங்கள கொன்னு போட்டுருவாரு போங்க டா என்று தீரா கத்த சாரி சிஸ்டர் என்று கத்தி கொண்டே விழுந்தடித்து ஓடினர் அந்த இளைஞர்கள். அவனை இழுத்து கொண்டு வந்தவள் முதல்ல வண்டிய  எடுங்க. எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க என்று தீரா கூற அவள் கையை விலக்கி விட்டவன் வண்டியில் உட்கார அவன் அருகில் தீராவும் அமர்ந்து கொண்டாள். வரும் வழியில் எல்லாம் மவுனமே ஆட்சி செய்தது. 

முதலில் துருவனே பேச தொடங்கினான் இந்த வருஷத்துக்கான யாங் பிசினஸ் மேன் அவார்ட் எனக்கு அனோவ்ன்ஸ் பன்னிருகாங்க. நாளைக்கு ஈவினிங் அவார்ட் ஃபங்க்ஷன் நடக்குது. நீ வந்தா நல்லா இருக்கும். உனக்கு விருப்பம் இருந்தா வரலாம் என்று சாலையில் கவனத்தை வைத்து கொண்டே அவன் கூற அவன் கூறியதை கேட்டவள் எந்த பதிலும் கூறவில்லை. அதில் ஒரு பெரு மூச்சு விட்டவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினான்.


பார்வை தொடரும்........


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....