பார்வை ஒன்றே போதுமே 41
இரண்டு வருடங்களுக்கு பிறகு,
ஆதிரனின் வீட்டில் அனைவரும் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருந்தனர். சூர்யாவும் துருவனும் அனைத்து வேலைகளையும் மேற் பார்வை பார்த்து கொண்டிருக்க ஆதிரனும் தேவமாறுதனும் வரும் உறவினர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர். இன்னும் இவ எழுந்துக்கவே இல்ல. இவளுக்கு தான் ஃபங்கஷனே. ஆனா இன்னும் இவளை காணோம். எல்லாம் துருவனை சொல்லணும். அவன் தான் அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறான் என்று தேவான்ஷி ஷிவண்யாவிடம் புலம்பி கொண்டிருக்க அட கொஞ்சம் அமைதியா இருங்க வன்ஷிமா. ஏற்கனவே உங்களுக்கு உடம்பு வேற சரி இல்ல. ஏன் இப்டி புலம்பி உடம்பை கெடுத்துகிறீங்க என்று ஷிவண்யா அவரை அமைதி படுத்தினார்.
துருவன் சூர்யாவிடம் பேசி கொண்டிருக்க மாமா என்று அவன் பின்னே குரல் கேட்க அவன் திரும்பினான். அங்கு பட்டு புடவை சர சரக்க கழுத்தில் அபி கட்டிய தாலி தங்க சரடில் மின்ன அங்கு நின்றிருந்தாள் ஆரோஹி. அவள் வாய் மொழியாய் உரைக்காத காதலை அவள் கண்கள் வழியே உணர்ந்து கொண்ட அபி அதை அவளிடம் நேரிடையாக கேட்டு விட அவளும் உண்மையை ஒப்புக்கொண்டாள். அவள் படிப்பு முடியும் வரை காத்து இருந்தவன் அதன் பிறகு வீட்டில் தங்கள் காதலை பற்றி சொல்லி சம்மதம் வாங்கி விட அடுத்த முகுர்த்திலேயே அவர்கள் திருமணம் நடைபெற்று முடிந்தது.
அவளின் அழைப்பில் திரும்பிய துருவன் என்னவென்று கேட்க கையில் இருந்த புடவையவையை நகையையும் அவனிடம் கொடுத்தவள் இதுல அக்காக்கு புடவையும் நகையும் இருக்கு. அவங்க கிட்ட கொடுங்க.
அவங்க எழுந்த உடனே என்னை கூப்பிடுங்க. நான் வந்து அக்காக்கு அலங்காரம் பண்ணிக்குறேன் என்று ஆரோஹி சொல்ல சரிடா நான் பாத்துக்குறேன். நீ போய் மத்த வேலைய பாரு என்று அவளை அனுப்பியவன் மேலே அறைக்கு சென்றான்.
மாமா இங்க கொஞ்சம் வாயேன் என்று கவி படியில் நின்று கத்த சூர்யா அவளிடம் விரைந்து சென்றான். என்ன ஆச்சு பாப்பு ஏன் இப்டி கத்துற என்று கேட்க என் கூட வா என்று அவன் கை பிடித்து தர தரவென இழுத்து சென்றாள். ஏண்டி இப்டி இழுத்துட்டு போற. கீழ நிறைய வேலை இருக்கு என்று சூர்யா கூற அதை விட பெரிய வேலை உனக்கு இங்க இருக்கு என்று அவள் கூற அப்டி என்ன வேலை என்று அவன் கேட்டு கொண்டிருக்க அவனை அறையில் கொண்டு வந்து நிறுத்தினாள் கவி.
உள்ளே நுழையும் போதே ங்கா ங்கா என்று அழு குரல் தான் அவனை வரவேற்றது. அந்த குரலை கேட்ட உடன் பதறி அடித்து கொண்டு கட்டிலின் அருகே ஓடினான் சூர்யா. கட்டிலின் மெத்தையில் கை கால்களை ஆட்டி கொண்டு பிறந்த மேனியை அழுது கொண்டிருந்தான் சூர்யாவின் புதல்வன் ஆதீஷ். பிறந்து எட்டு மாதமே ஆன ஆதீழ்க்கு தாயை விட தந்தையே முக்கியம். இரவில் கூட தொட்டிலில் படுக்காமல் தந்தையின் மார்பு சூட்டில் தூங்கினால் தான் அவனுக்கு சுகம். எப்பொழுது காலை எழுந்த உடன் சூர்யா அவன் அருகில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் கத்தி ஊரையே கூட்டி விடும் அந்த குட்டி வாண்டு. ஆதிரனும் தேவமாறுதனும் இப்பொழுதும் தங்கள் பிஸினசை தங்கள் பிள்ளைகள் கையில் ஒப்படைத்துவிட்டு தங்கள் பேர பிள்ளையை கவனிக்கவே நேரம் சரியாக உள்ளது. தேவான்ஷியும் ஷிவண்யாவும் ஆதீஷை வீட்டில் கவனித்து கொள்கிறார்கள் என்றால் ஆதிரனுக்கு மாறனும் அவனை தினமும் மாலை வேளையில் அருகில் உள்ள பார்க்கிற்கு தூக்கி சென்று விடுவர்.
அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த ஆதீஷ் தன் தந்தையை கண்டவுடன் அழுகையை நிறுத்தி கண்களை உருட்டி கோபத்துடன் பார்த்தான். பிஞ்சு முகம் சிவந்து தன்னை முறைப்பதை கண்டு வாய்விட்டு சிரித்த சூர்யா அச்சோ யாரு அடிச்சாங்க என்னோட செல்லத்தை. அப்பா மேல கோபமா என் ராஜா பையனுக்கு என்று சூர்யா அவனை தூக்க எங்க போன நீ என்பது போல் அவன் நெஞ்சில் தன் பிஞ்சு கால்களை வைத்து அவன் உதைக்க சரி சரிடா ராஜா அதான் அப்பா வந்துட்டேன்ல என்று அவனை கொஞ்சி கொண்டே இருக்க போதும் போதும் உன் பையன கொஞ்சுதுனது. இவ்வளவு நேரம் உண்ண காணோம்னு அழுதே என்ன ஒரு வழி பண்ணிட்டான். இந்தா அவனுக்கு இந்த ட்ரஸ போட்டு விட்டு. என்ன அவன் கிட்டையே விட மாட்டேங்குறான் மாமா என்று தன் மகனை குறை கூறியவள் அவனுக்கென்று வாங்கி வைத்து இருந்த குட்டி வேஷ்டி சட்டையை சூர்யாவிடம் கொடுக்க அதை சிரித்து கொண்டே வாங்கியவன் தன் மகனை தாஜா செய்து கொண்டே போட்டு விட்டு தன் மனையாளுடன் கீழே வந்தான்.
துருவன் தன் அறையில் நுழைய அவன் மனையாள் தன் ஒன்பது மாத வயிற்றில் ஒரு கையை வைத்து கொண்டு ஒருக்களித்து படுத்து தூங்கி கொண்டிருந்தாள். இன்று தீராவிற்கு வளைகாப்பு. அதற்கான வேலைகள் தான் வேகமாக வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இரவு முழுவது கால் வலியில் தவித்தவள் விடியும் வேளையில் தான் உறக்கத்தை தழுவினாள். அவளை தொந்தரவு செய்ய மனம் இல்லதவன் அவள் அருகில் அமர்ந்து அவளை ரசித்து கொண்டிருந்தான். தாய்மையின் பொலிவும் உப்பிய கன்னங்களும் அவளை மேலும் அழகூட்டியது.
உறக்கம் களைந்து எழுந்தவள் கண்களை திறந்து தன் மணாளனை பார்த்து கரு திராட்சை கண்களை விரித்து சிரிக்க அவனும் பதிலுக்கு சிரித்து கொண்டே அவள் முகத்தில் புரளும் முடி கற்றைகளை விலக்கி கீழ ஃபங்க்ஷனுக்கு நேரம் ஆகுது டா. வா எழுத்துரு. ரெடி ஆகலாம் என்று துருவன் கூற ஹ்ம்ம் சரி அத்தான் என்று எழுந்து அமர அவளை கைகளில் ஏந்தி குளியல் அறை புகுந்தான் துருவன். அவள் குளிப்பதற்கு உதவி செய்து மீண்டும் கைகளில் அவளை ஏந்தி கொண்டு வெளியே வந்தவன் கட்டிலில் அவளை அமர வைத்து விட்டு நிமிர யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்கவே அவன் கதவை திறந்தான். வெளியே ஆரோஹி நின்றிருக்க வாடா உள்ள வா என்று அவளை உள்ளே அழைத்து சென்றான்.
நான் அக்காவை அலங்காரம் பண்ணிக்குறேன் மாமா என்று ஆரோஹி கூற ஹ்ம்ம் சரி மா பாத்துக்கோ என்றவன் தீராவிடம்
கண்களால் விடை பெற்று கீழே சென்றான். ஆரோஹி அவகளுக்கு புடவையை கட்ட தொடங்கினாள். அவள் புடவையை கட்டி முடிக்க மூச்சு வாங்க கட்டிலில் மீண்டும் அமர்ந்து கொண்டாள். அப்பொழுது கவி தன் மகனுடன் உள்ளே நுழைந்தாள். அவனை தீராவின் அருகில் படுக்க வைத்து விட்டு அவள் தலையில் பூவை சூட சென்றாள். ஆதீஷோ தன் அத்தையை பார்த்து கை கால் அசைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டான். செல்ல குட்டி என்ன பண்றீங்க. சாப்டீங்களா? உங்க அம்மா சாப்பாடு கொடுத்தாளா உங்களுக்கு என்று அவனை மடியில் படுக்க வைத்து கொஞ்ச அவன் பொக்கை வாய் திறந்து எச்சில் ஒழுக தன் பிஞ்சு கைகளால் அவள் வயிற்றை தடவிய வண்ணம் இருந்தான்.
பாருடி இவனை இப்போவே உன் பொண்ணு வேனும்னு சொல்றான். என் மருமக பொறந்த உடனே அவளை நான் என் வீட்டுக்கு தூக்கிட்டு போயிடுவேன் என்று கவி சிரித்து கொண்டே கூற அதுக்கு என்ன தாராளமா தூக்கிட்டு போ. நான் அபி ஆரோஹிக்கு புள்ளை பொறந்த உடனே அவனை வளர்த்துப்பேன். என்ன டி உன் பிள்ளைய எனக்கு கொடுத்துருவ தான என்று தீரா ஆரோஹியிடம் கேட்க போங்க க்கா எனக்கு வெக்கமா இருக்கு என்று சிரித்து கொண்டாள் ஆரோஹி.
அபி இன்னும் வரலையா ஆரூ என்று கவி கேட்க காலைல வந்திருவேன்னு சொன்னாரு அண்ணி. இன்னும் வரல என்று ஆரோஹி கூற அப்டி என்ன அவனுக்கு முக்கியமான வேலை. ஒரு ரெண்டு நாள் தள்ளி போட்டுட்டு தான் பிறகு பொருமையா போறது என்று தீரா சொல்ல உண்ண விட முக்கியம் வேற எதுவும் இல்லை பேபி என்று கூறியவாறு அவள் அருகில் வந்து அமர்ந்தான் அபி. அவன் வந்த உடன் தான் தீரா சிரிக்க ஆரம்பித்தாள்.
எப்போடா வந்த என்று கவி கேட்க இப்போ தான் க்கா வந்தேன். அதான் வந்த உடனே பேபிய பக்க வந்துட்டேன் என்றவன் தீராவின் மடியில் இருந்த ஆதீஷை தூக்கி கொஞ்ச அவனோ அபியை முறைதான். என்ன ஏன்டா முறைக்குற என்று அபி அவனிடம் கேட்க அவனோ இன்னும் நன்றாக முறைத்து தான் காலால் அவன் தாடையில் ஒரு ஏத்து விட அம்மேமே என்று கத்தியவன் ஏன்டா இப்போ உதைச்ச என்று பாவம் போல் கேட்க ஹ்ம்ம் நீ ரெண்டு நாளா ஏன்டா என்னை பாக்க வரலன்னு கேக்குறான் என் செல்லம் அப்டி தானடா பட்டு என்று தீரா சிரித்து கொண்டே கூற நான் என்ன பண்றது ஆதி குட்டி. உன்னோட பெரிய மாமா தான் என்ன பிசினஸ் விஷயமா வெளியூர் அனுப்பிட்டான் என்று துருவனை பற்று குழந்தையிடம் புகார் வாசித்தான் அபி.
அபி முதலில் துருவனிடம் தொழிலை கற்று கொண்டவன் அவனும் சேர்ந்து இப்பொழுது பிஸினஸில் இறங்கி விட்டான். இப்போது கூட தொழில் துறை விஷயமாக தான் பெங்களூர் வரை சென்று திரும்பி வந்துள்ளான் அபிமன்யு. தீராவை தயார் செய்தவர்கள் அவளை கீழே அழைத்து வந்தனர். அவளை மேடையில் போடப்பட்டிருந்த சேரில் அமர வைக்க அவள் அருகே துருவனும் அமர வைக்கப்பட்டான். மெரூன் வண்ண பட்டு சேலையில் தங்க ஜரிகை வைத்து அவளுக்காக அழகா நெய்ய பட்டு இருந்தது அந்த புடவை. துருவனும் மெரூன் வண்ண ஷர்ட்டும் பட்டு வேஷ்டியும் அணிந்து இருந்தான். அழகா இருக்கு மார்க்கி என்று துருவன் அவள் காதில் சொல்ல நீங்களும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க அத்தான் என்று அவளும் சிரித்து கூறினாள்.
கவி கையில் இருந்த ஆதீஷ் துருவனை பார்த்து துள்ள அவனை சிரிப்புடன் வாங்கி கன்னத்தில் முத்தமிட்டு தன் மடியில் அமர்த்தி கொள்ள தன் மாமன் மடியில் ஒய்யாரமாய் அமர்ந்து அனைவரையும் வேடிக்கை பார்க்க தொடங்கினான் ஆதீஷ். முதலில் வயதில் மூத்த பென்மணி ஒருவர் தீராவிற்கு சந்தனம் வைத்து வளையல் போட்டு விட அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக அவளுக்கு நலங்கு வைத்தனர். அபி கூட நானும் வைப்பேன் என்று அடம் பிடித்து அவளுக்கு சந்தனம் வைத்து விட்டான். கவியும் சூர்யாவும் அவளுக்கு தங்கி வளையல்கள் அணிவிக்க சூர்யா தன் தங்கையின் நெற்றியில் முத்தமிட்டான்.
அவள் கையில் கண்ணாடி வளையல் குலுங்கி அதை ஆட்டி ஆட்டி துருவனிடம் காட்டி சிரித்தாள் தீரா. தானும் அந்த வளையல் ஓசை கேட்டு சிரித்த துருவன் அவளுக்கு வாங்கி வைத்திருந்த வைர வளையல்களை அணிவித்தான். அவள் கண்ணில் காதலுடன் அவனை பார்க்க அவனும் அவளுக்கு சளைக்காமல் காதல் பார்வை வீசினான் அவளை நோக்கி.
மாறனிற்கும் தேவான்ஷ்க்கும் ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது. தங்கள் குழந்தைக்கு ஒரு குழந்தை வர போகிறது என்று மகிழ்ந்து போயினர். ஆதிரனுக்கு ஷிவண்யாவும் கூட அதே நிலையயில் தான் இருந்தனர். இஷான்வி சற்றே மேடிட்ட வயிற்றோடு எதிரே போட பட்டிருந்த சேரில் அமர்ந்து இருந்தாள். அவளுக்கு இது ஐந்தாம் மாதம். ஒரு வருடம் முன்பு தான் ஷிவாவிற்கு இஷான்விக்கு திருமணம் முடிந்து. ஷிவா சொன்னது போல் அவள் படிப்பு முடிந்த உடன் இருவர் திருமணமும் முடிந்தது. அவள் படித்த அதே கல்லூரியில் தான் இப்பொழுது பேராசிரியராக பணி புரிந்து வருகிறாள் இஷான்வி. அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு ஜூசை புகட்டி கொண்டிருந்தான் ஷிவா.
அனைவரும் நலங்கு வைத்து முடிக்க அபி தன் மொபைலை தூக்கி கொண்டு வந்து அனைவர் முன் நின்றான். எல்லாரும் வாங்க செல்ஃபீ எடுக்கலாம் என்று அவன் கூற பெரியவர்கள் சேரில் அமர்ந்து இருக்க இளையவர்கள் அவர்கள் பின்னால் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது இருங்க இருங்க என்று ஒரு சத்தம் கேட்க அது யாரென்று அனைவரும் திரும்பி பார்த்தனர். அங்கு ராகுல் ப்ரியாவை இழுத்து வந்து தன் அருகே நிற்க வைத்து அவள் தோள் மேல் கை போட்டு கொண்டு நீங்க மட்டும் எல்லாரும் ஜோடி ஜோடியா இருக்கீங்க. அதான் நானும் என்னோட ஜோடியா கூட்டிட்டு வந்தேன் என்று கூற சிறியவர்கள் அனைவரும் ஒன்றாக ஓஓஓஓஓஓ என்று கத்த ஆதிஷும் ஒன்றும் புரியாமல் ஆஆஆ ஊஊஊ என்று கத்தினான். அதில் வெட்கத்தில் அவன் தோளில் முகம் புதைத்து கொண்டாள் ப்ரியா. இதை அனைத்தையும் சேர்த்து அழகாய் புகைப்படம் எடுத்து கொண்டது அபியின் செல்பேசி.
❤️சுபம்❤️
பார்வை ஒன்றே போதுமே
.....முடிவுற்றது.....
Comments
Post a Comment