காவலனோ காதலனோ 4

ராவணன் தன் அலுவலகத்தில் அமர்ந்த வேலை செய்து கொண்டிருக்க அவன் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வரவே அது எடுத்து காதில் வைத்தவர் ஹலோ என்று விட ஹலோ நான் தான் பேசுறேன்... என்று எதிர்புறம் இருந்து ஒரு கணீர் என்று குரல் கேட்டது குரலை வைத்து அது யார் என்று உணர்ந்து கொண்டவர் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாதவர் உணர்வற்ற குரலிலேயே எதிரில் இருப்பவளிடம் பேசத் தொடங்கினார் சொல்லு எதுக்கு போன் பண்ணி இருக்க... என்று ராவணன் கேட்க என்னோட காலேஜ்ல டீன்  பேரன்ட்ஸா வர சொன்னாங்க அம்மாவுக்கு கால் பண்ணுஎடுக்கல அதனாலதான் உங்களுக்கு கால் பண்ணேன்... என்று எதிரே இருந்த பெண்ணின் குரல் தெளிவாக கேட்க என்ன விஷயம்... என்றார் ராவணன் புருவத்தை சுருக்கி. நேரில் வந்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க எல்லாத்தையும் போன்லயே சொல்லிட்டு இருக்க முடியாது டென் ஓ க்ளாக்  டீன் உங்கள மீட் பண்றன்னு சொன்னாங்க முடிஞ்சா அம்மாவ் கூட கூட்டிட்டு வாங்க இல்லன்னா நீங்க மட்டும் வந்தாலே போதும் ....என்று கூறிவிட்டு எதிரே இருந்த பெண் அழைப்பை துண்டித்து விட ஹலோ... என்று ராவணன் கத்திய சத்தம் எல்லாம் எதிரில் இருப்பவளுக்கு கேட்கவில்லை. அழைப்பை துண்டித்து விட்டு சலிப்பாக மொபைலில் தூக்கி டேபிளில் எறிந்தவருக்கு தலைவலி தான் வந்தது . தலைவலியில் அவர் முகம் சுருக்கி அமர்ந்திருக்க அப்பொழுது ருத்ரேஷ் அவரின் முன்பு காபி கப்பை நீட்டினார் 

பாஸ் காஃபி எடுத்துக்கோங்க... என்று ருத்ரேஷன் குரலில் நிமிர்ந்து பார்த்தவர் தேங்க்ஸ் ருத்ரா.... ரொம்ப தலைவலியா இருந்தது காபி குடிக்கணும்னு நானே நினைத்துக்கொண்டிருந்தேன். நீ எடுத்துட்டு வந்துட்ட... என்று கூறிக்கொண்டே அவர் காபியை வாங்கி அருந்த என்ன பாஸ் ஏதாவது பிரச்சனையா முகம் ரொம்ப டல்லா இருக்கு ....என்று ருத்ரேஷ் கேட்க வேற என்ன ரக்க்ஷினி தான் போன் பண்ணி இருந்தா அவளோடைய டீன் என்ன மீட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்களாம் காலையில வர சொன்னா என்ன பிரச்சனை பண்ணி வச்சிருக்கான்னு தெரியல.... என்று அவர் சோர்வுடன் கூற பாஸ் நம்பர் ரக்க்ஷினி எதுவும் பண்ணியிருக்க மாட்டான்னு நம்மளுக்கு நல்லா தெரியும் நீங்க எதுக்கு தேவையில்லாம ரொம்ப யோசிக்கிறீங்க காபி குடிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும் போகலாம்.... என்று ருத்ரேஷ் கூற ரிஷிக்கு போன் பண்ணாலாம் அவ எடுக்கலையா அதனால எனக்கு கால் பண்ணுன்னு சொல்றேன்.... அப்போ நான் இருக்கேன்னு எல்லாருக்கும் மறந்துடுச்சு இல்ல.... அவங்க எல்லாருக்கும் ரிஷி மட்டும் தான் கண்ணுக்கு தெரியுறா இந்த ராவணன் என்கிறவன் இருக்கிறது யாருக்கும் தெரியல அப்படித்தானே... என்று ராவணன் கோபமாக கேட்க பாஸ் என் பாஸ் இப்படி எல்லாம் பேசுறீங்க ரக்க்ஷினிக்கு உங்க மேல கோவம் இருக்குன்னு உங்களுக்கே தெரியும் அப்புறம் ஏன் நீங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க கோபத்துல விடுற வார்த்தை அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க ....என்று ருத்ரேஷ் கூற நீ என்ன சொன்னாலும் என்னால் அதை ஏத்துக்க முடியவில்லை மனசு ரொம்ப வேதனையா இருக்கு ....என்று கூறியவர் அமைதியாக சீட்டில் தலை சாய்ந்து விட அந்நேரம் அறைக்குள் கம்பீரமாக நுழைந்தார் மிருஷிகா ருத்ரேஷ் கிளம்பு சொல்ல அவரை...என் பொண்ணு கால் பண்ணி இருந்தா காலேஜுக்கு வர சொல்லி.... சீக்கிரமா போகணும் இங்கே உட்கார்ந்து வெட்டிக்கதை பேசிகிட்டு இருந்தா எதுவும் நடக்காது எனக்கு என் பொண்ணு ரொம்ப முக்கியம் அவளோட ஸ்டடீஸ் அதை விட எனக்கு ரொம்ப முக்கியம் அதனால காலேஜ்ல இருந்து நம்மள வர சொல்லி இருக்காங்கன்னு. போது அதை மதிச்சு நம்ம சீக்கிரம் பொய் தான் ஆகணும் நான் காரில் வெயிட் பண்றேன் உன் பாசம் வரச்சொல்... என்று கூறிவிட்டு மிறுஷிகா செல்ல அப்ப நான் உனக்கு முக்கியம் இல்ல அப்படித்தானே... என்ற ராவணனின் குரலில் தன் நடையை அப்படியே நிறுத்தியவர் அவர் புறம் திரும்பி அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேற லேப்டாப்பை தூக்கி சுவற்றில் அடித்தார் ராவணன் பாஸ் என்ன பாஸ் இதெல்லாம் எதுக்கு இவ்வளவு கோபப்பட்டு இருக்க என்று ருத்ரேஷ் கூறிய சமாதானங்கள் எதுவும் இராவணனின் காதில் ஏறவில்லை.


**** **** **** ***** ***

அம்மா போய்ட்டு வரேன் நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க காலேஜுக்கு பொறுமையா கூட போகலாம் ஒன்னும் அவசரம் இல்லை வேக வேகமா கிளம்புறேன்னு சாப்பிடாம போகக்கூடாது புரியுதா... என்று சைத்தாலி தன் தாய்க்கு ஆயிரம் அறிவுரைகளை கூறிக் கொண்டிருக்க இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே  நின்று கதை பேசிகிட்டு இருக்க போற ஹாஸ்பிடல் கிளம்பனும்னு நீதான சொல்லிட்டு இருந்த இப்ப இங்கே நின்னுகிட்டு இருக்க.... என்ற வர்மனின் அதட்டல் சத்தத்தில் அவர் புறம் திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்த சைத்தாலி இதுக்கு பேரு கதை பேசுறது கிடையாது என் அம்மாவோட உடல்நிலை அக்கறை எடுத்துக்கிறது.... என் அம்மாவை தவிர இருக்கீங்க வேற எதுவும் முக்கியம் இல்லை அதை முதலில் புரிஞ்சுக்கோங்க.... என்ற அவளின் அழுத்தமான வார்த்தைகளில் விருஷ்டி தன் மகளை விழி விரித்து பார்க்க வர்மனோ அவளை தான் அழுத்தமாய் பார்த்தவாறு நின்று இருந்தார் . சைத்து எதுக்குமா அப்பா கிட்ட கோவப்படுற இது சாதாரண விஷயம் இதுக்கு எதுக்கு உனக்கு இவ்ளோ கோவம்.... என்று விருஷ்டி தன் மகளிடம் பேச அம்மா ஒரு விஷயத்தை முதலில் புரிஞ்சுக்கோங்க எதிரில் இருக்கிறவங்க நம்ம கிட்ட எப்படி பேசுறாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி தான் நம்மளோட பதிலடி இருக்கணும் .... அவர் என்கிட்ட கோவமா பேசினாரு அதற்கான பதிலை நான் அவருக்கு கோபமாக சொல்லிட்டேன்... இதுல ஏன் தப்பு எதுவுமே கிடையாது... என்று தோள்களை குலுக்கி சாதாரணமாக கூறியவள் தன் தாயை ஒரு முறை அணைத்து விடுவித்து வேக வேகமாக சென்று காரின் பின் சீட்டில் ஏறிக்கொள்ள வர்மன் அவ்வளவு நேரம் தன் மகள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தவர் பின்பு விருஷ்டியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தார். அவர்கள் பயணம் அமைதியாக செல்ல ஒர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு.... என்று காரை இயக்கியவாறு வர்மன் கேட்க குட்.... என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டாள் சைத்தாலி . சாப்பிட்டியா... என்று அடுத்த கேட்ட அவரின் கேள்வியில் அதற்கும் ம்ம்ம்ம் என்ற சத்தம் மட்டும்தான் வந்தது அவளிடம் இருந்து 

உங்க அம்மா கிட்ட அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்க என்கிட்ட பேசணும்னா ஒரே ஒரு வார்த்தைல தான் பதில் வருது.... என்று வர் அடுத்த கேள்வி கேட்க அப்பாஆஆஆ... என்று பற்களை கடித்தாள் அவள்.  வாட்.... என்று அவர் சாதாரணமாக கேட்க ஏற்கனவே நீங்க பண்ண அலப்பறையில் நான் செம கடுப்புல இருக்கேன் இதுல வேற எனக்கு ஹாஸ்பிடல் லேட்டா  போற அதுவே எனக்கு பயங்கர டென்ஷனா இருக்கு இதுக்கு  மேல எனக்கு கடுப்பேத்தாதீங்க ப்பா... என்று சைத்தாலி கோபமாக கூற ஜஸ்ட் ரிலாக்ஸ் மை டியர்... இதுக்கு எதுக்கு உனக்கு இவ்ளோ கோவம் எல்லாத்தையும் பாசிட்டிவா எடுத்துக்கிட்டு கடந்து போகணும்... என்று வர்மன் கூறும் பொழுது எல்லாத்தையுமே பாசிட்டிவ்வா எடுத்துக்கணுமா என்னப்பா பேசுறீங்க நீங்க ... என்று கோபமாக கேட்டாள் அவள்



ஓகே ஓகே கூல் கோவப்படாத முதல்ல நான் என்ன சொல்ல வரேன்னு தெளிவா புரிஞ்சுக்கோ எல்லாத்தையும் பாசிட்டிவா எடுத்துக்கிட்டா நெகட்டிவ் வைப்னு உன்ன நெருங்கி வரவே வராது அந்த மாதிரி எதிர்மறையான எண்ணமும் மனசுல வராது. அத தான் நான்  சொன்னேன் இது உங்க அம்மா எனக்கு சொன்ன விஷயம் அதை நான் உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிறேன் அவ்வளவுதான்.... என்று வர்மன் தோளை குலுக்க   அம்மா ஒரு டீச்சரம்மா என்கிறது எல்லாத்துலயும் நிரூபிச்சுகிட்டே இருக்காங்க பாருங்க.... என்று அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மாறி மெலிதாக சிரித்தாள் சைத்தாலி 


அவ டீச்சர் அம்மா ஆகுறதுக்கு முன்னாடி என்னோட மனைவி.... அதனால அவ சொல்றதுல எது சரி எது தப்புன்னு எனக்கு தெரியும்...

ஓ மேட் ஃபார் ஈச் அதர் ஃபேரா ....சரி தான்...


நாங்க மேட் பார் ஈச் அதர்  என்கிறது இங்கு எல்லாருக்குமே தெரியுமே அப்புறம் எதுக்கு உனக்கு இப்படி ஒரு சந்தேகம் வருது....

என்று வர்மன் கூறியதை கேட்டு கலகலவென்று சிரித்தாள் சைத்தாலி உன்னை சிரிக்க வைப்பதற்காக நான் என்னென்ன எல்லாம் பண்ண வேண்டியது இருக்கு ....ஒரு காலத்துல நான் எப்படி இருந்தவன் தெரியுமா? ஆனா இப்போ உன்கிட்ட இப்படி குட்டிகரணம் அடிச்சிக்கிட்டு இருக்கேன்... என்று அவர்  கூற அப்பா நீங்க இப்பவும் கெத்தா தான் இருக்கீங்க அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க நீங்க இப்படி சாதாரணமா பேசுறது வீட்ல எங்க கிட்ட மட்டும்... என்று கூறிய மகளை கண்ணாடி வழியே கண்டவர் மெலிதாக இதழின் ஓரம் பொது புன்னகையை வெளியிட்டார் அது கூட வெளியே யாருக்கும் தெரிந்திருக்காது


கார் சைத்தாலி வேலை செய்யும் மருத்துவமனையின் முன்பு வந்து நிற்க காரில் இருந்து இறங்கியவள் போயிட்டு வரேன் பா நீங்க வீட்டுக்கு போயிட்டு எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் போட்டு விடுங்க ...என்று சைத்தானிக் கூற நான் சொல்ல வேண்டிய விஷயத்தை நீ என்கிட்ட சொல்ற .... என்றார் அவர் மெல்லிய சிரிப்புடன். ஏன் பசங்க அக்கறைல அப்பா அம்மா மட்டும்தான் பங்கு எடுத்துக்கனுமா... பசங்க அம்மா அப்பா நலன்ல பங்கு எடுத்துக்க கூடாதா ....என்று சைத்தாலிக் கேலியாக கேட்க டாக்டர் மேடம் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா... என்றார் அவர். அவர்  கூறியதை கேட்டு சிரித்தவள் அவரிடம் தலையசைத்து விடை பெற  நகரும் பொழுது ஒன் செக்கேன்ட்... என்று அவர் அவளை நிறுத்த என்னப்பா... என்று அவர் 
புறம்  திரும்பினாள்



கவனமா இரு... என்று அவர் கூற கண்டிப்பாக என்று தலை அசைத்து விட்டு அவள் விடை பெற்றாள் அவரிடம் இருந்து.  தன் மகள் மருத்துவமனைக்குள் நுழைந்து அவள் மறையும் வரை அமைதியாக காரிலேயே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தவரின் முகத்தில் ஒரு இறுக்கம் இருக்க இதழ் ஓரம் ஒரு புன்னகை மட்டும் உதிர்ந்து கொண்டிருந்தது.


இரவு வெகு நேரம் கழித்து மருத்துவமனையில் இருந்து கோபமாக வெளியே வந்து கொண்டிருந்தாள் சைத்தாலி.சற்று நேரத்திற்கு முன்பு தான் கண்ட நிகழ்வுகளின் தாக்கத்தால். குளுமையான காற்று அவள் மேனியில் பட்டவுடன் அவ்வளவு நேரம் இருந்த நிலை மாறி சற்று மனம் லேசானது போல இருக்க இன்று நடந்த நிகழ்வை தன் தந்தையிடம் கூற வேண்டும் என்று பொருட்டு அவள் வேகமாக நடக்க ஆளில்லா அந்த சாலையில் இரவு வேளையில் அவள் முன்பு வந்து அவளை இடிக்கும் வகையில் நின்றது ஒரு ஜீப். அவள் பயத்தில் கண்களை மூடி அம்மாஆஆ... என்று கத்த அவள் முன்பு வந்து நின்றான் ஒரு ஆடவன்.  ஆறு அடிக்கு உயரமான உயரத்தில் முகத்தை மாஸ்கால் மறைத்து இருந்தவள் கருப்பு வண்ண உடையில் அவளையே அழுத்தமாய் பார்த்தவாறு நின்று இருக்க அவள், யார்.... என்று நிமிர்ந்து பார்க்கும் சமயம் அவள் முகத்தில் மயக்கம் மறந்தால் நனைக்கப்பட்டிருந்த கைகுட்டையை வைத்து அழுத்தினான் அவன். 


அதில் அவள் சிறிது நொடிகளில் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று விட அவளை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு தன் ஜிப்பை நோக்கி நடந்தான் அந்த ஆண்மகன்.

தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....