காவலனோ காதலனோ 5
மிருஷிகா ராவணன் இருவரும் தங்கள் மகள் தீராஷினி படிக்கும் கல்லூரிக்குள் பிரவேசித்திருந்தனர் ராவணன் முன்னே நடக்க அவன் பின்னே அமைதியாக வந்தார் இரண்டடி நகர்ந்து மிருஷிகா ஓரக்கண்ணால் அதை பார்த்த ராவணனுக்கு அவர் தன்னை விட்டு விலகி நடப்பதே பெரும் வேதனையாக இருந்தது ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர் இறுகிய முகத்துடன் வேகமாக டீன் அறைக்குள் நுழைய அங்கு இருந்த டேபிளின் மீது விருஷ்டி மிஹிரா டீன் ஆப் த காலேஜ் .....என்று பெயர் பலகை இருந்தது . எக்ஸ்கியூஸ் மீ.... என்று
மிருஷிகா கேட்க எஸ் கம்மின் என்று தான் அணிந்திருந்த கண்ணாடியை சரி செய்தவாறு நிமிர்ந்த விருஷ்டி அங்கே நின்று இருந்து இருவரையும் கண்டு புரியாமல் குழம்பினார்
ராவணனும் மிருஷிகாவும் உள்ளே நுழைய உட்காருங்க ....என்று தன் முன்னேறுந்த இரு கையை அவர்களுக்கு காட்டிய விருஷ்டி என்ன விஷயமா வந்து இருக்கீங்க உங்க பசங்க யாரையாவது இங்க ஜாயின் பண்ணனுமா.... என்று எடுத்தவுடன் அவள் பேச ஆரம்பிக்க இல்லை எங்க பொண்ணு தீராக்க்ஷினி இந்த காலேஜ்ல தான் எம்எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி ஃபர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருக்கா... அவளோட பேரண்ட்ஸான எங்கள நீங்க இன்னைக்கு மீட் பண்றதுக்காக வர சொல்லி இருந்திங்கன்னு நேத்து அவ எங்க கிட்ட சொன்னா அதனாலதான் உங்கள பாத்துட்டு போகலாம்னு வந்தோம் ....என்று மிருஷி கூற ஒஹ் ஹெலோ மேம் அண்ட் சார். நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அவளை நான் அவளை வர சொல்றன்.. என்று பணிவுடன் கூறிய விருஷ்டி தன் பியூனை அழைத்து தீராக்க்ஷினியை அழைத்து வருமாறு கூற அடுத்த சில நிமிடங்களில் அங்க வந்து சேர்ந்தாள் தீராக்ஷினி. அறைக்குள் நுழைந்தவள் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கைகளை பின்னே கட்டியவாறு அமைதியாக நின்று இருக்க மிருஷிகாவோ தன் மகளை பார்த்தவர் அவள் முகத்தில் இருந்த இறுக்கமும் கம்பீரமும் கண்டே அவள் எந்த தவறும் செய்திருக்க மாட்டாள் என்பதை உணர்ந்து விட்டார் இருந்தாலும் விருஷ்டியே என்ன பிரச்சனை என்று முழுதாக விவரிக்கட்டும் என்று அமைதியாக இருக்க உங்க பொண்ணு நேத்து அவளோட கிளாஸ்ல ஒரு பையன அடிச்சு கையை உடைத்து இருக்கா அந்த பையனுக்கு கைல ப்ராக்ச்சர் ஆகி ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணிருக்காங்க ஏன்னு ரீசன் கேட்டதுக்கு என்கிட்ட சொல்ல மாட்டேங்குற அதனாலதான் வர வச்சேன்.... என்ன பிரச்சனை நீங்க கேட்டு சொல்லுவீங்கன்னு உங்கள இங்க வர சொன்னேன் ...என்று அவ்வளவு நேரம் இருந்த இளகியதன்மை போய் கடினமான குரலில் விருஷ்டி கூற அதைக் கேட்டு ராவணன் தன் மகளை பார்த்தார் அவளோ தன் தந்தையை அழுத்தமாய் பார்த்தவள் மீண்டும் அமைதியாக முகத்தை திருப்பிக் கொள்ள அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுந்துவர் தீராக்க்ஷினி அருகே சென்றவர் என்ன ரக்க்ஷினி எதுக்காக அந்த பையனை நீ அடிச்ச என்ன பிரச்சனை.... என்று பொறுமையாக விசாரிக்க அப்பொழுதும் அவள் எதுவும் கூறவில்லை அவளின் அமைதி கண்டு கோபம் தான் வந்தது விருஷ்டிக்கு. பாருங்க நேத்தும் நிறைய தடவை கேட்டுட்டேன் அப்பவே சொல்லல இப்ப நீங்க வந்து கேட்கும்போது அமைதியா இருக்கா என்ன பிரச்சனைன்னு சொன்னா தான் அதுக்கு ஏத்த மாதிரி ஆக்ஷன் எடுக்க முடியும் ....ஒருவேளை இவ இப்படி பண்ணதுக்கு ஏதாவது கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும் இல்லையா... அந்த காரணத்தை சொன்னா அது சரியா தப்பா என்று நாம முடிவு எடுத்து அதுக்கு ஏத்த மாதிரி மூவ் பண்ணலாம் இவ எதுக்குமே ஒத்துழைக்க மாட்டேங்குற நீங்களே உங்க பொண்ணு கிட்ட கேட்டு என்னன்னு சொல்லுங்க இவ காலேஜ் நம்பர் ஒன் ஸ்டூடண்ட்... இவளை காரணமே இல்லாம என்னால தண்டிக்க முடியாது.... அதனால பேரன்ட்ஸ் நீங்களே கேட்டுட்டு என்னன்னு சொல்லுங்க ...என்று அவர் கூட மேம் யூஸ்வலா தப்பு பண்ணா ஸ்டூடண்ட்ஸ் நீங்க சஸ்பெண்ட் பண்ணுவீங்க... அந்த மாதிரி பண்ணுங்க பட் ரீசனை என்னால சொல்ல முடியாது... என்று ரக்க்ஷினி அழுத்தமாக கூற தீரா.... என்று தன் மகளை அடக்கினார் மிருஷி.
**** **** **** **** ****
வேகமாக தன் கேபினிலிருந்து வெளியே கிளம்பி கொண்டிருந்தாள் சைத்தாலி. அவள் முகம் பாறை போல் இறுகி இருக்க உள்ளமும் கொதிகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது சற்று நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வாள். அவள் கையில் வைத்திருந்த அந்த ரிப்போர்ட்டை மேலும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் இதை கண்டிப்பா அப்பா கிட்ட இன்னைக்கு சேர்த்தே ஆகணும் எவ்வளவு தைரியம் இருந்தா இவ்ளோ
இல்லீகளான வேலைகள் எல்லாம் இவங்க பண்ணுவாங்க மனுஷங்கனா இவர்களுக்கு பொம்மை மாதிரி தெரியுறாங்க போல இவங்களையெல்லாம் சும்மாவே விட கூடாது நான் யாருன்னு தெரியாம இவங்க எல்லாரும் இப்படி எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க ஆனா நான் யாருன்னு சீக்கிரமே இவங்க எல்லாருக்கும் காட்டுறேன் என் அப்பா கிட்ட சொல்லி இந்த ஹாஸ்பிடல்லே இருந்ததற்கான அடையாளம் தெரியாம தரமட்டமாக்குறேன்... என்று மனதுக்குள்ளயே கொந்தளித்துக் கொண்டிருந்தவள் வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள்
அவள் வெளியே வரும்வரை அவளுக்காக காத்துக் கொண்டிருந்த அந்த மருத்துவமனையின் டீன் அவள் தன்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக மறைந்து நின்றான் ஒரு ஓரமாக . அவள் மருத்துவமனை விட்டு வெளியே சென்ற பின் ஒரு நபருக்கு அழைப்பை ஏற்படுத்தியவள் சார் அவ ஹாஸ்பிடல்ல தாண்டி வெளியே போயிட்டா இப்ப நீங்க அவ்வளவு தூக்குனீங்கன்னா சரியா இருக்கும் அவளை விட்டுடாதீங்க நம்மளோட எல்லா விஷயமும் அவளுக்கு தெரிஞ்சிருச்சு ....இனிமே அவளை விட்டு வைக்கிறதுல நம்மளுக்கு தான் ஆபத்து .. என்றும் அந்த டீன் கூற எதிர்ப்புறம் இருந்த குரல் கொக்கரித்து சிரித்தது. இவயெல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது .... நான் நினைச்சனா அவ இருந்ததுக்கான அடையாளமே இல்லாம ஆக்க முடியும் இதை எல்லாம் நீ பெருசா என்கிட்ட சொல்லிட்டு இருக்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல என் ஆளுங்களோட கைல அவ சிக்கிடுவா... அதுக்கப்புறம் இருக்கு அவளுக்கு ...என்று எதிர்ப்புறம் இருந்த ஆணவமான குரல் கூற ஓகே சார் நான் ஃபோன வச்சிடுறேன் யாராவது நம்ம பேசுறத கேட்டுட்டாங்கனா நம்மளுக்கு தான் பிரச்சனை... என்று கூறிவிட்டு டீன் அழைப்பை துண்டித்தவன் சைத்தாலியில் கைவண்ணத்தால் சிவந்திருந்த தன் கன்னத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டான் எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிச்சிருப்ப உனக்கு இருக்கு .....என்ன அடிச்சதுக்கு தண்டனையை என்னோட ஹெட் உனக்கு கொடுப்பார்... என்று மனதுக்குள்ளயே வன்மமாக நினைத்துக் கொண்டான் அந்த ஆள்.
சைத்தாலி மருத்துவமனை விட்டு வெளியே வந்தவள் வேகமாக பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினாள் அவள் மனம் முழுவதும் அவ்வளவு நேரம் கொந்தளித்துக் கொண்டிருந்தது இப்போது சற்று சாந்தமானது போல் இருந்தது . யாருமில்லா அந்த ரோட்டில் அவள் மட்டும் தனியாக நடந்து சென்று கொண்டிருக்க அவளுக்கு பயம் என்பது துளி அளவும் இல்லை.... மாறாக அந்த நிலையை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள் அவள்
இந்த நேரம் எவ்வளவு அழகா இருக்கு.... இதுவே பகல் நேரத்தில் இந்த பக்கம் நம்மளால வர முடியுமா.... வண்டி சவுண்டு வண்டியோட புகை ஸ்மெல், கத்தல் கூச்சல் அது இதுன்னு இந்த பக்கம் கால கூட ஒரு அடி எடுத்து வைக்க முடியாது ....அவ்வளவு கூட்டமா இருக்கும். ஆனா நைட் டைம்ல எவ்வளவு அழகா இருக்கு இனிமே தினமும் நைட் நம்ம இப்படித்தான் நடந்தே வரவேண்டும் போல... அப்பதான் வாழ்க்கையை என்ஜாய் பண்ண மாதிரி ஒரு பீல் ஆகும் யாருமே இல்லாம இந்த ரோட்டுல நம்ம மட்டும் நடந்து போறது எவ்ளோ சூப்பரா இருக்கு .... ஆனாலும் இதை முழுசா அனுபவிக்க முடியலை.... ச்சை பாவம் அந்த பொண்ணு.... முதல்ல இந்த விஷயத்தை அப்பா கிட்ட சொல்லணும்.... அதுக்கு அப்புறம் என்ன பன்னனுமோ அதை அவரே பார்த்துக்குவாறு.... என்று அவள் கையை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு சுற்றி மற்றும் வேடிக்கை பார்த்து நினைக்கு கொண்டே நடந்து வர அந்நேரம் அவளில் முன்பு வேகமாக வந்து நின்றது ஒரு ஜீப். அதில் பயத்தில் அலறி கண்களை மூடிக்கொண்டு காதில் கை வைத்து அலறியவள் அப்படியே நின்றுவிட ஜிப்பிலிருந்து குதித்து இறங்கினான் ஒருவன் ஆறு அடிக்கும் அதிகமான உயரமும் கம்பீரமான உடற்கட்டு தேகமும் கொண்டு கருப்பு ஜீனும் கருப்பு சட்டையும் அணிந்திருந்தவன் முகத்தை அதே கருமை நிற மாஸ்கால் மறைத்திருந்தான். அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கியவன் அவள் முன்பு நிற்க பயத்தில் உடல் நடுங்க கண்களை இன்னும் மூடிய நின்று இருந்தாள் பெண்ணவள் சிறிது நேரம் அமைதிக்குப் பின்பு என்ன இன்னும் எதுவும் நிகழவில்லை என்ற பயத்தில் விழிகளை திறந்து பார்த்தாள் மங்கை.. தன் முன்புநின்று இருந்தவனின் காலில் போட்டு இருந்து கருமை நிற ஷூவை மட்டுமே முதலில் கண்டவள் மெது மெதுவாக தன் பார்வையை மேலே ஏற்றிய நேரம் சட்டென்று அவள் முகத்தில் வந்து ஒரு கைகுட்டையுடன் மோதியது எதிரே நின்றிருந்த ஆனவனின் இரும்பு கரங்கள். அதில் விழிகளை விரித்து அவள் பார்த்தவள் கண்டது என்னவோ அவனின் பழுப்பு நிற கண்களை தான். அவனின் முகம் தெரியவில்லை பேதைக்கு
அடுத்த நொடி அவள் மெல்ல மெல்ல கண்கள் சொருகி மயக்கத்திற்கு செல்ல அவன் கரங்களில் துவண்டு விழுந்தாள் அவள். அவளை தன் கரங்களில் தாங்கிய நொடி அவளை தன் தோள்களில் சுமந்து இருந்தான் அவன். அவளை தூக்கி கொண்டு தன் ஜிப்பை நோக்கி சென்றவன் முன்சீட்டில் சாய்த்து அமர வைத்தான் அவளை. அடுத்த நொடி ஜீப் அவனின் கரங்களில் சீறி பாய்ந்தது.
சைத்தாலியின் பாதுகாப்பிற்க்காக நியமிக்கபட்ட பாதுகாவலர்கள் அந்த ஜிப்பை ஃபாலோவ் செய்ய முயல அதற்குள் ஜீப் அவர்கள் கண்ணீல் இருந்து மின்னலேன மறைந்துவிட்டது அடுத்த நொடி சைத்தாலியின் பாதுகாவலன் ஒருவன் அவளின் தந்தை ரணதீர் வர்மனுக்கு அழைப்பை ஏற்படுத்த அதை ஏற்றவன் சொல்லு... என்றான் எப்போதும் போல உறுமலான குரலில்... பாஸ் லிட்டில் பாஸை யாரோ கடத்திட்டாங்க.... என்று அவன் கூற அதை கேட்ட உடன் வர்மனின் உதட்டிலில் யாரும் அறியாத புன்னகை ஒன்று உதிர்ந்துவெல் டன் மிஸ்டர் ராவண் ஆத்ரேயன் சொன்னதை செஞ்சிட்ட...என்று வர்மனின் உதடுகள் முணுமுனுக்க அவன் பாராட்டிய ராவண் ஆத்ரேயனோ ஜிப்பை ஓட்டிய வண்ணம் தன்னருக்கில் மயக்கத்தில் கிடப்பவளை கண்டு இதழ் வளைத்து புன்னகைத்தான் சைக்கோ போல்.....
என் கிட்ட வந்துட்ட டால்.. இனி நீயே நினைச்சாலும் உன்னால என்ன விட்டு போக முடியாதும். நான் போகவும் விட மாட்டேன்... இவ்ளோ நாள் உன்னை விட்டு வச்சேன் இனி உன்னை விட்டு வைக்குறதா இல்ல.... இனி நீ என் கைல தான் உன் வாழ்க்கையோதா கடைசி நாள் வரைக்கும்.... என்றான் ஆத்ரேயன் உறுமல் குரலில் மயக்கத்தில் இருந்தவளிடம்.
பாஸ் நம்ம அந்த பொண்ணு தூக்குவதற்கு முன்னாடி வேற யாரோ தூக்கிட்டாங்க இப்ப என்ன பண்றது .... அவ வேற யாரு கையிலேயே சிக்கிட்டா பாஸ் அது நம்மளுக்கு தானே பிரச்சனை... என்று சைத்தாலியை கடத்துவதற்காக காத்திருந்தவர்களில் ஒருவன் தன் தலைவனிடம் கூற யூ இடியட் என்னடா புடுங்கிட்டு இருந்தீங்க... அவள் வேற எவனோ ஒருத்தன் தூக்கிட்டு போறானோ அவன் கண்டிப்பா நமக்கு எதிரானவனா தான் இருப்பான் அவள முதல்ல நம்ம கைக்கு கொண்டு வரணும் அவளை வைத்து நம்மளுக்கு ஆட்டம் காட்டணும்னு நினைக்கிறான் அவம் யாருன்னு மட்டும் தெரியட்டு அப்புறம் இருக்கு அவனுக்கு...போன வைங்கடா முதல்ல... என்று கோபமாக கத்தியவன் தன் தொலைபேசியை தூக்கி சுவற்றில் அடித்தான் அவன்
தொடரும்.....
Comments
Post a Comment