காவலனோ! காதலனோ! 6
ராவணனின் வீட்டில் தன் அறையில் இருந்த பால்கனியில் நின்று தோட்டத்தை வெறித்தவாறு நின்று இருந்தாள் ரக்க்ஷினி ஒரே நாளில் தன் வாழ்வில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று நினைக்கும் போதே அவளுக்கு மனம் கோபக்கலனாய் கொதித்தது. தன் தோழியின் நிலைக்கு காரணமானவனை முழுதாக தண்டிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதை எண்ணி மனதுக்குள் எரியும் கோபத்தியை அணைக்க தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் பெண்ணவள் ரக்ஷினியுடன் பயிலும் மாணவி ஒருத்தி அவர்கள் படிக்கும் அவர்களுடன் படித்து வரும் ஒரு இளைஞனை காதலித்தாள். அவனும் இவளை காதலிப்பது போல் நடித்தவன் அவளிடம் ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக ஏமாற்றி தன் உடல் தேவையை அவளிடம் தீர்த்துக் கொண்டு அவளை கைவிட்டு விட தற்கொலைக்கு முயன்ற அவளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் அந்த பெண்ணின் பெற்றோர். விஷயம் அறிந்து தன் தோழியிடம் ரக்க்ஷிணி எதற்காக இப்படி செய்தாய்... என்று விவரம் கேட்கும் பொழுது தான் அவள் அந்த மாணவன் செய்த அனைத்தையும் அவளிடம் அழுகையுடன் கூறி முடிக்க அதே கோபத்துடன் கல்லூரிக்கு கிளம்பி வந்தவள் வகுப்பறைக்குள் புகுந்து அவனை அடி வெளுத்து விட்டாள். தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கும் ரக்க்ஷிணியிடம் அடிவாங்கி உயிருக்கே போராடிக் கொண்டிருந்த அவனை மீட்பதற்குள் அனைவருக்கும் போதும் போதும் என்று ஆகிவிட்டது. விஷயம் அறிந்து அங்கு வந்த விருஷ்டி அவளை கண்டித்து அந்த இளைஞனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவள் தனியாக அவளிடம் காரணத்தை கேட்கும் பொழுது தன் தோழியின் நிலையை பற்றி விளக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாள் அவள்
அவள் எதுவும் கூறாமல் மௌனம் காக்க அவளின் மௌனம் விருஷ்டிக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியது ரக்க்ஷிணி நான் உன்னோட டீனா இப்போ உன்கிட்ட எதையும் கேட்கல என்னை உன்னோட ஒரு பிரண்டா நினைச்சுக்கோ... என்ன நடந்ததுன்னு என்கிட்ட சொல்லு நீ காலேஜ் நம்பர் ஒன் ஸ்டுடென்ட் அது மட்டும் இல்ல நீ நியாத்துக்கு மட்டும் தான் குரல் கொடுப்ப அதுவும் எனக்கு நல்லா தெரியும்.... பட் நீ இப்படி கிளாஸ் ரூம் குள்ள புகுந்து அவன அடிச்சிருக்கனா கண்டிப்பா அவன்கிட்ட ஏதோ ஒரு தப்பு இருக்குன்னு எனக்கு தெரியுது.... ஆனாலும் இதுல பர்சனலா நான் உனக்கு சப்போர்ட் பண்ண முடியாது பிகாஸ் நீ அவன அடிச்சத எல்லாரும் பாத்துட்டாங்க.... அதனால நான் உனக்கு ஃபேவரா எதுவும் இதுல பண்ணவே முடியாது நீ சரியான காரணத்தை சொன்னா மட்டும் தான் என்னால அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்க முடியும் .... என்று எவ்வளவோ அவர் கேட்டும் ரக்க்ஷிணி வாயை திறக்காமல் இருக்கவே வேறு வழி இன்றி அவளின் பெற்றோரை அழைத்தார் கல்லூரிக்கு விருஷ்டி. கல்லூரிக்கு வந்த ராவணனும் மிருஷியிடம் கூட அவளிடம் எவ்வளவு கேட்டும் அவள் வாயை திறக்காமல் அமைதியாக இருக்க வேறு வழி இன்றி அந்த மாணவனை தாக்கியதால் ஒரு மாதத்திற்கு ரக்க்ஷிணியை காலேஜ் விட்டு சஸ்பெண்ட் செய்து இருந்தாலலர் விருஷ்டி அதுவும் ராவணன் மற்றும் ரிஷிகாவிடம் வேறு வழி இல்லை என்றதால்தான் அவளை சஸ்பெண்ட் செய்தேன் என்று காரணம் அவர் கூறியதால் ராவணனும் மிருஷிகாவும் வேறு வழி இன்றி அவளை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்கு வந்தனர்
வீட்டிற்கு வந்தவள் இப்பொழுது வரை தன் அறையை விட்டு வெளியே வரவில்லை அதே பால்கனியில் தான் நின்று கொண்டிருக்கிறாள் கால் கடுக்க வெகுநேரமாக. அந்நேரம் அவள் பின்பு வந்து நின்ற ராவணன் தொண்டையை செரும இங்க எதுக்கு வந்தீங்க.... என்று அவன் புறம் திரும்பாமல் கணீர் குரலில் கேட்டாள் அவள். இது என்ன கேள்வி? நீ என்ன பிரச்சனைனு என்கிட்ட சொல்லாம இப்படி மறைச்சு வைக்காததினால் யாருக்கு என்ன பிரயோஜனம்... நீ காரணத்தை சொன்னா மட்டும்தான் நீ செஞ்சது தப்பா சரியான என்னால முடிவெடுக்க முடியும் இப்படி உனக்குள்ளேயே எதுக்கு எல்லா விஷயத்தையும் போட்டு மறைச்சிக்கிறா.... என்று ராவணன் கோபமான குரலில் கேட்க அவர் புறம் திரும்பி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு பால்கனி கைப்பிடி கம்பியில் சாய்ந்தவள் உங்ககிட்ட எந்த விஷயத்தையும் என்னால உங்களை நம்பி சொல்ல முடியாது ....ஏன்னா என்னோட நம்பிக்கையை நீங்க எப்பவும் இழந்துட்டீங்க எப்போ என் அண்ணன இந்த வீட்ட விட்டு போகுறதுக்கு நீங்க காரணம் ஆனீங்களோ அப்பவே உங்க மேல இருந்த நம்பிக்கை எனக்கு போயிடுச்சு... எதையும் தீர விசாரிச்சு முடிவெடுக்கறதுங்குறது உங்ககிட்ட இல்லாத ஒரு பழக்கம்னு நீங்க அண்ணனை உங்க வீட்டை விட்டு வெளியே அனுப்பும்போது எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு ..... அதனால உங்க கிட்ட எந்த விஷயத்தையும் நான் சொல்ல முடியாது ... என்று அவள் அவர் கண்களை பார்த்து அழுத்தமாய் கூற அதைக் கேட்டு கோபத்தில் அங்கிருந்து சுவற்றில் ஓங்கி குத்தினார் ராவணன் தேவையில்லாம பேசிகிட்டு இருக்க நான் கேட்ட கேள்வி வேற இப்ப நீ சொல்ற பதில் வேற.... என்ன பிரச்சனைனு இப்படி சொல்லப் போறியா இல்லையா .... என்று அவர் மீண்டும் அழுத்தமாய் கேட்க முடியாது.... என்றாள் அழுத்தமாக. அவள் கூறியதை கேட்டு இதழ் வளைத்து நக்கலாக சிரித்தவர் நீ சொல்லலன்னா என்னால கண்டுபிடிக்க முடியாதுனு நினைச்சிய.... நான் ராவணன் நான் நினைச்சா என்ன வேணாலும் பண்ணுவேன்.... அது உனக்கு தெரியும் தானே... என்று அவர் அதே பழைய திமிருடன் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளைப் பார்த்து நெஞ்சை நிமிர்த்திக் கேட்க அதில் தன் தந்தையை விழிகள் சிவக்க முறைத்தாள் அவள்
ராவணா.... பண்ணிட்டு இருக்கஎன்ன விஷயம் என்பதை அவளே அவ வாயால பொறுமையா சொல்லட்டும் அதுவரைக்கும் நம்ம அவளை விட்டு புடிக்கலாம்னு நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன் தானே அப்புறம் எதுக்கு மறுபடியும் இங்க வந்து நின்னு அவளை டார்ச்சர் பண்ணிட்டு இருக்க .... என்று கூறிக் கொண்டே மிருஷிகா அறைக்குள் நுழைய நீ வாய மூடு என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாதுனு எனக்கு தெரியும் உன் விஷயத்தில் நான் தலையிட வேணாம்னு நீ சொல்லிட்டல்ல இப்போ நான் பண்ற எந்த ஒரு காரியத்திலும் நீ தலையிடாதே ....என்று ராவணன் முகத்திற்கு நேராகவே மிருஷிகாவை பார்த்து கூற அவர் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்த முகத்துடன் அவரை நோக்கினார் மிருஷிகா ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கணக்கில் கொள்ளாத ராவணன் இப்ப நான் ஒரு கால் பண்ணா கூட என்னால நீ அந்த பையனை அடிச்சதுக்கான ரீசன வித் இன் பைவ் மினிட்ஸ்ல கண்டுபிடிக்க முடியும் பாக்குறியா.... என்று மேலும் அழுத்தமாய் ராவணன் கேட்க அதற்கு மேல் மறைக்க முடியாமல் மீண்டும் திரும்பி வானத்தை வெறிக்க தொடங்கியவள் என் பிரண்டு கிட்ட அந்த பொறம்போக்கு தப்பா நடந்துகிட்டான் அதனால தான் அடிச்சு அவனை காயப்படுத்தினேன்.... இப்ப அதுக்கு என்னங்கறீங்க... என்றாள் கடுமையான குரலில் . அவள் கூறியதை கேட்ட ராவணன் விழிகள் சுருக்கி அவளை பார்க்க அவர் புறம் திரும்பி பார்த்தவள் காதலித்து ஏமாத்துனது மட்டும் இல்லாம அவன பத்தி ரொம்ப தரகுறைவாகவும் பேசி இருக்கான் அதனால என் பிரண்டு சூசைட் அட்டென்ட் பண்ணிட்டா.... அதனாலதான் அவன நான் அடிச்சேன் இதுல என்ன தப்பு இருக்கு ... என்று அவள் கோபமாய் கேட்க இந்த விஷயத்தை என்கிட்டேயும் உங்க அம்மாகிட்டயும் சொல்லி இருந்தா நாங்களே இதை எப்படி சரி பண்றதுன்னு யோசிச்சு இருப்போம்ல.... என்று ராவணன் கேட்க கிழிச்சிருப்பீங்க .... என்றாள் ஆங்க்காரமாய். அவள் அவள் கூறியதை கேட்டு மிருஷிகவே ஒரு நிமிடம் அதிர்ந்தவர் ஏய் ரக்க்ஷிணி நீ யாரு கிட்ட பேசுறேன்னு புரிஞ்சுதா பேசுறியா .. அவரு உன்அப்பா இப்படியா அவர்கிட்ட மரியாதை இல்லாம பேசுவ இன்னொரு தடவை இந்த மாதிரி பேசின பல்லை உடைத்துடுவேன் ராஸ்கல்...... என்று அவர் கத்த கைய உயர்த்தி அவரை பேச வேண்டாம் என்று தடுத்தார் ராவணன்
ராவணா அவ உன்ன... என்று அவர் கூற வரும்போது ரிஷி அமைதியா இரு என்று சொன்னேன் ...நான் அவ கிட்ட பேசிட்டு இருக்கேன்ல நானே எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணிக்கிறேன்... என்று அவர் கூற தயவு செஞ்சு இன்னும் கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்க நீங்க காரணம் கேட்டீங்க நான் சொல்லிட்டேன் ....இதுக்கு மேல என்ன டார்ச்சர் பண்ணாதீங்க முதல்ல இங்க இருந்து போங்க ....என்று ரக்க்ஷிணி அகத்த அவளை ஒரு நொடி அழுத்தமாய் பார்த்துவிட்டு ராவணன் அங்கிருந்து வெளியேற மிருஷிகாவும் தன் மகளை கோபமாய் முறைத்துக் கொண்டே வெளியேறினார் அங்கிருந்து.
**** *** **** **** ****
அந்த அடர்ந்த காட்டின் மைய பகுதியில் கட்டப்பட்டிருந்த மிகப் பெரிய பங்களாவில் ஒரு அறையில் மயக்கத்தில் கட்டிலில் கிடந்தாள் சைத்தாலி. சிறிது நேரத்திற்கு பிறகு அவளுக்கு மயக்கம் தெளிய விழிகளை சுருக்கி மெல்ல திறந்தவள் சுற்றிலும் தன் பார்வையை சூழல விட தான் எங்கு இருக்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை. தலைவலி வேறு அவளுக்கு மண்டையை உடைப்பது போல் வலிக்க தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவள் கண்கள் மூடி என்ன நடந்தது என்று யோசிக்க ஆரம்பிக்க இரவு நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவளுக்கு கண் முன்பு படமாய் விரிந்தது. அடுத்த நொடி சுயநினைவுக்கு வந்தவள் அப்பாஆஆ என்று கத்திக்கொண்டு பயத்தில் கண்களை திறக்க அவள் முன்பு இருந்த ஒற்றை மர நாற்காலியில் கால் மேல் கால் போட்டு நெஞ்சை நிமிர்த்தி முகத்தை மாஸ்கால் மறைத்தவாறு விழிகள் சிவக்க அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் ராவண் ஆத்ரேயன்
அவனைக் கண்டு அதிர்ந்தவள் பயத்தில் கட்டிலில் தவழ்ந்தவாறு பின்னே சென்று அவனை பயத்துடன் பார்க்க அவள் மயக்கம் தெளியும் வரை அமைதியாக அமர்ந்திருந்தவன் அவன் எழுந்து தன்னை பார்த்தவுடன் மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்து அவளை நோக்கி தன் அழுத்தமான காலடிகளை ஊன்றி நடந்தான். அவன் முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இவள் பின்னே கட்டலில் தவழ்ந்து சென்று கட்டிலின் முனையில் மோதி அமர்ந்தாள் பயத்தில். அவள் அருகே சிறிது இடைவெளி விட்டு நின்றவன் அவளை அழுத்தமாக பார்க்க நடுங்கும் இதழ்களுடன் அவனைப் பார்த்து கேட்டாள் அவள் யார் நீ ....என்று அவள் கேட்ட கேள்வியில் மாஸ்க்குக்குள் மறைந்திருந்த அவன் இதழ் ஒரு பக்கமாக வளைந்தது
தொடரும்......
Comments
Post a Comment