காவலனோ காதலனோ 7
தன் முன் நின்று இருந்தவனை கண்டு பயத்தில் நடுங்கியபடி சைத்தாலி பார்க்க அவளைத்தான் அழுத்தமாய் பார்த்தவாறு அவள் நின்று இருந்தான் ஆத்ரேயன் .முகத்தை இன்னும் மாஸ்க்கால் மறைத்திருந்தவனை அடையாளம் காண முடியாமல் தடுமாறியவள் நடுக்கம் கொண்ட இதழ்களால் அவனை நோக்கி கேள்விக்கனையை தொடுத்தாள் யார் நீ .... என்று
அவளின் கேள்வியில் மாஸ்கிற்க்குள் மறைந்திருந்த அவனின் இதழ் ஒரு பக்கமாக வளைந்தது என்னை யாருன்னு தெரியலையா உனக்கு.... என்ற அவனின் உறுமல் குரலில் அவள் தலை நாலா புறமும் இல்லை என்று ஆட குட் தெரியாம இருக்கிறதே உனக்கு நல்லது தான்.... என்ன பத்தி தெரிஞ்சுக்கணும் நினைக்காத நேரம் வரும்போது உனக்கு எல்லாமே புரிய வரும் அது வரைக்கும் நீ என் கஸ்டடில தான் இருக்கணும்..... இங்க இருந்து தப்பிச்சு போகணும்னு நினைக்காத அது உன்னால முடியாது.... ஏன்னா இது என் இடம் என்ன மீறி உன்னால இங்கிருந்து போகவே முடியாது.... புரியுதா..... என்று அவனின் கர்ஜனை குரலில் கேட்க அவன் கூறியதை பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் கூறிய இறுதி வரிகளில் வெகுண்டு எழுந்து விட்டாள் வர்மனின் புதல்வி என்பதை நிரூபிக்கும் வகையில்
யாருடா நீ எவ்வளவு தைரியம் தான் எனக்கு கடத்திட்டு வந்திருப்ப... நான் யாருன்னு தெரியுமா உனக்கு.... என் அப்பா யாருன்னு தெரியுமா .... நீ என்னை கடத்திட்டு வந்து வச்சிருக்குறது என் அப்பாவுக்கு தெரிந்திருக்கும் அவர கையில மாட்டி சின்னா பின்ன மாதிரி அழிந்து போறதுக்குள்ள ஒழுங்கு மரியாதையா என்னை நீயே கூட்டிட்டு போய் என் அப்பா கிட்ட விட்டுடு இதுவே அவர் உன்னை தேடி கண்டுபிடிச்சாருன்னா உனக்கு சாவ நிச்சயம் .... அதுமட்டுமில்ல உன்னை கொடூரமாக கொண்ணுவாரு .... தேவையில்லாம என்கிட்ட வாலாட்டனும்னு நினைக்காத அப்புறம் ஏன்டா என்னை கடத்தூணோம்னு வாழ்நாள் முழுக்க நீ கஷ்டப்பட வேண்டியதா ஆகிடும்.... என்று பெண் அரிமாவாய் அவனிடம் சீறினாள் சைத்தாலி. ஆனால் அவன் அவளுக்கு எந்த பதிலும் கூறாமல் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளில் நுழைத்துக் கொண்டு ரத்த போல் சிவந்திருந்த தன் கண்களால் அவளை அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு கொஞ்சமும் சலிக்காது எதிர்பார்வை பார்த்தவள் இப்ப என்ன இங்க இருந்து அனுப்ப போறியா இல்லையா .... என்றாள் மீண்டும் கர்ஜனை குரலில் . அவள் கூறியதை கேட்டவன் ஒரு நொடி அவள் கண்களை ஆழம் நோக்கி விட்டு அவளுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அங்கிருந்து நகர ஏய் இடியட் உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன் இந்த மரியாதையா இங்க இருந்து வெளியே அனுப்பு .....இல்ல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது நான் ஒரு டாக்டர் அதனால பயந்தாங்கோலினு நீ நினைச்சிட்டு இருந்தினா அந்த எண்ணத்தை எல்லாம் இப்பவே புதைத்துடு.... எனக்கு செல்ஃப் டிப்ஃபன் தெரியும் என்ன தற்காத்துக்கத்துக்காக எப்ப என்ன பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும் இப்ப நீயா என்னை விடுறியா இல்ல நானா உன்னை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே போகவா.... என்று சைத்தாலி மீண்டும் கத்த அதற்குள் கதவு அருகே நெருங்கி இருந்தவன் அவள் புறம் கழுத்தை மட்டும் திருப்பி தலையை சாய்த்து அவளை அழுத்தமாய் பார்த்தவன் உன்னால முடிஞ்சா என்ன மீறி இங்கிருந்து வெளியே போய் பாரு.... என்றான் வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டி. அடுத்த நொடி அந்த அறையின் கதவு அவன் கரத்தால் படார் என்று அடித்து சாத்தப்பட ச்சை.... என்று கோபத்தில் மெத்தையில் குத்தியவள் எவ்வளவு தைரியம் அவனோட முகத்தை கூட காட்டாம ஓடுறான் பாரு.... சரியான பயந்தாங்கோலியா இருப்பான் போல... இவனை யாரு என்னனு முதல்ல தெரிஞ்சுக்கணும் .... அதுக்கு முன்னாடி இந்த வீட்டை விட்டு நான் வெளியே போகணும்..... நான் இங்கிருந்து போனா மட்டும் தான் சீக்கிரமாக என்னோட ஹாஸ்பிடல்ல நடக்குற விஷயங்களை பற்றி அப்பாகிட்ட சொல்ல முடியும் அதுக்குள்ள இவன் எனக்கு கடத்திட்டு வந்துட்டான். யார்டா நீ ... என் வாழ்க்கையிலே விளையாடுறதுக்குன்னு வருவீங்களா நீங்க எல்லாம் .... என்று தலையில் அடித்துக் கொண்டு கோபத்தில் பற்களை கடித்தவாறு கத்தி கொண்டு இருந்தாள் சைத்தாலி.
இரவு முழுவதும் மகளை காணாமல் விருஷ்டி தவித்து போய்க்கொண்டிருக்க ரணதீர் வர்மனும்வீட்டில் இல்லை அவனுக்கு தான் தன் மகளுக்கு என்னவாயிற்று என்று தெரியுமே.... அதனால் அவன் அதை பற்றி எதுவும் கவலைப்படாமல் தன் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான் இரவு முழுவதும் . ஆனால் அவன் தன் மனைவி இந்த நேரம் எவ்வளவு பயந்து இருப்பாள் என்பதை நினைக்க தவறி விட்டார். வேலையெல்லாம் முடித்துவிட்டு அவன் காலை வேளையில் வீட்டிற்குள் நுழையும் பொழுது ஹால் சோபாவில் அமர்ந்து அழுது கொண்டிருந்த விருஷ்டியை துர்காவும் நிவர்த்தியும் சமாதானம் செய்து கொண்டிருந்தனர் முதலில் அவளின் அழுகை காண அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாதவன் அதன் பின்பு தான் அவன் ஏன் அழுகிறாள் என்பதை புரிந்து கொண்டான். வேகமான காலடிகளுடன் அவன் அவளை நெருங்க துர்காவும் நிவர்த்தி எப்பொழுதும் போல் அவனை கண்டு பயத்தில் வேகமாக தங்கள் இணைகளின் அருகே சென்று நின்று கொண்டனர் இப்பொழுதும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வர்மனின் மீது ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது கௌரி மட்டும் விருஷ்டி அருகே அமர்ந்திருக்க எதிரே சோபாவில் அமர்ந்திருந்த உதயன் தன் தொலைபேசியில் யாரிடமோ கோபமாக கத்திக் கொண்டிருந்தார் அஜய்யும் விஷ்ணுவும் கூட யாரிடமும் பரபரப்பாக தங்கள் ஃபோன்களில் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்தனர் அகஸ்தியா மற்றும் விக்ராந்த். அவர்கள் வந்தவுடன் வேகமாக அவர்களை நெருங்கிய அஜய் மற்றும் விஷ்ணு என்னடா சைத்து பத்தி ஏதாவது தெரிஞ்சுதா இல்லையா .... நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டு இருக்கோம் ஆனா அவ எங்க போனான்னு யாருக்குமே தெரியல.... நைட் எப்பயும் போல ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வருவதற்காக கிளம்பி இருக்கா அதுக்கு அப்புறம் தான் எங்க போனான்னு தெரியல போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கற உங்களுக்கு ஏதாவது அவளை பத்தி தெரிஞ்சுதா.... என்று விஷ்ணு பதட்டத்துடன் இருவரிடமும் கேட்கஇல்ல பெரியப்பா நாங்க எவ்வளவோ தேடி பாத்துட்டோம் ஆனால் சைத்து பத்தி எங்களுக்கு எந்த இன்பர்மேஷனும் கிடைக்கல அவ ஹாஸ்பிடலுக்கு வெளியே இருந்த கேமரா கூட ஒர்க் ஆகாம தான் இருந்திருக்கு நேத்து நைட்டு முழுக்க இதெல்லாம் பத்தி யோசிக்கும் போது தான் எங்களுக்கு எதோ தவறா இருக்குற மாதிரி தோணுது அதனாலதான் அபிஷியலா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் .... உங்ககிட்ட எதுக்கும் கேட்டுட்டு இருப்பாங்களா வந்தோம்.... என்று அகஸ்தியா கூற விக்ராந்த் அமைதியாக நின்று இருந்தாள் ஏதோ யோசனையுடன். என்னடா அமைதியா இருக்க என்ன ஆச்சு. என்று அஜய் விக்ராந்திடம் கேட்க இல்ல சித்தப்பா அது எப்படி நேத்து மட்டும் அந்த கேமரா ஆஃப்ல இருக்கும் நேத்து நைட் 9 மணி வரைக்கும் கூட கேமரா ஒர்க்கிங் ல தான் இருந்து இருக்கு அதன் பிறகு தான் கேமரா ஒர்க் ஆகல எனக்கு என்னமோ இது திட்டமிடப்பட்ட .... என்று விக்ராந்த் கூறிக் கொண்டிருக்கும் பொழுது கடத்தல்ன்னு தோணுதா... என்ற வர்மனின் குரலில் அனைவரும் அதிர்ச்சியுடன் அவன் புறம் திரும்பினர் என்றால் விருஷ்டி வேகமாக தான் இருக்கையில் இருந்து எழுந்தவர் என்னது கடத்தலா என்ன சொல்றீங்க நீங்க அப்ப நம்ம சைத்துவ யாரோ கடத்திட்டாங்களா ஐயோ யார் என் பொண்ண கடத்துனது... அவளுக்கு யாரு எதிரி இருக்கப் போறா ....என்று விருஷ்டி அழுகையுடன் கேட்க மீரா அழாதே நீ அழறது எனக்கு கஷ்டமா இருக்குன்னு உனக்கு தெரியும் அதனால் முதலில் இப்படி அழுறத நிறுத்து... என்று வர்மன் கூற அவன் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு கண்ணீரை அடக்கம் முயன்றாள் விருஷ்டி. அப்பொழுதும் அது முடியாமல் போகவே விழிகளில் ஓரம் கண்ணீர் சிந்தி கொண்டே இருக்க அவளை தன் தோளோடு அழைத்துக் கொண்டவன் அனைவரின் புறமும் திரும்ப விஷ்ணு அதிர்ச்சியுடன் வர்மனை நோக்கினான். என்னடா சொல்ற கடத்தலா... என்னமோ உனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்ற எங்களுக்கு ஒன்னும் புரியல வர்மா எது சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லு. . அப்ப நம்ம பாப்பாவை யாரோ கடத்திட்டாங்களா .. என்று விஷ்ணு கேட்க யாரோ இல்ல அவன் தான் கடத்தினான் என்ற அவனின் வார்த்தையில் அனைவரும் திணறிப் போய் அவரை பார்த்தனர் பெரியப்பா நம்ம பாப்பாவை கடத்துற அளவுக்கு எவனுக்கு எங்க தைரியம் இருக்கு உங்களுக்கு அவனை தெரியுமா நீங்க பேசுறத வெச்சு பார்க்கும்போது உங்களுக்கு அவன யாருன்னு தெரியும்னு எனக்கு புரியுது அவன் யாருன்னு மட்டும் சொல்லுங்க அவன உரு தெரியாம அழிச்சிட்டு சைத்துவ இங்க கூட்டிட்டு வரேன் ... என்று அகஸ்தியா கோபமாக கூற அதற்கு அவசியமே இல்லை. என்று கூறியவரே படிகளில் கம்பீரமாக இறங்கி வந்தான் அதர்வா. இப்பொழுது அனைவரின் பார்வையும் கேள்வியுடன் அவன் புறம் திரும்ப வர்மன் தன் மகனை தான் புருவ உயர்த்தி பார்த்தான் அழுத்தமான காலடிகளை ஊன்றி அவன் முன்பு நெஞ்சை நிமித்தி கொண்டு நின்றவன் சோ சைத்துவ கிட்னா பண்ணது யாருன்னு உங்களுக்கு தெரியும் அப்படித்தானே ... என்ற அவனின் அழுத்தமான கேள்வியில் வர்மன் எந்த பதிலும் கூறாமல் தன் மகனையே அழுத்தமாய் பார்க்க உங்களுக்கு யாருன்னு தெரியும்போது அவன் எதுக்காக சைத்துவை கடத்தினாங்கிற காரணமும் தெரிஞ்சிருக்கும் தானே... என்று அடுத்த கேள்விக்கனையை தொடுத்தான் அதர்வா அதற்கு மேல் முடியாமல் விருஷ்டி சோர்ந்து அமர்ந்து விட அவரை தன் தோள்களில் தாங்கிக் கொண்ட கௌரி முதலில் இப்படி நீங்களே உங்களுக்குள்ள கேள்வி கேட்டு நிக்கிறத விட்டுட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிங்க சீக்கிரமாவே சைத்து நம்ம வீட்டுக்கு வரணும் அவ நம்ம குலதெய்வம் இந்த வீட்டோட மூத்த வாரிசு இந்த வீட்டுக்கே மகாராணி அவதான்... சீக்கிரமாவே என் பேத்தியை இங்க கூட்டிட்டு வாங்க அதுக்கு என்ன பண்ணனும் அத பண்ணுங்க சும்மா இங்க நின்னு பேசிட்டு இருக்காதீங்க... என்று கோபமாக கூற உதயனும் அதை ஆமோதித்தார் விக்ராந்த் அவர் கூறியதை கேட்டு பர்மனிடம் முழுதாக இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கும் பொழுது அகஸ்தியா விக்ராந்த் அதர்வா மூவரையும் அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வர்மன் படிகளில் ஏற அவன் பார்வைக்கான காரணம் புரிந்து கொண்டு அவன் பின்னே மூவரும் சென்றனர்.
தொடரும்....
Comments
Post a Comment