காவலனோ காதலனோ 8

வர்மன், அதர்வா விக்ராந்த் அகஸ்தியா மூவரின் புறமும் திரும்பி பார்க்க அவர்கள் மூவரும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர் அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் மேலே செல்ல அவன் பின்னே மூவரும் அவனின் பார்வைக்கான பொருள் உணர்ந்து படி ஏறினர். விருஷ்டி இன்னும் உணவு கூட உண்ணாமல் அழுது கொண்டே இருப்பதால் துர்கா அவளுக்கு உணவை ஊட்ட எனக்கு வேண்டாம் துர்கா என் பொண்ண கண்ணுல பாக்குற வரைக்கும் எனக்கு நிம்மதியே இருக்காது என் உயிரே என்னை விட்டு போன மாதிரி இருக்கு எனக்கு... அவளை எவ்வளவு கஷ்டப்பட்டு தவம் இருந்து பெற்று எடுத்தேன் தெரியுமா... அவ என் கையில வரும்போது என் வாழ்க்கையே வெறுத்து போன நிலையில இருந்தேன் ஆனால் அவளை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த உலகத்துல வாழனுங்கற எண்ணமே வந்தது அப்படிப்பட்ட என் குழந்தையை தொலைச்சிட்டு இன்னைக்கு நான் தவிச்சுகிட்டு நிக்கிறேன் ....எனக்கு இந்த சாப்பாடு ஒன்னு தான் இப்ப கேட்டு .... எனக்கு எதுவும் வேண்டாம் என்ன இப்படியே விட்டுருங்க .... என்று கௌரியின் மடியில் படுத்து அழுது கொண்டே விருஷ்டி கூற அவள் கூறிய வார்த்தைகளில் பெண்களுக்கு மனம் கனத்து போனது 


அக்கா சைதுவை நீங்க எந்த நிலைமையில பெத்து எடுத்தீங்கன்னு எங்களுக்கு தெரியாதா.... உங்க கஷ்டம் எங்களுக்கு புரியுது. அவ கண்டிப்பா திருப்பி இங்க வந்துருவா. அவ வர் போது அவளை அணைச்சி வரவேற்கறத்துக்கு உங்க உடம்புல தெம்பு இருக்க வேணாமா.... இதை சாப்பிடுங்க க்கா.... என்று துர்கா கூற நிவர்த்தியும் எவ்வளவோ வற்புறுத்தினாள் ஆனால் ஒரு வாய் உணவு கூட அவள் வாயில் இறங்கவில்லை அந்த அளவுக்கு பிடிவாதமாக மறுத்துவிட்டாள் அவள் 


இங்கு தன்னறையில் இருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வர்மன் தன் முன்பே நின்றிருந்த மூன்று ஆண்மகன்களையும் பார்த்துக் கொண்டிருக்க அந்நேரம் அரை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் அஜய் மற்றும் விஷ்ணு. அவர்களை கண்டு புருவம் சுருக்கிய வர்மன் வெளியே நின்று இருந்த தன் பாதுகாவலர்களை பார்க்க நாங்க எவ்வளவோ தடுத்தோம் ஆனா இரண்டு பேரும் உள்ள வந்துட்டாங்க பாஸ்.. என்றான் ஒருவன் தலைகுனிந்து அமைதியான குரலில். அவனை வெளியே செல்லுமாறு ஒரு விரலை நீட்டி வர்மன் சைகை செய்ய அவன் வெளியேறி விட்டான். இவங்க மூணு பேர் கிட்ட மட்டும் என்ன ரகசியம் பேசனுமனு இவங்கள நீ இங்க கூட்டிட்டு வந்து இருக்க இங்க என்னதான் நடக்குது வர்மா.. உனக்கு சைத்துவ   கடத்தன்னவன் யாருன்னு தெரியுது அத ஏன் எங்ககிட்ட சொல்ல மாட்டேங்குற .... சைத்துவை நம்ம உடனே மீட்டு எடுக்கணும் இங்க விருவோட நிலைமை என்னன்னு நீ பார்த்துட்டு தானே இருக்க.... அவ சைத்ததுவோட நினைவுல ரொம்ப வருந்திகிட்டு இருக்கா.... அது உனக்கு தெரியுது தானே சீக்கிரம் அவளை நம்ம கண்டுபிடிக்கணும் டா அதுக்கான ஸ்டெப் எடுத்து ஆகணும் ....என்று விஷ்ணு ஆதங்கத்துடன் கூற அப்பா கொஞ்சம் அமைதியா இருங்க பெரியப்பாக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு அப்படி இருந்தும் அவரு அமைதியா இருக்காருன்னா அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்குனு அர்த்தம் ....அவர் என்ன சொல்றாருன்னு பொறுமையா கேட்போம்... என்று விக்ராந்த் கூற அவனை மெச்சதளுடன் புருவம் ஏற்றி ஒரு பார்வை பார்த்த வர்மன் வெல் நான் ஏதோ ஒரு முக்கியமான காரணத்துக்காக தான் இப்படி அமைதியா இருக்கேன்னு உனக்கு தெரியுது அப்படித்தானே விக்ராந்த்.... என்று தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளில் நுழைத்துக் கொண்டு வர்மன் நெஞ்சை நிமிர்த்தி அவனை நேருக்கு நேராய் பார்த்து கேட்க அதற்கு ஆம் என்று தலையை அசைத்தான் விக்ராந்த்   இப்பொழுது தன் பார்வையை வர்மன் தன் மகன் அதர்வாவின் புறம் திருப்ப எனக்கு உங்களை பத்தி எல்லாமே தெரியும் ... உங்களோட சின்ன சின்ன மூவுக்கும் அர்த்தம் என்ன என்பதை என்னால புரிஞ்சுக்க முடியும் .... நீங்க ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்படி பண்ணிட்டு இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே புரியுது உங்களோட அமைதி ரொம்ப ஆபத்தானதுங்கறது எனக்கு தெரியும். அப்படி இருக்கும்போது இப்ப நீங்க அமைதியா இருக்கிறது கண்டிப்பா ஏதோ ஒரு முக்கியமான விஷயத்துக்காகனு என்னால நல்லா புரிஞ்சிக்க முடியுது.... அதனாலதான் அமைதியா இருக்கன்... இல்லனா சைத்துவ அவள கடத்துனா அடுத்த செகண்ட் என்னோட கஸ்டடிக்கு கொண்டு வந்து இருப்பேன்... என்று அதர்வாக் கூற அது உன்னால முடியாது அதர்வா..... என்றான் கம்பீரமான குரலில் தன்மகனை நேருக்கு நேராய் பார்த்து வர்மன் அவன் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர் என்றால் அதர்வா தன் தந்தையை தான் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அழுத்தமாக


சைத்தாலி ஆத்ரேயன் தன்னை அடைத்து வைத்திருந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள் இங்கிருந்து எப்படி தப்பித்து செல்வது என்று.  பலவாறாக யோசித்தும் அவளுக்கு எந்த திட்டமும் மனதுக்கு தோன்றாமல் போகவே சோர்ந்து அமர்ந்தாள்.  ச்சை என்ன ஆச்சு எனக்கு .... ஏன் என்னோட மூளை எப்படி மழுங்கி போயிடுச்சு.... எல்லாத்தையும் கரெக்டா யோசிச்சு முடிவு எடுப்பன் ஆனா இங்க இருந்து எப்படி தப்பிச்சு போகணும்னு யோசிக்கும்போது என்னால் அதுக்கு எந்த திட்டத்தையும் தீட்ட முடியலையே.... என் மனசு இங்க இருக்கிறது சரின்னு சொல்லுது ஆனா என் மூளை இங்க இருந்து வெளியே போகணும்னு சொல்லுது ..... இப்ப எதை நான் கணக்குல எடுத்துக்கறதுனு எனக்கு ஒன்னும் புரியல.... தலையே வெடிச்சிடும் போல இருக்கு.... என்று தலையை பிடித்துக் கொண்டு கீழே குனிந்தவாறு சைத்தாலி அமர்ந்திருக்க அந்நேரம் அவள் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் ஒரு வயதான பெண்மணி .அவன் தான் வருக்கிறானோ என்று நிமிர்ந்து பார்த்த சைத்தாலி   அங்கே வந்து அந்த பெண்மணியை கண்டு புருவம் சுருக்கினாள் புரியாமல் . அவள் அருகே வந்த அவர்  உன்ன பத்தி தம்பி சொல்லுச்சு கண்ணு..... உனக்கு சாப்பிடறதுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன் அப்புறம் இதுல உனக்கு போட்டுக்க துணியும் இருக்கு இந்த சாப்பாடு சாப்பிட்டு இந்த துணியை போட்டுக்கோ நைட்டுக்கு என்ன வேணும்னு இப்பவே சொல்லிட்டா நான் அதையும் சமைச்சு வச்சுருவேன்... என்று அந்த பெண்மணி கூற அதைக் கேட்டு அவரை விழிகள் சுருக்கி பார்த்தவள் யார் நீங்க ..... என்றாள் அழுத்தமான குரலில். நான் இந்த வீட்ல வேலை செய்ற வேலைக்காரி கண்ணு ...மாசத்துக்கு ஒரு தடவை இந்த பங்களாவ வந்து சுத்தம் பண்ணிட்டு போவ அது கூட தம்பி நினைச்சா மட்டும் தான் நான் இங்க வர முடியும் இல்லனா இங்க வரதுக்கு எனக்கு அனுமதி கிடையாது  ... இப்ப கூட உன்னை இங்கே தங்க வைத்திருக்கிற தம்பி என்கிட்ட சொல்லி அவர் தான் கூட்டிட்டு வந்தாரு இங்க உனக்கு நான் சமைச்சு வச்சுட்டு தம்பி கிட்ட போய் சொன்னா என்னை திருப்பி இந்த காட்டை விட்டு கூட்டிட்டு போய் வெளியே விட்ருவாரு மறுபடியும் என்னால நாளைக்கு காலைல தான் இங்க தம்பி அனுமதிசா வர முடியும்.... என்று அவர் கூற எனது காடா... என்று விழிகளை அதிர்ச்சியில் விரித்தாள் பெண்ணவள்.  என்னமா இப்படி கேக்குற....  இந்த அடர்ந்த காட்டுக்கு நடு மத்தியில தான் இந்த பங்களாவே அமைந்திருக்கு.... அது உனக்கு தெரியாதா.... என்று அந்த பெண்மணி கேட்க எனது அடர்ந்த காடா.... என்று மேலும் அதிர்ச்சியில் உறைந்து போனாள் அவள்.  நீ வந்த வேலை முடிஞ்சுச்சுன்னா இங்கிருந்து கிளம்பி போயிட்டே இருக்கலாம்.... என்ற ஆத்ரேயன் குரலில் சைத்தாலியும் அந்த பெண்மணியும் திரும்பி பார்க்க அங்கு பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி எப்பொழுதும் போல் ரத்தம் போன்று சிவந்திருந்த கண்களால் அவர்கள் இருவரை தான் உறுத்துவிழித்து பார்த்தவாறு நின்று இருந்தான் ஆத்ரேயன்  தம்பி இந்த பாப்பாக்கு இது என்ன இடம்னே தெரியல ...என்று அந்த பெண்மணி கூற வரும்பொழுது இங்கே உங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதுக்கும் டிரஸ் கொடுக்கறதுக்கும் மட்டும்தான் உன்னை இங்க வர வச்சேன் மத்தபடி தேவையில்லாத வேலை எல்லாம் இங்க பாத்துட்டு இருக்காத முதல்ல இங்கிருந்து கிளம்பு.... என்ற அவன் கர்ஜனை சத்தத்தில் அந்த பெண்மணி சைத்தாலியை திரும்பி பாவமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட சைத்தாலி இன்னும் தான் அமர்ந்திருந்த நிலையில் இருந்து மாறாமல் அவனை தான் விழியில் சுழக்க முறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளின் முறைப்பை எல்லாம் சற்றும் கண்டு கொள்ளாதவன் அவள் முன்பு வந்து நின்றான் . இப்போதும் அவன் முகம் மாஸ்கால் மறைந்து தான் இருந்தது அவள் இதுவும் பேசாமல் அவனையே முறைத்துக் கொண்டிருக்க உனக்கு டிரஸ் அண்ட் ஃபுட் இதுல இருக்கு யூஸ் பண்ணிக்கோ அண்ட் இந்த இடத்தை பத்தியோ என்ன பத்தியோ தெரிஞ்சிக்கணும் நினைக்காத .... நேரம் வரும்போது உனக்கு எல்லாமே தெரியும் இத தான் நான் அப்பவே உன்கிட்ட சொன்னேன் திருப்பி திருப்பி தேவை இல்லாமல் முயற்சி பண்ணி தோத்து போகாத உன்னோட முயற்சி எல்லாமே என் முன்னாடி தோத்து தான் போகும்....  என்று அவன் அழுத்தமாக கூற ஜெயிக்கிறேன்டா உன்னை ஜெயிச்சு காட்றேன் கண்டிப்பா இங்கிருந்து நான் வெளியே போவன்... உன்னை எதிர்த்து இங்க இருந்து நான் வெளியே போவேன்.... என்று அவள் ஆக்ரோஷமாய் கத்த பெஸ்ட் ஆப் லக் ..... என்றான் நக்கல் குரலில் அவன் அவளை அழுத்தமாய் பார்த்தவாறு . அவன் கூறியதை கேட்டு இதழ் வளைத்து அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்த பெண்ணவள் தேங்க்யூ .... என்றால் மிடுக்குடன்.  அவளின் செயலில் ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு அவனை அங்கிருந்து நகர இப்பொழுது அவள் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை அவன் அந்த அறையை பூட்டி விட்டு செல்லும் வரை அதே மிடுக்குடன் தான் அமர்ந்திருந்தாள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள் திட்டம் தீட்டியவாறு.


அதர்வன் தான் வாங்கப்போகும் அந்த மிகப்பெரும் ஷாப்பிங் மாலின் உள்கட்டமைப்புகளை சரி பார்த்துக் கொண்டிருக்க அந்நேரம் அங்கு சற்று தொலைவில் நிறைய பேர் கூச்சலிடும் சத்தம் கேட்கவே தன் பாடி கார்ட்ஸ் புடைசூழ நடுநாயகமாக அந்த இடத்தை நோக்கி நகர்ந்தான்  அவன் பாடிகார்ட்ஸ் அனைவரும் அங்கு கூட்டமாய் சூழ்ந்திருந்த மக்களை அப்புறப்படுத்தி நிற்க வைத்திருக்க அங்கு ஒரு சிறுகுழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தவாறு மிரட்டிக் கொண்டிருந்தான் ஒரு முகமூடி அணிந்த கொள்ளையன்.


தொடரும்.....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....