காவலனோ! காதலனோ!

(இது இதற்கு முன்பு நான் எழுதிய இரண்டு கதைகளின் சங்கமம் தான் இந்த நாவல்.  கண்களால் கைது செய்யும் அரக்கனே... மற்றும் ராவணன் ராட்சசியவள் ஆகிய இரண்டும் நான் எழுதிய நாவல்கள்.  இந்த நாவல்களில் வரும் கதை நாயகர் நாயகிகளின் வாரிசுகளை வைத்து காவலனோ காதலனோ ... என்னும் இந்த புதிய நாவலை உங்களுக்காக வழங்கவிருக்கிறேன். இந்த கதைக்கும் அந்த கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றாலும் விருப்பம் உள்ளவர்கள் அந்த கதையை வாசித்து பார்க்கவும் நிச்சயம் அந்த கதைகளும் உங்களுக்கு பிடிக்கும் இப்பொழுது நாம் நம்முடைய கதைக்கு செல்வோம்)



ரணதீர் வர்மன் அரண்மனை... என்று அனைவராலும் அழைக்கபடும் அந்த மிகபெரிய அரண்மனை அந்த அதிகாலை வேளையிலேயே மிக பரபரப்பாக இருந்தது. காரணம் இன்று தான் அந்த அரன்மனையின் உரிமையாளன் அனைவராலும் அரக்கன் என அழைக்கப்படும் ரணதீர் வர்மன் இரண்டு மாதங்களுக்கு பிறகு அங்கு வருகை புரிகிறான். அவனை வரவேற்பதற்காகவே அந்த வீடு மிகவும் பாரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அன்று . காலையில் சமையலறையில் மிகவும் சத்தத்துடன் பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தாள் விருஷ்டி மிஹிரா. ரணதீர் வர்மனின் ஆருயிர் மனைவி. ஆரம்பமே முதல் கோணல் முற்றிலும் கோணல் என்னும் வகையில் ஆரம்பித்த இவர்களின் வாழ்வு அதன் பின்பு சரியாகி இன்று தெளிந்த நீரோடை போல் மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது

வீட்டில் அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மம்மி ... அம்மா.....தாயே... குலதெய்வமே.... எங்க இருக்கீங்க உங்கள பாக்கணும்னு ஓடோடி வந்துட்டு இருக்கேன்.... என்று ஒரு குரல் கேட்க அனைவரும் குரல் வந்த திசையை திருப்பி பார்த்தவர்களுக்கு படிகளில் வேகவேகமாக புள்ளி மான் குதித்து ஓடி வந்த பெண்ணை கண்டு சிரிப்புதான் வந்தது ஏனெனில் அவள் செய்யும் குறும்புகள் அனைத்துமே மற்றவர்கள் தான் தெரியுமே... வேகமாக கண்ணாடி படிகளில் தன் வெண்மை பாதத்தில் பூட்டப்பட்டிருந் தங்க கொலுசின் கொலுசொலி சலசலக்க தாவணியின் பாவாடையை தூக்கி பிடித்துக் கொண்டு கீழே புள்ளி மானாய் ஓடி வந்தவள் தன் தாயை தேடி விழிகளை அங்கும் இங்கும் சுழற்ற அம்மா சமையல் ரூம்ல இருக்காங்க சின்னம்மா நீங்க அங்க போய் பாருங்க.... என்று ஒரு பணிப்பெண் பணிவுடன் கூற சரிங்க க்கா நான் போய் பார்க்கிறேன் என்ன ஆச்சு இன்னைக்கு எல்லாரும் ரொம்ப பரபரப்பா வேலை செஞ்சுகிட்டு இருக்கீங்க இந்த ரெண்டு மாசம் அப்பா இல்லாததுனால அம்மா உங்க எல்லாரையும் கொஞ்சம் ப்ரீயா தான விட்டாங்க.... இன்னைக்கு என்ன அகேயின் நிலவரம் ரொம்ப தீவிரமா  இருக்கு... அவங்கவங்க ஸோய்ய வேலை செய்ய ஆரம்பிச்சுட்டீங்க போல...என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அங்க நின்னு எதுக்குடி என்னை ஏலம் விட்டுட்டு இருக்க என்ன வேணும் உனக்கு.... என்று சமையலறையில் இருந்து கோபமாக ஒரு குரல் கேட்டது. ஆஹா டீச்சர் அம்மாவுக்கு கோபம் வந்துருச்சு நான் என்னன்னு போய் பாக்குறேன் நீங்க போய் உங்க வேலைய பாருங்க.... என்று பாதியிலேயே பேச்சை இடை நிறுத்திவிட்டு துள்ளி குதித்து ஓடினாள் அவள்


சமையலறை நோக்கி வேகமாக உள்ளே ஓடியவள் சமையலறையில் மும்முறமாக சமைத்துக் கொண்டிருந்த தன் தாயின் பின்னே சென்று கழுத்தை கட்டிக் கொள்ள அடியே சமைச்சுகிட்டு இருக்கேன் நீ என்ன பிடிச்சு தள்ளி விட்டுடாத..   நான் கீழே விழுந்துட போறேண்டி ...என்று சத்தமாக கத்தினால் விருஷ்டி மிஹிரா. இரண்டு வளர்ந்த  பிள்ளைகளின் தாய் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவிற்கு 45 வயதை கடந்த பொழுதிலும் இன்னும் இருபது வயது பருவ மங்கையின் உடல் அமைப்புடனும் பொலிவான முகத்துடனும் வலம் வந்து கொண்டிருக்கும் அவளைக் கண்டு அனைவரும் வியப்பாகத்தான் அவளை பார்ப்பனர் அந்த அளவிற்கு குணத்திலும் அவள் மிகவும் அழகானவள் தான்.


அம்மா என்ன நடக்குது ....இன்னைக்கு என்னமோ தலைக்கெல்லாம் குளிச்சு ரொம்ப அழகா ரெடியாகி இருக்க என்ன விஷயம் ....ஆமா எதுக்கு நம்ம வீட்ல எல்லாரும் இவ்ளோ வேகமா வேலை எல்லாம் செஞ்சுட்டு இருக்காங்க யாராவது வீட்டுக்கு புது ஆளு வர போறாங்களா என்ன.... இல்ல நம்ம சொந்தக்காரர்கள் யாராவது வர போறாங்களா.... என்று இடுப்பில் கை வைத்து கொண்டு நாடியில் தன் ஒற்றை விரலால் தட்டிக் கொண்டே தன் தாயை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்தாள் தஷையா சைத்தாலி.  விருஷ்டியோ தன் மகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவளை ரசிகத் துவங்கினாள். ஆயிரம் இருந்தாலும் தாய்க்கு மகள் எப்பொழுதும் குழந்தை தானே.  அழகிய ரதி போல் தன் முன்பு நின்று தன்னை கேள்வி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் தன் குழந்தையை ரசித்து கொண்டிருந்தவளின் முன்பு சொடக்கிட்டு அவளை சுயநினைவிற்கு வர வைத்தாள் சைத்தாலி. அப்போதுதான் தன் மகளை ரசித்து கொண்டிருப்பதை எண்ணி தலையில் அடித்துக் கொண்ட விருஷ்டி என்னடி எதுவும் தெரியாத மாதிரி கேக்குற உங்க அப்பா எல்லாத்தையும் உன் கிட்ட தான் முதல்ல சொல்லுவாரு .....இப்ப எதுவும் தெரியாத மாதிரி என்கிட்ட வந்து கேட்டுகிட்டு இருக்க ....என்று விருஷ்டி தன் மகளிடம் கேட்க அம்மா நீ என்ன சொல்ற எனக்கு புரியவே இல்லை, ஏத சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லு ப்ளீஸ் ... என்று விழிகளை சுருக்கி சைத்தாலிக் கெஞ்ச அவள் தலையில் வலிக்காமல் கொட்டிய விருஷ்டி  உன் அப்பா இன்னைக்கு வரேன்னு போன் பண்ணி சொல்லி இருந்தாரு அதனாலதான் எல்லாரும் பரபரப்பா வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க.... என்று கூற ஓஓவ்வென்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆர்ப்பரித்தாள் சைத்தாலி தந்தையின் வரவு செய்தி அறிந்து. அவளின் செயலில் உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அதை மறைத்துக் கொண்டவள் மீண்டும் அவள் தலையில் கொட்டி ஏன்டி பொம்பள புள்ள அதுவும் வயசுக்கு வந்த பிள்ளை இப்படியா குதிக்கிறது .... கொஞ்சமாவது அறிவு வேணாம். எத்தனை பேரு இங்க வேலை செய்றவங்க இருக்காங்க... அவங்க யாராவது  நீ இப்படி பண்றத பார்த்துட்டு உன்னை தப்பா நினைச்சா என்னடி பண்றது..... என்று விருஷ்டி தன் மகளை அடக்க அந்தநேரம் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு பெண்மணியோ அம்மா நாங்க போய் நம்ம சின்ன அம்மாவை தப்பா நினைப்போமா ....அவங்கள பத்தி எங்களுக்கு தெரியாததா வயசு மட்டும் தான் அவங்களுக்கு ஏறி இருக்கே தவிர்த்து மனசால இன்னும் ஆகும் குழந்தைதான் ....நாங்க அதனால எதுவும் தப்பா நினைக்க மாட்டோம் நீங்க முதல்ல இப்படி அவங்களை திட்டாதீங்க ....என்று ஒருவர் கூற நீங்க எல்லாரும் சேர்ந்து அவளை செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சி இருக்ங்குறதுனால தான் ஏன் பேச்சக்கூட மதிக்க மாட்டேங்கிறா.... ஏன்று சலித்துக் கொண்டே சமையலில் கவனம் செலுத்தினாள் விருஷ்டி.  அவள் கூறியதை எல்லாம் புறம் தள்ளியவள் அம்மா எங்க 
உங்களோட அருமை புத்திரன்.... இன்னும் எழுந்துக்களையா.... சாருக்கு தெரியுமா அப்பா வராருன்னு ... என்று சமையல் மேடையில் அமர்ந்து கொண்டு கேரட்டை எடுத்து கடித்தவாறு சைத்தாலிக் கூற முதல்ல மேடையில் இருந்து கீழே இறங்கு எரும என்னென்ன வேலை பாக்குது பாரு இது எல்லாம் வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது ....என்று தலையில் அடித்துக் கொண்ட விருஷ்டி அவனுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது .... உங்க அப்பா என்கிட்ட நீ தான் போன் பண்ணி வரேன்னு சொன்னாரு. நானே அந்த மனுஷன் ரெண்டு மாசம் கழிச்சு இங்க வராருனு அவருக்காக பார்த்து பார்த்து எல்லாத்தையும் சமைச்சிட்டு இருக்கேன் அதனால என்னை தொந்தரவு பண்ணாம நீ போய் முதல்ல ஹாஸ்பிடலுக்கு கிளம்பறதுக்கு ரெடியாகு.... என்று கூறிவிட்டு விருஷ்டி மீண்டும் தன் வேலையில் கவனமாக தன் தாயை முறைத்து விட்டு சமையல் அறையில் இருந்து ஜங்கு ஜங்கு என்று நடந்தவாரே தன்னறை நோக்கி நடந்தாள் சைத்தாலி 


அவள் மேலே சென்ற சில நிமிடங்களில் மீண்டும் கண்ணாடி படிகளில் டக் டக் என்ற ஷுவின் காலடி சத்தம் கேட்க இம்முறை அனைத்து பணியாளர்களின் முகத்திலும் பயம் பிடித்துக் கொண்டது   ஏனெனில் வந்து கொண்டிருப்பவன் யார் என்று தான் அனைவருக்கும் தெரியுமே அனைவரும் கலவரத்துடன் நிமிர்ந்து பார்க்க படிகளில் நெருங்கி வந்து கொண்டிருந்தான் அதர்வேந்திரன் வர்மன்.

இருபத்தி நான்கு வயதில் தந்தையை போன்ற ஆளுமையுடன் கம்பீரமான உடல்வாகுடனும் ஆறு ஆடி உயரத்தில் நிமிர்ந்த நடையுடன் அவன்  வர அவனை கண்ட உடன் வேலையாட்கள் அனைவரும் பயத்துடன் நிற்க வேகமாக கீழே இறங்கி வந்தவன் வாசலை நோக்கி சென்றவனை தடுத்து நிறுத்தியது அவன் தாய் விருஷ்டியின் குரல் ... அதர்வா சாப்பிட்டு ஆபிஸ் போ... தினமும் இதை நான் உனக்கு நியாபகம் படுத்திட்டே இருக்கணுமா... என்ற விருஷ்டியின் கோப குரலில் அப்படியே தன் நடைய நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி பார்க்க டைனிங் டேபிளில் உணவை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் வந்து ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டு போ இல்லன்னா உங்க அப்பாக்கு போன் பண்ணி சொல்லிடுவேன் அவர்கிட்ட நீயே அப்புறம் பதில் சொல்லிக்கோ....என்று அவள் அவனை நேரடியாகவே மிரட்ட அவரை ஒரு நொடிக்கும் குறைவாக அழுத்தமாய் உறுத்து பார்த்தவன் பின்பு எதுவும் பேசாமல் அமைதியாக வந்து அமர்ந்து உணவை உன்னை தொடங்கினான். உங்க அப்பா இன்னைக்கு இங்க வரேன்னு சொன்னாரு உன்கிட்ட ஃபஸ்டே சொல்லிட்டாரா.... என்று அவள் அவனுக்கு உணவை பரிமாறிக் கொண்டே கேட்க அதற்கு ஆம் என்று தலையை மட்டும் ஆசைத்தவன் வேக வேகமாக உணவு உண்டு முடித்துவிட்டு தன் தாயை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க இப்ப எதுக்குடா என்னை இப்படி பாக்குற...  தினமும் சாப்பிட்டு போன்னு  உன் நல்லது தான் சொல்றேன் நான் எது பன்றதா இருந்தாலும்  அது உன்னோட நல்லதுக்கா தான் செய்வேன்...  அது உனக்கு தெரியும் தானே அப்புறம் எதுக்கு என்னை முறைக்கிற....  இப்ப ஹாயா கிளம்பி ஐயா ஆபீஸ்க்கு போங்க இல்ல வேற எங்கனாலும் போங்க.... என்று விருஷ்டி கூற அப்பொழுதும் பேசாமல் அழுத்தமாய் அவளை பார்த்து கொண்டே அவன் அங்கிருந்து எழ அதர்வா இரு என்னை அப்படியே கொஞ்சம் ஹாஸ்பிடல் ட்ராப் பண்ணிட்டு போயிடு எனக்கு ரொம்ப டைம் ஆயிடுச்சு... என்று படிகளில் வேக வேகமாக ஒரு கையில் வெள்ளை கோட்டை எடுத்துக்கொண்டு மற்றொரு கையில் கைப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக சைத்தாலி கீழே இறங்கி ஓடி வர எனக்கு இன்னைக்கு  முக்கியமான மீட்டிங் இருக்கு உன்னை  டிரைவர்  கூட்டிட்டு போய்விடுவார் அவர் கூட போயிடு என்னால உன்னை டிராப் பண்ண முடியாது .... என்று அதர்வா உணர்வுகள் இல்லா கணீர் குரலில் கூறியவண்அங்கிருந்து நகர டேய் நில்லடா உன் அக்கா என்ன உன் கூட கூட்டிட்டு போனா குறைஞ்சா போயிடுவ அதர்வா நில்லு.... என்று அவன் பின்னே கத்திக் கொண்டே சைத்தாலி ஓட நீ ஏண்டி 
அவன் பின்னாடி   ஓடுற அவன்தான் கூட்டிட்டு போக முடியாதுன்னு சொல்றான்ல நீ இன்னைக்கு டிரைவர் கூட போ.... என்று அவள் பின்னே சென்றாள் விருஷ்டி 


அதர்வா வேகமாக கார் கதவை திறந்து கொண்டு உள்ளே அமரும் சமயம்  முதலில் ஐந்து கார்கள் வேகமாக வீட்டில் காம்பவுண்டுக்குள் நுழைய ஆறாவது காராக ரணதீர் வர்மனின் கார் உள்ளே நுழைந்தது அவனின் கார் பின்னே மேலும் ஒரு ஐந்து கார் வர அவனின் பாதுகாப்புக்கு என்றே மொத்தம் 10 கார்கள் இருந்தது. அவனின் பிஏ கார் கதவை திறந்துவிட காரிலிருந்து கீழே  கருமை நிற கோர்ட் சூட் விகிதம் இறங்கி   நின்ற ரணதீர் வர்மன் தன் கண்ணில் அணிந்திருந்த கூலிங் கிளாஸை கழட்டி வெளியே நின்று இருந்த மனைவியை எப்பொழுதும் போல உணர்ச்சிகள் துடைத்து முகத்துடன் பார்க்க இவ்வளவு சீக்கிரமாக வருவான் என்று எதிர்பாராத விருஷ்டி ஆனந்த அதிர்ச்சியுடன் தன் வயதையும் மறந்து வேகமாக அவனை நோக்கி ஓடினாள் சேலை கொசுவத்தை மேலே தூக்கி பிடித்து கொண்டு என்னங்க.... என்ற மகிழ்ச்சி கூவலுடன்.


தொடரும்.


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....