காவலனோ காதலனோ 45
"பெரியம்மா நான் டியூட்டிக்கு கிளம்புவோம் முன்னாடியே கொடுக்காமல் லீவு போடக்கூடாது பெரியம்மா நான் இன்னைக்கு டூயுட்டிக்கு போயிட்டு வந்துடறேன் அப்புறம் கூட லீவ் எடுத்துகிறது பத்தி யோசிக்கிறேன்" என்று ஆத்ரேயன் கூறிக் கொண்டிருக்கும் போது "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நீ அப்படி எல்லாம் ஒன்னும் இன்னைக்கு டியூட்டிக்கு போகணும்னு அவசியமே கிடையாது ரொம்ப நாள் கழிச்சு நம்ம எல்லாரும் மீட் பண்ணி இருக்கோம் ஏன்டா இப்படி பண்ற ஒழுங்கா இங்கேயே இரு" என்று கூறிக் கொண்டே சமையல் அறைக்குள் சமைத்துக் கொண்டிருந்தாள் ஆர்ஷிகா சைத்ரனும் ஆத்ரேயனை வெளியே செல்லாதவாறு அவனை தடுத்து பிடித்து அவன் அருகே அமர்ந்திருந்தவன் "அதான் என் பொண்டாட்டி சொல்றாளே அதைக் கேட்டு ஒழுங்கா வாய மூடிட்டு ஒக்காந்து இரு அதுதான் உனக்கு நல்லது இல்ல பெல்ட் எடுத்து வெலாசிட்டுவேன்" என்று விழிகளை உருட்டி பொய்யான கோபத்துடன் அவன் கூறியதை கேட்டு "எங்க அண்ணாவை அடிச்சு பாருங்க" என்று துணையாக வந்து நின்றனர் தன் அண்ணனுக்காக யுக்தா மற்றும் தீரா ஆர்த்தியோ நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக ஓரமாய் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை "அம்மா தாய்களா உங்க அண்ணன எதுவும் பண்ணல எதுவும் சொல்லவே இல்ல நீங்க எது பேசுரதா இருந்தாலும் போய் உங்க அம்மாகிட்ட பேசிக்கோங்க என்ன விடுங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து கலண்டு கொண்டான் சசிதரன். அவனின் செயலை கண்டு அனைவரும் வாய்விட்டு சிரிக்க ஆர்த்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது அங்கிருந்து எழுந்து நகர முற்பட "ஆர்த்தி ஒரு நிமிஷம் நில்லு" என்று அவளை இடை நிறுத்தினான் ஆத்ரேயன் அவனின் குரலில் அப்படியே நின்றாள் அவள். அப்போது அவன் புறம் திரும்பி கூட பார்க்கவில்லை அவளருகே சென்று அவள் தோளோடு கை போட்டு "என்ன ஆச்சு என் தங்கச்சிக்கு என் மேல கோவமா?" என்று அவன் சாதாரணமாக கேட்க அவன் கூறிய வார்த்தைகளில் வெகுண்டு எழுந்தவள் படார் என்று அவனுக்கு அறத்தை தட்டி விட்டு "தொடாத என்ன" என்றாள் கோபமாய். அவளின் செயலில் அனைவரும் அதிர்ந்து போயினர் "ஏய் ஆர்த்தி ஏன் இப்படி பண்ற அண்ணாவே இப்பதான் அமைதியா நம்ம கிட்ட பழையபடி பேச ஆரம்பிச்சு இருக்கான் உனக்கு அது பொறுக்கலையா எதுக்கு அவன் கிட்ட இப்படி நீ கோவமா பேசுற" என்று யுக்தா கேட்க ஸ்நீ வாய மூடு உனக்கு எதுவும் தெரியாது இவ்வளவு நாள் நீ வெளிநாட்டில் போய் உட்கார்ந்துகிட்டு இருந்தே அதனால உனக்கு எதுவும் தெரியல ஆனா இங்க இருந்துட்டு இவன் முகத்தை பார்க்க முடியாம நாங்க பட்ட கஷ்டம் நாங்க தவிச்சு தவிப்பு எங்களுக்கு மட்டும்தான் தெரியும் இவன் இப்ப திடீர்னு வந்து தங்கச்சின்னு உரிமையா பேசினா நான் அமைதியா அதை ஏத்துக்கிட்டு அண்ணேனு இவன் கிட்ட உருகிட்டு நிக்கணுமா" என்று அவள் கோபமாய் கேட்க அவளைத்தான் மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஆத்ரேயன் ஆனால் அவனின் பார்வையை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாதவள் "தங்கச்சி அது இதுன்னு என் பக்கத்துல வந்து பாரு அப்புறம் இருக்கும் உனக்கு. மூஞ்சிய முகரையும் பாரு எருமை மாடு" என்று அவனை திட்டி விட்டு அவள் அங்கிருந்து வேகமாய் கிட்சனுக்குள் நுழைந்துகொள்ள அவளின் செயலில் அனைவரும் கவலை அடைந்தனர் "ஏன் இந்த பொண்ணு எப்படி பண்றா இவனே இப்பதான் மனசு மாறியே நம்ப கிட்ட சாதாரணமா பேச ஆரம்பிச்சிருக்கான் இது பொறுக்கலையா அவளுக்கு. இந்த மாதிரி நேரத்துல அவனை கோபப்படுற மாதிரி ஏதாவது பண்ணானா அப்புறம் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா ivan முறுக்கிக்க போறான்" என்று சைத்ரன் புலம்பு ஆத்ரேயன் சென்ற அவளை பார்த்துதான் சிரித்துக்கொண்டிருந்தான். அவனின் செயலில் யுக்தா தீரா சைத்ரம் மூவரும் அவனை புரியாமல் பார்க்க சிரிப்புடனே சைத்ர்அனின் புறம் திரும்பியவன் "ஏன் பெரியப்பா இன்னும் ஆர்த்தி வளரவே இல்லல்ல சின்ன வயசுல எப்படி என்கிட்ட சண்டை போட்டுட்டு முகத்தை திருப்பிட்டு போவாளோ அதே மாதிரி பண்ணிட்டு இருக்கா" என்று அவன் கூற அதை கேட்ட சைத்ரன் "ஏண்டா டேய் அவ உன் மேல கொலவெறியில் அந்த கத்து கத்திட்டு போறா நீ என்னடான்னா இளிச்சுக்கிட்டு இருக்க" என்று அவனை பார்த்து
கேட்க "அவளோட கோவம் எல்லாம் எவ்வளவு நாளைக்கு என்று நானும் பார்க்கிறேன் நீங்க இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க" என்று அவன்கூடற அதைக்கேட்டு சரி என்று தலை அசைத்தான் சைத்ரன் அந்நேரம் தன் பெரிய மகளை திட்டிக்கொண்டே ஹாலுக்கு கையில் கேசரியுடன் வந்த ஆர்ஷி "நம்ம வீட்டுக்கு சீக்கிரம் வரத பத்தி முடிவெடு ஆது. அதுதான் எல்லாருக்கும் நல்லது நம்ம எல்லாரும் பழையபடி ஒண்ணா ஒரே வீட்ல இருக்கணும்னு நான் நினைக்கிறேன் அது மட்டும் இல்ல நீ பேசுன பேச்சுல மிருஷி வேற ரொம்ப வருத்தப்பட்டா அவ உன்ன விட்டு பிரிந்து எவ்வளவு தவிச்சி இருக்கானு கொஞ்சம் யோசிச்சு பாரு சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வந்துடு" என்று அவள் கூறும் பொழுதே 'அப்படியே இவனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்றது பத்தியும் ஒரு முடிவு எடுக்கணும்" என்றார் ஆதவி வாசுதேவனும் அதை ஆதரித்தவர் "இவனுக்கும் வயசு ஏறிக்கொண்டே போகுது சீக்கிரமா இவனுக்கும் ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் இவ்வளவு நாள் இவன் நம்ம கூட இல்லாததுனால கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிச்சிருக்க மாட்டான் ஆனால் இனி நம்ம தான் இவனுக்கு எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணனும்" என்று அவர் கூற சட்டேன்று அவன் நினைவுகளில் வந்து போனாள் அவன் மனம் கவர்ந்தவள்
"அதுக்கு என்ன ஒரு நல்ல பொண்ணா நம்ம பார்க்க ஆரம்பித்து விடலாம்" என்று சைத்ரன் கூற "அதுக்கெல்லாம் அவசியமே இல்ல பெரியப்பா" என்றான் அவன் அழுத்தமான குரலில். அதில் அனைவரும் அவனை புரியாமல் பார்க்க அனைவரையும் பார்த்தவாறு ஒரு ஆழப் பெரும் மூச்சை உள்ளெழுத்து வெளியிட்டவன் "நான் ஒரு பொண்ண விரும்புற பெரியப்பா அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்" என்றான் அழுத்தமான குரலில்
அதே நேரம் இங்கு வர்மனின் வீட்டில் மிகப்பெரிய சண்டையே நடந்து கொண்டிருந்தது அவன் வீட்டு ஹாலில் விருஷ்டி அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்லாமல் கைகளை கட்டிக்கொண்டு எங்கேயோ பார்வை பார்த்தவாறு நின்று இருக்க ஹால் சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அவளைத்தான் உருத்து விழித்துக் கொண்டிருந்தான் வர்மன். விருஷ்டியோ அவனின் பார்வையை சந்திக்க இயலாமல் தடுமாறி நின்று இருக்க அதர்வாவோ கோபத்தில் காச்சி மூச்சு என்று கத்திக் கொண்டிருந்தான் "அம்மா அறிவு இருக்கா உங்களுக்கு யாரோ என்னமோ சொல்றாங்கன்னு கேட்டுகிட்டு நீங்களே இப்படி ஆடுறீங்க நீங்க எடுத்திருக்க முடிவு முட்டாள்தனமானது. இது நாமலே நம்ப சைத்துவ மத்தவங்களுக்கு தப்பா எடுத்துக்காட்டுற மாதிரி ஆகிடாதா இந்த முடிவை தயவு செஞ்சு மாத்திக்கோங்க"என்று அதர்வா கூற " பெரியம்மா நீங்க என்ன யோசித்து இந்த முடிவெடுத்தீங்கன்னு எனக்கு தெரியல ஆனா நான் ஒன்னு சொல்றேன் நல்லா கேளுங்க யாரோ என்னமோ சொன்னார்கள் என்பதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவு எடுத்து வச்சிருக்கீங்க நீங்க இப்படி பண்றது அவளுக்கு எவ்ளோ கஷ்டத்த கொடுக்கணும் கொஞ்சமாவது யோசித்து பார்த்தீர்களா இப்படி பண்ணா நாமளே அவளை சந்தேகப்படுற மாதிரி ஆகிவிட்டதா பெரியம்மா. ஏன் இப்படி பண்றீங்க" என்று அகஸ்தியா ஒரு புறம் கேட்க "முதல்ல எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு இன்னிக்கி அந்த லேடி கேட்ட மாதிரி நாளைக்கு இன்னும் எல்லாரும் கேட்க தானே செய்வாங்க அதனாலதான் நம்மளே முன்னாடி இப்படி ஒரு முடிவு எடுத்திடலாம்னு நினைச்சேன் தயவு செஞ்சு என்னோட முடிவுக்கு எதிரா யாரும் பேசாதீங்க சைத்துக்கு அந்த பையனை கல்யாணம் பண்ணி வைக்கலாம் நான் முடிவு பண்ணிட்டேன் இது தான் என்னோட முடிவு" என்று விருஷ்டி கூறிக் கொண்டிருக்கும் பொழுது "யாரை கேட்டு இந்த முடிவு எடுத்தீங்க" என்று கோபமாய் கூறியவாறு படிக்கட்டில்
ஆக்ரோஷமாக இறங்கி வந்தாள் சைத்தாலி அவளின் சத்தத்தில் அனைவரும் அதிர்ந்து போயினர்
மென்மையை மட்டுமே குணமாய்க் கொண்ட அவளின் இந்த ஆக்ரோஷம் அனைவரையுமே பயம் கொள்ள வைத்தது அகஸ்தியா வேகமாய் தன் தமக்கையின் அருகே சென்றவன் "அக்கா ப்ளீஸ் கோபப்படாத எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்" என்றான் அமைதியான குரலில் "இன்னும் என்ன பொறுமையா இருக்கணும் ஆகஸ்தியா இவங்க வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவாங்க அதை கேட்டு கிட்ட நான் அமைதியா இருக்கணுமா இவங்க யாரு என் வாழ்க்கையில இப்படி ஒரு முடிவு எடுக்கறதுக்கு?" என்று அவள் ஆக்ரோஷமாய் கத்த "சைத்து அமைதியாக இரு" என்று அவளை அடக்கினான் வர்மன் ஒரே வரியில் "முடியாது பிபா என்னால அமைதியா இருக்கவே முடியாது இவங்க மத்தவங்க சந்தேகப்படுறாங்க மத்தவங்க சந்தேகப்படுறாகண்ணு சும்மா சப்பக்கட்டு கட்டுறாங்க இவங்களுக்கு தான் என் மேல சந்தேகம் அதனால தான் இப்படி ஒரு கேவலமான டிசிஷன் எடுத்துருக்காங்க" என்று அவள் கூற "எது கேவலமான டிஷிஷன்" என்றாள் விருஷ்டி கோவமாக "இப்ப நீங்க எடுத்து இருக்கீங்களே அதுதான் ரொம்ப கேவலமான டெசிஷன். யாரோ ஏதோ சொன்னாகண்ணு எப்படி நீங்க அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு எடுப்பீங்க அப்போ மத்தவங்க எது சொன்னாலும் அதைக் கேட்டு அப்படியே லைஃப்ல நீங்க முடிவு எடுப்பீங்க அப்படித்தானே" என்று அவள் கேட்க ஆமா என்றார் அழுத்தமான குரலில் விருஷ்டி அதில் அதிர்ந்து போனவள் கண்களில் கண்ணீர் வடிய அவரே பார்க்க "அம்மா இப்டி எல்லாம் இப்படி பேசி எங்கள் எல்லாரையும் கோபப்படுத்தாதீங்க" என்றான் அதர்வா கோவமாக
"இந்த விஷயத்துல யார் சொல்றதயும் நான் கேட்க போறது இல்ல. என் பொண்ணோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம் அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் நஇங்க பாரு சைத்து நீ அந்த பையன் ஆத்ரேயனை கல்யாணம் பண்ணிக்கணும் அந்த காட்டுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் அவ்வளவு நாள் ஒன்னா இருந்தீங்க அப்ப யாரா இருந்தாலும் சந்தேகப்பட்ட தான் செய்வாங்க" என்று அவர் கூறும் பொழுதே 'மத்தவங்க சந்தேகப்படுகிறாங்களா இல்ல நீங்க சந்தேகப்படுறீங்களா?" என்றாலள்.அவள் கரகரத்த குரலில் அவரை தீர்க்கமாய் பார்த்தவாறு. அதில் பதறிப் போன விருஷ்டி "என்ன டி இப்படி எல்லாம் பேசுற" என்று அவளை நெருங்க முற்ப்பட "கிட்ட வராதீங்க " என்றாள் ஒற்றை வரியில் ஆக்ரோஷமாய் சைத்தாலி
அவளின் சத்தத்தில் அதிர்ந்து போன விருஷ்டி "சைதது நான் சொல்ல வரத முதல்ல கேளு..." என்று அவளிடம் பேச முற்பட "இதற்கு மேல நீங்க ஒரு வார்த்தை பேசினீங்க அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்" என்றாள்.ஆவேசமாக. அகஸ்தியா தன் தமக்கையின் கரங்களை பிடித்து அவளை சமாதானப்படுத்த போராட அவன் கரத்தை வெடுக்கின்ற உதறிவிட்டவள் "இப்ப என்ன நான் அவரை கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தானே" என்று அவள் விருஷ்டியின் கண்களை ஆழ நோக்கியவாறு வெறுப்புடன் மொழியை அவளின் வெறுப்பில் கண்கள் கலங்கி போனது விருஷ்டிக்கு சைததுவோ தன் பார்வையை மாற்றாது தன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் மனதுக்குள் தன் தாயே தன்னை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டாறே என்ற கோபம் வெறியாக மாறி இருந்தது.
தொடரும்.....
Comments
Post a Comment