காவலனோ காதலனோ 49

நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த அந்த மிகப்பெரிய மண்டபமே அன்று விழா கோலம் பூண்டு இருந்தது வர்மன் மற்றும் ராவணனுக்கு தெரிந்த அனைத்து பிசினஸ் மேன்களும் ராவண ஆத்ரேயன் மற்றும் தஷையா சைத்தாலியின் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர் இரு குடும்பமும் பரப்பரமாக இயங்கிக் கொண்டிருந்தது அதர்வா ஒரு புறம் சிரத்தையாக தன் மனம் கவர்ந்தவளை சீண்டும் வேலையில் கவனமாக இருந்தான் தாம்புல தட்டை தூக்கிக்கொண்டு மணமேடை நோக்கி சென்று கொண்டிருந்தவளை இடையிலே வழிமதித்தவன் அவளை அப்படியே கடத்திக் கொண்டு வந்து ஒரு அறையினுள் ந சிறை செய்து விட்டான் ஆணவன் அவனின் செயலில் அதிர்ந்து போனவள் "என்ன பண்றீங்க?" என்றாள் யாராவது தங்களை பார்த்து விட்டார்களோ என்ற பயத்தில். ஆனால் அதை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாதவன் "என்ன பண்றேன்னு தெரியலையா உனக்கு?" என்றான் அவளை சுவரோடு சிறை செய்தவாறு ஒற்றை கண்ணடித்து. அவனின் செயலில் உள்ளுக்குள் அவனை ரசித்தாலும் வெளியே விரைப்பாக முகத்தை வைத்தவள் "இப்படி எல்லாம் பண்ணாதீங்கன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன் நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்க முதல்ல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு ஒத்துக்கணும் அதுக்கப்புறம் தான் நமக்கு கல்யாணம் நடக்கும் இது எத்தனை தடவை சொன்னாலும் ஏன் நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க?" என்று அவள் கூற அதைக் கேட்டு இதழ் வளைத்து அவளை ஒரு பார்வை பார்த்தவன் "அவங்க ஒத்துக்கிறார்களோ இல்லையோ நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும்" என்றாம் அவன் அழுத்தமான குரலில். அதில் சலித்துக் கொண்டவள் "நடக்கும் நடக்கும். நல்லா நடக்கும். என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு எங்க அப்பா முதல்ல ஒத்துக்கணும்" என்று அவள் வேண்டுமென்றே அவனை மீண்டும் வகையில் கூற "அதில் உங்கள் அப்பா ஒத்துக்குவாரு செல்லம் எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக் கொடுப்பதற்கு உங்க அப்பா ஒத்துக்கிட்டாதான் என் அக்காவா அந்த வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைப்பன்னு நான் உங்க அப்பாவுக்கே செக் வைப்பேன் நான் யாருன்னு தெரியும்ல" என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்தி நக்கலாக கேட்க அதில் அதிர்ச்சியில் வாயில் கையை வைத்தவள் "ஆத்தி என்ன நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க இதெல்லாம் ரொம்ப அநியாயம். இதில் அண்ணனோட லைஃபை அடங்கி இருக்கு. அவனை எதுக்கு உள்ள இழுக்கிறீங்க?" என்றாள் அவள் கோபமாக 


"அதெல்லாம் எனக்கு தெரியாது உனக்கு என்ன புடிச்சிருக்கு அதை நீ ஒத்துக்க மாட்டேங்குற அப்ப டைரக்டா உன் அப்பா அம்மா கிட்ட கல்யாணம் விஷயத்தை நான் பேச வேண்டியது தான் பாக்கி. அவங்கள சம்மதிக்க வைத்துவிட்டனாலே அதுக்கு அப்புறம் இந்த மாமன் கிட்ட இருந்து உன்ன யாராலும் பிரிக்க முடியாது பொண்டாட்டி" என்று அவன் ஒற்றை கண்ணடித்துக் கூற அதில் சிவந்து போனவள் அவனை தள்ளிவிட்டு வேகமாய் அங்கிருந்து ஓடிவிட்டாள் அவளை காதலிக்கிறேன் என்று வெளிப்படையாகவே அவளிடம் அவன் கூறிய பொழுதும் அவளுக்கு அவன் மீது விருப்பம் இருந்தாலும் தன் பெற்றோர் தங்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே பெண்ணவளின் மனதுக்குள் ஓங்கி நின்றதும் அவளும் அவனிடம் கூறிக் கொண்டுதான் இருக்கிறாள் தன் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே தம் திருமணம் நடக்கும் என்று. ஆனால் அவன் தான் நம் காதல் உண்மை என்ற பொழுது நிச்சயம் நம் திருமணம் நடந்தே தீரும் என்று அவளை சரி கட்டிக் கொண்டு வந்துள்ளான்

மணமேடையில் ஆத்ரேயன் கம்பீரமாக அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க அவன் மனமும் குழப்பத்தின் பிடியில் சிக்கி தவித்தது. "இன்ன வரைக்கும் கல்யாணம்னு ஒரு பேச்சு எடுத்த பிறகு நம்ம ஆளு  நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட பேசல அதுக்கு முன்னாடியாவது நம்மள பார்ப்பா ஏதாவது பேசுவா இப்ப அது கூட இல்லை. அவ மனசுல என்னதான் ஓடுதுன்னு தெரிய மாட்டேங்குது நம்மளும் எவ்வளவு தடவை பேச முயற்சி பண்ணியும் அவகிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்ல தேவையில்லாம மிஸ் கிட்ட நான் அவளை காதலிக்கிற விஷயத்தை சொல்லி இந்த கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திட்டோம்னு இப்ப யோசிக்கிறேன.பேசாம பொறுமையாவே அவளை ஹேண்டில் பண்ணி இருக்கலாம் இதுல ஒரு பக்கம் என்னோட கட்டபொம்மன் மாமனார் வேற வெரப்பா என்ன முறைச்சிகிட்டே சுத்துறார.இப்ப நான் என்னதான் பண்றது" என்று மனதுக்குள்ளயே ஆத்ரேயன் நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க அந்நேரம் சைத்தாலியை அழகாக அலங்கரித்து மணமடை நோக்கி அழைத்துக் கொண்டு வந்தனர் உறவுக்கார பெண்கள் 

வர்மன்  விருஷ்டி தங்கள் மகளின் அழகில் அவளை ரசித்துக் கொண்டே நின்று இருக்க மிருஷிகா ராவணன் இருவரும் தங்கள் பிள்ளைகள் இருவரும் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நின்றனர் மணமேடையின் கீழே.  எவ்வித உணர்வும் இன்றி ஒரு ஜடம் போல் நடந்து வந்து ஆத்ரேன் அருகில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள் சைத்தாலி. மருந்துக்கும் அவள் முகத்தில் சிரிப்பும் இல்லை அவனை திரும்பி அவள் பார்க்கவும் இல்லை..ஆனால் ஆத்ரேயனோ வைத்த கண் வாங்காமல் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். தான் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய அழகிய திருமண பட்டுப் புடவையில் அவள் ஜொலித்துக் கொண்டிருப்பதை கண்டவனுக்கு கவலையும் மீறி உள்ளுக்குள் ஒரு சிறு சந்தோஷம் இருக்கத்தான் செய்தது ஆனால் அவள் தன்னை விட்டு தள்ளி அமர்ந்ததை நினைக்கும் பொழுது கோபமாக வந்தது அவனுக்குள்

"இன்னும் எவ்வளவு நாள் இப்படியான விட்டு விலகி போகிறன்னு பார்க்கிறேன்" என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான் அவன். அவளோ அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருக்க ஐயர் மந்திரங்களை உச்சரித்து மங்களம் நானே எடுத்து ஆத்ரேயன் கரங்களில் கொடுத்தார் அதை வாங்கியவன் அதை அவள் கழுத்தில் கட்டாமல் அவளையே அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருக்க வர்மன் தம்பதியும் ராவணன் தம்பதியும் ஏன் அவன் இன்னும் தாமதிக்கிறான் என்று குழப்பத்துடன் அவனை பார்த்தனர் "என்ன டி இவன் தாலியை கைல வச்சிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கான்" என்று கோபமாக தன் மனைவியிடம் கேட்க "இருங்க அவன் என்னமோ மனசுல நினைக்கிறான் வெயிட் பண்ணி நம்ம பார்ப்போம்" என்று கூற அதற்குள் மண்டபத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டு விட்டது ஆத்ரேயன் அமைதியில் மண்டபத்தில் ஏற்பட்ட சலசலப்பில் நிமிர்ந்து பார்த்த சைத்தாலி தன் கழுத்தில் இன்னும் மாங்கல்யம் ஏறாமல் இருக்கவே திரும்பி தன் பார்வையை ஆத்ரேயனின் புறம் பதித்தாள் அவனோ  கையில் இருந்த மாங்கல்யத்துடன் அவளையே அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருக்க அவனை தான் புருவம் சுருக்கி பார்த்தாள் பெண்ணவள்.  அவனும் அவள் கண்களை ஆழமாய் ஊடுருவியவன் "என்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு உனக்கு சம்பந்தமா சைத்தாலி, வாழ்க்கை முழுக்க என் மனைவியா மட்டும் இல்லாம என்னோட சரிபதியா மாறி என்கூட பயணிப்பதற்கு உனக்கு விருப்பமா" என்றான் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவாறு. அவன் கூறியதை கேட்டவளுக்கு வியப்பில் விழிகள் விரிந்தது திருமணத்திற்கு சம்மதமா என்று மணமேடையில் கேட்கும் அவனை நினைக்கும் பொழுது அவளுக்கு ஆச்சரியமாக இல்லாமல் இல்லைம் அவள் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருக்க விருஷ்டியோ தன்மகள் ஏதாவது பிரச்சனை செய்து வைக்கப் போகிறார் என்று பயந்து வர்மனின் கரத்தை இறுக பிடித்துக் கொள்ள அவள் கரத்தை உதறிவிட்டான் வர்மன் 


அவனின் செயலில் விருஷ்டி அவனை அடிபட்ட பார்வை பார்க்க " என்ன டி பாக்குற. நீ பண்ணதுக்கு எல்லாம் இதெல்லாம் ரொம்ப கம்மி. நீ விஷயம் என்னங்கிறது என் பொண்ணு கிட்ட சொல்லி அவளை இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிருந்தாலே அவளே சரின்னு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருப்பா. ஆனா அவ மனச காயப்படுத்திய அவள கஷ்டப்படுத்தி இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்க வச்சதுக்கு உன்னை அப்படியே கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு எனக்கு இப்போவும் கோவம் வருது ஒரு விதத்தில் நீ பண்ணது சரிங்குறதுனாலஅமைதியா இருக்கேன். ஆனாலும்  என் பொண்ணு மனச நீ காயப்படுத்தினதை சரின்னு நான்  என்னைக்கும் ஒதுக்கவே மாட்டேன்" என்று கோபமாக கூறியவன் அவளை விட்டு விலகி இரண்டு அடி தள்ளி நிற்க கண்ணீர் அவள் கண்களில் முட்டிக்கொண்டு நின்றது அவன் பேசிய வார்த்தைகளில் அதில் மேலும் விழிகளை உருட்டி அவளை பார்த்தவன் "லிசன் மீரா என் பொண்ணு கல்யாணம் நடக்குற நேரத்துல நீ இப்படி கண்ண கசக்கிட்டு நின்னினா அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் பழைய வர்மனா நான் திரும்பி மாறுனா உன்னால தாங்கிக்கவே முடியாது நான் யாருன்னு உனக்கு தெரியும்ல என் உண்மையான முகத்தை மறைச்சிகிட்டு உன்னிடம் உன்னோட புருஷன் வர்மனா நான் நடந்துக்கணும்னு நினைக்கிறேன் பழைய வர்மன மறுபடியும் எனக்குள்ள கொண்டு வரணும்னு நினைக்காத நீ தாங்க மாட்ட"என்று அவன் கோபமாய் கூற அதைக் கேட்டவளுக்கு பயத்தில் உடல் நடுங்கியது பழைய வர்மன் எப்படிப்பட்டவன் என்று அவளுக்கு நன்றாகவே தெரியுமே அதனால் அவள் கண்ணீரை உள்ளெடுத்துக்கொண்டு அமைதியாக தலை குனிந்து நிற்க அவள் நிலை கண்டு கஷ்டமாக அவனுக்கு இருந்தாலும் அவள் செய்த தவறை அவள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அமைதியாக இருந்தான்  அவளை ஆறுதல் படுத்தாமல் 

இவர்களின் சம்பாஷனை ராவணன் மற்றும் மிருஷிகாவிற்கு கேட்டாலும் ஏன் இப்படி இவர்கள் கோபப்பட்டு கொள்கிறார்கள் என்று புரியவில்லை அவர்களுக்கு. ஏனெனில் விருஷ்டி என்ன காரணத்தை கூறி சைத்தாலியை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தாள் என்று அவர்களுக்கு தெரியாது அதை அவர்களிடம் கூறாமல் மறைத்து விட்டார்கள் அனைவரும்.  தெரிந்தால் மிருஷிகா நிச்சயம் விருஷ்டியிடம் கோபப்பட்டு இருப்பாள் ஏன் இப்படி ஒரு காரணத்திற்காக என்னை திருமணத்தை நடத்த விரும்பினீர்கள் என்று . ஒருவேளை அவள் கோபம் அறிந்து தான்  விருஷ்டி மறைத்து விட்டாலோ என்னவோ. இன்னுமும் பதில் சொல்லாமல் அமைதியாக சைத்தாலிய அமர்ந்திருக்க ஒரு பெருமூச்சு வெளியிட்ட ஆத்ரேயன் "உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இந்த கல்யாணத்தை பண்ணனும்னு அவசியம் இல்ல சைத்தாலி. இப்போவும் ஒன்னிம்  கெட்டு போகல இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் மனமுழுக்க வலியோடவும் வேதனையோடவும் நான் கட்டுற தாலியை நீ உன் கழுத்துல வாங்கிக்கணும்னு அவசியம் இல்ல" என்று கூறியவள் தாலியை அவள் கழுத்து அருகே இருந்து இறக்கிவிட்டு வேகமாய் மனமேடையில் இருந்து இடம் முற்பட அவனை ஒற்றைக்கரத்தால் தடுத்து பிடித்திருந்தாள் பெண் அவள். அவரின் செயலில் அவன் அவளை அழுத்தமாய் பார்க்க "எனக்கு முழு சம்மதம்ம்" என்றாள் கணீர் குரலில் அவனை கம்பீரமாய் நேருக்கு நேராய் பார்த்தவாறு. அவள்  கூறியதை கேட்டவனுக்கு இதழின் ஓரம் ஒரு சிறு புன்னகை வெளிவந்தது அதை அடக்கிக் கொண்டு மீண்டும் மேடையில் அமர "என்ன நடக்குது இங்க கல்யாண மேடைல வந்து பண்ற வேலையா இதெல்லாம்" என்று ஐயர் தனக்குள்ளேயே முணங்கிக் கொண்டு மீண்டும் மந்திரம் உச்சரிக்க ஆரம்பிக்க இப்பொழுது அவனின் முழு விருப்பத்துடனே அவளின் கழுத்தில் மங்களன் நானே கட்டி தன்னவலாக அவளை ஏற்றுக் கொண்டான் ஆத்ரேயன்.

மற்றவர்களுக்கும் இப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்தது போல் இருக்க மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்தனார் அவர்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு 

இங்கு நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த மிகப்பெரிய கப்பலில் சிவனேஸ்வரனோ கோபத்தில் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். "டேய் ஆத்திரேயா எனக்கு சொந்தமானவளே நீ உனக்கு சொந்தமாக்கிக்கிட்ட இல்ல. உன்ன விட மாட்டேன் டா என்ன தான் நீ அவள் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் அவளோட உன்னை சேர்ந்து வாழ நான் விடவே மாட்டேன் ஒரு நாளாவது அவள் என்னுடைய இச்சைக்கு நான் பயன்படுத்திக்கிட்டு அவளை கசக்கி எரியல நான் சிவனேஸ்வரன் இல்லடா" என்று அந்த கப்பலே அதிரும் அளவிற்கு கர்ஜித்தான் சிவனேஸ்வரன் .

(இவன். யாருன்னு மறந்திருப்பீங்க இவன் தாங்க நம்ப வில்லன் இவனை இனி ஞாபகம் வச்சுக்கோங்க கதையில இனி இவன் வருவான்)


தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....