காவலனோ காதலனோ 51



"தலை நிநிர்ந்து உட்காரு ஆது என் பிள்ளையை எப்பவும் தல குனிஞ்சு உட்காரவே  கூடாது" என்று ராவணன் கூர அவன் கூறியதை கேட்டு அவனை நிமிர்ந்து அமர்ந்து கம்பீரமாய் ஒரு பார்வை பார்த்தான் ஆத்ரேயன். அதில் இதழ் ஒரு சிறு புன்னகை உதிர்த்த ராவணன் "சொல்லு என்ன நடந்தது?" என்று  அவன் கண்களை ஆழ ஊடுருவியவாறு அவன் கேள்வியே அவனை பார்க்க முடியாமல் தடுமாறியவன் வேறு புறம் தன் பார்வையை திருப்ப "என்ன பாரு ஆது என் முகத்தை பார்த்து நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு  இவ்வளவு நாள் நான் அமைதியா இருந்தேன். நீ திடீர்னு வந்து கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லும் போது கூட நீ பண்றது சரியா இருக்கும்னு நினைச்சு தான் நீ எடுத்த முடிவுக்கு நான் உனக்கு ஆதரவு கொடுத்தேன் ஆனா இப்போ என்ன நடந்தது என்று எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன் நீயே சொல்றியா இல்ல நானே எல்லாத்தையும் தெரிஞ்சிக்கவா?" என்று ராவணன் அழுத்தமான குரலில் வினவ அவனை ஒரு பெருமூச்சுடன் ஏறிட்ட ஆத்திரேயன் சிறுவயதில் இருந்து சைத்தாலியை தான் காதலித்தது வர்மன், தான் வாழ்வில் முன்னேறிய பின்பு அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியது அதன் பின்பு சிவனேஸ்வரனின் கூட்டத்திடம் இருந்து சைத்தாலியை காப்பதற்காக காட்டிற்குள் அவளை கடத்திச் சென்றது பின்பு அவளை மீண்டும் அவள் பெற்றோரிடமே ஒப்படைத்தது அதன் பின்பு விருஷ்டியை நேரில் பார்த்து திருமணம் சம்பந்தமாக பேசியது என்று அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான் ஆத்ரேயன் 


அவன் கூறியதை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ராவணன் ஒரு பெருமூசை ஒன்றை விட்டு அவனை பார்த்தான் 'இதுக்கு மேல என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலப்பா அவ கிட்ட எப்படி இந்த விஷயத்தையெல்லாம் நான் சொல்ல போறேன்னு எனக்கு புரியல. இதை எல்லாம் சொன்னால் அதை ஏத்துக்குவாளன்னு   தெரியல்லை அதுதான் என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியாம ஒரே தடுமாற்றமா இருக்கு" என்று அவன் கூற அதைக் கேட்டு சிறிது நேரம் யோசித்தான் ராவணன் 


பின்பு தன் மகனை ஏறிட்டவன் "எனக்கு தெரிந்து நீ இந்த எல்லா விஷயத்தையும் இப்பவே சைத்தாலி கிட்ட சொல்லிடுவது நல்லதுன்னு தோணுது இதை இன்னும் நீ தள்ளி போட்டுகிட்டே போனினா கண்டிப்பா உன்னோட வாழ்க்கையில இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு மிகப்பெரிய பிரச்சனையா வரத்துக்கான வாய்ப்புகள் இருக்கு அதனால இன்னைக்கு அவகிட்ட எல்லா விஷயத்தையும் பேசிடு ஆரம்பமே உங்க ரெண்டு பேரோட கல்யாண வாழ்க்கை பிரச்சனையோடு ஆரம்பிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். அது மட்டும் இல்ல. சைத்தாலி அவங்க அம்மா மேல ரொம்ப கோபத்தில் இருக்கா அது அவங்களை பார்க்கிற பார்வையை வைத்து என்னால உணர முடியுது இவ்வளவு நாள் ஏன் அவ அவங்கள வெறுத்து ஒதுக்கினாலும் நானுமே யோசிச்சிகிட்டு இருந்தேன் ஆனா இப்ப தான் அதுக்கான காரணம் புரியுது ஓகே லீவ் இட். இதுக்கு மேல இதையே பத்தி பேசினா உனக்கு இன்னும் ஸ்ட்ரஸ் அதிகமாகும் அதனால் முடிந்த அளவுக்கு சீக்கிரமா அவகிட்ட இந்த விஷயத்தை சொல்லிடு அதுதான் உனக்கும் நல்லது உங்களோட லைஃபுக்கும் நல்லது. அண்ட் சிவனேஸ்வரன் விஷயத்துல ரொம்ப கவனமா இரு. உனக்கு ஒண்ணுனா உனக்கு முன்னாடி உன் அப்பா உனக்கு அரனா நிற்பான். அதை மறந்துறாத" என்று ராவணன் கூற அவன் கூறியதை கேட்ட அவனை பார்த்தவனோ "அவ புரிஞ்சுக்குவாலாப்பா" என்றான் சோர்ந்த குரலில்ம்  அவன் கூறியதை கேட்டு இதழ் ஒரு சிறு புன்னகை உதிர்த்த ராவணன் எழுந்து அவன் அருகே சென்று அவன் தலையை கோதிவிட்டு "புரிஞ்சுக்கவா நீ புரிஞ்சுக்க வை அதுக்கு தானே நீ இருக்க உன் காதலோட ஆழம் எவ்வளவுன்னு அவளுக்கு முதல்ல உணர்த்து அப்புறம் தானாவே உன்னோட காதல் உன் கை சேரும்" என்று ராவணன் கூறிவிட்டு அங்கிருந்து நகர தன் தந்தை கூறிய வார்த்தைகளில் புது தெம்பு கிடைத்தது போல் ஆகியது ஆனவனுக்கு . நேரங்கள் வேகமாய் கடக்க வர்மன் விரு அதர்வா என அனைவரும் அவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பி தயாராக நின்றனர் சைத்தாலி அவர்களை வழி அனுப்புவதற்காக வந்து நிற்க வர்மன் தன் மகள் அருகே சென்று அவளை தோளோடு அணைத்தவன் "உனக்கு எந்த பிரச்சனனாலும் அப்பாக்கு கால் பண்ணு நான் உனக்காக எப்பயும் இருப்பேன் என்பதை மறந்துவிடாதே புரியுதா?" என்று அவன் அழுத்தமான குரலில் கூற கண்கள் கலங்கியது பெண்ணவளுக்கும்.இப்படி ஒரு நிலை வரும் என்று அறிந்திருந்தாள் ஆனால் இவ்வளவு விரைவில் வரும் என்று அவள் நினைக்கவில்லை குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது அவளுக்கு மிகுந்த வேதனையை கொடுக்க கண்ணீர் துளிர்க்க தயாராக இருந்தது அவள் கண்களில். அதை உணர்ந்த ஆத்திரேயன் அவள் அருகே சென்று அவள் கரங்களை இறுக்க பிடித்துக் கொண்டு வர்மனை பார்த்து "உங்க மகள் இப்ப என்னோட மனைவி அவளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது அப்படி எந்த பிரச்சனையும் அவளுக்கு வர நான் விடவும் மாட்டேன் நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க உங்க பொண்ண எப்ப நாளும் பாக்குறதுக்கு நீங்க இங்க வரலாம் அதுக்கு யாரும் உங்களுக்கு இங்கே தடை போட மாட்டாங்க" என்று அவன் கூற அவன் தன் கரத்தை பிடித்திருந்த இறுக்கத்தில் பெண்ணவளுக்கு சிறிது அழுகை மட்டுப்பட்டது. அவன் வார்த்தைகளில் காலையில் அவன் மீது ஏற்பட்ட கோபமும் கொஞ்சம் குறைந்தது. 

அவளும் பதிலுக்கு அவன் கரத்தை இறுக்கிக் கொள்ள தன் மனைவியின் முகத்தை ஆழ்ந்த நோக்கி விட்டு விருஷ்டியின் புறம் திரும்பிய ஆத்ரேயன்  கண்களால் அவலிடம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற அவ்வளவு நேரம் தன் மகளை பிரிந்து செல்ல போகிறோம் என்ற மன கவலையில் அழுது கொண்டிருந்தவரள் ஆத்ரேயனின் பார்வையில் சற்று ஆசுவாசமடைந்தாள்..அதர்வா சைத்தாலி அருகே வந்தவம் "இந்த வீட்டில் உனக்கு யாரோ எந்த பிரச்சினையும் கொடுக்க மாட்டாங்க இங்க எல்லாருமே உன்னை அவ்வளவு அன்பா பார்த்துக்குவாங்க அந்த நம்பிக்கையை எனக்கு இருக்கு அப்பா சொன்ன மாதிரி உனக்கு ஏதாவது ஒன்னுனா நாங்க கண்டிப்பா உனக்காக வந்து நிற்போம். ஆனா நாங்க உனக்கு துணையாக வந்து நிற்பதற்கு முன்னாடி இவங்க உனக்கு துணையா இருப்பாங்க . அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு நாங்க போயிட்டு வரோம் பத்திரமா இரு" என்று கூற அவன் கூறிய வார்த்தைகளில் தம்பியின் நெஞ்சில் முகம் புதைத்து அழுக ஆரம்பித்து விட்டாள் பெண் அவள்.  தன் தமக்கையின் கண்ணீரை கண்டு அவனுக்கும் கண்ணீர் வருவது போல் இருக்க அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைத்தவன் அவள் தலையை கோதி கொடுத்து அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு விட்டு வேகமாய் அங்கிருந்து நகந்தான் தன் கண்ணீரை மறைக்கும் பொருட்டு 


தீராவிற்கு அவளின் கண்ணீர் ஒரு வித வலியை ஏற்படுத்தியது தனக்கும் நாளை இப்படி ஒரு நிலை தான் வரும் நானும் இந்த வீட்டில் இருந்து திருமணம் முடிந்து செல்லும் பொழுது தன் தாய் தந்தையுடன் இப்படித்தான் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பேன் என்று அப்போதே அவள் மனதுக்குள் தோன்றியது. அதை என்னும் பொழுது சோகமாகவும் இருந்தது அவளுக்கு. சைத்தாலி தந்தை மற்றும் தமையனிடம் பேசியவள் விருஷ்டியிடம் ஒரு பெயருக்கு கூட சென்று வாருங்கள் என்று ஒரு வார்த்தை கூறவில்லை அவ்வளவு ஏன் அவள் முகத்தை கூட பார்க்கவில்லை மற்றவர்கள் திருமண கலைப்பில் இருந்ததால் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர் ஆனால் ராவணன் அதை நன்றாக கவனித்து விட்டான் மிருஷிகா விற்கும் அது கண்ணில் பட்டாலும் இதைப்பற்றி பிறகு யோசித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்

அனைவரும் வாசல் வரை சென்று வர்மனின் குடும்பத்தை வழி அனுப்பி வைத்தனர் காரில் வர்மன் அருகே அமர்ந்த விருஷ்டிக்கு மகளின் நினைவில் கண்களில் கண்ணீர் சுரந்தது அதிலும் அவளின் வெறுப்பு அவள் மனதுக்குள் மேலும் வலியை ஏற்படுத்தியது மெல்ல தலையை குனிந்து கையை இறுக பிடித்தவாறு அவள் கண்ணீர் விட்டு கொண்டிருக்க தன் மனைவியின் கண்ணீரை காண முடியாமல் தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவளை தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டான் வர்மன் கண்ணாடியின் வழியே இதை கண்டு அதர்வாவிற்கு அவர்களின் காதலை கண்டு வியப்பாக இருந்தது "அப்பாக்கு என்னதான் கோவம் இருந்தாலும் அம்மா அழுதாங்கன்னு அவங்கள இவ்வளவு அன்பாக பார்த்துக்கிறாரு நம்மளும் வருங்காலத்துல நம்ம ஆள இப்படித்தான் பார்த்துக்கணும்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் தீராவை வாழ்நாளில் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று.

ஆத்ரேயன் வீட்டில் இருந்தவர்களிடம் இரவு சடங்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறி விட ஆர்ஷிகாவோ "என்னடா இப்படி சொல்ற இதெல்லாம் முறை டா செஞ்சுதா ஆகணும்" என்று கூற "இல்ல பெரியம்மா இப்போதைக்கு நாங்க இருக்கிற நிலைமையில் இதெல்லாம் வேண்டான்னு எனக்கு தோணுது அவளுக்குமே அவ அம்மா அப்பா விட்டு பிரிஞ்சு இருக்கிறது கஷ்டமா இருக்கும் அதனால இதெல்லாம் இப்ப வேண்டாம் அப்படியே நீங்க இது எல்லாத்துக்கும் தயார் பண்ணாலும் எங்க மனசு இதுக்கு தயாராகனும் இல்ல நாங்க தான் அந்த எண்ணத்திலேயே இல்லையே இன்னுமே நாங்க இதுக்கெல்லாம் மனசால தயாராகல. அதனால இப்போதைக்கு இதெல்லாம் வேண்டாம் பெரியம்மா இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்று கூறிவிட்டு தன் மனைவியை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் அவளை தோளோடு அனைத்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்து படி ஏறினான் தன் அறைக்கு செல்வதற்காக. பெரியவர்களும் அதற்கு மேல் அவர்களை வற்புறுத்த வில்லை சைத்து அவன் கூறிய வார்த்தைகளில் விழி விரித்து அவனைப் பார்த்தாள் தான் மனம் புரிந்து நடந்து கொள்கிறானே என்று

அறைக்குள் நுழைந்தவுடன்" நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாம்மா ரொம்ப டயர்டா இருப்ப உள்ள ஹீட்டர் போட்டு வச்சிருக்கேன் குளிச்சிட்டு டிரஸ் வேற மாத்திக்கோ" என்று கூறிவிட்டு அவன் கட்டிலில் சென்று அமர்ந்து தன் மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பித்து விட அவனை எண்ணி மீண்டும் ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. காட்டில் அவன் அவளிடம் நடந்து கொண்ட விதத்திற்கும் இப்பொழுது அவள் நடந்து கொள்ளும் விதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது காட்டில் இருந்த இறுகிய முகமும் உணர்ச்சிகள் துடைத்த குரலும் இப்பொழுது அவனிடம் இல்லை கனிவு பொங்கும் முகம் உணர்ச்சிகள் அதிகமாய் மேலிடும் குரல் என ஆளே மொத்தமாய் மாறி இருந்தான் ஆத்ரேயன்.


ஆத்ரேயன்  மொபைலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுஅவன் முன்பு கைகளை பிசைந்து கொண்டு வந்து நின்றாள் பெண் அவள்.  அவரின் செயலில் அவன் அவளை நிமிர்ந்து என்னவென்று புருவம் உயர்த்த "போட்டுக்க டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே" என்றாள் அவள் தயக்கமாக . அவள் கூறியதை கேட்டு சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தவன் அவளை தோளோடு மீண்டும் அணைத்த வண்ணம் அழைத்துக் கொண்டு சென்று கபோர்டை திறந்து காட்ட அதிலிருந்து விதவிதமான பெண்கள் உடுத்தும் உடையை கண்டு வாயை பிளந்து விட்டாள் சைத்தாலி.

தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....