காவலனோ காதலனோ 52

அவள் தயக்கத்துடன் அவன் முன்பு கைகளை பிசைந்து  சென்று கொண்டு வந்தேன் இருக்க அவளின் செயலில் நிமிர்ந்து அவளை பார்த்தவன் என்னவென்று புருவம் உயர்த்தினான். அதற்கு சைத்தாலி தயக்கமாக "டிரஸ் என்கிட்டே எதுவும் மாத்திக்கிறதுக்கு இல்லை" என்று மெல்லிய குரலில் கூற அவள் கூறியதை கேட்டு சிறு புன்னகை ஒன்றை வெளியிட்ட ஆத்ரேயன் அவளை அழைத்துக் கொண்டு தன் வாட்ரோபின் அருகே சென்றான். அவனின் செயலில் அவள் விழி சசிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க  
வாட்ரோப்ப்பை  திறந்து அவள் புறம் திரும்பி அதை பார்க்குமாறு கண்களால் சைகை செய்தான் ஆணவன் 

அவனின் செயலில் அவள் திரும்பி அதை பார்க்க அதிலிருந்து உடைகளை கண்டு அவள் கண்கள் விரிந்தது. அதில் அவள் உபயோகிக்கும் அனைத்து விதமான உடைகளும் அடுக்கப்பட்டிருந்தது அதை கண்டு அவள் வாயை பிளந்து விட "இதுல உனக்கு நைட் டிரஸ் கூட இருக்கு எது வேணுமோ போட்டுக்கோ" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து பால்கனிக்கு சென்று விட்டான். அவளும் செல்லும் அவனை விழி இமைக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தவள்  பின்பு ஒரு பெரும் மூச்சை ஒன்றை வெளியிட்டு விட்டு ஒரு இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள். தான் அணிந்திருந்த அணிகலன்கள் மற்றும் பட்டுப்புடவையை 
கழட்டி எறிந்தாள்ம் அப்போது காலையில் அவளவன் கட்டிய மஞ்சள் தாலியை வெறித்து பார்த்தவள் பின்பு அதை மட்டும் விட்டுவிட்டு  வேகமாய் ஒரு இரவு 
உடையை அணிந்து கொண்டு வெளியே வர இன்னும் அறைக்குள் நுழையவில்லை ஆத்ரேயன். இப்பொழுது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க கையில் மொபைலுடன் யாருடநோ பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்து ஆத்ரேயன் கட்டிலில் அமருமாறு அவளுக்கு சைகை செய்துவிட்டு சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு அவள் புறம் திரும்பியவன் "நீ கட்டில்லையே தூங்கிக்கோ. நான் கீழப் படுக்கிறேன்  அது இதுன்னு சினிமா டயலாக் எல்லாம் இங்கே வேண்டாம். கட்டில்  நான்கு பேர் படுக்கிற அளவிற்கு தாராளமா இடம் இருக்கு. சோ தூங்கலாம் இங்கே உன்ன யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க நானும் உன்ன தப்பான நோக்கத்தில் தொடங்க மாட்டேன் இந்த விஷயத்தில் நீ என்ன தாராளமா நம்பலாம் போய் தூங்கு. உன் முகமே பார்க்கிறதுக்கு ரொம்ப டயர்டா இருக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு" என்று அவன் கூற "இல்ல உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்" என்றாள் அவள் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு. என்னவென்று அவன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவளை பார்த்து பொறுமையாக "நம்ம ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணம் நடந்ததுங்கிறதுக்கான முழுமையான காரணத்தினால் தெரிஞ்சுக்கலாமா?"  என்றாள் அவள் மெல்லிய குரலில். அவள் கூறியதை கேட்டு அவளை அழுத்தமாய் பார்த்தவன் "நேரம் வரும்போது உனக்கே தெரியும்" என்றான் அமைதியான குரலில்.  அதில் நிமிர்ந்து அவனை பார்த்தவள் "எனக்கு இப்பவே தெரிஞ்சுக்கணும் இல்லன்னா தலையை வெடித்து விடும் போல இருக்கு" என்றாள் அவனை அழுத்தமாய் பார்த்தவாறு. அதில் ஒரு பெருமூச்சு வெளியிட்டவன் "லிசன் சைத்து நான் சொல்றதே ஒரு காரணமா தான் சொல்றேன் அதை முதல்ல புரிஞ்சிக்கோ. நான் எது செய்யறதா இருந்தாலும் அதுக்கு பின்னாடி ஸ்ட்ராங்கான ஒரு ரீசன் இருக்கும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டது அப்படித்தான் நான் தவறான இண்டென்ஷன்ல எல்லாம் உன்னை கல்யாணம் பண்ணிக்கவே இல்ல அதை முதல்ல புரிந்துக்கோ" என்று அவன் கூற "அப்ப என் அம்மா சொன்ன உடனே நீங்க எதுக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க?" என்றாள் அவள் அவனை விழிகளை உருட்டி முறைத்தவாறு 


அவள் கூறியதை கேட்டு அவளை அழுத்தமாய் பார்த்தவன் "உங்கம்மா உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு எங்கிட்ட சொல்லும் போது அது எனக்கு சரின்னு தோணுச்சு அது மட்டும் இல்ல உனக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கணும்னு நினைச்சேன் அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்" என்று அவன் கூற "பாதுகாப்பா?' என்றாள்.புருவம் சுருக்கி அவனை பார்த்தவாறு . அதற்கு ஆம் என்று தலை அசைத்தவன் தாம் அவளை காதலி மட்டும் கூறாமல் அவளிடம் மறைத்து விட்டு மீதி அனைத்தையும் அவளிடம் கூற ஆயத்தமானாம் "ஆமாம்  நீ ஒரு பைல் ரெடி பண்ணி வச்சிருந்தியே அந்த பொண்ணோட உடல் உறுப்புகளை திருடுற கேஸ்ல. அது ஞாபகம் இருக்குதா உனக்கு?" என்று அவன் கேட்க அதற்கு ஆம் என்று தலையை அசைத்தாள் அவள். "நீ கலெக்ட் பண்ணி வைத்திருந்த டீடெயில்ஸ் எல்லாம் டார்க் வெப்சைட்டை சேர்ந்தது அங்க பெண்களோட உடலுறுப்பு  திருடுறதும் நடக்குது. அந்த குரூப்புக்கு ஒரு பெரிய ஹெட் ஒருத்தன் இருக்கான் அவன் தான் உன்னோட டீனை வச்சு உடல் உறுப்புகளை நீ வேலை செஞ்ச ஹாஸ்பிடல் எந்த பேஷன்ட் கிட்ட இருந்து திருடிட்டு இருந்தான்" என்று அவன் கூற அவள் அதிர்ந்து போனாள். அவளின் அதிர்ந்த நிலை கண்டவன் அவன் அருகே சென்று அமர்ந்து அவள் கரங்களை தன் கரங்களோடு பிணைத்துக் கொண்டு அவள் கரத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து பக்கவாட்டில் திரும்பி அவளை பார்த்தவன் "ஆமா இது ரொம்ப பெரிய சமூக விரோதமான செயல்.  இதற்கு பின்னாடி மிகப்பெரிய ஒரு படையே இருக்கு அவங்க எல்லாம் குரூப்பா இருந்து தான் இந்த வேலையை செஞ்சு கிட்டு இருக்காங்க. அந்த படைக்கு தலைவன்னு ஒருத்தன் இருக்கான் அவன் தான் சிவனேஸ்வரன் அவருடைய கண்ணுல தான் நீ மாட்டி இருக்க" என்று பற்களை கடித்தவாறு அவன்  கூற "நீங்க சொல்றது எனக்கு புரியல" என்றாள் அவள் புரியாத குரலில் ஒரு குரலில். அவளுக்கு பயமாகவும் இருந்தது அவன் கூறுவதை கேட்பதற்கு 


"ஆமாம் அந்த சிவனேஷ்வரன் தான் இது எல்லாத்துக்கும் காரணம் அவன் மூலியமா தான் எல்லாரும் இந்த வேலைகளை செஞ்சுட்டு இருக்காங்க உன்னோட டீன் கூட அவனுக்கு கீழ வேலை பாக்குறவன் தான் அவன் சொல்லி தான் உன்னோட ஹாஸ்பிடல்ல அவ்வளவு நாள் இந்த விஷயங்கள் எல்லாம் நடந்துட்டு இருக்கு அத நீ கண்டுபிடிச்சிட்டன்னு தெரிஞ்ச உடனே உன்னை கொல்லனும்னு அவங்க முடிவு பண்ணாங்க அந்த நேரத்தில் தான் நான் உன்னை காட்டுக்கு கடத்திட்டு போனேன்" என்று அவன்  கூற அதைக் கேட்டவளுக்கு தலையே சுத்தியது 'அப்போ நான் அவங்ககிட்ட வசமா மாட்டிக்கிட்டேனே?  இனி என்னை யாராலும் காப்பாத்த முடியாதா" என்று கேட்கும் போதே அவள் குரலில் ஒரு நடுக்கம் தோன்றியது. அதை பார்த்தவனுக்கு இப்பொழுதே சிவனேஸ்வரனை கொன்றுவிடும் ஆவேசம் பிறந்தது.  சிவனேஸ்வரன் தன்னவளின் மீது ஒரு கண்ணை பதித்துள்ளான் என்று தெரியும்பொழுதே அவனை கொன்றுவிட ஆத்ரேயனுக்கு  எனக்கு  அந்நிலையில் ஒரு காவலனாக சிந்தித்தவன் சிவனேஸ்வரனை அடியோடு அழிக்க வேண்டும் என்று எண்ணத்திற்கு அப்பொழுதே வந்து விட்டான். ஆனால் தன்னவள் உயிருக்கு இதில் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று சிந்தித்து தான் அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டான். ஆனால் மனம் முழுவதும் காதலுடன் தான் அவளின் கழுத்தில் மஞ்சள் தாலி கட்டி அவளை தன்னவளாக ஏற்றுக் கொண்டான். 


அதை மட்டும் அவளிடம் கூறாமல் மறைத்து விட்டான் அவன். அவள் பதட்டத்தை உணர்ந்தவன் "இங்க பாரு சைத்து அப்படி எல்லாம் உனக்கு எதுவும் ஆக நான் விட்டுவிட மாட்டேன் நீ இதுக்கு முன்னாடி சாதாரண ஒரு டாக்டரா இருக்கும்போதே உனக்கு அவ்வளவு பாதுகாப்பு கொடுத்தவன் நான். இப்ப நீ என்னோட மனைவி உன்னை அப்படியே நான் விட்டுவிடுவேன்னா?.  என்ன இனி உன்ன பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ இதை பத்தி எல்லாம் எதுவும் யோசிக்காத உங்க அப்பாக்கு கூட இந்த விஷயம் தெரியும்" என்று அவன் கூற "அப்பாவுக்கு தெரியுமா?" என்று அதிர்ந்து போனாள் பென்னவள் 


"ஆமா தெரியும் நான் உனக்கு கடத்திட்டு போன அப்பவே எந்த இன்டென்ஷனுக்காக நான் உனக்கு கடத்திட்டு போயிருக்கேன்னு எல்லா விஷயத்தையும் அவர் தெரிஞ்சுக்கிட்டார் அவருக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம் தான்னு நினைக்கிறேன் ஆனா உங்க அம்மா பேசின வார்த்தைகள் அவருக்குள்ள கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் 
அதனால தான் இப்ப அவங்க ரெண்டு பேருமே பிரிந்து இருக்காங்கன்னு எனக்கு தோணுது" என்று அவன் கூற தன் தாயின் பேச்சு அங்கு வருவதை விரும்பாதவள் "இதை பேச வேண்டாம்" என்றாள் கடுமையான குரலில். அவளின் கோபத்தை உணர்ந்தவன் இப்போதே இதைப்பற்றி பேசி அவள் மனதை காயப்படுத்த வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு "உனக்கு தேவையான அளவு விஷயங்கள் எல்லாத்தையும் சொல்லிட்டேன் அதனால இதுக்கு அப்புறம் ரொம்ப யோசிக்கமா படுத்து தூங்கு எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். உனக்கு நான் இருக்கேன். நான் இருக்கும் போது உனக்கு எதுவும் ஆகாது. ஆகவே விட மாட்டேன்" என்று அழுத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து அவன் எழ அவன் கரத்தை பிடித்தாள் பெண்ணவள் 

அவள் செயலில் திரும்பி அவன் அவளை பார்க்க "அப்போ என் பாதுகாப்புக்காக மட்டும் தான் இந்த கல்யாண நாடகமா?" என்றாள் அவள் அமைதியான குரலில் . ஆனால் அவள் குரலில் என்ன இருக்கிறது என்பதை ஆத்ரேயனால் கண்டுபிடிக்க இயலவில்லை அதிலும் அவள் கூறிய கல்யாணம் நாடகம் என்ற வார்த்தை அவனுக்குள் ஒரு வித வலியை ஏற்படுத்தியது இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "எஸ் அப்படின்னு கூட வச்சுக்கலாம்" என்று கூறியவன் அதற்கு மேல் பேசினார் விவாதம் வேறு புறம் செல்லும் என்றும் உணர்ந்து "நீ தூங்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வரேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து விருந்து வெளியேறிவிட செல்லும் அவனை தான் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் பெண் அவள்

**************************

இங்கு வர்மன் பால்கனியில் போடப்பட்டிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டு இருக்க அவன் முன்பு பால் கிலாசை கொண்டு வந்து நீட்டினாள் விருஷ்டி.  அவளின் கால் கொலுசு சத்தத்தை வைத்து வந்திருப்பது அவள்தான் என்று உணர்ந்தவன் "எனக்கு தேவையில்லை" என்றான் உறுமலான குரலில் . அவன் கூறியதைக் கேட்டவனுக்கு கண்களில் கண்ணீர் வழிய துவங்க அதை அவளை நிமிர்ந்தும் பாராமலேயே உணர்ந்து கொண்டவன் அதற்குமேல் முடியாமல் லேப்டாப்பை தூக்கி தூரமாய் வீசிவிட்டு அவளை வேகமாய் இழுத்து தன் மடியில் அமர வைத்து தன்னோடு கட்டிக் கொள்ள அவனின் போல் சாய்ந்து கதறிவிட்டாள் அவள்  


தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....