பெண் கவிதை 34
கரிகால் ஆரனை வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்றனர் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தவன் ஹால் ஷோபாவில் கை கால்களை விரித்துக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான். அவன் அருகே சென்று அமர்ந்த ஆரூரன் அவன் தொடையில் தட்டி "என்னடா பப்பரப்பபேன்னு உட்காருற. ஒழுங்கா போய் குளிச்சிட்டு வா உன் அம்மா உனக்காக பார்த்து பார்த்து சமைச்சு வச்சிருக்கா சீக்கிரம் வந்து எல்லாத்தையும் சாப்பிடு" என்று அவன் கூற "இருங்கப்பா சுத்தமா என்னால முடியல அவ்வளவு தூரம் ட்ரைன்ல டிராவல் பண்ணி வந்தது பயங்கர டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போற" என்றால் அவன் கண்களை மூடியவாறு அவன் கூறியதை கேட்டு அவன் தலையை கோதிய கயல்விழி "இல்லனா கீழ இருக்குற வேற ஒரு ரூம்லயாவது போய் ரெப்ரஷ் ஆகிட்டு வா கண்ணா எவ்வளவு நேரம் தான் இப்படியே சாப்பிடாம இருப்ப வயிறு காயுது பாரு" என்றாள் ஒரு தாயின் உண்மையான பரிதவிப்புடன். அவள் கூறியதைக் கேட்டு விழிகளை திறந்து பார்த்து ஒரு சிறு சிரிப்பை உதித்தவன் "10 நிமிஷம் ம்மா" என்றான் கண்களை சுருக்கி. ஆனால் அதிலும் ஒரு கம்பீரம் இருந்தது
ஆருத்திரனோ "இன்னைக்கு என்ன ஸ்பெஷலா ரெடி பண்ணி இருக்கீங்கன்னு ஒரு மெனுவை கொடுங்க பார்ப்போம்" என்று கூறியவாரே தன் அண்ணன் அருகே அமர்ந்து பெண்களை பார்க்க தியூதா மான்வித்ரா கயல்விழி யஷ்வி என நால்வரும் ஒருவரை மற்றொருவர் பார்த்துக் கொண்டு கமுக்கமாக சிரித்துக் கொண்டனர் "என்னடி அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க சொல்லு இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?" என்று ஆரூரன் கேட்க "எல்லாமே ஆரனுக்கு புடிச்சது தான்" என்றாள் கயல் சிரிப்புடன்
"செல்லாது செல்லாது இதெல்லாம் நாங்க ஒத்துக்கவே மாட்டோம் அது என்ன அண்ணனுக்கு மட்டும் பிடிச்சது செய்றீங்க அப்ப எங்கள எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?" என்று தஷிகா ஆளுக்கு முன்பாக வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வர தன் தங்கையை பார்த்து சிரித்தவன் அவளை பிடித்து இழுத்து தன் அருகே அமர வைத்து அவள் தலையில் வலிக்காதவாறு கொட்டினான். அவன் கொட்டியது வலிக்கவில்லை என்றாலும் பொய்யாக வலிப்பது போல் முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டு "பாருங்க பெரியப்பா அண்ணா அடிக்கிறாரு" என்றாள் தன் பெரியப்பன் ஆரூரனிடம் கம்ப்ளைன்ட் செய்தவாறு. "நான் அடிச்சது உனக்கு வலிச்சது?" என்று அவளை மேலும் கீழும் பார்த்தவாறு ஆரன் விழிகளை உருட்டி கேட்க "ஆமா ஆமா ரொம்ப வலிச்சது உங்க கைய பாருங்க எப்படி இருக்குன்னு நல்லா எக்சர்சைஸ் பண்ணி பண்ணி கையவே இரும்பு மாதிரி தான் வச்சிருக்கீங்க உங்க கைக்கும் பெரியப்பா கைக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்ல பெரியப்பா கையும் இப்படித்தான் இருக்கும் அவர் கையை புடிச்சாலே என் கை வலி வந்துடும் அந்த அளவுக்கு இரும்பு மாதிரி இருக்கும் என் அப்பா கையும் இப்டி தான். இப்படி எல்லாரும் எதுக்கு எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை இரும்பு மாதிரி வச்சிக்கிறீங்க?" என்று அவள் சலித்துக் கொண்டு கூற "உனக்கு எக்சர்சைஸ் பண்றதுல விருப்பம் இல்லங்குறதுனால எல்லாரையும் கிண்டல் பண்றியா நீ? சரியான தின்னி மூட்டை. தின்னுட்டு தின்னுட்டு நல்லா தூங்க வேண்டியது எக்சர்சைஸ் பண்ணுன்னு சொன்னா அதையும் கேக்குறது கிடையாது அதனால எங்க எல்லாரையும் குறை சொல்ற நீ?" என்று யுதி அவளை கிண்டலடிக்க "பெரியப்பா பாருங்க இவனை" என்று சிணுங்கினாள் தஷிகா
"நான் இல்லாத போதெல்லாம் இவள் இப்படித்தான் கிண்டல் பண்ணி வெறுப்பேத்துறியாடா நீ?" என்று ஆரன் பொய்யான கோபத்துடன் அவனை பார்த்து கேட்க "அய்யோ மாமா தயவு செஞ்சு என் மேல நீங்க கோபப்படாதீங்க இவ பண்ற சேட்டை எல்லாம் என்னனு உங்களுக்கு நல்லாவே தெரியும் நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு சொல்லுங்க இவளோட ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கணும்னு தானே நான் இவள எக்சர்சைஸ் எல்லாம் பண்ண சொல்றேன் ஆனா எதையும் பண்ண மாட்டேங்குற அதே மாதிரி இவளை எப்படியாவது கூட்டிட்டு போய் பண்ண வைக்கணும்னு நினைச்சா நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும் எனக்கு டிம்கி கொடுத்துட்டு ஓடிடுறா. சரியான பிராடு மாமா இவ" என்று அவன் தஷிகா மீது குற்றச்சாட்டை அடுக்க சிறியவர்களின் சண்டையில் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்
சிறிது நேரம் பேசி முடித்துவிட்டு ஆரன் வேகமாய் தன்னறை நோக்கி சென்றான் தன் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் பொழுது அவனுக்கு பழைய நினைவுகள் வந்தது எப்பொழுதும் இந்த அறைக்குள் நுழையும் பொழுது அவனுக்கு சிறிய வயது நினைவுகள் தான் தோன்றும் அதிலும் முதன்முறையாக தான் இந்த அறையில் தனியாக தங்குவதாக 8 வயதில் கூறும் பொழுது அதற்கு தன் தாயும் தந்தையும் முடியவே முடியாது என்று சண்டை போட்டு செய்த ஆர்ப்பாட்டங்கள் யாவும் அவனுக்கு இப்பொழுது ஞாபகம் வந்தது அதிலும் ஆரூரன் "நீ அங்க ஒன்னும் போய் தனியா தூங்க வேண்டிய அவசியம் கிடையாது ஒழுங்கா இங்க தூங்கு உனக்குனு ஒரு வயசு வரும்போது அப்போ தனியா தூங்குறதுக்கு நான் அலோவ் பண்ணுகிறேன்" என்று அவன் அப்பொழுது கூட்டிய அலப்பறையை வீட்டில் இருந்த யாராலும் மறக்க முடியாது அதை நினைத்து எப்பொழுதும் சிரித்துக் கொண்டவன் தன் அறையை நோட்டமிட்டான்.
தான் ஒவ்வொரு முறை இங்கிருந்து செல்லும் பொழுதும் எப்படி இந்த அறையை விட்டு செல்கிறேனோ அதேபோல் தான் இருக்கிறது என்று இப்பொழுதும் நினைத்துக் கொண்டவன் கட்டிலில் சென்று அப்படியே மல்லாக்க விழுந்தான் ஒரு ஐந்து நிமிடம் கண்களை மூடி தன்னை ஆசுவாசம் செய்து கொண்டவன் பின்பு தன் தாய் தனது வருகைக்காக காத்துக் கொண்டிருப்பாள் என்பதை உணர்ந்து வேகமாய் குளிக்க சென்றான் குளித்து முடித்து விட்டு அவன் மீண்டும் கீழே இறங்கி வரும் பொழுது அவன் மூக்கிற்குள் நுழைந்தது ஒரு அருமையான வாசம். வாசம் பிடித்தவாறே டைனிங் டேபிளுக்கு வந்தவன் "என்னம்மா எனக்கு ஒரு விருந்தே வைக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா? வாசம் ஆள தூக்குது" என்று கூறியவாறு அவன் டைனிங் டேபிள் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர அவன் பின்னே அனைவரும் வந்து அமர்ந்து கொண்டனர் உணவு உண்ணுவதற்காக. பெண்கள் நால்வரும் அனைவருக்கும் உணவை பரிமாற ஆரம்பிக்க கயல்விழி தன் மகனுக்கும் தன் கணவனுக்கும் பார்த்து பார்த்து பரிமாறினாள்
யாரையும் எதிர்பாராமல் தானே உணவை பரிமாறிக் கொண்டு தஷிகா உண்ண துவங்கி விட அவளின் செய்கையில் தலையில் அடித்துக் கொண்டான் யுதிஷ்டிரன். "ஆளுக்கு முன்னாடி எப்படி கொட்டிக்கிறான்னு பாரு. கொஞ்சம் கம்மியா சாப்பிட வேண்டியது தான?" என்று யுதி கூற "எனக்கு புடிச்சது தான் சாப்பிடுவேன் உனக்கு பாக்க கஷ்டமா இருந்தா பாக்காத" என்று வாயில் சப்பாத்தியை அடக்கியவாறு தஷிகா கூற விருஷாலியோ தன் அண்ணனின் தோளில் அடித்தவள் "ஏன் எப்ப பார்த்தாலும் அவளை வம்பு இழுத்துகிட்டே இருக்க அவளாவது வீட்டில் ஒழுங்கா சாப்பிடுறான்னு சந்தோஷப்படு. நாம எல்லாரும் அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்குன்னு வேலை அவசரத்தில் ஒழுங்கா சாப்பிடாம கூட சுத்திக்கிட்டு இருக்ககோம் ஆனா ஒருத்தி மட்டும் தான் வயிறுக்கு வஞ்சனை பண்ணாம ஒழுங்கா சாப்பிடுற அதுவரைக்கும் நம்ம சந்தோஷம் நெனச்சிக்கணும்" என்று சிறுவயதிலேயே அவள் பொறுப்பாக பேச அவளை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்த ஆரன் "பரவாயில்லையே ரொம்ப பொறுப்பா தான் பேசுற" என்றான் கேலிக்குரலில். அதில் திருத்திருவென விழித்தவள் பின்பு அவனைப் பார்த்து 32 பற்களையும் காட்டி சிரிக்க அதில் அனைவரும் சிரித்து விட்டனர்
ஏன் ஆரனுக்கு வந்துவிட்டது. அவள் அப்படித்தான் அதிகமாக வாயைத் திறந்து ஆரனிடம் பேசமாட்டாள் சிறுவயதிலிருந்தே அவனின் மீது அவளுக்கு ஒரு மதிப்பு உண்டு மரியாதை உண்டு . அதனால் அவன் என்ன கூறினாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வாள் அதையும் மீறி அவனின் தோற்றத்தைக் கண்டு ஒரு பயமும் இருக்கும். அதனாலயே அவன் என்ன பேசினாலும் அவனை எதிர்த்துப் பேச மாட்டாள். அதன் பின்பு அனைவரும் மகிழ்ச்சியாக உணவு உண்டு விட்டு மீண்டும் ஹாலில் வந்து கூடும் பொழுது தஷிகாவோ "அப்பா அண்ணா கூட சேர்ந்து நம்ம எல்லாரும் எங்கயாவது வெளியே போலாம் பா இந்த மாதிரி என்னைக்காவது ஒரு நாள் தான் நம்ம ஒன்னா சேர்ந்து வெளிய போக முடியும் ப்ளீஸ் பா ப்ளீஸ் ப்ளீஸ்" என்று அவள் தன் தந்தையிடம் பேச ஆருத்ரனோ "தஷி அவன் இன்னிக்கு தான் வந்திருக்கான் அவனுக்கு டயர்டா இருக்கும் அவன் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும் நம்ம வீக் எண்டுல எல்லாரும் சேர்ந்து ஒண்ணா வெளிய போகலாம் ஓகேவா?" என்று அவன் கேட்க "ப்பாஆஆஆ" என்று சிணுங்கினாள் அவள். அதை கண்டு சிரித்த "ஆரன் விடுங்க சித்தப்பா சின்ன பொண்ணு ஆசைப்படுறா தஷி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அதனால நான் இப்ப கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் ஈவினிங் எல்லாரும் வெளிய போலாம் உனக்கு ஓகேவா?" என்று அவன் கேட்க அதில் பிரகாசமாக மலர்ந்தது தஷிகாவின் முகம். "மாமா இவளை நம்பி நீங்க வெளியே கூட்டிட்டு போறேன்னு சொல்லாதீங்க உங்க பர்சையே காலி பண்ணிடுவா" என்றான் யுதிஷ்டிரன் ஆளுக்கு முன்பாக
எலியும் பூனையும் ஆக அவர்கள் இருவரும் இருப்பதைக் கண்டு வீட்டில் உள்ளவர்களுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும் எப்பொழுதும்
"என் அண்ணன் பர்ஸை நான் காலி பண்ணுவேன் உனக்கு எங்கடா எரியுது? நீ தான் வாங்கி கொடுக்குறதுக்கு யோசிப்ப உன்னிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்குறதுக்கு நான் தலைகீழா நீங்க தண்ணி குடிக்கணும் என் அண்ணா ஆனா அப்படி கிடையாது நான் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பாரு அப்படித்தான ண்ணா" என்று ஆரனின் முழங்கையை பிடித்துக் கொண்டு செல்லம் கொஞ்ச அதில் அவள் தலையை கலைத்து சிரித்தவன் "என்ன கேட்டாலும் வாங்கி குடுப்பன்னு நினைக்க கூடாது நீ கேட்கிற விஷயம் சரியானதாக இருந்தால் மட்டும்தான் வாங்கி கொடுப்பேன் புரியுதா?" என்றான் ஒரு கண்டிப்பா அண்ணனாக. அவன் கூறுவதில் அர்த்தம் புரிந்து சரி என்று சிரிப்புடன் தலை அசைத்தாள் அவள்
அதுதான் ஆரன். என்னதான் அன்பு பாசம் என்று அனைத்தும் இருந்தாலும் அவனிடம் கண்டிப்பாக இருக்கும். அதை மற்றவர்களும் அறிந்து அதை ஏற்றுக் கொள்வார்கள் அவன் கூறும் விஷயம் சரியாக இருக்கும் பட்சத்தில். இப்படி இருக்கும் குடும்பத்தில் தான் மிகப்பெரிய புயலே வீசப்போகிறது அதை இனிவரும் அத்தியாயங்களில் காணலாம்.
தொடரும்...
Comments
Post a Comment