பெண் கவிதை 36
ஆரன் பின்னே வேகமாய் ஓடினாள் கயல்விழி. அவளின் அழுகையை கண்டு தஷிகாவும் அவ் பின்னே சென்றுவிட ரோகன் வித்யூத் மற்றும் யுதிக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை மான்வித்ரா "என்னங்க இது அவர் இப்படி போட்டு ஆரன அடிச்சிட்டாரு அவன் உடம்பு எல்லாம் எவ்வளவு ரத்தம் வருதுன்னு பார்த்தீங்க தான? என்னதான் கோவம் இருந்தாலும் இப்படியா பண்றது முதல்ல என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு தெளிவா அவன்கிட்ட கேட்டுட்டுதான அடுத்து நாம முடிவு எடுக்கணும் இப்படியா கை நீட்டுவது. அதுவும் தோளுக்கு மேல வளந்த பிள்ளையஸ்" என்று மான்வித்ரா கண்ணீருடன் கூற யாஷஷ்வியோ "வரட்டும் இன்னைக்கு அண்ணவ நான் என்னன்னு கேட்கிறேன் எவ்வளவு தைரியம் இருந்தா அவன் மேல கை வைப்பாரு. நம்மளோட உயிரே அவன் தான்னு அவருக்கு நல்லா தெரியும். அப்படி தெரிஞ்சும் அவன் மேல போய் கை வச்சுருக்காரு. நான் ஈவினிங் அவர்கிட்ட பேசிக்கிறேன்" என்று கோபத்துடன் கண்ணீரை துடைத்த வண்ணம் அவள் கூற "யாஷ் அமைதியா இரு. முதல்ல கோபத்தை கண்ட்ரோல் பண்ணு" என்றான் கண்டிப்பான குரலில் ரோகன். "என்ன அமைதியா இருக்கணும் இதுக்கு மேல என்ன அமைதியா இருக்கணும்? பார்த்தல்ல என்ன நடக்குதுன்னு நீயும் பார்த்த இல்ல. மாட்ட போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சுட்டாரு அவன் உடம்புல இருந்து வர ஒவ்வொரு சொட்டு ரத்தமும் எனக்கு நெஞ்சில் இருந்து ரத்தத்தை வர வைக்கிற மாதிரி இருக்கு அவன நம்ம தரையிலேயே கால் படாமல் தூக்கி வளர்த்தோம். அவனை போய் இப்படி அடிச்சு வச்சிருக்கார். அதை பார்த்துட்டு நம்ம அமைதியா இருக்கணுமா?" என்று அவள் ஆக்ரோஷமாய் கத்த "ம்மா கொஞ்சம் அமைதியா இருங்க நீங்க கோபப்பட்டு கத்துறதுனால இப்ப எதுவும் ஆக போறது கிடையாது முதல்ல என்ன நடந்ததுன்னு நம்ம ஆரன் மாமா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் அதன் பிறகு தான் நம்மளால ஒரு முடிவுக்கு வர முடியும் மாமா வேற கோவமா வெளியே போய் இருக்காரு இப்ப என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல" என்று அவன் தலையே இருக்க பிடித்துக் கொண்டு யுதிஷ்டிரன் கூற "அதான் ஆருத்ரன் போயிருக்கான்ல அவன் பாத்துக்குவான் எதுவா இருந்தாலும் அவங்க வந்த பிறகு நம்ம பேசிக்கலாம் இப்போதைக்கு நம்ம வேற யார்கிட்டயும் எதுவும் நம்ம பேசிக்க வேண்டாம் எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க" என்று கூறிய வித்யூத் அங்கிருந்து நகர்ந்தான் அவன் பின்னே மான்வித்ராவும் சென்றுவிட ஒவ்வொருவருக்கும் மனம் ஒவ்வொரு நிலையில் துடித்துக் கொண்டிருந்தது.
கயல்விழி வேகமாய் ஆரன் பின்னே கத்திக்கொண்டே ஓடி வர அவளின் சத்தத்தை எல்லாம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் யட்சிணி இருந்து அறைக்குள் தான் ஆக்ரோஷமாய் நுழைந்தான். யட்சிணி இங்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் தெரியாமல் அறையில் இருந்த கட்டிலில் ஆரன் மகனை உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் அவன் நெஞ்சில் தட்டி. குழந்தை சோர்வில் இருந்திருப்பான் போல கட்டிலில் படுக்க வைத்து தட்டிக் கொடுக்க ஆரம்பித்தவுடன் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டான். அவன் அருகே சாய்ந்து படுத்தவாரு அவன் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் வெளியே செல்லாமல் யட்சிணி
தியூதா அமைதியாக அங்கிருந்து சோபாவில் அமர்ந்திருக்க அறைக்குள் அப்பொழுதுதான் நுழைந்த அவனை கண்டவுடன் அதிர்ந்து போயினர் இருவரும். "ஐயோ கரிகாலா என்னடா ஆச்சு உனக்கு? உடம்புல இருந்து ரத்தமா வருது நல்லா தான இருந்த திடீர்னு எப்படி இந்த மாதிரி ஆச்சு?" என்று அவள் பயத்துடன் கேட்டவாரே தன் மகனை நோக்கி ஓட யட்சிணி ஆனவனின் முகத்தை தான் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அதிர்ச்சியுடன்
பேசக்கூட நான் எழவில்லை அவளுக்கு. அவர்கள் இருந்த அறை சவுண்ட் ப்ரூப் உடையது என்பதால் கீழே நடந்த கலவரம் எதுவும் அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது .
ஆரனோ தியூதாவின் கேள்விக்கு கொஞ்சமும் பதில் கூறாமல் அமைதியாக நின்றிருந்தான் அழுத்தமான பார்வையை தரையை நோக்கி செலுத்திய வண்ணம். கயல்விழி அவன் உடம்பிலிருந்து வழிந்த ரத்தத்தை தன் புடவை முந்தானையின் மூலம் அழுதவாறு தொடைத்து விட்டுக் கொண்டிருக்க அவள் கரத்தை படார் என்று உதறி தள்ளியவன் வேகமாய் தன் மகனை நெருங்கினான் அவனின் வாசத்தை உணர்ந்து
யட்சிணி கட்டிலில் இருந்து எழுந்து நின்றவள் அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க கட்டிலை தடவிக் கொண்டே தன் மகன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டறிந்தவன் அவன் கிடைத்தவுடன் தன் குழந்தையை அள்ளித் தன் மார்போடு அணைத்தவன் வேகமாய் அந்த அறையில் இருந்து வெளியேறினான்
" டேய் மருந்து போடணும் தயவு செஞ்சு நில்லு" என்று கத்திக்கொண்டு கயல் அவன் பின்னே ஓட வேகமாய் தன் அறைக்குள் நுழைந்தவன் கதவை அடித்து சாற்றினான் "யாரும் உள்ளே வராதீர்கள்" என்று கூறும் விதமாக. ஆனால் அப்பொழுதும் அவர்கள் விடவில்லை "அண்ணா ப்ளீஸ் கதவு திறங்க உங்களுக்கு மருந்து போடணும் காயம் ரொம்ப ஆழமா இருக்கு ப்ளீஸ் அண்ணா கதவை திறங்க" என்று அழுதவாரே தஷி கதவை தட்டிக் கொண்டிருக்க விருஷாலியும் வந்துவிட்டாள் அங்கு. அவளுக்கு மனம் நிலை கொள்ளவில்லை என்னதான் ஆரூரன் கோபத்தை பற்றி அறிந்து இருந்தாலும் இப்படி கை நீட்டுவான் என்று அவள் நினைக்கவில்லை. "முதல்ல எல்லாரும் இங்கிருந்து போங்க என்ன தனியா விடுங்க உங்க யாரோட கரிசனையும் எனக்கு தேவை கிடையாது என்ன பார்த்துக்க எனக்கு தெரியும் முதல்ல இங்கிருந்து எல்லாரும் போங்க" என்று அவன் வீடு அதிரும் வகையில் ஆக்ரோஷமாய் கத்த அவன் கத்தும் சத்தத்தில் குழந்தை முழித்து விட்டான் போல. ஓவ் என்று பயத்தில் கத்தி கதறி அழுக துவங்கினான் அவன். அவனின் சத்தத்தில் மேலும் வெளியே இருந்தவர்களுக்கு கவலை அதிகமானது
"சரி நாங்க உன்னை தொந்தரவு பண்ணல தயவு செஞ்சு குழந்தையை மட்டும் வெளியே தூக்கிட்டு வந்து குடு அவன் அழுகுறான் பாரு அவனை நாங்களாவது சமாதான படுத்துறோம் டா" என்று அழுகையுடன் தியூதா கெஞ்ச "என் பையன பார்த்துட்டு எனக்கு தெரியும் யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என் பையன நானே பாத்துக்குவேன் உங்க யாரோட உதவியும் எனக்கு தேவையே இல்ல முதல்ல இங்கிருந்து போங்க" என்று அவன் கத்த அந்நேரம் மெல்லிய கானமாய் காற்றில் மிதந்து வந்தது ஒரு குரல்
எந்தப்பக்கம் காணும் போதும்…வானம் ஒன்று…நீ எந்தப்பாதை ஏகும்போதும்…ஊர்கள் உண்டு…
அனைவரும் அந்த குரல் வந்த திசையை திரும்பி பார்க்க தூரத்தில் அவன் அறை கதைவை வெறித்த வண்ணம் பாடி கொண்டிருந்தாள் யட்சிணி
ஒரு காதல் தோல்வி காணும் போதும்…காதல் உண்டு…சிறு கரப்பான் பூச்சி…தலை போனாலும் வாழ்வதுண்டு…
அனைவரும் புரியாமல் பார்த்தனர் அவளை
அட ரோஜாப்பூக்கள் அழுதால்…அது தேனை சிந்தும்…என் ராஜாபையன் நீ அழுதால்…அதில் யானம் மிஞ்சும்…
உன் சோகம் ஒரு மேகம்…நான் சொன்னால் அது போகும்…உன் கண்ணீர் ஏந்தும்…கண்ணம் நான் ஆகும்…
எந்தப்பக்கம் காணும் போதும்…வானம் ஒன்று…நீ எந்தப்பாதை ஏகும்போதும்…ஊர்கள் உண்டு…
எப்போதுமே இன்பம் என்றால்…முன்னேற்றமே ஏது…எப்போதுமே பகலாய் போனால்…வெப்பம் தாங்காதே…
மனசை சலவை செய்ய…ஒரு கண்ணீர் நதிதான் உண்டு…உன் உயிரை சலவை செய்ய…ஒரு காதல் நதி உண்டு…
உன் சுவாசப்பையை மாற்று…அதில் சுத்தக்காற்றை ஏற்று…நீ இன்னோர் உயிரில்…இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு
அவள் பாடிக்கொண்டே அவன் அறையின் முன்பு வந்து நின்றாள். அடுத்த நொடி ஆரன் அரை கதவு தானாக திறந்தது. அனைவரும் அதைக்கண்டு ஆச்சரியமாக யட்சிணியை பார்க்க உதட்டில் ஒரு புன்னகையை தாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அவள். அங்கே குழந்தை கட்டிலில் அமர்ந்து கண்களை கசக்கி வீறிட்டு அழுது கொண்டிருக்க ஆரன் தலையை இறுக பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தான் தன் மகனை சமாதானப்படுத்தும் எண்ணம் கூட தோன்றவில்லை அவனுக்கு. உள்ளே நுழைந்தவள் அவனை ஒரு பார்வையை பார்த்துவிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையை நோக்கி சென்றாள்
இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த குழந்தை அவளைக் கண்டவுடன் தன் அழுகையை நிறுத்தி விழிகளை விரித்து அவளை பார்த்தது அவளோ "என் ராஜா குட்டிக்கு என்ன ஆச்சு எதுக்கு தங்க பையன் அழுவுறான் அழக்கூடாதுடி தங்கம். அதான் அம்மா வந்துட்டல இனி தங்க புள்ள அழக்கூடாது" என்று கூறியவாறு அவனை அழகாக தன் கரங்களில் ஏந்தி கொண்டாள் அவள் அவள் கூறிய அம்மா என்ற வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்த ஆரன் "என் பிள்ளைக்கு நீ அம்மா கிடையாது" என்றான் அறையே அதிரும் வண்ணம்
அதில் குழந்தை மீண்டும் அழ ஆரம்பிக்க அவனை தன் நெஞ்சில் சாய்ந்து தட்டிக் கொடுத்தவள் "அதை நீங்க சொல்லக்கூடாது சார் நான் எந்த குழந்தையா இருந்தாலும் என்னோட குழந்தையா தான் பார்ப்பேன் குழந்தைக்கு நான் அம்மாவா இல்லையான்னு குழந்தை தான் முடிவு பண்ணனும் நீங்க இல்ல" என்று அழுத்தமான குரலில் கூறியவள் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே சென்று விட அவளின் வருகைக்காக காத்துக் கொண்டு நின்றவர்கள் குழந்தையுடன் அவள் வருவதைக் கண்டு "என்ன மா ஆச்சு எதுக்கு குழந்தை அழுவுறான்?" என்று அனைவரும் பதட்டத்துடன் கேட்க "அவர் சத்தம் போட்டு கத்தினதுல பயந்துட்டான் போல அதான் அழுகிறான் நான் இவன சமாதானப்படுத்துற நீங்க போய் அவரை பாருங்க" என்று கூறியவள் கண்களில் ஓரம் துளித்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தவாறே அறைக்குள் இருந்த ஆரனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்
அவளுக்கு அவன் இருந்த நிலை நெஞ்சுக்குள் ஈட்டியை இறக்கியது போல் வலித்தது அவன் உடலில் இருந்து வலியும் ரத்தம் இவள் உடலில் இருந்து வழிவது போல் வலியை உணர்ந்தாள் பெண்ணவ்ள் ஆனால் அவனை நெருங்க இயலாதே என்ற தன் இயலாமையை எண்ணி நொந்து கொண்டே கயல்விழியை திரும்பி பார்த்தவள் கண்களால் அவளிடம் கெஞ்சினாள் ஆரனுக்கு மருந்து போடுங்க என்று அதை உணர்ந்து கொண்டாளோ என்னவோ சரி என்று கண்ணீருடன் தலையசைத்தவள் வேகமாய் அறைக்குள் நுழைய "உள்ள வராதீங்க" என்றான் கர்ஜனையுடன் " ஏன் டா இப்படி எல்லாம் பண்ற உடம்புல இருந்து ரத்தம் வருது இன்னும் ரத்தம் வெளியே போச்சுன்னா அது உனக்கு தான் கஷ்டம் தயவு செஞ்சு என்னை உனக்கு மருந்து போட விடு" என்று வாசலில் நின்று கெஞ்சினாள் கயல்விழி ஆனால் அதை ஆரன் தான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை
இங்கு தோட்டத்தில் கோபத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் தலையை கோதிக் கொண்டு ஆரூரன் அவன் பின்னே வேகமாய் வந்த ஆருத்ரன் அவன் தோளை பிடித்து திருப்பி அவன் சட்டையை பிடித்து விட்டான் ஆக்ரோஷமாய் "எவ்வளவு தைரியம் இருந்தால் நீ அவன் மேல கை வைப்ப உனக்கு என்ன அவ்ளோ திமிரா?" என்றான் கர்ஜனையாக ஆருத்ரன். எப்பொழுதும் தன் அண்ணனின் முன்பு தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பவனுக்கு இப்பொழுது ஆரூரன் கடும் கோபத்தை வரவைத்து இருந்தது
ஆரூரன் அவன் கரத்தை தட்டி விட்டு வேறு புறம் திரும்பி நின்று கொள்ள "எதனால உனக்கு இந்த கோபம் வந்துச்சா ஆரூரா? சொல்லு எதனால வந்துச்சு. உன்ன மீறி இப்படியெல்லாம் அவன் பண்ணிட்டான்னு தான. நான் தெரியாம தான் கேட்கிறேன் அது அவனோட குழந்தைன்னு சொல்றான். அப்ப அவன் குழந்தையா அவனால எப்படி கைவிட முடியும் அவன் பன்னதுல தப்பும் கிடையாது" என்று ஆருத்ரன் கூற "பைத்தியமாடா நீ அவன நம்பி ஒரு பொண்ணு இருக்கா இப்ப இவன் இப்படி ஒரு பாவத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறான் அந்த குழந்தை வாழ்க்கை தான் இதுல பாதிக்கப்படும் இத பத்தி நீ யோசிச்சியா?" என்று அவன் கூற "ஏன் சார் நான் குழந்தையை ஏத்துக்க மாட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீங்களா?" என்று கூறியவாறு குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கு வந்து நின்றாள் யட்சிணி. அவளை திரும்பிப் பார்த்த ஆரூரன் அவள் கையில் இருந்த குழந்தையை தான் உருத்து விழித்துக் கொண்டிருந்தான். குழந்தையோ அவனை கண்டு பயத்தில் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டது குழந்தையின் பயம் உணர்ந்து அதன் தோளை தட்டி கொடுத்தவன்" குழந்தையை முறைக்காதீங்க சார் குழந்தை பாவம் அதுக்கு என்ன தெரியும்" என்றாள் மெல்லியஸ் குரலில். ஆரூரன் அதில் எதுவும் கூறாமல் முகத்தை திருப்பிக் கொள்ள "தயவு செஞ்சு போய் உங்க பையன பாருங்க அவரு மருந்து போட்டுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாரு கயல் மேடத்தையும் கிட்ட விட மாட்டேங்குறாரு மத்த யாரயும் கூட தன்னை நெருங்க விட மாட்டேங்கிறாரு தயவு செஞ்சு போய் அவரை சமாதானப்படுத்துங்க சார் உடம்புல இருந்து ரத்தம் ரொம்ப அதிகமா வருது காயத்தோட ஆழம் ரொம்ப அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்" என்று அவள் கூறும் பொழுது அவள் கண்களில் அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த கண்ணீர் கடகடவென்று வெளியேறு துவங்க குரல் கமரி விட்டது அவளுக்கு.
தொடரும்....
Comments
Post a Comment