பெண் கவிதை 46
"வாங்க மிஸ்டர் கரிகாலன் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன் வாங்க வந்து உட்காருங்க" என்று 50 வயது மதிக்க தாக்க அந்த பெண் மருத்துவர் கரிகால் ஆரனை சிரித்த முகத்துடன் தன் அறைக்குள் வரவேற்க அதற்கு ஒரு சிறு தலை அசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு குழந்தை தூக்கி கொண்டு சென்று அவர் முன்பு இருந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தான் ஆரன்
யட்சிணி மற்றும் யுதி அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் பின்னே வந்து நிற்க "என்ன விஷயமா நீங்க என்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கீங்க மொபைல்ல என்கிட்ட அப்பாயின்மென்ட் கேட்கும்போது விஷயம் என்னன்னு நீங்க தெளிவா சொல்ல நேர்ல வந்த பிறகு சொல்றேன்னு சொன்னீங்க சொல்லுங்க என்ன விஷயம் உங்களோட ஹெல்த் கண்டிசன் ஏதாவது செக் பண்ணனுமா? ஆமா யாரு இந்த குட்டி பையன்? இவன எதுக்கு தூக்கிட்டு வந்து இருக்கீங்க?" என்று அவர் புரியாமல் கேட்க அவர் கூறியதை கேட்டு தான் தொண்டையை சரி செய்து கொண்டவன் "இவன் என்னோட பையன் இவனை செக் பண்றதுக்காக தான் இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை" என்றாம் அழுத்தமான குரலில். அவன் கூறியதை கேட்டு யட்சிணி மற்றும் யுதிஷ்டிரனுக்கு திக் என்று ஆனது. "என்னது மாமா குட்டி பையனை செக் பண்றதுக்கு கூட்டிட்டு வந்து இருக்காரா? அவனுக்கு என்ன ஆச்சு நல்லா தானே இருக்கான். அவனுக்கு எதுக்கு மெடிக்கல் செக்கப்?" என்று மனதுக்குள் அவன் யோசித்துக் கொண்டிருக்க யட்சிணியோ "சார் எதுக்கு நீங்க இவனுக்கு செக் அப் பண்றதுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவன் நல்லாதான் இருக்கான். இதெல்லாம் எதுவும் அவனுக்கு வேண்டாம் சார்" என்று பயந்து போய் யட்சிணி கூற "வாய மூடு" என்றான் கர்ஜனையான குரலில் ஆரன். அவன் கூறியதை கேட்ட விலுக்கென்று பயத்தில் உடல் தூக்கி வாரி போட்டது அவளின் பயத்தை உணர்ந்து யுதி அவள் கரங்களை இறுக்கி பிடித்துக் கொண்டவன் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "மாமா அவ சொல்றது சரிதான் தயவு செஞ்சு கோவப்படாதீங்க குட்டி பையனை எதுக்கு தேவையில்லாமல் நாம இங்கே கூட்டிட்டு வந்து இருக்கோம் அவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல மாமா நல்லா இருக்குற பையனுக்கு எதுக்கு மெடிக்கல் செக்கப்?" என்று அவனும் பயத்துடன் கேட்க "இவன் என் பையன் இவனுக்கு என்ன பண்ணனும் எனக்கு தெரியும் ரெண்டு பேர வாய் மூடி நிற்கிறதா இருந்தா நில்லுங்க இல்லனா வெளியே போங்க" என்றான் முகத்தில் அறைந்தது போல் கோபமாக ஆணவன்
அவன் வார்த்தையில் இதயத்தில் முள் குத்தியது போல் வேதனையாக அவள் ஆரனை பார்க்க அவளின் பார்வையை இவன் உணர்ந்தானோ என்னமோ அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் மீண்டும் மருத்துவரின் புறம் திரும்பினான் "இவனுக்கு சரியா பேச்சு வரலயோன்னு எனக்கு ஒரு டவுட்டா இருக்கு அதனாலதான் இவன செக்கப் பண்ணலாம்னு கூட்டிட்டு வந்தேன் நீ கொஞ்சம் செக் பண்ணி சொல்றீங்களா?" என்று இவன் கேட்க "கண்டிப்பா குழந்தையை தூக்கிட்டு என் பின்னாடியே வாங்க பெட்ல வச்சு குழந்தையை செக் பண்ணலாம்" என்று மருத்துவர் கூறியவாறு ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு அங்கு ஒரு திரையை விலக்கிவிட்டு ஆரனை அழைக்க அங்கிருந்து பெட்டில் குழந்தையை படுக்க வைத்தவன் அமைதியாக விலகி நின்றான். குழந்தையோ பயத்தில் எழ தெரியயாமல் எழுந்து உட்கார முற்பட "லிட்டில் பாய் பயப்படக்கூடாது உங்கள ஒன்னும் பண்ண மாட்டோம் உங்க அப்பா இங்க தான இருக்காரு எதுக்கும் பயப்படாதீங்க" என்று கூறியவாரே குழந்தையை பரிசோதிக்க துவங்கினார் மருத்துவர். ஆனால் மழலையோ அவர் கரங்களை தட்டி விட்டு பயத்தில் அழ ஆரம்பிக்க யட்சிணி வேகமாய் ஓடி வந்த தன் மகனை தூக்கி தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவள் "இப்படியே செக் பண்ணுங்க மேடம் அவன் ரொம்ப பயப்படுறான்" என்றாள் தலை குனிந்து மெல்லிய குரலில். குழந்தையோ அவளின் அருகாமையில் அழுகையை மெல்ல நிறுத்தி அவள் நெஞ்சு சேலையை இறுக்க பிடித்துக் கொண்டு பயத்துடன் மருத்துவரை பார்த்தது. புதுமுகம் என்பதால் அவரைப் பார்த்தவுடன் பயமாக இருந்தது குழந்தைக்கு
அவள் கூறியதை கேட்டு சரி என்று தலை அசைத்த மருத்துவர் "நீங்க யாரு குழந்தைக்கு அம்மாவா? அதனாலதான் உங்க கூட இவ்ளோ அட்டாச்டா இருக்கான் போல' என்று அவராகவே ஒன்றும் யூகித்துக் கொண்டு கேட்க அவர் கூறியதை கேட்டு அவ்வளவு வேதனையிலும் மனதில் சிறு நிம்மதி தோன்றியது அவளுக்கு. "ஆமா இவன் என்னோட பையன் தான்" என்று அவள் மெல்லிய குரலில் கூற அதைக் கேட்ட ஆரனுக்கு உடல் இறுகியது யுதியோ அதை உணர்ந்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாதே என்று யட்சணியிடம் கண்ணை காட்ட என்னவென்று புரியாமல் சரி என்று தலையை மட்டும் அசைத்தாள்
குழந்தை இப்பொழுது அமைதியாக இருப்பதை கண்டு மருத்துவர் அவனை பரிசோதித்தவர் அவனுக்கு குரல்வலையில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதிக்க ஆரம்பித்தார்
ஆரன் அதற்கு மேல் அங்கு நில்லாமல் அந்த அறையில் இருந்து வெளியே வந்து விட அவன் அருகே யுதி வந்து நின்றான் "ஒன்னும் இல்ல மாமா குட்டி பையனுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது நீங்க பயப்படாதீங்க" என்று இவன் கூற "அவனுக்கு பிரச்சனையே இருந்தாலும் அதை சரி பண்றதுக்கு என்னால முடியும் எனக்கு பயப்படனும்னு அவசியமே இல்லை" என்றான் அழுத்தமான குரலில். அதன் பின்பு யுதி வாயை திறக்கவில்லை மீண்டும் அங்கிருந்து இருக்கையில் ஆரன் அமர்ந்து கொள்ள சிறிது நேரம் கழித்து அந்த திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்தார் மருத்துவர்
அவர் ஆரன் முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்து தன் குரலை செறுமி கொண்டவர் "மிஸ்டர் ஆரன் நீங்க அஸ்யூம் பண்ணது கரெக்ட் தான் உங்க பையனுக்கு பேச்சுவர்றதுல கொஞ்சம் பிரச்சனை இருக்கு" என்று அவர் கூற அப்போதுதான் குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த திரைக்குப் பின்னே இருந்து வெளியே வந்து யட்சிணிக்கு தலையில் இடியே விழுந்தது போல் ஆகியது. அவளோ அதிர்ந்த முகத்துடன் மருத்துவரையே பார்க்க "நீங்களும் வாங்க மா இப்படி வந்து உட்காருங்க நீங்க குழந்தையோட அம்மா உங்களுக்கும் இந்த விஷயம் தெரியனும்" என்று மருத்துவர் கூற அவளோ அப்படியே பித்து பிடித்தவள் போல் அப்படியே நின்றாள். யுதி அவளை நிலை உணர்ந்து அவள் கைபிடித்து அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டு தானும் ஓரமாய் நின்று கொண்டவன் வேதனையாக. மருத்துவர் அடுத்து என்ன கூற போகிறார் என்று அவர் முகத்தை பார்க்க துவங்கினான் ஆரன்
"இதை சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு ஆனா வேற வழி இல்ல நீங்க உங்க குழந்தை கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்றது இல்லையா?" என்று அவர் புருவம் சுருக்கி கேட்க அதைக் கேட்ட யட்சிணிக்கு புருவம் சுருங்கியது "ஏன் இப்படி கேக்குறீங்க டாக்டர்?" என்று முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் இறுகிய குரலில் ஆரன் கேட்க "ஏன்னா குழந்தையோட அதிகமா பேசி பழகறதுக்கு யாரும் இல்லாததால் தான் இவ்வளவு வயசு வரைக்கும் குழந்தைக்கு பேச்சு திறன் இல்லாமல் இருந்திருக்கு" என்று மருத்துவர் கூற அதைக் கேட்ட பின்பு தான் சற்று நிம்மதியானது பெண்ணவளுக்கு. "அப்போ பிறவியிலேயே இவனுக்கு இந்த குறை இல்ல தான டாக்டர் இப்பதான் இந்த மாதிரி பிரச்சனை வந்திருக்கு சரியா?" என்று அவள் ஒரு அனுமானமாக கேட்க "எஸ் நீங்க சொல்றது கரெக்ட் குழந்தைங்க அந்தந்த வயதில் என்ன பண்ணனுமோ அதை சரியா பண்ணனும் லைக் அஞ்சி மாசம் ஆறு மாசம் ஆகும்போது முட்டி போட ஆரம்பிச்சு தவழ ஆரம்பிப்பாங்க எட்டு மாசம் அவங்களுக்கு நடக்கும் பொழுது லைட்டா எழுந்து நடக்க முயற்சி பண்ணுவாங்க அந்த மாதிரி இந்த மாதிரி நேரத்துல உங்க பையன் பேச ஆரம்பித்து இருக்கணும் பட் அவனுக்கு பேச்சு துணைக்கு யாரும் இல்லாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் அதனாலதான் இன்னவரைக்கும் குழந்தை பேச தெரியாம திணறுறான்" என்று அவருக்கு ஒரு யட்சிணிக்கு குழந்தையை நினைத்து மனம் கவலையாக இருந்தது
ஆரனுக்கு நன்றாக புரிந்தது ஞான பிரகாசம் தன்னால் முடிந்த அளவிற்கு இவனை நல்முறையில் தான் வளர்த்துள்ளார் ஆனால் சரியாக அவனுடன் பேசாமல் இருந்தது தான் குழந்தைக்கு பேச்சு வராமல் போனதற்கான காரணம் அவராலும் என்னதான் செய்ய இயலும் கோமாவில் இருக்கும் நற்பவியை பார்ப்பதா அல்லது குழந்தையை பார்ப்பதா? என்னும் நிலை அவருக்கு. இதில் அவரை குற்றம் கூற இயலாது என்று நினைத்தவன் மனதிற்குள் ஏற்கனவே இருந்த ரணைங்களுக்கு வலியை கூட்டும் வகையில் அவன் மகனின் இந்த பிரச்சனையும் ரணத்தை கொடுத்தது. "இந்த பிரச்சனையை சரி பண்ணிடலாம் தானே டாக்டர்?" என்று ஆரன் அமைதியாக கேட்க "எஸ் இது பிரச்சினையே முதல்ல கிடையாது நீங்க எல்லாரும் இனி குழந்தை கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுங்க அவங்க கூட நிறைய பேசுங்கள் நீங்க வாய் அசைக்கிறதை வச்சு அவன் பேசுறதுக்கும் முயற்சி பண்ணுவான் சில குழந்தைங்க எல்லாம் மூணு வயசு நாலு வயசு வரைக்கும் கூட பேசாம அமைதியா தான் இருக்கிறாங்க நீங்கள் ஆரம்பத்திலேயே இதை கண்டுபிடித்ததுனால ஒன்னும் பிரச்சனை இல்ல சீக்கிரமே குழந்தையை சரி பண்ணிடலாம்" என்று மருத்துவர் கூற "குழந்தைக்கு இதுக்காக ட்ரீட்மெண்ட் எல்லாம் எதுவும் எடுக்க வேணாம் இல்ல டாக்டர்?" என்றாள் அவள் தயக்கத்துடன் பெண்ணவள். உள்ளுக்குள்
ஏதாவது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிவிடுவாரோ என்ற பயத்துடன் அவள் கேட்டாள்
அவளுக்கு இந்த சிறுவயதிலேயே மருந்து ஊசி மாத்திரை என்று குழந்தையின் உடல் பாடுபடக்கூடாது என்ற எண்ணம் இருக்க மருத்துவர் என்ன கூறுவாரோ என்ற பயத்துடன் அவர் முகத்தை நோக்கினாள் யட்சிணி அவளின் மனநிலையை அந்த மருத்துவர் புரிந்து கொண்டாரோ என்னவோ சிறு சிரிப்புடன் 'அப்படியெல்லாம் எந்த ட்ரீட்மெண்ட் அவனுக்கு தேவை இல்லாம நான் முன்னாடி சொன்ன விஷயங்கள் மட்டும் நீங்க ஃபாலோ பண்ணுங்க மருந்து மாத்திரை கொடுத்து சரி பண்ற அளவுக்கு பையனுக்கு ஒன்னும் பிரச்சனை பெருசா இல்ல அதனால நீங்க கவலைப்பட வேண்டாம் ஒரு தாயா உங்க கஷ்டம் எனக்கு புரியுது இது சின்ன வயசுலயே குழந்தையோட உடம்பு மருந்து மாத்திரைகளை எப்படி தாங்கும்னு நீங்கள் நினைத்து.அப்டி எதுவும் இருக்க கூடாதுன்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருக்கீங்க அப்படித்தானா?" என்று அவர் கேட்க அதைக் கேட்டவள் ஆம் என்று மெல்லிய குரலில் கூறி தலையை அசைத்தாள்
அவள் அருகே அமர்ந்திருந்த ஆரன் அதிர்ந்து முகத்துடன் ஆச்சரியமாக அவளை பார்த்தான் தன் மகன் மீது அவன் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி.
தொடரும்...
Comments
Post a Comment