பெண் கவிதை 38

ஆருரன் கூறிய செய்தியை கேட்டு ஆரன் பித்து பிடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருக்க தன் மகனின் நிலை உணர்ந்து வாயில் முந்தானையை வைத்து அழுகையை அடக்கினாள் கயல்விழி .ஆனால் இப்பொழுது அழுவதனால் எந்த பிரயோஜனமும் இல்லை அனைத்தையும் அவனிடம் கூறி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டவள் "உன் அப்பா சொன்னதுதான் உண்மை உனக்கு ஆக்சிடன்ட் ஆனா அன்னைக்கே உன்னோட வேலையும் உன்னை விட்டு போயிடுச்சு  இந்த விஷயம் உனக்கு தெரிஞ்சா நீ தாங்க மாட்டன்னு என்று தான் தன் மேல பழிய போட்டுக்கிட்டாரு உன் அப்பா. அவங்க உன்ன டிஸ்மிஸ் பண்ண ஆர்டர் நம்ம கைக்கு வந்து சேர்றதுக்கு முன்னாடி நீயே வாண்டடா முன் வந்து வேலையே வேண்டாம் என்று ரிசைன் பண்ண மாதிரி இருக்கணும்னு அன்னைக்கு உன்கிட்ட ரிசைனிங் லெட்டர்ல கையெழுத்து வாங்கி அவங்களுக்கு அனுப்பி வச்சிட்டாரு அதனாலதான் நீயா விருப்பப்பட்டு வேலையை விட்டு வெளியே போனான் என்று எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. நீ உயிரா நெனச்சா உன்னோட வேலைய உங்கிட்ட இருந்து பரிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சா உன்னால அதை ஏத்துக்க முடியாதுன்னு தான் இப்படி ஒரு முடிவு எடுத்தாரு அதுலயும் உனக்கு கண்ணு தெரியாத ஒரே காரணத்தினால் தான் உன்னோட வேலை உன்னை விட்டு போயிடுச்சுன்னு தெரிஞ்சா நீ பைத்தியமே ஆகிடுவன்னு உன் அப்பாவுக்கு தெரியும் அதனால தான் இப்படி ஒரு வேலையும் செஞ்சாரு ஆனா நீ அவருக்கு கொடுத்த பட்டம் எல்லாம் எவ்வளவு சிறந்தது தெரியுமா மோசமானவர் கேவலமானவர் உனக்கு அப்பாவா இருக்க தகுதியே இல்லாதவர் என்று இவ்வளவு அழகான பட்டங்களை எல்லாம் நீ உங்க அப்பாவுக்கு கொடுத்து இருக்க" என்று அவள் அழுகையுடன் கூற ஆரூரனோ "விழி போதும் இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்" என்றான் கணீர் குரலில். அதற்கு மேல் கயல்விழி எதுவும் பேசாமல் அமைதியாகிவிட தன் மகனின் முன்பு வந்து நின்று ஆருரன் "தயவு செஞ்சு இதை பத்தி யோசிச்சு உன்ன நீயே தாழ்த்திகாத. உன்னோட கண் பார்வையை சரி பண்றதுக்கான ஆபரேஷன் பண்றதுக்கு எல்லாமே தயாரா இருக்கு ஆனா நீதான் வேண்டான்னு சொல்லிட்ட. உன்னோட பறிபோன கண் பார்வை திரும்பி உன் கிட்ட வந்தா உனக்கு வேலை கிடைக்கிறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. நீ பிஸிக்கலி எந்த பிராப்ளமும் இல்லாமல் நல்லா இருக்கன்னு நம்ம மெடிக்கல் சர்டிபிகேட்  கொடுத்தா போதும் அகைன் பிராசஸ ஸ்டார்ட் பண்ணலாம் ஆனா நீ தான் எதுக்கும் ஒத்து வர மாட்டேங்குற" என்று ஆருரன் கூற ஆரன் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தான்  


யட்சிணி  கண்ணீருடன் அவனுக்கு மறுத்துட்டு கொண்டு இருக்க அவள் கரத்தை பிடித்து தடுத்து நிறுத்தினான் ஆரூரன் அதில் அவள் கேள்வியாக அவனைப் பார்க்க அவள் கையில் இருந்து மருந்தை வாங்கியவன் தன் மகனின் சட்டையை கழற்றி தானே அவனுக்கு மருந்திட துவங்கினான். 


"கோவத்துல அடிச்சிட்டேன்டா முட்டாள் ஆகிட்டேன். கோபம் வந்தால் நான் பைத்தியக்காரன் ஆகிடுறேன். அதனால தான் இப்படி ஆயிடுச்சு. உன்னோட நிலைமையில் இருந்து யோசிச்சு இருக்கணும் ஆனா அப்படி பண்ணாம விட்டுட்டேன் என் தப்பு தான். நீ தப்பு பண்ணிட்டியோனு நினைச்சேன் ஆனா பொறுமையா யோசிக்கும்போது தான் தெரியுது கண்டிப்பா நீ தப்பு பண்ணி இருக்க மாட்டன்னு. நீ அந்த பொண்ணு எந்த அளவுக்கு விரும்பி இருக்கனு எனக்கு தெரியுது உடலால நீங்க ரெண்டு பேரும் திருமணத்திற்கு முன்னாடி இணையுற அளவுக்கு காதலிச்சு இருக்கீங்க. ஆனா அந்த காதல் வெற்றி அடையும்னு நம்பி இருக்கீங்க. என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி கண்டிப்பா அந்த பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் நினைத்திருப்ப. அது எனக்கு நல்லாவே தெரியும் நாங்க அந்த பொண்ண ஏத்துக்குவோம் என்ற நம்பிக்கைதான் உன்னை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு அத புரிஞ்சுக்காம முட்டாள் தனம் பண்ணிட்டேன் பெத்த புள்ள கிட்ட மன்னிப்பு கேட்கிறதஹ்ல்ல நான் ஒன்னும் குறைந்திட மாட்டேன் முடிஞ்சா அப்பாவை மன்னிச்சிடு. ஆனால் இந்த அப்பா பண்ணது எல்லாமே உன்னோட நல்லதுக்கு தான் அதை மட்டும் புரிஞ்சுக்கோ" என்றவன் தன் மகனுக்கு மருந்திட்டு முடித்து அங்கிருந்து தளர்ந்த நடையுடன் நகர்ந்தான் ஆரூரன்


வெளியே ஆருத்ரன் அனைத்தையும் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்தவன் தன் கண்களில் ஓரம் துளிர் கண்ணீரை துடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான் "இப்பவாது உண்மை எதுன்னு புரிஞ்சுக்கோ உங்க அப்பாவ வெறுத்து ஒதுக்கிடாத அவன் பாவம் உன்ன மட்டும் தான் வாழ்க்கையா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கான் அவனோட அழகான உலகத்துல அவனோட மனைவிக்கு அப்புறம் அவ  உயிரையே வச்சிருக்கறது உன் மேல மட்டும் தான் அதை முதலில் புரிஞ்சுக்கோ. தேவை இல்லாம வார்த்தையால உன்னோட அப்பாவ இதுக்கு மேலயும் வதைக்காத" என்று தளர்ந்த குரலில் கூறியவன் அங்கிருந்து நகர்த்து விட கயல்விழி தன் மகன் அருகே சென்றவள் ஒருமுறை கண்ணீருடன் அவன் உடலில் காயம்பட்ட அனைத்து இடங்களிலும் மருந்து இடப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்துவிட்டு தன் மகனின் முகத்தை தன் கரங்களில் ஏந்தினாள் 


அவனோ இன்னும் ஜடம் போல் அப்படியே அமர்ந்திருக்க கண்ணீருடன் அவன் நெற்றியில் முத்தமிட்டவள் திரும்பி யட்சிணியை பார்த்து கண்களால் அவனிடம் என் மகனை பார்த்துக் கொள் என்று மன்றாடினாள் அதை உணர்ந்து கொண்டவள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கலங்கிய கண்களுடன் விழிகளை மூடி திறக்க கண்ணீரை துடைத்த வண்ணம் அங்கிருந்து வெளியேறினாள் கயல்விழி அனைவரும் சென்று விட்டனர். குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் கட்டிலில் இருந்தது. யட்சிணியும் ஆரனும் மட்டும் அமர்ந்திருந்தனர் சோபாவில். வெகுநேரம் நீடித்த மவுனத்தை கலைத்தது மங்கை தான் "சார்" என்று அவள் மெல்லிய குரலில் கலங்கிய கண்களுடன் அவனை அழைக்க படாரென்று தான் அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்தவன் வேகமாய் அந்த அறையில் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தான் அவனின் செயலில் பதறிப் போனவள் தானும் அவன் பின்னே ஓடினாள் பதட்டத்துடன் 


அந்த அறைக்குள் நுழைந்தவன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான் தளர்ந்து.  அவன் பின்னே ஓடி வந்தவள் தானும் அவன் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தாள். "சார் ப்ளீஸ் தயவு செஞ்சு மனச விட்டுடாதீங்க எல்லாமே சரியாகும் சார். உங்க அப்பா மேல நீங்க வெச்சிருந்த கோபத்தை உங்க மனைவி என்கிற ஸ்தானத்துல உங்க வாழ்க்கைகுள்ள வந்து சரி பண்ணனும்னு நெனச்சேன் மத்தபடி உங்க கூட சந்தோஷமா பண செழிப்புல வாழனும்னு நான் நினைக்கவே இல்ல சார் அதுக்கு ஆசைப்படுறவ நான் கிடையாது. உங்களை பழையபடி மாத்தணும் உங்க குடும்பத்தோட பழையபடி நீங்க சந்தோஷமா வாழற ஒருத்தரா நீங்க மாறனும்னு நினைச்சு தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஆனா இன்னைக்கு நடந்த எல்லா விஷயமும் எதிர்பாராமல் நடந்தது இப்படிதான் எல்லா உண்மையும் உங்களுக்கு தெரிய வரணும்னு இருந்திருக்கு போல. அது நடந்துருச்சு தயவு செஞ்சு மனசு மட்டும் தளர விட்டுடாதீங்க சார்" என்று அவள் அழுகையுடன் கூற ஆஆஆஆ என்று அந்த அறையை அதிரும் வண்ணம் கதறினான் ஆரன் வெறி பிடித்தவன்  வாய்விட்டு கண்ணீருடன். 

அதில் அதிர்ந்து போனவள் வாயில் கை வைத்துக் கொண்டு அழுதவாறு அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள் முதல் முறை அவன் அழுது பார்க்கிறாள் அதிலும் அப்படி ஒரு கதறல் அவனுடையது. தரையில் ஓங்கி குத்தியவாறு அவன் கதறி கொண்டிருக்க அவன் கையில் இருந்து ரத்தம் வடிய துவங்கியது அவனின் செயலில் பதறிப் போனவள் வேகமாய் அவனை நெருங்கி அவன் கரத்தை பிடித்து தடுத்து அவனை தன்னோடு இறுக்கமாய் அன்ணைத்துக் கொண்டாள் அந்த அணைப்பு அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையை தன் தாய் அரவணைத்துக் கொள்வது போல் இருந்தது .  


அவனோ தாயை கண்ட சேய் போல அவளளை அணைத்து தன் அழுகையை மறைக்க "அழுதுடுங்க சார் மனசு விட்டு அழுதுடுங்க ஆனா இதுக்கு மேல உங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது ஏன்னா உங்களோட கண்ணீர் உங்களை மட்டும் அல்ல உங்கள சுத்தி இருக்கிற மத்தவங்களையும் பலவீனமாக்கும் ஏன்னா அவர்களுக்கு நீங்க தான் உயிரே உங்களோட அழுகை அவங்கள கஷ்டப்படுத்தும். சார் ப்ளீஸ் இப்பவே மனசுல இருக்குற எல்லா கஷ்டத்தையும் அழுகையா வெளியேத்திடுங்க" என்று அவள் கூற "நான் என்ன பாவம் பண்ண மாயா எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?" என்று அவன் கூறிய வார்த்தைகளில் இவள் மனம் வெம்பி துடித்தது. அவ்வளவு கரகரத்தது அவன் குரல் அழுகையில். அவன் தன்னை புதிதாக மாயா என்று அழைத்ததை அவள் அப்பொழுது உணரவில்லை அவன் அழுகை தான் அவளை மனதை ரணம் கொள்ள வைத்தது 


"முதல்ல என் உயிருக்குயிரா நேசித்த என்னோட நவியை இழந்தே. அடுத்து என்னோட வேலையை இழந்தே இப்போ நான் இழந்ததற்கு எல்லாம் நஷ்ட ஈடா என்னோட குழந்தை என்ன வந்து சேர்ந்தது என்று நினைக்கும் பொழுது இவ்வளவு விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்து இருக்குன்னு தெரிஞ்சிருக்கு எல்லாமே என்னோட நல்லதுக்காக தான் என் அப்பா பண்ணியிருக்காரு ஆனா அத புரிஞ்சுக்காம அவரை அவ்வளவு காயப்படுத்தி இருக்கேன் நாய விரட்டுற மாதிரி விரட்டி அடிச்சிருக்கேன் ஆனா அப்ப எல்லாம் அவர் கோபப்பட்டது கூட என்ன சரி பண்ணனும் தான் என்பதற்கு என்பதை நான் புரிஞ்சுக்கல எவ்வளவு முட்டாளா நான் இருந்து இருக்கேன் எல்லா விஷயத்துலயும் சரியா இருக்கணும்னு நினைப்பேன் பெர்ஃபெக்ட்டா இருக்கணும்னு நினைப்பேன் ஆனா இப்போ எல்லாத்தையுமே தோத்து போய் நிக்கிறேன் வாழ்க்கையிலேயே தோற்றுப் போய் நிக்கிற" என்று அவன் கதறிய கதறல் சத்தம் அவளுக்கு கண்ணீரை வரவழைத்தது

அவனை விட்டு விலகி அவன் முகத்தை தன் கரங்களில் தாங்கியவள் "நீங்க தோற்றுப் போகல சார் நீங்க ஜெயிக்க பிறந்தவரு எல்லா விஷயத்திலும் நீங்க ஜெயிக்க பிறந்தவரு உங்களுக்கு தோல்வின்னு ஒன்னு கிடையவே கிடையாது. இத நீங்க தோல்வியாக நினைக்காதீங்க வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரு கருப்பு பக்கம் இருக்கும் அந்த மாதிரி தான் இதுவும் உங்களுக்கு. இதை இப்படியே விட்டுடுங்க இனி உங்களுக்கு உங்க பையன் இருக்கான் அவனை உலகமா நினைச்சு வாழுங்க சார்" என்று அவள் கூற "ஆனா என் நவி என் கூட இல்லையே "என்றான் அவன் தலையே இறுக்க பிடித்துக் கொண்டு கண்ணீருடன். அவன் கூறிய வார்த்தைகளில் இவளுக்கு தான் மனம் வெம்பி துடித்தது 


எந்த பெண்ணிற்கு தான் வலிக்காது தன் கணவன் மற்றொரு பெண்ணை பற்றி கதறி துடிக்கும் பொழுது அந்த மனநிலையில் தான் இருந்த அவள் 

அவளை நினைவுகள் காலையில் கரிகாலன் எதற்காக தன்னை அடித்தான் என்ற நினைவிற்கு சென்றது

(காலைல எல்லோருக்கும் முன்னாடி ஏன் ஆரன் அவளை அடிச்சான் என்கிற காரணம், அதாவது எப்படி ஆரன் எழுதிய டைரி அவளுக்கு கிடைத்தது என்பது அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்)

தொடரும்...


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....