பெண் கவிதை 35
மாலை வேலை அனைவரும் வெளியே கிளம்புவதற்காக தயாராகி இருந்தனர் ஆருரன் கம்பெனிக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்க கயல்விழி அவனிடம் தாம் தூம் என்று குதித்துக் கொண்டிருந்தாள் கோபத்தில். "என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க? காலையில தஷி அவ்வளவு சொல்லியும் கேட்காம ஆபீஸ்க்கு போகணும்னு சொல்றீங்க நீங்க போறதும் இல்லாம ஆருத்ரனையும் கூட கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க எல்லாரும் குடும்பமா வெளியே போலாம்னு தான பிளான் பண்ணி இருந்தோம். இப்ப திடீர்னு இப்படி பேசினா என்ன அர்த்தம்?" என்று அவள் கோபமாய் கத்திக் கொண்டிருக்க "நல்லா கேளுங்க அக்கா இவங்களுக்கு எப்ப பாத்தாலும் ஆபீஸ் ஆபிஸ். அது மட்டும் தான் முக்கியமா படுது. நம்ம எல்லாம் தெரியவே மாட்டேங்குற இவங்க கண்ணுக்கு" என்று தியூதா ஒருபுறம் அங்கலாய்த்து கொண்டிருந்தாள்
அப்போது தயாராகி கீழே வந்த ஆரன் இவர்கள் கத்தல் சத்தத்தை கண்டு புருவம் சுருக்கிவாறு அவர்களை பார்க்க தஷிகாவோ சோகமாக கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவள் தான் அண்ணன் வந்தவுடன் வேகமாய் அவனை நோக்கி சென்றாள் அவள் தன் அருகே வந்தவுடன் அவள் தோள்மேல் கை போட்டு நடக்கும் சண்டையை பார்த்தவன் "என்ன ஆச்சு தஷி? எதுக்காக அம்மா இப்படி கத்திக்கிட்டு இருக்காங்க என்ன பிரச்சனை?" என்று புரியாமல் அவளிடம் கேட்க "ஐயோ அதை ஏன் ண்ணா கேக்குறீங்க நம்ம எல்லாரும் ஒண்ணா ஃபேமிலியா இன்னைக்கு வெளிய போலாம்னு தானே நம்ம பிளான் பண்ணி இருந்தோம்?" என்று அவள் கேட்க "ஆமா அதுக்காகத்தான நானே ரெடியா இருக்கேன் அதுல என்ன பிரச்சனை?" என்றால் மீண்டும் அவன் புரியாமல் "அதுல தான் நான் பிரச்சனையே. இப்ப திடீர்னு அப்பாவும் பெரியப்பாவும் கிளம்பி ஆபீஸ்க்கு போகணும்னு சொல்றாங்க ஏதோ முக்கியமான கிளைன்ட் மீட்டிங் நடக்கப் போதாம் அதுக்கு நாங்க போயே ஆகணும்னு நின்னுகிட்டு இருக்காங்க அம்மாவும் பெரியம்மாவும் அதுதான் அவங்ககிட்ட சண்டை போட்டுட்டு இருக்காங்க இங்க பாருங்க எல்லாருமே கிளம்பி வந்துட்டாங்க திடீர்னு அவங்க இப்படி போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று அவளும் ஒருபுறம் வருத்தம் கொல்ல "சரி இரு நான் பார்த்துக்கிறேன்" என்று அவளிடம் கூறியவன் தன் தந்தை மற்றும் சித்தப்பாவின் அருகே சென்று நின்று அவர்களை விழிகளை உருட்டி முறைக்க அவனின் பார்வையை உணர்ந்து இருவரும் வேறு வேறு புற முகத்தை திருப்பிக் கொண்டனர்.
"என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்கரெண்டு பேரும் உங்க மனசுல?" என்று அவன் கோபமாக கேட்பது போல் கேட்க அதில் அப்போதும் பதில் கூறாமல் அமைதியாக எங்கேயோ பார்த்தவாறு தான் என்று இருந்தனர் ஆரூரன் மற்றும் ஆருத்ரன் "உங்க கிட்ட தான் கேட்கிறேன் எல்லாரும் குடும்பமா வெளியே போலாம்னு பிளான் பண்ணி கிளம்பி வந்த பிறகு நீங்க பாட்டுக்கு ஆபிஸ்க்கு போறேன்னு சொன்னா என்ன அர்த்தம் இதெல்லாம் கொஞ்சம் கூட சரி கிடையாது ஒழுங்கு மரியாதையா ரெண்டு பேரும் கிளம்பி வாங்க" என்று அவன் கோபமாய் கூற "டேய் முக்கியமான வேலை இருக்குடா" என்றான் அவன் புறம் திரும்பி கோபமாக பேசுவது போல் ஆரூரன். ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாத ஆரனோ "சோ வாட்? ஆனால் இது ஃபேமிலிக்கான டைம் நீங்க எங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணி தான் ஆகணும் நேத்து முழுக்க ட்ரைன்ல டிராவல் பண்ணி வந்துட்டு வெறும் நாலே மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்த நானே என் தங்கச்சி வெளிய போகணும்னு சொன்ன உடனே அவளுக்காக கிளம்பி வந்து இருக்கேன் உங்களுக்கு என்ன அவ்வளவு திமிரு?" என்று அவர் கோபமாய் கேட்க "முக்கியமான மீட்டிங் டா" என்றான் ஆருத்ரன் ஒரு புறம் ." என்ன மீட்டிங்கா இருந்தாலும் கேன்சல் பண்ணுங்க பேமிலிய விட வேற எதுவும் முக்கியம் கிடையாது" என்று அவன் அழுத்தமான குரலில் கூற கயல்விழியோ அப்படி போடு என் பிள்ளை தான் உங்களுக்கெல்லாம் சரி. பாருங்க குடும்பம், பிசினஸ்ன்னு தனித்தனியா பிரிச்சு பேசறான். ஆனா நீங்க என்னடான்னா குடும்பத்தை விட பிசினஸ் தான் முக்கியம்னு நினைத்து ஓடிக்கிட்டு இருக்கீங்க" என்று அவள் கூற "அடியை வாய்க்கு வந்தத எல்லாம் உருட்டாதே" என்றான் ஆரூரன்
அவன் கூறியதை கேட்டு ங்கே என்று முழித்த கயல்விழி "என்ன பேச்சு பேசுறீங்க?" என்றாள் முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு புரியாமல். அதில் சிறியவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்து விட்டனர். அவர்களை ஆரூரன் முறைப்புடன் ஒரு பார்வை பார்க்க அடுத்தபடி வாயை கப் சிப் என்று மூடிக்கொண்டார்கள் அனைவரும். தஷிகாவோ "சும்மா இல்லாமல் ஐயோ பெரிம்மா இது கூட உங்களுக்கு தெரியாதா? உருட்டாதன்னா பொய் சொல்லாதன்னு அர்த்தம் இதெல்லாம் இந்த காலத்து பசங்க யூஸ் பண்ற வார்த்தை" என்று அவள் போட்டு கொடுக்க அதில் தன் கணவனை முடிந்த அளவிற்கு முறைத்து தள்ளினாள்
கயல்.
ஆனால் ஆருரன் அதையெல்லாம் கண்டு கொண்டான் இல்லை. ஆரன் இதையெல்லாம் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாதவன் இ"ப்போ உங்களால வர முடியுமா முடியாதா?" என்று ஒரே கோடாக போட அதற்கு மேல் அவனை எதிர்த்து பேச முடியாமல் தன் தொலைபேசியை எடுத்து ஆரூரன் யாருக்கோ அழைப்பை விடுத்தான். எதிர்ப்புறம் அழைப்பை ஏற்றவுடன் "மீட்டிங் கேன்சல் பண்ணிடுங்க நாளைக்கு மார்னிங் நானும் ஆருத்ரனும் அந்த மீட்டிங்க அட்டென்ட் பண்ணிக்கிறோம். கிளைன்ட் கிட்ட சொல்லிடுங்க" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க சிறியவர்கள் அனைவரும் ஒவ்ன்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் மகிழ்ச்சியில்
ஆரன் அதை கண்டு தந்தையை பார்த்து ஒரு சிறிய புன்னகையை சிந்தியவன் இப்போது அனைவரின் புறமும் திரும்பி "கிளம்பலாமா?" என்றான் அவர்களிடம். "போகலாமே" என்று சிறியவர்கள் ஒரே குரலில் கூற "எல்லாரும் அவங்க அவங்க கார்ல போயிடலாம் ஆருரா" என்றான் ரோகன் சரி என்று தலை அசைத்தவுடன் அனைவரும் வீட்டில் இருந்து கிளம்பினார்
முதலில் அவர்கள் கிளம்பி சென்றது என்னவோ கோவிலுக்கு தான் இது கயல்விழியின் கட்டளை. முதலில் கோவிலுக்கு சென்று விட்டு அதன் பின்பு வெளியே எங்கேயாவது செல்லலாம் என்று அவள் கூறி இருக்க அவள் கூறியதை கேட்டு அனைவரும் கோவிலுக்கு சென்றனர் அருகில் இருந்த முருகர் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பெண்கள் வாங்கிக் கொண்டனர் கோவில் சன்னிதானத்திற்குள் நுழைந்தவுடன் ஐயரிடம் அர்ச்சனை பொருட்களை கொடுத்து வீட்டில் உள்ள அனைவரின் பெயரிலும் அர்ச்சனை செய்யுமாறு அவரிடம் கூற அவரும் ஒவ்வொருவரின் ராசி மற்றும் நட்சத்திரத்தை கேட்டு அர்ச்சனை செய்ய தொடங்கினார். ஆரூரன் ஆருத்ரன் ஆரன் என அனைவரும் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அமைதியாக இறைவனை பார்க்க துவங்கினர்
மூவரும் இந்த விடயத்தில் ஒற்றுமையாக இருப்பதை கண்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தலையே சுற்றும் ஆரூரனும் ஆருத்ரனும் எப்படி இறை நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களோ அதே போல் தான் கரிகால் ஆரனும் இருந்தான் கயல்விழி எவ்வளவு அவனிடம் எடுத்துக் கூறியும் "எனக்கு இதுல எல்லாம் விருப்பம் இல்ல ம்மா நம்மல மீதி சக்தி ஒன்று இருக்குன்னு எனக்கு தெரியும் ஆனா அது கடவுளான்னு எனக்கு தெரியாது. அதனால கடவுள் மேல எனக்கு நம்பிக்கை இல்லை என்னை போக்குல விட்டுடுங்க" என்று கூறிவிடுவான் ஆணவன்
அதனால் மேற்கொண்டு அவனை வற்புறுத்தவில்லை கயல். அப்பொழுது அர்ச்சனை முடிந்த அனைவருக்கும் அர்ச்சகர் விபூதியை கொடுக்க அனைவரும் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டனர் தீயூதா பொறுப்பாக தன் கணவனுக்கு விபூதியை நெற்றியில் வைக்க அவளை முறைத்துக் கொண்டே அமைதியாக நின்றான் ஆருத்ரன். வேண்டாம் என்று கூறினால் அதற்கு சாமியாட்டம் ஆடுவாள் என்பதால் அவன் அமைதியாக ஏற்றுக் கொள்ள ஆரூரன் மற்றும் ஆரன் இருவரும் கயல்விழி தங்கள் நெற்றியில் வைத்த திருநீரை ஒரே நேரத்தில் அவளை முறைத்த வண்ணம் அழிக்க முற்பட "நெத்தில கை வச்சீங்க அப்புறம் நடக்குறதே வேற. உங்களுக்கு சாமி மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ அட்லீஸ்ட் என்னோட நம்பிக்கைக்காவது மரியாதை கொடுங்க" என்றாள் அவள் கோபமாக
அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக விட இருவரையும் நெட்டி முறித்தவள் "திருநீறு வெச்ச பிறகு ரெண்டு பேருமே ரொம்ப அழகா இருக்கீங்க ஆனா அத வைக்க மாட்டேங்கிறீங்க உங்கள எல்லாம் என்னத்த தான் சொல்றது" என்று புலம்பி கொண்டு அதன் பின்பு கோவிலை சுற்றி வருவதற்காக கிளம்ப மற்ற அனைவரும் அவள் பின்னே வால் பிடித்துக் கொண்டு சென்றனர். ஆனால் ஆரூரன் ஆருத்ரன் ஆரன் மூவரும் படிகளில் அமர்ந்து விட்டனர்
"அப்புறம் சாருக்கு ஒரு வருஷம் எப்படி போச்சு வீரசாகசமெல்லாம் இந்த ஒரு வருஷத்துல ஐயா பண்ணியிருப்பீங்க வீர தழும்பு எல்லாம் இருக்குமே ஏதாவது ஒன்னை எங்களுக்கு காட்டுறது" என்று ஆருத்ரன் கிண்டலாக தன் மகனிடம் வினவ அதில் தன் சித்தப்பாவை பொய்யாக முறைதான் ஆரன் "என்ன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு?" என்றான் விழிகளை உருட்டிய வண்ணம் ஆரூரன் தன் மகனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் எதுவும் பேசாமல். அவன் பார்க்கிறான் என்று கூறுவதை விட ரசிக்கிறான் என்று தான் கூற வேண்டும் வருடத்திற்கு ஒரு முறை இப்படி மகனை காணும் பொழுது அவனை கண்களில் நிறைத்து கொள்வான் ஆனவன்
அவன் ராணுவத்திற்கு செல்ல போகிறேன் என்று கூறும்பொழுது வீட்டில் இருந்து அனைவரும் எதிர்த்தனர் ஏன் ஆருத்ரன் கூட வேண்டாம் என்றுதான் கூறினான் ஆனால் ஆரூரன் மட்டும் தான் மகனின் ஆசைக்கும் மதிப்பு கொடுத்து உன் விருப்பப்படி இரு என்று அவனை ராணுவத்திற்கு அனுப்பி வைத்தான் வீட்டில் உள்ளவர்கள் அதில் ஆரூரனிடம் சண்டை போடும் பொழுது" என் புள்ள ஒரு ராணுவ வீரர் என்று சொல்லிக்குறதுல எனக்கு பெருமைதான். இந்த நாட்டுல தான் நம்ம வாழறோம் இந்த நாட்டுக்காக அப்ப நம்ம எதுவுமே செய்யலன்னா எப்படி?" என்று கூறி அவர்களை அடக்கி விட்டான் அவன். கயல்விழி அவ்வப்போது மகனை எண்ணி அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பொழுதெல்லாம் அவளை அடக்கி ஆறுதல் கூறி அவளை சமாதானம் செய்வதை ஆரூரனின் வேலையாகி போனது இத்தனை வருடங்களில். அவளாலும் என்னதான் செய்ய முடியும் அவனை வயிற்றில் சுமக்கும் போது அவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் சுமந்து பெற்றெடுத்தாள்
அப்படிப்பட்ட மகனை பிரிந்து இருப்பது அவளுக்கு எவ்வளவு வலியை கொடுக்கும் என்பதை உணர்ந்துதான் அவளின் ஆசை மணாளன் அவளை அனுசரித்து தனக்குள் அரவணைத்துக் கொள்வான் அவள் அழுது புலம்பும் சமயங்களில்.
தொடரும்...
Comments
Post a Comment