பெண்கவிதை 55
இரவு தாமதமாக வீட்டிற்குள் நுழைந்த ஆண்களை ஹால் சோபாவில் அமர்ந்திருந்த கயல்விழி தான் வரவேற்றாள். கைகளை கட்டிக்கொண்டு அவள் அமைதியாக ஹால் சோபாவில் தலை சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருக்க தன் மனைவியை இந்நேரம் எங்கு எதிர்பாராத ஆரூரன் அவள் அருகே சென்றவன் "என்னாச்சு விழி இவ்வளவு நேரம் வரைக்கும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அவள் அருகே சென்று அவள் தோள்மேல் தன் கரம் வைத்து கேட்க அவன் குரல் கேட்டு வேகமாய் கண் விழித்தவள் அப்பொழுதுதான் அனைத்து ஆண்களையும் கண்டாள்
"என்ன எல்லாரும் இவ்ளோ லேட்டா வீட்டுக்கு வரீங்க நீங்க வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன் காலையில பங்க்ஷன் முடிஞ்சு அப்படியே வெளிய கிளம்பினவங்க இப்பதான் வரீங்க எங்க போயிட்டு வரீங்க எல்லாரும்?" என்று அவள் கோபமாய் கேட்க அதில் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அனைவரும் தடுமாறி நிற்க ஆரூரன் மட்டுமே தன் மனைவியை கையாளும் வித்தையை அறிந்தவன் என்பதால் "அது ஒன்னும் இல்லம்மா ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங் நாங்க எல்லாருமே அதுல கலந்துக்க வேண்டிய சிச்சுவேஷன். ஏன்னா நம்ம கம்பெனியோட எம்டி நான் கண்டிப்பா இருக்கணும் சிஇஓ ஆரன் இருக்கணும் யுதியும் துரியனும் ஆரானுக்கு ஹெல்பா இருப்பாங்க ஆருத்ரன் ஒன் ஆப் தி ஷேர் ஹோல்டர் நம்ம கம்பெனியில. அதனால தான் அவனையும் கூட கூட்டிட்டு போன" என்று அவன் அழகாக சமாளிக்க அவன் கூறியதை உண்மை என்று நம்பிய கயல்விழி "அப்படியா அதுக்குன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாமையா போவீங்க எல்லாரும் வேற எங்கேயோ போறீங்கன்னு சொல்லி நினைச்சேன் அதனால சீக்கிரம் வந்துருவீங்கன்னு நினைச்சா வரவே இல்ல ஆருத்ரா நீங்களாவது என்கிட்ட சொல்லீருக்கலாம்ல பாவம் தீயூதா நீங்க வருவீங்க வருவீங்கனு வெயிட் பண்ணிட்டு சாப்பிடாமயே போய் தூங்கிட்டாங்க போங்க அவளுக்கும் சாப்பாடு எடுத்துட்டு போயி கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க" என்று கூறியது பேசியவாறு டைனிங் டேபிளை அடைந்து அவர்களுக்காக எடுத்து வைத்திருந்த உணவை எடுத்துக் கொண்டு வந்து ஆருத்ரன் கையில் கொடுக்க தன் மனைவியின் பாசத்தை எண்ணி நெகிழ்ந்த ஆருத்ரன் "சரி கயல் நான் போறேன் நீங்களும் சாப்பிட்டு தூங்குங்க எல்லாருக்கும் குட்நைட்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்
துரியன் "சார் நான் கிளம்புற டைம் ஆயிடுச்சு" என்று கூற "இன்னைக்கு நீ ஆசிரமத்துக்கு போக வேண்டாம் துரியா நல்லசிவம் உன்கிட்ட நான் இன்பார்ம் பண்ணிட்டேன் அதனால இன்னைக்கு ஒரு நாள் அவரே ஆசிரமத்தை கண்காணித்து கொள்கிறேன் என்று சொல்லிட்டாரு நீ இங்கே ரெஸ்ட் எடு நாளைக்கு காலைல ஆசிரமத்துக்கு கிளம்பலாம்" என்று ஆரன் கூறு அவர் கூறியதை கேட்டு வியப்பாக அவனை நோக்கினான் துரியன். தங்களுடன் தான் இவ்வளவு நேரம் இருந்தான் ஆனால் இதையெல்லாம் எப்படி செய்து முடித்தாம் என்று தெரியவில்லை அனைவருக்கும்
யுதி உடல் சோர்வாக இருக்கவே அனைவரிடமும் இரவு வணக்கத்தை கூறிவிட்டு அங்கிருந்து நகர "இவனுக்கும் உன் பக்கத்துல இருக்குற ரூம காட்டு உன்னுடைய டிரஸ்ஸ இன்னிக்கு அவங்க கிட்ட குடுத்துடு அது அவன் நைட்டு யூஸ் பண்ணிக்கிட்டும்" என்று ஆரன் கூற "சரி மாமா நீங்க சொன்னபடியே பண்ணிடுறேன்" என்று கூறிவிட்டு துரியனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் யுதி. விருஷாலி இதை எல்லாம் மேல் மாடத்தில் நின்று அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க "விருஷா துரியனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போய் கொடு அவர் சாப்பிட்டு வந்தானானா என்னன்னு தெரியல" என்று கயல்விழி அவளை அழைக்க "ஹான் வரேன் அத்த" என்று கூறியவாறு கீழே இறங்கி வந்தவள் கயல்விழி நீட்டிய உணவு தட்டை வாங்கிக்கொண்டு துரியனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றாள். இங்கு ஆரூரன் தன் மனைவியை விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க "என்ன பார்வை எல்லாம் வித்தியாசமா இருக்கு வாங்க வந்து முதல்ல சாப்பிடுங்க அப்புறமா ரூமுக்கு போய் ஃபிரஷ் ஆகிக்கலாம் முதல்ல கீழ இருக்குற ரூம்ல போய் கை கால் கழுவிட்டு வாங்க" என்று கூற கீழே இருந்த குளியல் அறைக்குள் நுழைந்தவன் கை கால்களை கழுவிக்கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். கயல்விழி அவனுக்கு பரிமாற ஆரம்பிக்க அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்த ஆரூரன் அவளை இழுத்து தன் அருகே அமர வைக்க அவனின் செயலில் அதிர்ந்தவள் "என்னங்க என்ன பண்றீங்க முதல்ல என்ன விடுங்க நான் உங்களுக்கு சாப்பாடு பரிமாறணும் இது என்ன விளையாட்டு?" என்று கண்டிப்பாக கூற "நீ இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டேன்னு தெரியும் ஒழுங்கா என்கூட சேர்ந்து சாப்பிடு. பொய் சொல்ற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத எப்படியும் சாப்பிட்டுட்டேன்ன்னு என்கிட்ட பொய் சொல்வ எனக்கு அது நல்லாவே தெரியும் " என்று கூறியவன் முதலில் அவளுக்கு ஊட்ட ஆரம்பிக்க தன் கணவனின் பாசத்தில் நெகிழ்ந்து போனவள் பதிலுக்கு அவனுக்கு ஊட்ட ஆனந்தத்துடன் இரவு உணவை சிரித்து பேசியவாறு உண்டு கொண்டிருந்தனர் அந்த தம்பதி
இங்கு ஆரன் தன்ன அறைக்குள் நுழையும் பொழுது யட்சிணியின் வாசம் அவனை வரவேற்றது. அவள் இங்கு தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன் சிறிது நேரம் அமைதியாக நிற்க அறைக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை அமைதியாக கட்டிலை நோக்கி நகர்ந்தவன் லேசாக கட்டிலை தடவ அங்கு யட்சிணி சூரியகர்ணனை தன் நெஞ்சில் போட்டு இறுக்கமாய் அணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள் அவள் கால் பாதத்தை வருடியவனுக்கு அது யட்சிணி என்றும் அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்பது. நன்றாக புரிந்து விட தன் மகன் எங்கே இருக்கிறான் என்பதை உணர ஆரம்பித்தவன் கட்டிலை தடவிக் கொண்டே இருக்க எதிர்ச்சியாக அவன் கரம் பெண்ணவளின் இடையில் பட்டுவிட்டது
ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து ஆரன் அவள் இடையை அழுத்தி பிடிக்க அதில் உறக்கம் பதறி அவள் வேகமாய் எழுந்து அமர அவள் திடீரென்று எழுவாள் என்று எதிர்பாராத ஆரன் தடுமாறி அப்படியே அவள் மீது விழுந்து விட்டான். குழந்தை இருவருக்கும் இடையில் மாட்டிக்கொள்ள அவள் கட்டிலில் இருக்க அவள் மீது விழுந்து இருந்தான் ஆரன் . ஆனால் குழந்தையோ எதையும் உணராமல் உறங்கிக் கொண்டிருக்க ஆனவனை இவ்வளவு நெருக்கத்தில் கண்ட யட்சிணிக்கு விழிகள் விரிந்தது
ஆரனுக்கு பெண் அவளின் வாசம் உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகளை கிளப்பி விட்டுக் கொண்டிருக்க மெல்ல தன் கரம் உயர்த்தி அவள் கன்னத்தை பிடித்தான் அழுத்தமாக. அவனின் தொடுகையில் மேலும் சிலிர்த்துப் போனாள் அவள். இதற்கு முன்பு அடிப்பதற்காக மட்டுமே அவன் கரம் தன்னை தழுவி இருக்கிறது முதல் முறை சாதாரணமாக அவன் கரம் தன்னை தழுவுவதில் உள்ளுக்குள் உணர்வுகள் பீரிட துவங்கியது அவளுக்கு. மெல்ல அவள் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தவனுக்கு ஏற்கனவே நற்பவியை கொன்றவர்களுக்கு தண்டனை அளித்ததின் மூலம் ஆசுவாசம் இருந்தாலும் அவளின் நினைவு சூழ்ந்து ஆழி பேரலை போல் உணர்வுகளால் சிக்குண்டு இருந்தவன் அதற்கு மேல் தால இயலாமல் அவள் உதட்டை சிறை செய்யும் நோக்கில் அவளை நெருங்க முற்ப்பட இருவருக்கும் இடையில் உறங்கிக் கொண்டிருந்த கர்ணன் அதற்கு மேல் தன் தந்தையின் பாரம் தாங்க இயலாமல் லேசாக சினுங்க ஆரம்பித்தான்
அதில் சட்டென்று சுயநினைவிற்கு வந்த ஆரன் வேகமாய் அவளிடம் இருந்து பிரிந்தவன் தான் செய்ய இருந்த காரியத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான் ஆக்ரோஷமாக . அதில் பயந்துபோனவள் குழந்தை தூக்கத்தில் விழித்து விடக்கூடாது என்பதற்காக அவனை கட்டிலில் படுக்க வைத்து அவன் நெஞ்சில் தட்டிக் கொடுத்தவாரு ஒரு வித பயத்துடனும் கவலையுடனும் ஆரனை பார்த்துக் கொண்டிருக்க வேகமாய் கட்டிலில் இருந்து
எழுந்தவன் குளியல் அறைக்கும் நுழைந்து கொண்டான்
அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்தது.
இங்கு குளியல் அறைக்குள் நுழைந்த ஆரன் அங்கிருந்த கண்ணாடியின் முன்பு சென்று நின்றான் தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்க முடியாது என்றாலும் உள்ளத்தில் உணர்ந்தவன் யட்சிணியை நெருங்கியதை எண்ணி வெட்கி போனான் . தன் மனதிற்குள் நற்பவி சிம்மாசனம் போட்ட அமர்ந்திருக்கும் பொழுது மற்றொருவளை எப்படி நான் தவறான எண்ணத்தில் தொடலாம் இது எவ்வளவு பெரிய அசிங்கம் இது என் நற்பவிக்கு நான் செய்யும் துரோகம் அல்லவா என்று நினைத்தவனுக்கு தன்மீதே கோபம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே இருந்தது அதற்கு மேல் முடியாமல் ஆக்ரோஷமாய் தன் கன்னத்தில் தானே மாறி மாறி பளார் பளார் என்று அறைந்து கொண்டான் அவன். அந்த சத்தத்தில் வெளியே யட்சிணிக்கு மேலும் பயம் அதிகமாக வேகமாய் குளியல் அறை கதவை தட்டினாள் பயத்துடன். "சார் ப்ளீஸ் கதவை திறங்க தயவு செஞ்சு இப்படி எல்லாம் பண்ணாதீங்க கதவை திறங்க சார் எனக்கு பயமா இருக்கு" என்று இவள் வெளியே இருந்து கத்த அவளின் சத்தத்தில் சற்று சுயநினைவிற்கு வந்தவன் இறுகிய முகத்துடன் வந்து கதவை திறந்தான்.
அவனின் முகத்தை கண்டவனுக்கு மேலும் பயம் தான் அதிகமானது அதற்கும் மேல் மனம் பெறும் வலியை சுமந்தது அவன் கன்னங்களில் ஏற்பட்டிருந்த கைதடத்தை கண்டு. மெல்ல விழிகளை துடைத்துக்கொண்டே அவனை மன வலியுடன் நோக்கியவள் "அடிச்சிக்கிட்டிங்களா சார்?" என்றாள் அழுகை குரலில் அதில். அவன் அமைதியாக இறுகிய முகத்துடன் இருக்க "இவ்வளோ எல்லாம் கஷ்டப்பட்டு நீங்க என்ன அனுசரிச்சுக்கணும்னு அவசியம் இல்ல சார். நான் இனி உங்கள் வாழ்க்கையில் இல்லை னு நினைத்துக்கோங்க" என்று கரகரத்த குரலில் கூறியவள் வேகமாய் அங்கிருந்து விலகி பால்கனிக்கு சென்று விட்டாள் . இந்த அறைக்கு வரவேண்டும் என்று கயல்விழி வற்புறுத்தியதால் மட்டுமே அங்கு வந்தாள்
இல்லை என்றால் கீழே இருந்த மற்றொரு அறைக்கு தான் இருந்திருப்பாள் ஆனால் கயல்விழியின் பேச்சை மீறி எதுவும் செய்ய இயலாது என்பதால் வேறு வழி என்று இங்கு வந்தவள் ஆரன் நெருக்கத்திற்கு உள்ளாகி இன்று மன வேதனைக்கு உள்ளாக்கி போனாள்.
ஆரன் அவள் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவன் அவளின் கொலுசு சத்தத்தை வைத்து அவள் பால்கனிக்கு செல்வதை புரிந்து கொண்டான் இருந்தும் அவளை தடுக்கவில்லை வேகமாய் குளித்து முடித்து வேறோரு உடையை மாற்றிக் கொண்டு கட்டிலுக்கு வந்தவன் கட்டிலில் ஓரம் படுத்துக்கொள்ள அவன் மேல் உருண்டு வந்து விழுந்தான் அவன் புதல்வன். தொட்டிலில் தான் எப்பொழுதும் அவன் அறையில் உறங்குவான். ஆரன் அவனை கட்டிலில் படுக்க வைத்தது இல்லை இதுவரை. ஒரு வேளை உறக்கத்தில் அவன் கீழ விழுந்து விடுவான் என்று அவ்வாறு ஒரு ஏற்பாட்டை செய்து இருந்தான் அவன்
ஆனால் இன்று யட்சினி அவனை கட்டிலில் படுக்க வைத்திருக்க உருண்டு புரண்டு தன் தந்தையின் மீது வந்து விழுந்தவன் தன் பிஞ்சு கரம் கொண்டு அவன் கழுத்தில் இருந்த பிளாட்டினம் சங்கிலியை பிடித்துக் கொண்டு உறங்க ஆரம்பிக்க தன் மகனின் நெருக்கத்தில் இவ்வளவு நேரம் ஆழி பேரலையாக கொந்தளித்துக் கொண்டிருந்த அவன் மனம் சற்று ஆசுவாசமடைந்தது அவனை தூக்கி தன் நெஞ்சின் மீது படுக்க வைத்து அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டு விழிகளை மூடிய ஆரனுக்கு உறக்கம் வரவில்லை என்றாலும் தன் மகனின் அருகாமையில் ஒரு வித இடத்தை கொடுத்தது
பால்கனியில் போடப்பட்டிருந்த சோபாவில் கை கால்களை குறுக்கி அமர்ந்து கொண்டு கரிய வானை வெறித்துக் கொண்டிருந்த யட்சிணி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுகளை எடுக்க ஆரம்பித்திருந்தாள் அந்த இரவில்.
தொடரும்...
Comments
Post a Comment