பெண் கவிதை 42

ஊர் பஞ்சாயத்து கூடிய இடத்திற்கு நற்பவியும் அவளுடன் அந்த செவிலியம் வந்தனர் அங்கு ஊர் தலைவரின் மகனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தந்தை இருவரும் ஊர் தலைவரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர் கண்ணீருடன். "ஐயா உங்க பையன் பண்ணி இருக்கிறது மிகப்பெரிய பாவம் அவர் பண்ணது ரொம்ப ரொம்ப பெரிய அநியாயம் நீங்க தான்யா இதுக்கு ஒரு நியாயம் சொல்லணும். உங்க புள்ளையா இருந்துகிட்டு அவர் இப்படி பண்றது எவ்வளவு தப்பு என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் அதனால அவருக்கு சரியான தண்டனை என்ன கொடுக்கணுமோ அதை கொடுங்கள் ஐயா" என்று அந்த பெண்ணின் தந்தை கண்ணீருடன் கூற அந்த பெண்ணோ கூனிக்குறுகி கண்களில் கண்ணீருடன் தலை குனிந்து நின்று இருந்தாள் அங்கு 

தவறு செய்த ஊர் தலைவரின் மகன் விருமாண்டியோ கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் திமிரான தோரணையுடன் நின்றிருந்தான். அங்கு நற்பவிக்கு அவனை பார்க்க பார்க்க கோபம் பொத்துக் கொண்டு வந்தது சிறுவயதில் இருந்தே அவன் கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவான் என்பது அவளுக்கு தெரியும் இப்போதும் திருந்தாமல் ஒரு பெண்ணின் வாழ்வை அழித்துக் விட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இப்படி நிற்பவனை கண்டவளுக்கு அவனை குத்திக் கொல்லும் ஆத்திரம் வந்தாலும் ஊர் தலைவர் என்ன கூறுகிறார் என்று கேட்கலாம் என்று அமைதியாக தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள் பெண் அவள். 

ஆனால் விருமாண்டியின் தந்தை முத்துப்பாண்டியோ "இங்க பாருய்யா உன் பொண்ணு ஒழுங்காக இருந்திருந்தால் என் பிள்ளை எதுக்கு அவ மேல கை வைத்திருக்க போறான் வயசு புள்ள ஒழுங்கா இருந்து இருக்கணும் அவ ஏதாவது என் புள்ளைய காட்டி மயக்கி இருப்பா அதனால அவனும் அவ கிட்ட மயங்கி போய் இப்படி பண்ணி இருப்பான் நீ என்னவோ என் புள்ள மட்டுமே தப்பு பண்ண மாதிரி பேசுற. தப்பு உன் புள்ள பக்கம் இருக்கறதுக்கும் வாய்ப்பு இருக்குல்ல" என்று வெட்கமே இல்லாமல் முத்துப்பாண்டி கூற அதைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். அந்தப் பெண்ணின் தந்தையோ "ஐயோ அய்யா என்ன பேச்சு பேசுறிய? என் புள்ள எப்படிப்பட்ட பிள்ளை என்று இந்த ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் தெரியும் அப்படிப்பட்ட பிள்ளையை போய் நடத்த கெட்டவ என்கிற மாதிரி நீங்க பேசுறீங்களே" என்று அவர் கண்ணீருடன் கூற அவன் "நடத்த கெட்டவ தான் அதனாலதான் என் புள்ளைக்கு சபலம் வந்திருக்கு. முதல்ல உன் பிள்ளை ஒழுங்கானவளா இருக்காளா இல்லையான்னு யோசி அப்புறம் என் புள்ள மேல குறை சொல்லலாம்" என்று மீசையை முறுக்கிய வண்ணம் மனசாட்சியின்றி பேசிய முத்து பாண்டியை கண்ட நற்பவிக்கு அதற்கு மேல் கோபத்தை அடக்க முடியவில்லை 


"யோவ் வாய மூடு ய்யா" என்று ஆக்ரோஷமாய் கத்திக்கொண்டே முன்னே வந்தாள் அவள் அவள் சத்தத்தில் அனைவரும் அதிர்ந்து போயினர். முத்துபாண்டியோ அவள் சத்தத்தில் முதலில் அதிர்ந்து போனவர் பின்பு கோபத்துடன் " ஹேய் என்ன புள்ள கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம வாயா போய்யான்னு பேசுற ஒழுங்கா பார்த்து பேசு" என்று அவர் ஆக்ரோஷமா கூற "அடச்சி வாய மூடு தப்பு பண்ணது உன் புள்ள. அவனுக்கு சப்போர்ட் பண்ணி வெட்கமே இல்லாம பேசிட்டு உட்கார்ந்திருக்க உனக்கு மரியாதை ஒன்னு தான் கேடு" என்று இவள் ஆக்ரோஷமாய் காத்த அவள் அருகில் இருந்த பெண்ணோ "ஏய் அமைதியா இருடி தேவையில்லாம நீ எதுக்குடி பிரச்சனைக்குள்ள  போற?" என்று அவளை தடுத்த நிறுத்த முயற்சித்தாள்.  ஆனால் நற்பவி அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவள் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து ஆக்ரோஷமாய் தெனாவட்டாக நின்று இருந்த விருமாண்டியை பார்த்து தூக்கி எறிந்தாள். அந்த கல் சரியாக விருமாண்டி தலையில் விழ மண்டை உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது அவனுக்கு 



அதில் அம்மாஆஆ என்று கத்திக் கொண்டே அவன் கீழே விழ முத்துப்பாண்டி ஆக்ரோஷமாக இருந்தவர் "ஏய் எதுக்குடி தேவை இல்லாம என் புள்ள மேல கல் எடுத்து வீசுற கொன்னுடுவேண்டி உன்னை" என்று அவர் கத்தர அடுத்த நொடி அவர் கன்னத்தில் நற்பவியின் கரங்கள் பதிந்திருந்தது அச்சாக முத்துபாண்டி கன்னத்தில். அவளின் செயலில் மேலும் அனைவரும் அதிர்ந்து போயினர். தன்னை அறைந்த நற்பவி அதிர்ச்சியுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு முத்துப்பாண்டி பார்க்க "இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின மவனே இன்னும் நாலடி சேர்ந்து விழும் பொறுக்கித்தனம் பண்ணி ஒரு புள்ளையோட வாழ்க்கையை கெடுத்தது உன் புள்ள. ஆனா நீ என்னடான்னா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அந்த பொண்ண பத்தி குறை சொல்லிட்டு இருக்க என்னய்யா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? உன் புள்ள தப்பு பண்ணாலும் அவன் உனக்கு உனக்கு ஒசத்தி. இதுவே அடுத்தவங்க தப்பு பண்ணா உனக்கு துர்ச்சாமா தெரியுதோ." என்று அவள் ஆக்ரோஷமாய் கத்த விருமாண்டியின் மூலம் பாதிக்கப்பட்ட பெண் "அக்கா விட்டுருங்க தயவுசெஞ்சு என்னால நீங்க எதுவும் பிரச்சனையில் மாட்டிக்காதீங்க இவங்க எல்லாம் இப்படித்தான் நியாயம் கிடைக்கும் என்று நினைத்து பஞ்சாயத்து கூட்டினது எங்களோட தப்பு. நீங்க எதுவும் பண்ணாதீங்க க்கா" என்று அவள் அழுகையுடன் கூற "வாய மூடு எதுக்கு இவ்வளவு நேரம் தைரியமாக இருந்துட்டு இப்ப மட்டும் வேண்டாம்னு சொல்ற? உனக்கு தப்பு நடந்து இருக்குன்னு தெரிஞ்சும் உன் அப்பா அம்மா தைரியமா உனக்கு நடந்த அநீதிக்கு ஒரு நியாயம் கிடைக்கணும்னு உன்ன இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க நீயும் அதுக்கு சம்மதிச்சு தான் தைரியமாக இங்கே வந்திருக்க இப்ப மட்டும் எதுக்கு பயப்படுற பொண்ணுங்க எப்பவோ தைரியமா இருக்கணும் யாருக்காகவும் எதுக்காகவும் இறங்கி போகவே கூடாது இந்த சொசைட்டி நம்பள கீழ தள்ள தான் பாக்கும் ஆனா அது எல்லாத்தையும் தாண்டி நம்ம தான் நம்மளோட லட்சியத்தை நோக்கி பயணம் பண்ணிக்கிட்டே இருக்கணும் முதல்ல நீ பயப்படாதே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்" என்ற அவள் வேகவேகமாய் தன் தொலைபேசி எடுத்து போலீசுக்கு அழைத்து விவரத்தை கூறிவிட்டாள் அதில் மேலும் பயந்து போயினர் முத்துப்பாண்டி மற்றும் விருமாண்டி

"ஏய் எதுக்கு போலீசுக்கு எல்லாம் நீ தகவல் சொல்ற இந்த ஊருக்குள்ள நான் என்ன சொல்றேன்னா அது தான் நடக்கும். இந்த ஊர் முழுக்க என்னோட கட்டுப்பாட்டுல இறுக்கி என்னோட பேச மீறி இங்க போலீசாலா எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது" என்று ஆக்ரோஷமாய் பேசிக் கொண்டிருக்கும் பொழுது காவல்துறையினர் அங்கு வந்து விட்டனர். அவர் கூறியதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாதவள் "சார் நான் சொன்னது இவங்கதான். இந்த பொறுக்கி தான் அந்த பொண்ணோட வாழ்க்கையே நாசம் பண்ணான் அவங்க அப்பங்காரன் அதுக்கு சப்போர்ட் பண்ணிட்டு பேசிட்டு இருக்கான் இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணும் நீங்களே குடுங்க சார்" என்று அவர் இடம் முறையிட்டால் நற்பவி. அவ்வளவுதான் இன்ஸ்பெக்டர் விருமாண்டியை பிரித்து மேய்ந்து விட்டார் ஆக்ரோஷமாக. "ஏண்டா உனக்கு பொண்ணுங்க நான் கிள்ளுக்கிரையா? எவ்வளவு தைரியமா அந்த பொண்ணு மேல கை வச்சிட்டு தெனாவெட்டா நின்னுகிட்டு இருப்ப வாடா உன்னை லாக்கப்ல வச்சு லாடம் கட்டுறேன்" என்று அவர் அவன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல நற்பவியை வன்மத்துடன் பார்த்தவாறு நகர்ந்தான் விருமாண்டி. முத்து பாண்டியோ காவலர்களிடம் கெஞ்சி கொண்டே தன் மகனின் பின்னே செல்ல அதற்குள் அவனை கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர் காவலர்கள் 


ஆக்ரோஷமாக நற்பவியை நோக்கி வந்த முத்துப்பாண்டியோ "ஏண்டி திமிர் எடுத்த கழுதை. என் புள்ளையவே போலீஸ்ல புடிச்சு கொடுத்துட்டில்ல. இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படி என்கிட்ட மோதுனதுக்கு நீ  அனுபவிப்ப" என்று வன்மத்துடன் கூறியவாறு அங்கிருந்து ஓடினார் தன் மகனை காவல்துறையினரின் பிடியிலிருந்து அழைத்து வருவதற்காக

விருமாண்டியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தந்தை இருவரும் நற்பவியை பார்த்தவர்கள் அந்த படுபாவி என் பொண்ண கெடுத்துட்டான்னு  அவனுக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கணும் நாங்க நினைக்கல மா ஆனா அவன் பண்ண தப்புதான் அவனுக்கு தண்டனை கிடைக்கும்னு நினைச்சோம் என் புள்ள மாதிரி இன்னும் எத்தனையோ பிள்ளைகளோட வாழ்க்கை அந்த படுபாவியால நாசமாகறதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால தான் இந்த பஞ்சாயத்தை கூட்டி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு நினைச்சோமே இது இப்போ நடந்துருச்சு ரொம்ப நன்றி தாயி" என்று அவர்கள் கூற "நீங்க சொன்ன விஷயமே எனக்கு மனசுக்கு நிம்மதியை கொடுக்கிறது ஐயா. அவன் கெடுத்துட்டான்னு அவனுக்கு நீங்க இவள கல்யாணம் பண்ணி கொடுத்து இருந்தீங்கன்னா காலம் முழுக்க இவளுக்கு வாழ்க்கை நரகமா தான் இருந்திருக்கும் ஆனா நீங்க இப்ப சொன்ன வார்த்தை ரொம்ப சரியான வார்த்தை. இவள புரிஞ்சுகிட்டு இவளை ஏத்துக்கறதுக்கு எவன் முன்வர்ரானோ அவனுக்கு இவளை கல்யாணம் பண்ணி கொடுத்து இவ வாழ்க்கையே நல்லபடியா மாத்துங்க" என்று கூறியவள் அங்கிருந்து நகர்ந்தாள் 


வீட்டிற்குள் நுழையும் பொழுதே வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் நற்பவியை புகழ்ந்து தள்ளிவிட்டனர். "ஆத்தா இருந்தாலும் நீ கொஞ்சம் கவனமா இரு அந்த முத்துபாண்டியும் விருமாண்டியோ ரொம்ப மோசமானவங்க.  நீ வேற அவர்களுக்கு எதிராக இவ்வளவு பெரிய வேலை செஞ்சிருக்க அதனால கண்டிப்பாக உன் மேல அவனுக்கு கோபத்தில் இருப்பானுங்க நீ பாட்டியோட எதுக்கும் பாதுகாப்பா இரு என்று அவர்கள் கூற "அதெல்லாம் என்ன நான் பாத்துக்குவேன் நீங்க அத பத்தி எல்லாம் பயப்படாதீங்க எனக்கு ஒன்னும் ஆகாது" என்றாள் அவள் சிரிப்புடன்


நாட்கள் வேகமாய் நகர்ந்தது விருமாண்டி என்ன ஆனான் என்று அதன் பின்பு ஊரில் இருந்த யாரும் யோசிக்கவில்லை ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் அன்று இரவு மணி பத்தை நெருங்கி இருக்க தன் பாட்டிக்கு உணவை பூட்டிவிட்டு அதற்கான மருந்து மாத்திரையை கொடுத்து அவரை உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் நற்பவி அந்நேரம் அவள் வீட்டிற்குள் நுழைந்தனர் கரடு முரடான தோற்றத்துடன் இருந்த 50-க்கும் மேற்பட்ட அடியாட்கள். அவர்களை கண்டு பயந்து போனதில் "ஏய் யார்ரா நீங்க எல்லாம் முதல்ல வெளியே போங்க" என்று அவள் ஆக்ரோஷமாய் கத்த அவள் தலையில் பின்னே இருந்து இரும்பு ராடால் அடித்திருந்தான் விருமாண்டி ஆக்ரோஷமாக.  அதில் ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்து கீழே விழுந்தாள் நற்பவி 


தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....