பெண்கவிதை51

"எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் நான் வர கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஆளுக்கு முன்பாக நின்று கத்தின விருஷாலி. அவளின் செயலில் அவள் தாய் தந்தையான யஷ்விகா மற்றும் ரோகன் இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர் 


"ஏண்டி வெக்கம் மானம் சூடு சொரணை ஏதாவது உனக்கு இருக்காடி? ஆம்பள புள்ள அவனே உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு தயக்கப்பட்டு நிற்கிறான் நீ என்னடான்னா வெக்கமே இல்லாம இப்படி பேசுற" என்று வேண்டுமென்றே தன் மகளை வம்பு இழுத்தாள் யஷ்விகா. அவளுக்கு மனதுக்குள் சந்தோஷமாகத்தான் இருந்தது தன் மகள் வெளிப்படையாகவே தைரியத்துடன் திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்ததை  கண்டு

"அம்மா இதுல வெட்கப்படுவதற்கு என்ன இருக்கு எப்படி இருந்தாலும் அவர்கிட்ட கேட்கிற மாதிரி என்கிட்டயும் தானே விருப்பம் இருக்கான்னு கேட்பீங்க அதனால தான் என்னோட விருப்பத்தால முன்னாடியே சொல்லிட்டேன். நான் ரொம்ப அறிவாளி அப்புறம் தைரியசாலி ம்மா அதனாலதான் நீங்க கேக்குறதுக்கு முன்னாடியே நானே வந்து சொல்லிட்டேன்" என்று அவள் பெருமையாக கூறுவது போல் கூட தன்னவளை விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் துரியன். உள்ளுக்குள் அவளை கொஞ்சிக் கொண்டிருந்தான் செல்ல வார்த்தைகளால் 


"அச்சோ என் செல்லம் எவ்வளவு அழகா பேசுற பாரு அப்படியே இழுத்து வச்சு இச்சு இச்சுன்னு இச்சு கொடுக்கணும் போல இருக்கே" என்று அவன் ரசனையுடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க யட்சிணி "ம்கும் இன்னும் சம்மதத்தை சொல்ல காணோம் ஆனா சைட் அடிச்சுட்டு இருக்கான் பாரு" என்று அவனை தண்டு தலையில் எடுத்துக் கொண்டவள் "அண்ணா சம்மதம்னு சொல்லு அதுக்கப்புறம் சைட் அடி" என்றாள் அவனிடம் மீண்டும் மெல்லிய குரலில் கோபத்துடன். அதில் சுயநினைவிற்கு வந்தவன் "எனக்கு சம்மதம் சார்" என்றான் மெல்லிய குரலில் 


அதை கேட்டவர்களுக்கு அப்பொழுதுதான் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது "அப்பாடா ஒரு வழியா சம்பந்தம் சொல்லிட்டியா உன் வாயிலிருந்து இந்த வார்த்தையை வர வைக்கறதுக்குள்ள எங்களுக்கு பாதி உயிர் போய்ட்டு வந்துருது சரி சரி அவர் சொன்ன மாதிரி யுதி தஷிகா கல்யாணம் முடிஞ்ச உடனே உங்களுக்கும் கல்யாணத்தை வெச்சிட வேண்டியதுதான் என்னடி உனக்கு ஓகே தானே இல்ல இப்பவே கல்யாணம் பண்ணி வைங்கனு அதுக்கும் ஏதாவது ரூல்ஸ் போடுவியா?" என்ன என்று வேண்டும் என்று கயல்விழி விஷாலியில் உங்களுக்கு "அத்தை" என்று சிணுங்கி கொண்டே அவள் தோளில் முகம் புதைத்து அவளை அணைத்துக்கொண்டாள் வெட்கத்துடன் பெண் அவள் 


ஆரூரன் இதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன் பின்பு தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான் 

"துரியனை நான் புரியல விருஷாலிக்கு ஹஸ்பண்டா செலக்ட் பண்ணதுக்கான ஒரே காரணம் துரியனோட கேரக்டர் மட்டும்தான். அவ்வளவு நல்ல பையன். அவனுக்கு நானே கேரக்டர் சர்டிபிகேட் கொடுப்பேன் கண்டிப்பா விருஷாவை மகிழ்ச்சியாக அவன் நல்லா பாத்துக்குவான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" என்று அவன் கூற "அண்ணா நீங்க என்ன இவ்ளோ பேசிட்டு இருக்கீங்க நீங்க கல்யாணம் பண்ணி வெய்ன்னு சொன்னா நாங்க பண்ண போறோம் இதெல்லாம் நீங்க சொல்லி தான் எங்களுக்கு தெரியணுமா என்ன? ஏன் நாங்களுமே தான் துரியன பார்க்குறோக்கோமே. எவ்வளவு பொறுப்பான பையன். இவன் எங்க வீட்டு மருமகனா வரதுக்கு நாங்க தான் கொடுத்து வச்சிருக்கணும்" என்று யஷ்வி கூற "ஆமாண்டா அவ சொல்றது உண்மைதான் துரியன பத்தி எனக்கு தெரியாதா? ரொம்ப நல்ல பையன் டா. ஆனா இந்த கோணத்தில் நான் யோசிச்சது இல்ல ஆனா நீ நாங்க யோசிக்கறதுக்கு அப்பாற்பட்டு முடிவெடுத்துட்ட பாத்தியா அதுதாண்டா நீ" என்று தன் நண்பனை பெருமையாக அணைத்துக் கொண்டான் ரோகன்

"சரி சரி இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி முதல்ல யுதி தஷிகாவோட கல்யாணத்தை முடிப்போம் அதுக்கப்புறம் ஒரு நல்ல முகர்ந்த பார்த்து இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் ஏம்மா தாயே நீ அது வரைக்கும் கொஞ்சம் அடக்க ஒடக்கமா இருமா உன் சேட்டையை எல்லாம் அவன் கிட்ட காட்டாதே அப்புறம் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இந்த கல்யாணமே வேணான்னு நீ பண்ற அலப்பறைல  ஓடிப் போயிடுவான்" என்று வித்யூத் கலாய்த்தான் விருஷாலியை 


"ஆமா ஆமா. அண்ணா  எனக்கு தெரிஞ்சு நீங்க இவகிட்ட நல்லா மாட்டிக்கிடீங்கன்னு நினைக்கிறேன் தெரியாத்தனமா  கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதம் சொல்லிட்டீங்க. ஆனா கல்யாணம் ஆன பிறகுதான் இவளோட சுயரூபம் உங்களுக்கு தெரியும் உங்கள வச்சு நல்லா செய்வா" என்று தஷிகா வேறு ஒரு புறம் அவளை கிண்டல் செய்தாள் 


"எல்லாரும் சேர்ந்து என்னை கிண்டல் பண்றீங்கல நான் கோபமா போறேன்" என்று கூறிவிட்டு அவள் ஜங்கு ஜங்கு என்று நடந்தவாறு விருஷாலி அங்கிருந்து வெளியே செல்ல "ஐயோ அவ கோச்சிக்கிட்டு போறா ஏன் எல்லாரும் இப்படி அவளை கிண்டல் பண்ணீங்க பாவம் அவ" என்று பதறினான் தன் வருங்கால மனைவிக்காக துரியன். "டேய் இப்பவே நீ அவளுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணாதடா அவ்வளவுதான் அதுக்கப்புறம் உன்னை நச்சு பண்ண ஆரம்பிச்சிடுவா" என்று யுதி கோப அதில் தலையை சொரிந்து கொண்டு சிரித்தான் துரியன் 


"எல்லாருக்கும் இருக்கும்போதே இந்த விஷயத்தையும் பேசட்டலான்னு நினைக்கிறேன் இன்னும் பேரனுக்கு பேர் வைக்காம இருக்கான் நான் பெத்த புள்ள அதனால இனிமேலும் அப்படியே விடாம நாளைக்கு வீட்ல ஒரு சின்ன பங்க்ஷனா தம்பிக்கு பேர் வைக்கிற பங்ஷனை வச்சிடலாம் என்ன எல்லாருக்கும் ஓகே தானே?" என்று கயல்விழி கேட்க "என்ன கயல் நாளைக்கு பங்க்ஷன் வச்சுட்டு இன்னைக்கு வந்து சொல்ற அதுக்குள்ள எப்படி அரேஞ்ச் பண்ண முடியும் முன்னாடியே சொல்ல மாட்டியா? இல்ல இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போடு நல்லாவே நம்ம கிராண்டா பண்ணலாம்" என்று ஆருத்ரன் கூற "இல்லடா அவ சொல்றது சரிதான் இவ்வளவு நாள் நம்ம விட்டு வச்சது தப்பு இதுக்கு மேல தள்ளி போட்டுட்டு போக வேண்டாம் ஃபங்ஷனை சிம்பிளா வச்சுக்கலாம் அவ இதை தான் ஏற்கனவே சொல்லிருந்தா அப்படியே பண்ணிடலாம் அவனோட பர்த்டே எப்ப வருதோ அதை நம்ம கிராண்டா செலிப்ரெட் பண்ணிக்கலாம்" என்று ஆரூரன் கூற அவன் கூற்று ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருந்தது அனைவருக்கும் 


துரியன் தன்னவள் இந்நேரம் என்ன செய்கிறாளோ என்று தெரிந்து கொள்ளும் நோக்கில் அங்கேயும் இங்கேயும் அலைபாய்ந்து கொண்டிருந்த மனதை அடக்கிக் கொண்டு நின்று இருக்க அவர் நிலையை ஆரன் உணர்ந்து கொண்டானோ என்னவோ "நீ போய் விருஷா கிட்ட பேசு ரெண்டு பேரும் கொஞ்சம் மனசு விட்டு பேசி பாருங்க" என்றான் அவனிடம் அனைவரும் இருக்கும் பொழுது 


அதில் சங்கடத்துடன் அவனை நோக்கியவன் "இல்ல சார் பரவால்ல நான் இன்னொரு நாள் பேசிக்கிறேன்" என்றாம் தலை குனிந்தவாறு 

அதில் ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட ஆரன் "இங்க பார் துரியா நீ சங்கடப்படுவதற்கு இங்கே எதுவுமே இல்லை நீங்க ரெண்டு பேரும் ஃப்யூச்சர் ஹஸ்பண்ட் அண்ட் வைப்பா ஆக போறவங்க . அதனால எங்கள பத்தி நீ யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை ரெண்டு பேருக்கும் என்ன லிமிட்டோட இப்ப பழகணும்னு  நல்லாவே தெரியும் அந்த நம்பிக்கையை தான் நாங்க உங்க மேல வச்சிருக்கோம் அதனால நீ தேவை இல்லாம சங்கடப்படாதே போய் அவர்கிட்ட பேசு" என்று ஆரன் மீண்டும் அழுத்தமான குரலில் கூற ஆரூரனை நோக்கி சங்கடமாய் பார்த்தான் துரியன் 


அவன் தான் சொல்றான் இல்ல அவன் சொல்றது  போ" என்று அவனும் கூற சரி என்று தலை அசைத்து விட்டு தயக்கத்துடன் அங்கிருந்து சென்றான் துரியன் அதன்பின்பு அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்ல இப்போது அறையில் இருந்தது யட்சிணி ஆரன் மற்றும் குழந்தை மட்டும் தான்.  குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து விட்டு அங்கிருந்து நகரம் அவள் நகர "எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்று இருக்கு அதனால வீட்ல இருந்து தான் ஆன்லைன்ல அட்டென்ட் பண்ணனும் நான் என்னோட ஆபீஸ் ரூமுக்கு போறேன் நீ தம்பிய பக்கத்திலிருந்து பாத்துக்கோ மாயா" என்று கூறிவிட்டு அவன் அலுவலக அறைக்குள் நுழைந்து விட்டான் ஆரன் அதில் ஒரு பெருமூச்சை வெளியிட்ட 
யட்சிணி குழந்தையின் அருகே அமர்ந்தவள் அவன் தலையை கோதிய வண்ணம் அமைதியாக மீண்டும் அவளை ரசிக்கத் தொடங்கினாள்


ஏனோ பார்க்க பார்க்க திகிடவில்லை அவளுக்கு குழந்தையை.  கண்ணை பறிக்கும் குழலூதும் கண்ணனாக அவள் கண்களுக்கு தெரிந்தான் குழந்தை. மெதுவாக அவன் கன்னத்தில் இதழ் ஒற்றியவள் மீண்டும் மீண்டும் முத்தமிட்டு கொண்டே இருந்தாள் அவளையே அறியாமல். குழந்தை அவளின் செயலில் சிணுங்கி விழிக்க முற்பட அவன் நெஞ்சில் தட்டிக் கொடுத்து அவரனை அரவணைத்தவாறு தானும் படுத்துக் கொண்டாள் கட்டிலில் . குழந்தையின் வாசத்தில் அவளுக்கும் கண்கள் சொருக மெல்ல இமைகளை மூடி உறங்கத் தொடங்கினாள் பெண் அவள்

இங்கே அறையில் இருந்து வெளியே வந்த துரியன் தன்னவள் எங்கே இருப்பாள் என்று தெரியாமல் திணறிக்கொண்டே சுற்றும் மற்றும் தேடிக் கொண்டு இருக்க "ஹலோ பாஸ் இன்னும் எவ்வளவு நேரம் தான்   இப்படியே நின்னு தேடிட்டு இருக்க போறீங்க நான் இங்கதான் இருக்கேன் வாங்க" என்று ஒரு தூணுக்கு பின்னே இருந்து நின்று கத்தினாள் விருஷாலி எங்கிருந்து இவ சத்தம் போடறா என்று அங்குமிங்கும் தேடிக்கொண்டே திரும்பியவன் தன்னவளை கண்டு விட்டான் 


அவனுக்கு 10 அடி தூரம் தள்ளி நின்று அங்கிருந்த ஒரு தூணுக்கு பின்னால் மறைந்திருந்த அவளோ கையை தூக்கி காட்டியவள் "இங்கே வாங்க" என்று கூறியவள் அங்கிருந்து நகரம் முற்பட அவளின் செயலில் தலையை இருபுறமும் ஆட்டி சிரித்துக்கொண்டே அவளை பின்தொடர்தான் அவன். நேராக தன்னறைக்குள் நுழைந்தவள் பால்கனிக்கு சென்று விட அவள் அறைக்குள் செல்வதற்கு தயக்கம் கொண்டு வெளியே நின்றான் துரியன். "இவ்வளவு நீங்க தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை உள்ள வாங்க பாஸ்" என்று கூறியவள்  வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்று இருக்க உள்ளே வந்தவன் பால்கனி கதவை சாய்ந்து நின்றான் அவளை பார்த்தவாறு.

தொடரும்...


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....