பெண்கவிதை 53
இன்று கரிகால் ஆரன் மற்றும் மாய யட்சிணியின் பிள்ளைக்கு பெயர் சூட்டு விழா ஆம் இப்பொழுது மாய யட்சிணி தான் குழந்தையின் தாய். நற்பவி குழந்தையை ஈன்றெடுத்தவளாக இருந்தாலும் குழந்தையின் தாயாக அந்த இடத்தில் பாவிக்கப்படுபவள் யட்சிணி மட்டுமே. ஏனெனில் தான் பெற்ற குழந்தை போல் அவள் குழந்தையை அரவணைப்பதிலும் பார்த்துக் கொள்வதிலும் அங்கிருந்து அனைவருக்கும் அவள் தான் குழந்தையின் தாய் என்று மனதிற்குள் பதிந்து விட்டது
காலை வேளையிலேயே வீட்டில் அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர் வெளியிலிருந்து ஆட்களை வரவழைக்கவில்லை என்றாலும் விசேஷம் என்று வரும்பொழுது வீட்டிற்குள் எப்பொழுதும் ஒரு பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதேபோல்தான் இப்பொழுது அனைவரும் பெயர் சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளில் மும்மூரமாக இருந்தனர் அனைவரும் ஒவ்வொரு வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது வீட்டையே ஒருவழியாக்கிக் கொண்டிருந்தான் ஆரன் புதல்வன். தத்தி தத்தி இப்பொழுதுதான் நடைபழகி இருப்பதால் அங்குமிங்கும் தத்தி தத்தி நடந்து சென்று அடுக்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் உடைத்து கீழே தள்ளிக் கொண்டிருந்தான் குழந்தை.
இன்னும் ஆரன் கீழே இறங்கி வரவில்லை இல்லை என்றால் குழந்தை செய்யும் செயல்களை கண்டு ஒரு ஆட்டம் ஆடுவான். தன் பிள்ளையாகவே இருந்தாலும் அவனுக்கு குழந்தை இடம் ஒரு கண்டிப்பு இருக்கத்தான் செய்யும் இவ்வயதிலேயே அவனை சரியாக கண்டித்து வளர்த்தால் தான் பிற்காலத்தில் அவன் சரியாக வளருவான் என்ற எண்ணம் ஆரன் மனதிற்குள் இருக்க யட்சிணி அதை எல்லாம் பெரிது படுத்தவில்லை அவளுக்கு தன் பிள்ளையை சுதந்திரமாக வாழ விட வேண்டும் அவன் விருப்பத்திற்கு வாழ வேண்டும் ஆனால் எது சரி எது தவறு என்று எடுத்துரைத்து அவனை நல்வழியில் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு.
ஆனால் காலம் முழுவதும் ஆரன் மனைவியாக இருந்து அவன் குழந்தையை வளர்க்கும் எண்ணம் அவளுக்கு இல்லை அவள் ஆரனை திருமணம் செய்து கொள்வதற்கான காரணமே அவன் குடும்பத்தாருடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான். இப்பொழுது அவள் எண்ணிய நிகழ்வு நடந்து விட்டது இனி இந்த வீட்டிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று மனதிற்குள் ஒரு எண்ணத்தை வர வைத்துக் கொண்டுதான் ஒருவித ஒட்டாதன்மையுடன் வீட்டில் உள்ளவர்களிடம் பழகி வருகிறாள் யட்சிணி அதை யார் உணர்ந்தார்களோ இல்லையோ ஆரன் நன்றாக உணர்ந்து விட்டான். ஆனால் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை
தான் இப்படி ஒரு நிலையில் தவித்துக் கொண்டிருப்பதை ஆரன் உணர்ந்து கொண்டான் என்பதை தெரிந்து கொண்ட யட்சிணி "அப்படி என்றால் இவருக்கு என் மீது எந்த எண்ணமும் இல்லை தானே. இவரை விட்டு பிரிந்து சென்றாலும் இவருக்கு கவலை இல்லை தன்னை வெறும் தோழியாக மட்டும் தான் பார்க்கிறார் ஒரு மனைவி என்னும் ஸ்தானத்தில் வைத்து பார்க்கவில்லை அப்படி இருக்கும் பொழுது அவர் வாழ்வில் இருந்து அவருடன் வாழ்ந்து அவருக்கு கஷ்டத்தை கொடுப்பதை விட அவரை விட்டு விலகி அவருக்கு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும்" என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள் பெண்ணவள் விரக்தியாக
இப்பொழுது கூட குழந்தை செய்யும் சேட்டைகளை வீட்டில் இருந்து அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க ஆரூரன் மட்டும் தான் அவனை அதட்டி கொண்டிருந்தான் " டேய் கீழே போட்டு எதையும் உடைக்காத என்னடா திமிரா? எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இங்க வீட்ல எல்லாரும் எவ்ளோ கஷ்டப்பட்டு வேலை பார்த்துட்டு இருக்காங்க நீ அவங்க கஷ்டப்பட்டு செய்யற வேலை எல்லாத்தையும் பாழாக்கிட்டு இருக்க டேய் நில்லுடா" என்று அவனை அதட்டிக் கொண்டே இருந்தான் ஆருரன். குழந்தை அதையெல்லாம் கவனித்தாலும் அவனை பார்த்து திரும்பி திரும்பி ஈஈஈஈ என்று புதிதாக முளைத்து இருந்த இரண்டு பால் பற்களை காட்டி சிரித்தவாறு மீண்டும் சேஷ்டையில் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது தான் குளித்து முடித்து தயாராகி அறையில் இருந்து வெளியே வந்த யட்சிணி ஆரூரன் தன் மகனை அகற்றுவதை கண்டு அவன் என்ன குறும்பு செய்கிறான் என்று கவனிக்கத் தொடங்கினாள்
ஆனால் குழந்தையின் குறும்பு எல்லை மீறி போய்க்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தவள் "அப்பு இப்படி எல்லாம் பண்ணக்கூடாது இதெல்லாம் தப்புனு உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன் இந்த மாதிரி பண்ண கூடாதுன்னு. பொருள் ஏதாவது நீ எடுத்து கீழே போட்டு உடைக்கும் போது மேல பட்டுடுச்சுன்னா உனக்கு தாண்டா தங்கம் வலிக்கும். இதெல்லாம் பேட் ஹேபிட் இங்க வா" என்று அவனை அழைத்தவாரே சென்று அவனை தூக்கிக் கொண்டாள் யட்சிணி. குழந்தையோ அவள் கையில் இருந்து திமிரி மீண்டும் கீழே இறங்கி விளையாட முயல அவனை இறங்காதவாறு தடுத்து பிடித்தவள் அவனை தன் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு "இனி எந்த சேட்டையும் பண்ணக்கூடாது பாரு நீ ஆல்ரெடி கலைச்சு வச்ச பொருள் எல்லாத்தையும் திருப்பி எடுத்து வைக்கிறதுக்கு எனக்கு மணி கணக்கா ஆகும் போல அதனால அமைதியா அம்மாகிட்ட இரு" என்று விழிகளை உருட்டி அவனை பொய்யாக முறைத்தாள் யட்சிணி
குழந்தையோ அவளின் செயலில் கலகலவென்று சிரித்தவன் அவள் மூக்கை பிடித்து தன் பிஞ்சு கரங்களால் கிள்ளினான். "டேய் சேட்டை புடிச்ச பையா இப்படி சிரிச்சு சிரிச்சு என்னை மயக்கிடனும்னு பாக்குறியா
அந்த வேலை எல்லாம் இங்க வேண்டாம் ஒழுங்கா அம்மாகிட்டே இரு" என்று மீண்டும் கூறியவள் அவனை தூக்கிக்கொண்டு கயல்விழி அருகே சென்றாள் "அத்தை வேற ஏதாவது வேலை இருக்கா சொல்லுங்க" என்று அவள் கேட்க அவளே வந்து பேசுவதில் மகிழ்ந்தவள் "எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு டா ஐயர் வந்த பிறகு பங்ஷனை ஸ்டார்ட் பண்ணிடலாம்" என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது ஐயர் வந்து விட்டார்
அவர் வந்தவுடன் நிகழ்ச்சிக்கான வேலைகளை ஆரம்பிக்க ஆரன் அப்பொழுதுதான் கம்பீரமாக தயாராகி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான் படிகளில். அவனை கண்டு தலையில் அடித்துக் கொண்ட ஆரூரன் "டேய் உன்னை வேஷ்டி சட்டைதான போட சொன்னேன் எதுக்கு இப்படி பேண்ட் சர்ட் போட்டு வந்து நிக்கிற?" என்றான் கோபமாக. "எனக்கு அதெல்லாம் செட் ஆகாதுப்பா இதுவே ஓகே தான்" என்று பேன்ட் பாக்கெட்டுக்குள் கரங்களில் நுழைத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து விட்டான் அவன். கருநீல வண்ண முழுக்கை ஃபார்மல் சட்டையும் கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தவன் சட்டையின் முன்புறம் இரண்டு பட்டன்களை கழட்டி விட்டிருந்தான். காற்றில் அலை அலையாக பறந்து கொண்டிருந்த கேசத்தை ஒரு கையால் கோதிவிட்டவாறு அவன் அமர்ந்திருக்க யட்சிணி தயக்கத்துடன் அவன் அருகே சென்றவள் "குழந்தையை கொஞ்ச நேரம் வச்சிருக்கீங்களா?" என்ற அவனிடம்
அதற்கு அவன் எந்த பதிலும் கூறாமல் தன் மகனை வாங்கி தன் மடியில் அமர்த்திக் கொள்ள இப்பொழுது தன் தந்தையிடம் விளையாட ஆரம்பித்து விட்டான் குழந்தை. ஆரம்பத்தில் தன் தந்தையிடம் பழகுவதற்கு இருந்த தயக்கம் எப்பொழுது அவனுக்கு இல்லை. அந்த அளவிற்கு ஆவனுடன் ஒன்று போயிருந்தான் குட்டியவன்
"ஐயர் குழந்தையை தூக்கிட்டு வந்து தொட்டில்ல போடுங்க பெயர் வைக்கிற விழாவை ஆரம்பிச்சிடலாம்" என்று அழைக்க ஆரன் தன் மகனை தூக்கிக்கொண்டு தொட்டில் அருகே சென்றான். யட்சிணி ஒரு ஓரமாக நின்று கொண்டாள் நிச்சயம் அவனுடன் சென்று ஒன்றாக நின்று குழந்தையை தொட்டிலில் போடுவதற்கு அவன் விரும்ப மாட்டான் என்று எண்ணி அவள் ஓரமாய் நிற்க தியூதா "நீ என்னடி இங்க நிக்குற போ அவன் கூட போய் நில்லு நீதான குழந்தைக்கு அம்மா. இங்க வந்து எனக்கு என்ன நின்னுகிட்டு இருக்க " என்று அவளிடம் கூற "ஐயோ அத்தை நான் எப்படி? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அவரே தொட்டில போடட்டும்" என்றாள் பயத்துடன். "என்னடி பேசிகிட்டு இருக்க லூசு அவன் மட்டும் தனியா நின்னு போடக்கூடாது. நீயும் தான் கூட நிக்கணும் போ. பேரு குழந்தைக்கு செலக்ட் பண்ணிட்டீங்களா இல்லையா?" என்று அவள் கேட்க திரு திருவென்று விழித்தாள் யட்சிணி.
"போச்சே போ சரியான ஆளுதான் நீ. லூசு மாதிரி நின்னுகிட்டு இருக்க அங்க போடி முதல்ல" என்று மீண்டும் அவள் கூற "இல்ல வேண்டாம் நான் இங்கேயே இருக்கேன்" என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே "மாயா" என்ற ஆரன் கணீர் குரல் அந்த இடத்தில் எதிரொலித்தது. அவன் தன்னை அழைத்ததில் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்த யட்சிணி "என்ன பேசுவது?" என்று தெரியாமல் அப்படியே நிற்க "இங்க வா" என்றான் அழுத்தமான குரலில். அதில் அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க துரியனும் விழாவிற்கு வந்திருந்தவன் தன் தங்கையின் தோளில் இடித்து "அவர் கூப்பிடுகிறாரு பராக்கு பாத்துட்டு நின்னுகிட்டு இருக்க போ பாப்பா" என்று அவன் கூற "அண்ணா நான் எப்படி? அவர் எதுக்கு கூப்பிடுகிறார் என்று தெரிய?"ல்லையே என்று இவன் அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே "மாயா உன்னை இங்க வான்னு சொன்னேன்" என்றான் மீண்டும் அழுத்தமான குரலில் ஆரன்.
"அவர் எதுக்கு வேணா கூப்பிடட்டும் இப்ப கூப்பிடுறாருல்ல முதல்ல போ" என்று அவளை பிடித்து தள்ளினான் துரியன். வேறு வழி இன்றி அவள் தயக்கத்துடன் நடந்து அவன் அருகே சென்று நிற்க அவள் கையில் தன் மகனை திணித்தான் ஆரன். அவனின் செயலில் அவள் அதிர்ந்து அவனை பார்க்க அவள் கரங்களுடன் தன் மகனை பிடித்துக் கொண்டு தொட்டிலில் அவனை படுக்க வைத்தான் ஆணவன். அதில் அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்
உள்ளுக்குள் மனம் ஆழி பேரலையாய் பொங்கிக் கொண்டிருந்தது சந்தோஷத்தில்.
அவளோ இன்னும் அதிர்ச்சி விலகாமல் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க குழந்தையோ தொட்டிலிலிருந்து எழுந்தவன் வெளியேற முற்பட்டான். "மருமகனே அமைதியா இருடா அப்படியே உட்காரு எழுந்துக்கெல்லாம் கூடாது" என்று யுதி கூற குழந்தையோ அவனை பார்த்து உதட்டை சுழித்தது. அதில் யுதி அவனை பொய்யாக ம
முறைக்க "விடு யுதி அவன் சின்ன குழந்தை இல்ல கொஞ்சம் வளந்துட்டான் அதனால தான் இப்படி சேட்டை பண்றான்" என்று கூறியவன் தன் மகனை தொட்டிலிலிருந்து இறங்காதவாறு பிடித்துக் கொண்டான் குழந்தையோ அவனின் அணைப்பில் அமைதியாக தொட்டியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க "குழந்தைக்கு இப்போ நாமத்தை சூட்டுங்கோ" என்றார் ஐயர்
"பேர் வை மாயா" என்று ஆரன் கூற அவனை அதிர்ந்து பார்த்தாள் யட்சிணி. "என்னது நானா?" அவள் அதிர்ச்சியாக கேட்க "நீதா மாயா நீ தான அவனுக்கு அம்மா அதனால அவனுக்கு நீ தான் பேர் வைக்கணும்" என்று வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி ஆரன் கூற அவன் கூறிய வார்த்தைகளில் மயக்கம் வராத குறையாக நின்று இருந்தாள் யட்சிணி
தொடரும்....
Comments
Post a Comment