பெண் கவிதை 43

நாட்கள் இவ்வாறு சொல்ல மாதங்களாக உருண்டோடி இருந்தது.  நற்பவிக்கு இது ஒன்பதாவது மாதத்தின் முடிவு . இன்னும் அவள் கண் விழிக்கவில்லை அதே நிலையில் தான் இருந்தாள். ஆனால் அவள் வயிற்றில் இருந்த கருவோ அவளுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் நன்முறையில் வளர்ந்து கொண்டிருந்தது.  அவளை பார்த்துக் கொள்ளும் ஞானபிரகாசத்திற்கு மனம் கவலையாக இருந்தது அவளை நினைத்து.  அவருக்கு துணையாக அருகில் இருந்த வயது முதிர்ந்த மற்றொரு நாட்டு வைத்தியர் "ஐயா இந்த பொண்ணு இன்ன வரைக்கும் நினைவு திரும்பாமல் கிடக்கு இதுக்கு மேல நம்ம இப்படியே விடுவது சரியில்லை. வயித்துல குழந்தையோட வளர்ச்சி எல்லாம் சரியா தான் இருக்கு அதனால மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் நம்ம டாக்டர் கிட்ட இந்த பிள்ளையை காட்டுவோம் அடுத்து அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்" என்று அவருக்கு ஒரு அவரின் கூற்று ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்ததால் அதை ஏற்றுக் கொண்டார் ஞானப்பிரகாசம். 


அவரின் உதவியுடன் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அவளை அனுமதித்தனர் அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர் "குழந்தையை ஆபரேஷன் பண்ணி தான் வெளியே எடுக்க முடியும் இதுக்கு மேல நம்ம இப்படியே விட வேண்டாம். அந்த பொண்ணுக்கு நினைவு திரும்புவது எப்ப வேணா ஆகலாம் ஆனால் அதுக்குள்ள குழந்தையை நம்ம வெளியே எடுத்துடுறது நல்லது" என்று அவர் கூற அதை ஏற்று சரி என்று ஒப்பு கொண்டனர் அவர்கள்.  தன் தாயை அழுக வைக்காமல் அவள் நினைவில் இல்லாத பொழுதே வயிற்றை கிழிக்கப்பட்டு அவள் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டான் கரிகால் ஆரம் மற்றும் நற்பவியின் புதல்வன். குழந்தையை முதலில் கையில் ஏந்தியது ஞான பிரகாசம் தான்.  அவருக்கு மனம் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் ஒரு புறம் கவலையாகவும் இருந்தது.
இந்த குழந்தையை அவள் தாய் தன் கரங்களில் எழுந்த வில்லையே என்று 

குழந்தை பிறந்த பின்பும் நற்பவிக்கு நினைவு திரும்பவில்லை மருத்துவர் அவளை அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி கூற அதை ஏற்று அங்கேயே அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குழந்தையை ஞான பிரகாசம் தான் வளர்த்தார் ஒரு சிறு குழந்தையை கையாள்வது அவருக்கு மிகவும் கடினமாகவெல்லாம் இல்லை. தன் அண்ணனின் குழந்தைகளை அவர் தான் வளர்த்தார். அவர் திருமணம் ஆகாதவர் இளம் வயதிலேயே நாட்டு மருத்துவம் மீது பற்று கொண்டு அதில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவர் திருமணம் என்னும் பந்ததிற்குள் நுழையவில்லை தன் அண்ணன் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக எண்ணி வளர்த்தார். அதனால் இந்த சிறு குழந்தையையும் மிகவும் நன்முறையில் வளர்க்கத் துவங்கினார். குழந்தைக்கு அவர் பெயர் வைக்க வில்லை குழந்தையின் தந்தை யார் என்றும் கண்டறிய முடியவில்லை. 
நற்பவி கோமாவில் இருந்து வெளிவந்த பிறகு அவளிடம் கூறி குழந்தைக்கு பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அப்பு என்று ஒரு செல்ல பெயரை மட்டும் குழந்தைக்கு வைத்து வளர்க்க ஆரம்பித்தார் ஞானப்பிரகாசம். 

குழந்தை ஞானப்பிரகாசத்தின் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும் நன்றாகவே வளர்ந்தது. ஒரு வருடம் சென்றதே தெரியவில்லை அன்றுதான் நற்பவிக்கு சுயநினைவு வந்தது செவிலியர் மருத்துவரை அழைத்து அவள் சுயநினைவிற்கு வந்ததை கூற அவளை பரிசோதித்த மருத்துவர் அவள் இதயத்தின் துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதை கண்டு திடுக்கிட்டார் "என்ன ஆச்சு இவங்களுக்கு இவ்வளவு நாள் நல்லா தானே இருந்தாங்க திடீர்னு இப்படி ஒரு பிரச்சனை இவங்களுக்கு இப்டி வந்துச்சு?"என்று அவர் அவசரமாக கேட்டவாறு அவளுக்கு சிகிச்சை அளிக்க முற்பட மூச்சிக்கு திணறி ஏங்கிக்கொண்டே மருத்துவரை தன் அருகே அழைத்தாள் அவள்

அவர் "என்னமா என்ன வேணும்?" என்று அவர் பதட்டமாக கேட்க "நா...ன் எ...ப்..படி இங்...கே வந்தே...ன்?" என்றான் அவர் மூச்சு வாங்கியவாரே. "உன்ன ஞான பிரகாசம் என்று ஒரு வயசானவர் தான்மா இங்க சேர்த்தார் உனக்கு ஒரு குழந்தை கூட இருக்கு அந்த குழந்தைக்கு ஒரு வயசாகுது" என்று மருத்துவர் கூறியவர் வேகமாய் செவிலியின் புறம் திரும்பி "நர்ஸ் ஞானப்பிரகாசம் கிட்ட முதல்ல இவங்க கண் விழிச்சதை இன்ஃபர்மேஷனா சொல்லுங்க அவர் வரட்டும் அவர் வந்த பிறகு இவங்களுக்கு அவர்கிட்ட ஏதாவது சொல்லனும்னா சொல்லிக்கலாம்" என்று கூறியவர் அவளுக்கு மேலும் சிகிச்சை அளிக்க ஆரம்பிக்க அவர் தனக்கு ஒரு குழந்தை உள்ளது என்று கூறியதிலேயே பாதி உறை நிலைக்கு சென்று இருந்தாள் நற்பவி. விஷயம் அறிந்து குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார் பதறி எடுத்துக் கொண்டு ஞானப்பிரகாசம். அறைக்குள் நுழைந்தவர் அவள் உயிருக்கு போராடுவதை கண்டு கண்கலங்கி நின்றார் 


என்னதான் அவளிடம் பேசி பழகியதில்லை என்றாலும் தன் மகள் போல் பாவித்து தான் அவளை கவனித்துக் கொண்டிருந்தார். இப்பொழுது அவள் இப்படி ஒரு நிலைமையில் இருப்பதை பார்ப்பதற்கு மனம் ரணமாய் வலித்தது அவருக்கு. ஆரன் உதிரத்தை தன் கரங்களில் ஏந்திக் கொண்டு நற்பவி அருகே சென்றவர் "அம்மாடி நீ யாரு என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது உன் பெயர் கூட எனக்கு தெரியாது ஆனால் உன்னை என் புள்ள மாதிரி தான் நினைச்சு நான் இவ்வளவு நாள் பாத்துக்கிட்டேன் உனக்கு ஒன்னும் ஆகாதுடா நீ பயப்படாத" என்று அவர் அவள் கரங்களை இறுக பிடித்துக் கொண்டு கண்ணீருடன் பேச அவர் கூறியதை கேட்ட அவளுக்கு விரக்தியில் கசந்த புன்னகை ஒன்று உதிர்ந்தது இதழ் ஓரம். "ஐயா முதல்ல நான் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். யாருன்னே தெரியாத என்னை இவ்ளோ நாள் நீங்க பார்த்துக்கிடீங்க. அதுக்கு மிகப்பெரிய நன்றி யா. ஆனா என் நிலைமை என்னன்னு எனக்கு நல்லாவே இருந்துச்சு நான் ஒரு டாக்டர். அப்ப எனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாம இருக்குமா? என்ன நான் உயிரோடு இருக்க போறதில்லை அது எனக்கு தெரிஞ்சு போச்சு" என்றவள் அவர் கரங்களில் முட்டை விழிகளை உருட்டிய வண்ணம் வாயில் விரல் வைத்து சப்பிக்கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன் உதிரத்தில் வளர்ந்த மகனை நோக்கினாள் அப்படியே அவன் தந்தையின் ஜாடை 


அதை கண்டவளுக்கு விழிகளின் ஓரம் கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது. இவன்  பிறந்ததும் தெரியாது இதுவரை இவனை தூக்கி மார்போடு அணைத்து தாய்ப்பால் கொடுத்ததும் கிடையாது இவனை அரவணைத்ததும் கிடையாது என்று நினைக்கும் பொழுதே மனம் ரணமாய் வலித்தது பின்ன அவளுக்கு. தன் கரங்களை தூக்க முடியாமல் தன் குழந்தையை நோக்கி அவள் கரத்தை தூக்க அவள் கூறியதை கேட்டு அழுகையில் நின்று இருந்தவர் அவள் கை நீட்டியவுடன் குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டார். தன் மகனை நடுங்கும் கரங்களுடன் வாங்கி வாரி அணைத்துக் கொண்டவன் அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள் ஆக்சிஜன் மாஸ்கை முகத்தில் இருந்து நீக்கி.


"மா கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணுங்க தயவு செஞ்சு நீங்களே நெகடிவ் ஏதுவும்  யோசிக்காதீங்க" என்று கூறியவரே டாக்டர் அவளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவள் தன் மகனை தன்னோடு இறுக்கமாய் அணைத்து இறுதியாய் ஒரு முறை அவனை  தாயன்புடன் ஸ்பரிசித்தாள் கலங்கிய விழிகளுடன்.  திரும்பி ஞான பிரகாசத்தை பார்த்தவள் "ஐயா 
எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?' என்றாள் அவள் திக்கித் திணறியவாறு. கண்ணீருடன் "என்ன பண்ணனும் சொல்லு மா"என்று அவர் அவசரமாக கேட்க "நான் சொல்ற இடத்துல கொண்டு போய் என் பையனை சேர்த்துகிறீர்களா? என் பையன் அவங்க அப்பா கூட இருக்கணும் அவன் யாரும் இல்லாத அனாதையா வாழக்கூடாது இந்த ஒரு உதவியை மட்டும் பண்றீங்களா?" என்று கண்ணீருடன் அவள் கேட்க அதை கேட்டதற்கு மேலும் அழுகை பொங்கியது. தோளில் போட்டு இருந்த துண்டை வாயில் வைத்து பொத்திக்கொண்டு அவர் அழுதவாறு கூறு என்பது போல் தலையசைக்க கரிகால் ஆரனை பற்றி கூறி அவனின் கம்பெனி விலாசத்தையும் கூறியவள் "இவன அவர்கிட்ட கொண்டு போய் சேர்த்திடுங்க அதன் பிறகு அவர் இவனை பார்த்துப்பாரு" என்றாள் கண்ணீருடன். அதற்கு அவர் அழுகையுடன் தலையசைக்க தன்னையே விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த தன் மகன் முகத்தை பார்த்து அவன் நெற்றியில் முத்தமிட்ட நற்பவி அப்படியே விழிகளை எடுக்க மூட அவள் உயிரானது மண்ணுலகை விட்டு விண்ணுலகை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தது. 

குழந்தையை பிடித்திருந்த அவள் கரங்கள் தளர வீறிட்டு ஓவென்று அழுதான் குழந்தை தன் தாய் தன்னை விற்று சென்று விட்டாள் என்று அறிந்தது போல்.

மானிட்டரை பார்த்த மருத்துவர் கண்களை இறுக மூடி திறந்தார். நற்பவி அசைவு இல்லாமல் கிடப்பதை கண்டு ஞானப்பிரகாசம் கதறி அழுதவாறு மருத்துவரிடம் விசாரிக்க அவள் இறந்து விட்டால் என்றார் அவர் வேதனையுடன்.

அனைத்தையும் ஆரனிடம் கூறி முடித்தார் ஞானப்பிரகாசம். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு உலகமே தட்டாமலை சுற்றியது அந்நேரம் . அவனை சுயநினைவிற்கு கொண்டு வந்தது அவன் மகனின் அழுகை சத்தம் . அதில் தன் நெஞ்சை இறுக்கி பிடித்துக் கொண்டு தன் உணர்ச்சியை அடக்கி தன் வலியை தனக்குள் புதைத்துக் கொண்டவன் காற்றை தழுவியவாறு கையை காற்றில் துழாவி கொண்டு தன் மகன் குரலை வைத்து அவன் எங்கிருக்கிறான் என்பதை அறிந்து அவன் அருகே சென்றவன் அவனை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அப்படியே மண்டியிட்டு கீழே அமர்ந்தவன் கதறிய கதறல் சத்தம் ஞானபிரகாசத்தையே அதிர வைத்தது 


வேகமாய் அவன் அருகே நெருங்கியவர் அவன் தோளில் கை வைத்து "அழுகாதீங்க தம்பி உங்கள நம்பி தான் இந்த பிள்ளைய அவ உங்க கையில ஒப்படைச்சிட்டு போயிருக்கா இனி இவன் உங்க பொறுப்பு நீங்க தான் இவன பத்திரமா பாத்துக்கணும்" என்று அவர் வேதனையுடன் கூற அவனின் அழுகை மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை.  எப்படியோ தன்னை சமம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்தவன் ஆரூரன் கோபத்தை எதிர்கொண்டு அவனிடமிருந்து அடிகளையும் வாங்கிக் கொண்டான். இதை அனைத்தையும் கரிகால் ஆரன் யட்சிணியிடம் கூறி முடிக்க விழிகளில் கண்ணீர் பொங்க அவனைத்தான் விழி சிமிட்டாமல் பார்த்தவாறு நின்றிருந்தாள் யட்சிணி

இப்பொழுது ஆரனின் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை அமைதியாக தரையை வெறித்த வண்ணம் நின்றிருந்தான். தளர்ந்த நடையுடன் அவன் அருகே சென்ற யட்சிணி அவன் தோளில் கரம் வைக்க அவள் வயிற்றில் தலை சாய்த்தவன் அப்படியே கண் மூடினான் அமைதியாக. அவன் வேதனை தீயில் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவள் அவனை தன்னோடு இறுக்குமாய் அணைத்து தன் அணைப்பின் மூலம் தன் ஆறுதலை அவனுக்கு வழங்கினாள்.ஏனோ அந்நொடி ஆனவனுக்கு அவள் மீது இருந்த கோபமும் ஞாபகத்திற்கு அவனுக்கு வரவில்லை.  பெண்ணவளுக்கு அவன் மீது இருந்த பயம் ஞாபகத்திற்கு அவளுக்கு வரவில்லை

அவனை அன்னையாய் இருந்து தாங்கி அவனின் துயரை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் அன்னையாகவே அன்னொடி மாறி இருந்தாள் பெண்ணவள் 

தொடரும்...


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....