பெண் கவிதை 49

துரியன் வெளியே நிற்பதை கண்ட ஆருத்ரன் "உள்ள வா துரியா ஏன் அங்கேயே நிக்கிற எவ்வளவு நேரமா அங்கேயே நின்னுட்டு இருக்க நீ.  வந்தா உள்ள வர வேண்டியதுதானே?" என்று அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே செல்ல அவன் சத்தத்தில் தான் அனைவரும் துரியன் புறம் திரும்பினர் 


அவனோ நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வு நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஆரனது வாழ்விற்குள் யட்சிணிஐ கொண்டு வந்தார் ஆரூரன். இப்பொழுது அது நடந்து விட்டது என்று எண்ணி பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு தன் தங்கை போல் பாவிப்பவளின் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்று அவன் எண்ணியிருக்க அந்த எண்ணத்தில் மண்ணை வாரி போடப் போகிறாள் யட்சிணி என்று அப்போது அறியவில்லை துரியன் 

ஆருத்ரன் கூறியதை கேட்டு சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைந்த துரியன் "இல்ல சார் நீங்க எல்லாரும் பேசிகிட்டு இருந்தீங்க அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் வெளியவே நின்னுட்டேன்" என்று அவன் கூற "நீ இந்த குடும்பத்துல ஒருத்தன் தான். இப்படி யாரோ மாதிரி உள்ள வர்ரத்துக்கே யோசித்துக்கொண்டு நிற்க வேண்டிய அவசியம் இல்லை துரியா" என்றான் அழுத்தமான குரலில் ஆரூரன் 


அவன் என்ன எண்ணத்தில் கூறினான் என்பதை அவன் மட்டுமே அறிவான் ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட துரியன் "சரி சார் புரியுது' என்றான் சிரிப்பு 

"வா பா வந்து உட்காரு நான் உனக்கு குடிக்க ஏதாவது கொண்டுவரேன்" என்று கயல்விழி கூற "ஐயோ அதெல்லாம் ஒன்னும் வேணாம் மேடம் சார் கிட்ட இந்த பைல்ல சைம் வாங்கணும் அதுக்காக தான் வந்தேன்" என்று துரியன் கூற ஆரன் தன் தந்தையை பார்த்தவன் "நான் ரூமுக்கு போறேன் பா" என்று கூறிவிட்டு மேலே சென்று விட்டான். ஆரூரன் அங்கிருந்து சோபாவில் கால் மேல் கால் போட்ட அமர்ந்தவன் "என்ன பைல் அது ஆரன் கிட்ட சைன் வாங்கி இருக்க வேண்டியதுதானே" என்று அவன் கையில் இருந்த பைலை வாங்கி படித்த வண்ணமே ஆருடம் கேட்க "ceo சைன் போட வேண்டிய இடத்தில் ஆரன் சார் போட்டுட்டார் சார்.இப்போ உங்களோட சைன் வாங்கறதுக்கு மட்டும்தான் பேலன்ஸ் இருக்கு நீங்க ஆபீஸ்க்கு வருவீங்கன்னு பார்த்தேன் ஆனா ரொம்ப நாளா வரவே இல்ல ஆரன் சார் மட்டும் தான் வந்து போயிட்டு இருந்தாரு சரி அதனால தான் வீட்டுக்கு வந்து சைன் வாங்கிக்கலாம்னு வந்தேன்" என்று கூறியவன் கண்களால் வீட்டையே அலசினான் தன் மனம் கவர்ந்தவளை காணும் நோக்கில்

அவள் தான் இங்கு இல்லையே குழந்தையுடன் குழந்தையாக அறையில் விளையாடிக் கொண்டிருந்தாள் விருஷாலி அவர்களின் சிரிப்பு சத்தமும் விளையாட்டு சத்தமும் வீடு முழுக்க எதிரொளித்தது அவளின் சிரிப்பு சத்தத்தில் இவன் மனம் இங்கு சிலிர்த்து அடங்கியது இப்பொழுதே அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்று இவன் துடியாய் துடித்துக் கொண்டு அமர்ந்திருக்க அவனது நிலை உணர்ந்த யட்சிணி கேலி சிரிப்புடன் அவனை நோக்கினாள். அதில் அவளை பொய்யாக முறைத்தான் துரியன் 

கயல்விழி காபி கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தவள் அவன் கையில் இருந்த பையை கண்டு "என்ன அது பேக்ல?" என்றாள் புரியாமல். அதில் அப்போதுதான் சுயநினைவிற்கு வந்தவன் "அது மேடம் குட்டி தம்பியை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் தம்பி இங்க வந்த பிறகு நான் அவனை பார்க்கவே இங்க வரல அதனாலதான் அவனுக்கு டிரஸ் கொண்டு வந்து இருக்கேன்" என்று துரியன் ஆரனது குழந்தையை மனதில் வைத்து கூற "எதுக்குப்பா இதெல்லாம்? நீ அவனை வந்து சாதாரணமா பார்த்தாலே போதும் இந்த மாதிரி டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வரணும்னு என்ன அவசியம் இருக்கு" என்று செல்லமாக அவனை கடிந்து கொண்ட கயல்விழி "தஷி விருஷா இரண்டு பேரும் குழந்தையை தூக்கிட்டு வாங்க துரியன் தம்பி குழந்தையை பாக்கணும்னு சொல்றாரு" என்று சத்தம் கொடுக்க குழந்தையுடன் விளையாடியவாறே அவனை தன் கரங்களில் ஏந்தி கொண்டு வெளியே வந்தாள் விருஷாலி 


துரியன் வந்திருக்கிறான் என்பதை அறைக்குள் இருக்கும் பொழுது கயல்விழி கூறியதை கேட்டு ஏதேதோ உள்ளுக்குள் செய்தது அவளுக்கு. உடனே அவனை காண வேண்டும் என்று தோன்ற குழந்தையை தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாய் வெளியே ஓடி வந்து விட்டாள் பெண் அவள். குழந்தையுடன் அவன் முன்பு வந்த நின்றவள் அவன் மடியில் குழந்தையை வைக்க ஆசையுடன் குழந்தையை வாங்கியவன் அவன் கன்னத்தில் முத்தம் வைத்தான். பார்ப்பதற்கு அப்படியே ஆரணை அச்சில் வார்த்தது போல் இருந்தான் குழந்தை. அப்படி இருக்கும் பொழுது அவனை எப்படி பிடிக்காமல் போகும் அவனுக்கு. "தம்பி ரொம்ப அழகா இருக்க மேடம் அப்படியே சார் மாதிரியே இருக்கான் அவரோட மினி ஜெராக்ஸ் இவன்" என்றான் சிரிப்புடன்.அதைக்கேட்ட மற்றவர்களும் ஆனந்தத்துடன் ஆம் என்று தலை அசைத்தனர் ஆனால் அந்நொடி நற்பவியை நினைத்து மனம் வருந்தியது அனைவருக்கும்.

"யட்சிணி இங்க வா வந்து தம்பிய புடி" என்று அவன் அவளை அழைக்க அவளும் அவன் அருகே சென்று அமர்ந்து குழந்தையை வாங்கி தன் மடியில் அமர்த்தி கொண்டாள் உடனே தான் வாங்கி வந்திருந்த உடையை எடுத்து தன் கரங்களில் குழந்தைக்கு உடுத்தி விட துவங்கினான் துரியன். அவன் குழந்தையை லாவகமாக கையாளுவதை கண்ட அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது அவனை எண்ணி. "எப்படி நீ அவன இவ்வளவு அழகா ஹாண்டில் பண்ற துரியா?" என்று ஆருத்ரன் ஆச்சரியமாக கேட்க "இதுல என்ன சார் ஆச்சரியப்படுவதற்கு இருக்கு எங்க ஆசிரமத்தில் இருக்கிற பாதி குழந்தைகளை நான் தான் பாத்துக்குறேன் இதோ இருக்காளே இவளை கூட சின்ன வயசுல இருந்து நான் தான் பாத்துக்கிட்டேன் அதனால இவன ஹேண்டில் பண்றது ஒன்னும் எனக்கு அவ்ளோ கஷ்டம் இல்ல" என்று குழந்தைக்கு உடையை உடுத்தி அவனை தூக்கி கொஞ்சியவாரு துரியன் கூற அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது அவனின் பொறுப்பான பேச்சை கண்டு.

ஆரூரன் அவர்களின் செய்கைகளை எல்லாம் ஒரு புறம் பார்த்துக் கொண்டே ஃபயிலை படித்து அதில் கையெழுத்திட்டவன் துரியன் கையில் அதை கொடுத்தவாறு "நம்ம யுதிக்குக்கும் தஷிகாவுக்கும் கல்யாணம் நடக்கிற விஷயம் உனக்கு தெரியும் தானே துரியா?" என்றான் அவனிடம்ம் தெரியும் சார். யுதி சார்  சொல்லி இருந்தாரு" என்று அவன் கூற "கல்யாண வேலை எல்லாம் நாளிலிருந்து ஆரம்பிக்குது நீயும் வந்து கொஞ்சம் கூட ஒத்தாசையா இருந்து எங்களுக்கு ஹெல்ப் பண்ணு. ஆரன் எல்லாத்தையும் பண்ணாலும் நீயும் கூட இருந்து ஹெல்ப் பண்ணு ஏன்னா நீயும் இந்த குடும்பத்துல ஒருத்தன் தான்" என்று இம்முறை மீண்டும் அவன் அழுத்தி கூற அதை கேட்ட துரியனுக்கு ஏதோ உள்ளுக்குள் நெருடலாக இருந்தது. சரி என்று அவன் அனைத்து புறமும் தலை அசைத்து வைக்க குழந்தை தூக்கத்திற்கு சொக்கியது கண்களை மூடி. அப்பொழுதும் அவன் யட்சிணியை தான் தேடினான் தூக்கத்தில். துரியனுக்கு பெருமையாக இருந்தது யட்சிணி குழந்தையை அவள் வசப்படுத்தி வைத்திருப்பதை எண்ணி

" யட்சிணிகுழந்தை தூக்கத்துக்கு உன்னை தான் தேடுறான்.  நீ அவன தூக்கிட்டு போய் தூங்க வை. தம்பி நீ இருந்து சாப்பிட்டுடு தான் போகணும் எப்ப வந்தாலும் சாப்பிடாமல் கிளம்பிடுவ அதனால ஒழுங்கா சாப்பிட்டு போ" என்று கூறிவிட்டு கயல்விழி தியூதாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட "அய்யோ மேடம் அதெல்லாம் வேண்டாம்" என்று அவசரமாக கத்தினான் துரியன் அதை எல்லாம் அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை கயல். "என்னங்க அவனை போக விடாம தடுத்து வையுங்க அவன் சாப்பிட்டு தான் இன்னைக்கு போகணும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் கயல்விழி 


இப்பொழுது அங்கு இருந்தது ஆண்கள் நால்வர் மட்டும் தான் "நம்ம ஆரனோட அறைக்கு போகலாமா?" என்று ஆரூரன் கேட்க "மாமா ஆரன் மாமா ரெஸ்ட் எடுக்கணும்னு போயிருக்காரு இந்த நேரத்துல அவர எதுக்கு நம்ம டிஸ்டர்ப் பண்ணனும்?" என்றான் யுதி சங்கடத்துடன். "இல்லை யுதி ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு ஆரன்  ரொம்ப ரொம்ப முக்கியம் அதனால தான் அவனோட ரூமுக்கு போகலாம் என்று கேட்டேன்" என்று ஆரூரன் கூற "சரி வாங்க போலாம் அவன் எதுவும் நம்மள சொல்ல மாட்டான்" என்று ஆருத்ரன் கூறினான். "துரியா நீயும் வா உன் கிட்ட தான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று ஆருரன் கூறிவிட்டு லிப்ட் இன் மூலம் மேலே சென்று விட எதற்காக இவர் தன்னை அழைக்கிறார் என்று புரியாமல் அவர் பின்னே சென்றான் துரியன்


ஆரன் அறைக்குள் செல்லும் முன்பு அறை கதவை தட்டினான் ஆரூரன் "யாரு?" என்று உள்ளே இருந்து ஆரன் சத்தம் கொடுக்க "நான் தான்டா உள்ள வரலாமா?" என்று ஆரூரன் கேட்க "எதுக்குப்பா பர்மிஷன் எல்லாம் கேக்குறீங்க உள்ள வாங்க" என்றான் ஆரன். அதை கேட்டு அறைக்குள் நுழைந்தவன் சோபாவில் அமர்ந்து கொண்டு மற்றவர்களையும் அமரக் கூற கட்டிலில் அமர்ந்து அலுவலக சம்பந்தமாக யாரிடமும் போனில் பேசிக் கொண்டிருந்த ஆரன் தன் தந்தை வருகையை எண்ணி அழைப்பை துண்டித்து விட்டு அவன் முன்பு வந்து அமர்ந்தான். துரியன் இன்னும் நின்று இருக்க "உட்காரு துரியா" என்று ஆருரன் கூற சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்த இடத்தில் யுதியுடன் அமர்ந்தான் அனைவரையும் ஒரு பெரும் மூச்சை ஒன்றை விட்டு நீராய் நோக்கிய ஆரூரன் தன் பார்வையை இப்பொழுது துரியன் புறம் திரும்பினான் இவர் என்ன நம்மளை எப்படி பார்க்கிறார் என்று உள்ளுக்குள் படபடத்துடன் வெளியே அமைதியாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு துரியன் ஆருரனை நோக்கி இப்பொழுது அவனை ஆழ்ந்து பார்த்துவிட்டு தன் தம்பியின் புறம் திரும்பிய ஆரூரன் "நம்ம விருஷாலியை துரியனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று நான் நினைக்கிற இதுல உன்னோட எண்ணம் என்ன?" என்று நேரடியாகவே கேட்டு விட்டான் ஆரூரன் அவன் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போக ஆருத்ரன் மட்டும் நிதானமாக அவனை பார்த்தான்

எதையோ என்னடா நடக்குது இங்க என்பது போல் பேவென்று அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்க அடுத்து ஆருத்ரன் என்ன கூற போகிறான் என்று அமைதியாக கவனித்தவாறு அமர்ந்திருந்தான் ஆனால் துரியன் தான் அதிர்ந்து போய் ஆரூரனை பார்த்துக் கொண்டிருந்தான்.


எதேர்ச்சியாக வாசல் புறம் திரும்பிய யுதி அங்கு ரோஹன் மற்றும் வித்யூத் நின்று இருந்ததை கண்டு அதிர்ந்து போனான். ரோஹன் இதை கேட்டுவிட்டான என்ற பயத்துடன் "அப்பா சித்தப்பா நீங்க எப்போ வந்தீங்க?" என்றான் பயத்துடன். அதில் மேலும் பயந்து அதிர்ச்சியுடன் எழுந்தே நின்று விட்டான் துரியன் சங்கடத்துடன். ரோஹனோ ஆரூரனை தான் உறுத்து விழித்து கொண்டிருந்தான் கோபமாக.

அதை கண்டவர்களுக்கு மேலும் பயம் ஆனது ரோஹன் என்ன சொல்ல போகிறானோ என்று.

தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....