பெண்கவிதை 52

விருஷாலி தன் அறைக்குள் சென்று பால்கனியில் நின்று சுற்றி முற்று வேடிக்கை பார்க்க துவங்கிய விட பால்கனி கதவில் சாய்ந்து நின்று அவளைத்தான் விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் துரியன். அவனுக்கு அவளை பார்க்கும் பொழுது உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் பீரிட துவங்கியது ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான் ஆனவன் 


"என்ன சார் என்னை மறந்துட்டீங்க போல இல்ல ஞாபகம் இருந்தும் மறந்த மாதிரி நடிக்கிறீங்களா?" என்று அவள் அவன் புறம் திரும்பாது வெடிக்கக் பார்த்த வண்ணம் கேட்க அவள் கேள்வியில் திடுக்கிட்டு விழித்தான் துரியன் "என்...ன என்னது என்ன...மா சொ...ல்ற நீ எனக்கு புரியலையே?" என்று அவன் தட்டு தடுமாறிய குரலில் கேட்டான் எங்கே அவளுக்கு ஒரு வேலை தன்னை அன்று பார்த்தது நினைவிற்கு வந்து விட்டதோ என்ற எண்ணத்தில் 


"பரவால்ல நல்லா நடிக்க கூட செய்றீங்க எதுக்காக இந்த நடிப்பு? ஒருவேளை கடைசி வரைக்கும் என் கிட்ட எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கணும்னு நினைக்கிறீங்களா? இல்ல இப்ப சொல்றதுக்கானநேரம் இல்ல என்னைக்காவது ஒருநாள் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறீங்களா?" என்று இப்போது அவன் புறம் திரும்பி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு பெண்ணவள் அழுத்தமாய் கேட்க அதில் மேலும் தடுமாறிப் போனான் ஆனவன் 


"நீ என்ன சொல்ற எனக்கு எதுவுமே புரியல மா ?"என்று தெரிந்து கொண்டே தெரியவில்லை என்று பொய் கூறினான் ஆனவன் அதில் விழிகளை சுழற்றியவள் "போதும் போதும் ரொம்ப நடிக்காதீங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரோட்டுல அடிபட்டு விழுந்து கிடந்தீங்களே அப்போ உங்களை காப்பாத்துனது நான்தான் இப்பவாவது ஞாபகம் இருக்கா இல்ல இப்பவும் ஞாபகம் இல்லாத மாதிரி நடிக்கிறீங்களா? எனக்கு உங்களை சரியா தெரியலனாலும் என்னோட முகம் உங்களுக்கு நல்லா மனசுல பதிஞ்சு இருக்கும் ஏன்னா  நீங்க கண்ண உருட்டி உருட்டி அவ்வளவு மயக்கத்துல கூட அன்னைக்கு  என்ன பாத்துகிட்டு தான் இருந்தீங்க உண்மைய சொல்லுங்க அன்னைக்கு என்ன நீங்க கோவிலில் பார்க்கும்போதே நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சு தானே?" என்று இவள் அழுத்தமாய் கேட்க அதில் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றான் துரியன் 


அவன் அமைதியை கண்டவளுக்கு மேலும் கோபம் தான் வந்தது "வாயைத் திறந்து பதில் சொல்லுங்களேன் நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவியாக போறோம் இப்பவும் நீங்க என்கிட்ட பேசுறதுக்கு இப்படி தடுமாறி நின்னுகிட்டு இருக்கீங்க இப்படியே இருந்தா நம்ம லைஃப் கடைசி வரைக்கும் அரோகரா தான்" என்று அவள் கோபத்தில் கூறினாலும் அவள் கூறிய வார்த்தையில் அவனுக்கு சிரிப்பு வரத்தான் செய்தது. அதில் விழிகளை உருட்டி இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் "சிரிக்காதீங்க" என்றாள் கோபமாக. அதில் இம்முறை சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்து விட்டான் துரியன். அதில் மேலும் கோபம் வந்துவிட்டது அந்த குட்டி பெண்ணிற்கு. வேகமாய் அவனை நெருங்கியவள் "சிரிக்காதிங்க சிரிக்காதீங்க" என்று அவன் தோள் மற்றும் நெஞ்சில் அடிக்க ஆரம்பிக்க அவரின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராதவன் அவளிடம் இருந்து தப்பி ஓடினான் அங்கும் இங்கும் 


ஆனால் அவளோ விடாமல் துரத்தி கொண்டிருந்தாள் அவனை. "இங்க பாருமா இப்படி எல்லாம் பண்ண கூடாது நான் உன்னோடு வருங்கால புருஷன் யாராவது பார்த்தாங்கன்னா என்ன கேவலமா நினைப்பாங்க பொண்டாட்டி கிட்ட இவன் அடி வாங்குகிறான்னு .  ஒழுங்கா விட்டுடு இல்ல உன்னோட ஆரன் மாமா கிட்ட உன்ன பத்தி நான் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்" என்று அவளை பயமுறுத்தும் வகையில் துரியன் கூற "சொல்லி தான் பாருங்களேன் மாமாவே உங்களை கட்டையால் அடிப்பார். என்னை தெரிஞ்சுக்கிட்டே தெரியாத மாதிரி நடிச்சு இருக்கீங்க தானே இருங்க நானே இதை போய் மாமா கிட்ட சொல்றேன்" என்று அவள் கூறிவிட்டு கோபமாய் அங்கிருந்து நகர முற்பட அதில் அதிர்ந்து போனவன் ஒரே எட்டில் அவளை பிடித்து இழுத்தான் வேகமாய். அவன் இழுத்த வேகத்தில் அவன் நெஞ்சில் மோதி நின்றவள் அவனது நெருக்கத்தில் விழி விரித்து விதிர்விதிர்த்து பார்த்தாள் அவனை. 


துரியனுக்கும் இந்த நெருக்கம் உள்ளுக்குள் பல்வேறு உணர்வுகளை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தது 


அமைதியாக அவன் முகத்தை நோக்கியவள் "உண்மைய சொல்லுங்க வாய மூடிக்கிட்டு அமைதியா இருக்காதீங்க எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்க போறீங்க?" என்று அவனிடம் கேட்க அவனும் ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு அவளை அழுத்தமாய் பார்த்தவன் "தெரியும்" என்றான் அழுத்தமான குரலில். "தெரியும்னா எப்போ தெரியும்?" என்று அவள் மீண்டும் கேட்க "முன்னாடியே தெரியும் அன்னைக்கே உன்னை கோவில்ல பாத்த அப்பவே. நீ சொல்றது கரெக்ட் தான் அன்றைக்கு கோவில்ல உன்ன பார்க்கும்போது எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்துடுச்சு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உன்ன நான் பார்க்கும் போது நீ ரொம்ப சின்ன பொண்ணா இருந்த  ஆனா இப்போ உன்ன பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருந்தது அந்த பொண்ணா இது இவ்ளோ மாறிட்டான்னு.  ஆனா உன்கிட்ட இருந்தா அதே குணம் இப்பவும் இருக்கு அது உன் பிறவி குணம் போல. எல்லார் கிட்டையும் அன்பை காட்டுறது இரக்கம் காட்டுறது. அதுதான் என்ன உன் மேல காதல்ல விழ வெச்சது ஆனா எனக்கு ஒரு தயக்கம்" என்று அவன் இடைநிறுத்த அவன் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் விருசாலி இறுதியாக அவன் கூறியதை கேட்டு "என்ன தயக்கம்?" என்றாள் பொறுமையாக 


இதை எப்படி இவளிடம் கூறுவது என்று அவன் தயக்கத்துடன் நிற்க "சொல்லுங்க என்ன தயக்கம்?" என்றால் மீண்டும் அவானிடம் அழுத்தமாய் "அதை எப்படி சொல்லுவேன் என்னோட தங்கச்சி யட்சிணியை நீ அக்கான்னு சொல்ற அப்படி பாத்தா நீ எனக்கு என்ன முறை வருவ சொல்லு?" என்று இவன் கூற அவன் கூறியதை கேட்டவள் முகத்தை சுழித்தாள் ஒரு மாதிரியாக "ச்சி என்ன பேசுறீங்க முறையில எனக்கு யட்சணி அக்கா, அக்கா முறைதான் வருவாங்க. அதனால நான் அவங்களை அக்கான்னு கூப்பிடுறேன் நீங்களும் அவங்கள உங்க தங்கச்சியா தான் நினைக்கிறீங்க ஆனா அவங்க உங்க கூட பொறந்த தங்கச்சி கிடையாது இப்போ முறையை கூட விட்டுருங்க அவங்கள நீங்க தங்கச்சியும் நினைக்கிறதுல என்ன என்ன தப்பு இருக்கு அவங்களை நீங்க உங்க அம்மாவா நினைக்கிறீங்க அப்பாவா நினைக்கிறீங்க உங்க தங்கச்சியா நினைக்கிறிங்க உங்க தோழியா நினைக்கிறிங்க இப்படி எல்லாம் முறையிலும் தான் நினைக்கிறீங்க அதனால அது எல்லாமே அவங்க ஆகிடுவாங்களா இது எல்லாமே மனசோட ஒன்றி போற ஒரு உணர்வு. இதை எதுக்கு நீங்க இவ்ளோ யோசிச்சு காம்ப்ளிகேட் பண்ணிக்கிறீங்க?" என்று அவள் கேட்க இருந்தாலும் "எனக்கு ஒரு மாதிரி தவறா தான் பட்டுச்சு மா அதனாலதான் நான் உன்னை பத்தின உணர்வுகளுக்கு அதுக்கு மேல இடம் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கணும்னு நினைச்சேன் ஆனா சத்தியமா சொல்றேன் உன்ன பத்தி யோசிக்காமல் என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல அந்த அளவுக்கு எனக்கு உன் மேல லவ் இருக்கு" என்று அவன் கூற அவன் கூறிய வார்த்தைகளில் உள்ளம் சிலிர்த்துப் போனவள் அவன் எதிர்பாராத சமயம் அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் அவன் கழுத்தோடு 


அவளின் இந்த திடீர் செயலை எதிர்பாராதவன் என்ன செய்வது என்று தடுமாறி நிற்க அவனின் செயலில் இதற்கடுத்து சிரித்தவள் அவன் இரு கரத்தையும் தூக்கி தன் இடையோடு வளைத்துக் கொண்டு அவனை இறுக்கமாய் அமைத்துக் கொண்டாள் . அவளின் செயலில் சுயநினைவிற்கு வந்தவன் உள்ளத்தில் காதல் பெருக அதற்கு மேல் முடியாமல் அவளை இடையோடு இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் 

நீண்ட நேரம் நீடித்த அணைப்பு அப்பொழுதுதான் முடிவிற்கு வந்தது வெட்கத்துடன் அவனிடமிருந்து விலகி தலைகுனிந்து நின்றாள் "நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவங்கள தங்கச்சி முறையாக தான் பாக்கணும் ஏன்னா அவங்க உங்கள ஒரு அண்ணனா மட்டும் இல்லாம ஒரு அப்பாவாவும் பார்க்கிறாங்க அதனால நீங்க உங்களுக்கான உரிமையை அவங்ககிட்ட விட்டுக் கொடுக்காதீங்க இவ்வளவு நாள் அண்ணா முறையில் இருந்து அவங்களுக்கு எல்லா நல்லதையும் பண்ணவரு மாமா முறையிலிருந்து பண்ணுங்க" என்று அவள் வேண்டுமென்றே கூற "மாமாவா?" என்று முகம் சுளித்தா அவன்


"சரி சரி சும்மா சொன்னேன் என்னமோ பண்ணுங்க ஆனா திரும்பி உறவு முறையை வைத்துக்கொண்டு ஏதாவது பிரச்சனை பண்ணனும் நினைச்சீங்க அப்புறம் உங்களை ஆரன் மாமா கிட்டயும் ஆரூரன் மாமா கிட்டயும் நான் போட்டு கொடுத்துடுவேன் ஜாக்கிரதை" என்று அவள் கூற "சரிங்க அம்மணி இனி நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன் மேடம்க்கு எப்போ நான் தான் நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி  காப்பாத்துனவன்னு தெரிஞ்சது?" என்று அவன் கேட்க அதில் அமைதியாக அவன் முகம் நோக்கியவள் "இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி.  ஓபனா சொல்லணும்னா உங்க மேல சொல்ல முடியாத ஒரு உணர்வு இருந்தது அதை பத்தி தான் அதிகமா யோசிச்சுகிட்டு இருந்தேன் உங்கள பத்தி அதிகமா யோசிச்சதுல உங்க முகம் எனக்கு இதுக்கு முன்னாடி இங்கே பார்த்த மாதிரி இருந்தது ஆனா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் உங்களை பார்க்கும்போது முகம் முழுக்க ரத்தமா உடம்பு கை கால் எல்லாம் அடிபட்டு நீங்க பாக்குறதுக்கு ரொம்ப மோசமா..." என்று கூறும் பொழுது அவளுக்கு உடல் நடுங்கி விட்டது 


அந்த கோர விபத்தில் அவ்வளவு உடலளவில் சிதைந்து போயிருந்தான் துரியன். அவளின் நடுக்கத்தை உணர்ந்து அவளை ஆதரவை தன்னோடு அணைத்துக் கொண்டவன் "ஒன்னும் இல்லம்மா அதான் நான் இப்போ சரி ஆகிட்டேன் இல்ல. தயவு செஞ்சு அதை யோசிச்சு பயப்படாதே" என்று ஆறுதலாக அவளை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தான் துரியன் அவனின் அணைப்பில் சற்று ஆசுவாசமடைந்தவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்தவாறு "அப்பதான் எனக்கு அன்னைக்கு நான் காப்பாத்துனது உங்கள தான்னு தெரிஞ்சது அது மட்டும் இல்லை நாம ரெண்டு பேரும் கோவில்ல மீட் பண்ணப்போ நீங்க என்ன ஒரு மாதிரி வித்தியாசமா பார்த்ததெல்லாம் நான் யோசிச்சேன். அதுக்கப்புறமும் நீங்க என்கிட்ட நடந்துக்கிற விதம் ஒரு மாதிரி வித்தியாசமா தான் இருந்தது இது எல்லாத்தையும் வச்சு பார்க்கும்போது தான் உங்களுக்கு ஏற்கனவே என்ன தெரியும்னு எனக்கு தெரிஞ்சது" என்று அவள் கூற "எப்படியோ ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துட்டீங்க இனிமேலாவது தேவையில்லாம எதையாவது பற்றி யோசித்து  மனச போட்டு குழப்பிக்காதீங்க ஒழுங்கா கிடைக்கிற டைம் யூஸ் பண்ணிக்கிட்டு லவ் பண்ணிட்டு சுத்துங்க" என்று கூறியவாறு சிரிப்புடன் வந்தாள் தஷிகா அங்கு 


யுதியும் அவளுடன் வந்தவன் "ஆமா என் ஆளு சொல்றது கரெக்ட் பாருங்க நாங்க எப்படி லவ் பண்ணிட்டு சுத்துறோம்னு பாரு அதை பார்த்து நீங்களும் கத்துக்கோங்க" என்று தஷிகாவை தோளோடு அனைத்து அவளை கிண்டல் செய்தவாறு யுதி கூற "வாயை மூடுங்க எப்ப பாத்தாலும் உங்களுக்கு என்னை கிண்டல் பண்றது தான் வேலை" என்று சிரித்தாள் அவள். இவர்களின் வருகையை கண்டு பதறிப்போய் துரியன் விருஷாலி இருவரும் பிரிய "அதெல்லாம் பார்த்தாச்சு பார்த்தாச்சு இதுக்கு மேல நீங்க ஒன்னும் பதற வேண்டிய அவசியம் இல்லை எங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு உங்க கல்யாணம்தான். அதனால அதுவரைக்கும் ஜாலியா ரெண்டு பேரும் ஊரை சுத்திக்கிட்டு லைப்ப என்ஜாய் பண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் இதே மாதிரி சந்தோஷம் இருக்குன்னு சொல்ல முடியாது" என்று ஏற்கனவே 10 திருமணம் செய்தவன் போல் யுதி கூற அவன் வயிற்றில் ஓங்கி அடித்தாள் தாஷிகா பொய் கோபத்துடன்.


தொடரும்...


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....