பெண் கவிதை 39
காலை வேளையில் கயல் கூறியதன் பேரில் ஆரனின் அறைக்கு காப்பியை எடுத்துக் கொண்டு சென்றாள் பயத்துடன் யட்சிணி. எவ்வளவோ தான் செல்ல மாட்டேன் என்று கூறியும் கயல் தான் அவளை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள் "இங்க பாரு யட்சணி நீ இப்படி பயந்துகிட்டே இருந்தா அவனை மாத்த முடியாது என் பையன் பழையபடி மாறணும் அது உன்னால மட்டும் தான் முடியும் தயவு செஞ்சு கிடைக்கிற வாய்ப்பு பயன்படுத்திக்காமல் இப்படி முட்டாளாவே இருக்காத நீ ரொம்ப நல்ல பொண்ணு உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லபடியா வாழனும்னு ஆசைப்படுகிறேன் அதுவும் என் பையன் கூட வாழனும்னு இருந்தா அதைவிட சந்தோஷம் இந்த உலகத்துல எனக்கு வேற எதுவுமே இல்ல தயவு செஞ்சு அவனை விட்டு பயத்துல விலகி இருக்காமல் கொஞ்சம் கொஞ்சமா அவனை நெருங்க முயற்சி பண்ணு" என்று கயல் கூற அதற்கு மேல் அவளை எதிர்த்து பேசாமல் சரி என்று தலையசைத்து விட்டு ஆரன் அறைக்குள் நுழைந்தாள் பெண்ணவள்
அங்கு ஆரன் இல்லாமல் போகவே "எங்க போனாரு இவரு ஆளையே காணோம்" என்று யோசித்துக்கொண்டே இருந்தவள் டேபிளின் மீது காபியை வைத்துவிட்டு அறையில் அவன் இருக்கிறானா என்று தேடத் தொடங்கினாள் அப்போது தான் அவனின் வாட்ரோப் திறந்து இருப்பதை கண்டவள் "என்ன இது திறந்து இருக்கு இது கூட மூடாம என்ன பண்றாரோ?" என்று யோசித்துக் கொண்டே அதை மூட சென்றவள் உள்ளே அவனின் உடைகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படாமல் இருப்பதைக் கண்டு "ஊருக்கு தான் பெரிய பிசினஸ்மேன் ஆனா ஒரு டிரஸ் கூட ஒழுங்கா வாட்ரோப்ல அடுக்கி வைக்கிறது இல்ல பாரு எப்படி எல்லாம் குப்பை மாதிரி கிடைக்குதுன்னு" என்று உள்ளுக்குள் அவனை திட்டி தீர்த்தவள் அவனின் உடைகளை வேக வேகமாக மடித்து அடுக்கி வைக்க தொடங்கினாள்
ஒருபுறம் அவன் வந்து விட்டால் திட்டுவானோ என்று பயமிருந்தாலும் அவனின் அறை இப்படி இருப்பதை அப்படியே விட்டுவிட்டு செல்வதில் அவளுக்கு விருப்பமில்லை அதனால் அழகாகவும் நேர்த்தியாகவும் அவனின் உடைகளை அடுக்கி வைக்க ஆரம்பித்தாள் அலமாரியில். அனைத்து உடைகளையும் அவள் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து மடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் கையில் தட்டுப்பட்டது ஒரு டைரி . அதை கண்டவள் "என்ன இது டைரி மாதிரி இருக்கு இத எதுக்கு இங்க வச்சிருக்கார்?" என்று யோசித்தவள் முதலில் அதை சாதாரணமாக வேறு இடத்தில் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் தன் வேலையை கவனம் செலுத்தலாம் என்றுதான் நினைத்தாள் ஆனால் மனமோ ஏதோ ஒரு உந்துதலில் அந்த டைரியை படி என்று எடுத்துக் கூற அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவள் டைரியின் முதல் பக்கத்தை திறந்தாள். அதில் "வாழ்க்கையை வெறுத்து வாழ்பவனின் வாழ்க்கை குறிப்பு" என்று எழுதி இருக்க "இது அவரோட கையெழுத்து மாறில இருக்கு இதில் எழுதி இருக்கிறதை பார்த்தா அவர் மனசுல என்ன இருக்குங்குறத இந்த டைரில தான் எழுதி இருப்பாருன்னு தோணுது இதை படித்து பார்த்தால் ஏதாவது நம்மளுக்கு அவர் லவ் பண்ண பொண்ண பத்தி தெரியும்" என்று நினைத்தவள் முதல் பக்கத்தில் இருந்து படிக்க ஆரம்பித்துவிட்டாள் ஏனோ அவன் இங்கு வந்து விட்டால் என்ன ஆவது என்று தோன்றிய பயம் காணாமல் போய்விட்டது அதை டைரியை படிக்கும் ஆர்வத்தில்
டைரியை படிக்க ஆரம்பித்து இருந்தவள் அதில் அவன் எழுதியிருப்பதை கண்டு ஆர்வத்தில் அடுத்தடுத்து படிக்க ஆரம்பித்து விட்டாள் அதிலேயே முழுகி போனவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆரன் நற்பவியை பற்றி எழுதி இருந்த ஒவ்வொரு வார்த்தைகளும். அதை படிக்கும் பொழுது கண்களில் இருந்து கண்ணீர் துளிர்க்க ஆரம்பிக்க "இந்த அளவுக்கு அந்த பொண்ண லவ் பண்ணி இருக்காரா? எதார்த்தமான ஒரு வாழ்க்கையை தான் அவரு தன் காதலியோட வாழனும்னு நினைச்சிருக்காரு. ஆனா அந்த வாழ்க்கை அவருக்கு கிடைக்காமல் போயிடுச்சு அந்த பொண்ணு எப்படி இறந்தாங்கன்னும் தெரியல இப்ப என்ன பண்றது?" என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் "என்னோட ரூம்ல நீ என்ன பண்ற?"என்றாம் கொஞ்சமும் ஆக்ரோஷம் குறையாத குரலில் ஆரன் அங்கு வந்து நின்று
அவன் அறையில் இருந்து மற்றொரு அறைக்குள் இருந்தவன் அப்பொழுதுதான் அந்த அறையில் இருந்து வெளியே வந்திருந்தான் வந்தவன் யட்சணியின் வாசத்தை வைத்தே அவளை உணர்ந்து கொண்டான் அவள் அங்கு தான் இருக்கிறாள் என்று. அவனின் குரலில் பயந்து போய் எழுந்து நின்றவள் பயத்துடன் அவனைப் பார்க்க "உன்ன தாண்டி கேட்கிறே என்னோட ரூம்ல என்ன பண்ற உன்னை இங்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கல்ல" என்று அவன் கோபமாய் கர்ஜிக்க "அது.. உங்களுக்கு காபி காபி கொடுத்துட்டு போலாம்னு வந்தேன் சார்" என்றாள் அவள் பயத்துடன் நடுங்கிய குரலில். அதில் ஆக்ரோஷமாய் அவளை நெருங்கியவன் வெடுக்கின்ற அவளை பிடித்து இழுக்க அவள் கையில் இருந்த டைரியை தவறவிட்டிருந்தாள் அவனின் ஆக்ரோஷமான செயலில். கீழே ஏதோ விழுந்த சத்தத்தில் சட்டென்று அவளை விட்டவன் "என்னோட ரூம்ல இருந்து ஏதாவது எடுத்தியா?" என்றான் கர்ஜனையாக
அதில் அவள் பயத்தில் "அது.. ஆமா.
. இல்லை.." என்று என்ன சொல்வது என்று தெரியாமல் பயத்தில் தடுமாற கீழே விழுந்த பொருளை அமர்ந்து தட்டு தடுமாறி தேடி எடுத்து விட்டான் அவன். அதை தொடும்பொழுதே அவனுக்கு தெரிந்து விட்டது அது தான் எழுதிய டைரி என்று. அவ்வளவுதான் ஆக்ரோஷத்தில் வீறு கொண்டு எழுந்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தான். அதில் ஒரு சுற்று சுற்றி கீழே விழுந்தவள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கண்ணீருடன் அவனைப் பார்க்க அவள் தலை முடியை பிடித்து வேகமாய் இழுத்தவன் "எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட ரூமுக்கு வந்து என்ன பத்தி தெரிஞ்சுக்கணும் நான் எழுதுன டைரிய படிச்சிருப்பேன் யாருடி கொடுத்த தைரியம் இது உனக்கு என்ன என்ன பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு என் அப்பா கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லணும்ங்கறதுக்காக இங்க வந்திருக்கியா அவர் உன்னை எனக்கு ஸ்பை வேலை பாக்குறதுக்காக அனுப்பி வச்சாருன்னா அந்த வேலையை சரியா பாத்துக்கிட்டு இருக்கியோ?" என்றாம் இவன் வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி பற்களை கடித்த வண்ணம் ராட்சசனாய்
அவனின் கோபத்தை கண்டவள் அவன் முடியை இழுத்துப் பிடித்ததில் மேலும் வலியில் கதறி அழ தொடங்கினாள் "சார் ப்ளீஸ் வலிக்குது விடுங்க சார்" என்று அவள் அழுகையுடன் அவன் கரத்தை விலக்க போராட அவளை தரதரவென்று எடுத்துக் கொண்டு கீழே வந்தவன் நடுஹாலில் அவளை தள்ளினாள் ஆக்ரோஷமாய். அவளோ அடுத்தவன் என்ன செய்வானோ என்று பயத்தில் நின்று இருக்க மீண்டும் அவளை அடித்து காயப்படுத்தி விட்டு அனைவரையும் கோபத்துடன் எச்சரித்து விட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான் ஆரன். அதை நினைத்துப் பார்த்தவர்களுக்கு மீண்டும் கண்ணீர் சுரந்தது
ஆரனோ எதையும் உணராமல் தலையை இறுகப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் மனவேதனையில். அவனைத் திரும்பிப் பார்த்தவள் "உங்க மனசுல எவ்ளோ பாரம் இருந்தாலும் தயவு செஞ்சு அதை இறக்கி வச்சிடுங்க சார் உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் நீங்க இப்போ இருக்கிற நிலைமையில் இன்னும் இன்னும் உங்க மனசுக்குள்ள கஷ்டத்தை அதிகமாக புதைத்து வைத்துக்கொள்ளாதீங்க. அது உங்களோட உடல்நிலையோட மட்டுமில்லாமல் மனநிலையும் பாதிக்கும்" என்று அவள் கூற கொஞ்சம் கொஞ்சமாக கண்ணீர் நிற்கத் தொடங்கியது ஆரனுக்கு
அமைதியாக தரையை வெறித்து பார்த்த வண்ணம் அவன் அமர்ந்திருக்க அவன் தாடையை தன் பிஞ்சு கரம் கொண்டு பிடித்து நிமிர்த்தியவள் "சொல்லுங்க சார் என்ன நடந்ததுன்னு என்கிட்ட சொல்லிடுங்க நம்பி சொல்லுங்க நான் உங்களை ஏமாத்த மாட்டேன் இந்த விஷயம் நீங்க என்ன நம்பலாம்" என்று அவள் கூற அவள் வார்த்தைகளில் ஏனோ அவனுக்கு அவள் மீது நம்பிக்கை பிறந்தது சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின்பு ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டு அங்கிருந்து எழுந்து நின்றான் அவளோ புரியாமல் அவனைப் பார்த்தவாறு எழுந்து நிற்க அங்கிருந்த சோபாவில் தளர்ந்து போய் அமர்ந்தவன் தலையை இறுக்க பிடித்துக் கொண்டு தன் மனதில் உள்ளதை அவளிடம் கூற ஆரம்பித்தான்
*****************************
இரண்டு வருடங்களுக்கு முன்பு,
நற்பவி மற்றும் கரிகால் ஆரன் இருவரும் காதல் வானில் சிறகடித்துக் கொண்டிருந்த நேரம் அது. அன்றைய இரவு வேலை ஆரன் மற்றும் நற்பவி இருவரும் தனிமையில் சந்தித்து இருந்தனர். அங்கிருந்த ஒரு ஆற்றின் அருகே மரத்தின் கீழே ஆரன் அமர்ந்திருக்க அவன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் நற்பவி அவளை தோளோடு அனைத்த வண்ணம் அந்த கரிய வானில் ஜொலித்துக் கொண்டிருந்த நிலவையும் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த அருவியையும் தான் அவன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆணவன். நற்பவி அவன் நெஞ்சில் சாய்ந்து கண்மூடி இருந்தவள் "நாளைக்கு ஊருக்கு கிளம்பனும் இல்ல?" என்றாள் மெல்லிய குரலில் அவள் குரலில். இருந்த மாற்றம் இவனுக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது. புருவத்தை சுருக்கி கீழே குனிந்து அவள் முகத்தை பார்த்தவன் "நவி" என்றான் மென்மையான குரலில்
அடுத்த நொடி கடகடவென்று அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள் பெண் அவள் " ஹேய் நவி இங்கே நான் பாரு என்ன பாருமா என்ன ஆச்சு?" என்று அவன் அவள் முகத்தை பிடித்து நிமிர்த்த "இதுக்கு அப்புறம் நம்ம மீட் பண்ண முடியாதுல" என்றாள் அவள் அழுகையுடன். அவள் வாயில் இருந்த வந்த அந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்து அவளை பார்த்தவன் "ஏய் லூசு என்னடி இப்படி பேசுற ஜஸ்ட் ரெண்டு மாசம் தான். அதுக்கப்புறம் நான் திருப்பி இங்க வந்துடுவேன் என்னமோ வாழ்க்கை முழுக்க இதுக்கு அப்புறம் நம்ம சந்திக்கவே மாட்டோம்ங்குற மாதிரி பேசுற பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு? இதுக்காகவா நீ அழுற?" என்று அவன் கோபமாய் கேட்க "நீங்க ரெண்டு மாசம்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க ஆனா உங்களை பிரிஞ்சு இருக்கிற இந்த ரெண்டு மாசம் எனக்கு எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும்னு எனக்கு மட்டும்தான் தெரியும்" என்றாள் அவள் அழுகையுடன்
"டேய் என்னடாமா இப்படி எல்லாம் பேசுற இந்த ரெண்டு மாசம் கூட நான் நம்மளோட காதல பத்தி நம்ம வீட்ல சொல்லி அனுமதி வாங்கறதுக்காக தான் போறேன் இல்லன்னா கண்டிப்பா இந்த லீவ கூட நான் எடுத்திருக்க மாட்டேன் இங்க தான் உன் கூட இருந்திருப்பேன் தயவு செஞ்சு ஃபீல் பண்ணாத நவி நான் போயிட்டு வீட்ல நம்மளோட விஷயத்தை பற்றி பேசி சீக்கிரமாக உன் வீட்டில் வந்து உன்னை பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று அவள் கூற "எனக்குன்னு யாருங்க இருக்காங்க பாட்டி மட்டும்தான். அவங்களும் உடம்பு சரியில்லாதவங்க அவங்க கிட்ட நான் உங்களை விரும்புகிறேன்னு சொன்னா அவங்க சம்மதம் தான் சொல்லுவாங்க என் வீட்ல எந்த பிரச்சினையும் இல்ல ஆனா உங்க வீட்ல தான் என்னை ஏத்துக்குவாங்களான்னு பயமா இருக்கு" என்றாள் அவள் பயத்துடன்
"நான்தான் ஏற்கனவே சொல்லிட்டல்ல என் குடும்பத்தில் என்னோட விருப்பத்துக்கு எதிராக எதுவும் பண்ண மாட்டாங்கன்னு. அவங்களோட சம்மத்தோட நம்ம கல்யாணம் நடக்கணும்னு நினைக்கிறேன்" என்று அவன் கூற "அவங்களுக்கு விருப்பம் இல்லனா என்ன கை விட்டுவிடுவீங்களா?" என்றாள் அவள் பயம் கலந்த அழுகையுடன் . அதில் கோபத்தில் கைகள் இறுக்கியது அவனுக்கு. "உன்னை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறாயாடி?" என்றாள் அவன் ஆக்ரோஷமாய். "ஐயோ நான் அப்படி சொல்லலைங்க" என்று அவள் கூறும் பொழுதே அவள் பேசிய வார்த்தைக்கு அவள் இதழை வன்மையாக சிறை பிடித்தான் ஆனவன். அவனது இந்த திடீர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் முதலில் தடுமாறியவள் பின்பு அவனை ஆசைக்கு இசைந்து கொடுக்க ஆரம்பித்தாள்
கோபத்தில் ஆரம்பித்த முத்தம் நேரம் செல்ல செல்ல மென்மையாக மாறியது அவள் இதழ் சுவையில் திளைத்துப் போனவன் அப்படியே அவளை கீழே சரித்தான் அந்த வெற்ற நிலத்தில். அவளும் அவன் இதழ் தந்த முத்தத்தின் மயக்கத்தில் கிறங்கி போய் கிடக்க அவள் இதழிலிருந்து தன் இதழை பிரித்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான் கண் மூக்கு கண்ணம் உதடு என்று முத்தங்கள் நேரம் செல்ல செல்ல அடுத்தடுத்த இடங்களுக்கு தாவிக் கொண்டே செல்ல அவர்கள் இருவரும் தன்னிலை மறந்தனர் அந்நேரத்தில். தங்கள் இணைகளின் அருகாமை அவர்களின் இளமை உணர்வுகளை தூண்டிவிட்டு இருக்க ஆனவனும் தன்னிலை மறந்த அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான் பெண்ணவளும் தன் மனம் கவர்ந்த மன்னவன் தானே என்ற எண்ணத்தில் தன்னை அவனுக்கு விருந்தாக படைக்க ஆரம்பிக்க இருவரின் இனிய காதல் சங்கமம் காதலுடன் அரங்கியது அந்த இடத்தில். தன்னவளை காதலுடன் ஆட்கொண்டு அவளிடம் இருந்து பிரிந்தவன் அவள் வெற்றி முட்டினான் விழிகளை மூடிய வண்ணம். அவள் கண்களில் இருந்து கண்ணீர் சரசரவென்று இறங்க "ஆரம்பிக்க இப்ப எதுக்கு இந்த அழுகை?" என்றால் விழிகள் திறக்காமலேயே அவர் அழுகிறாள் என்பதை உணர்ந்து அவள் கண்ணீரை துடைத்த வண்ணம்
தன் கண்ணீரை துடைத்து அவன் கரத்தை பிடித்து தன் கன்னத்தோடு வைத்துக் கொண்டவள் "சீக்கிரம் வீட்டில பேசி என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க" என்றாள் அவள் அழுகையுடன். "இப்பவும் நான் ஒரே கேள்வியை தாண்டி உன்கிட்ட கேக்குறேன் உன்னை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறியா?" என்றான் அவன் மீண்டும். "தயவு செஞ்சு அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு என்ன விட இந்த உலகத்தில் நான் உங்களை தான் அதிகமாக நம்புறேன்" என்று அவள் கூற அதைக் கேட்டு விழிகளை திறந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான் ஆத்மார்த்தமான காதலுடன் அழுத்தமாக.
தொடரும்....
Comments
Post a Comment