பெண் கவிதை 48
"பெரிய மாமா தம்பிய தோட்டத்துக்கு கூட்டிட்டு போயிருக்காரு" என்று யட்சிணி மெல்லிய குரலில் கூற "பெரிய மாமாவா?" புருவம் சுருக்கினான் அவள் கூறியதை கேட்டு ஆரன்
"ஆமா நான் தான் என் பேரனை தூக்கிட்டு போனேன் இதுல என்ன தப்பு இருக்கு?" என்று கூறியவரே குழந்தையை தன் கரங்களில் ஏந்தியவாறு வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தான் ஆரூரன். தன் தந்தையின் குரலில் அவன் தான் தன் மகனை வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்தவன் எதுவும் கேள்வி கேட்டுக்கொள்ளவில்லை அதற்கு மேல். அவன் அருகே இருந்த இருக்கையில் தன் பேரனுடன் வந்து அமர்ந்த ஆருரன் அவனை தன் மடியில் அமர வைத்துக் கொண்டு "இவனுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது கொடுத்தீங்களா?" என்றான் அவன் தலைமுடியை சரி செய்த வண்ணம். குழந்தையோ தன் தந்தையை கண்டவுடன் அவனிடம் தாவ முயற்சி செய்து கொண்டிருக்க "இருடா டேய் இவ்வளவு நேரம் என்கிட்ட தானே இருந்த உன் அப்பனை பார்த்த உடனே அவன் கிட்ட தாவுற கொஞ்ச நேரம் என் கூட இரு அப்புறம் உங்க அப்பாகிட்ட போ" என்று குழந்தையை பார்த்து ஆரூரன் கூற அவன் என்ன கூறுகிறான் என்று தெரியாமல்
மலங்க மலங்க அவனைப் பார்த்து விழித்தது குழந்தை
"மதியம் பருப்பு சாதம் கொடுத்த மாமா சாப்பிட்டுட்டு தூங்குனாம் இப்ப எதுவும் ஈவினிங் சாப்பிடுவதற்கு அவனுக்கு கொடுக்கல இனிதான் பால் மட்டும் குடிக்க கொடுக்கணும்" என்று யட்சிணி கூட "சாலிட் ஃபுட் இவனுக்கு கொடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டியா யட்சிணி?' என்றான் ஆரூரன். "ஆமா மாமா இவ்வளவு நாள் வரைக்கும் அவன் என்ன சாப்பாடு சாப்பிட்டான்னு தெரியல நானும் இங்க வந்த பிறகு கொஞ்ச நாள் இவனுக்கு வெறும் பால் மட்டும் தான் கொடுத்துக்கிட்டு இருந்தேன் ஆனா ஒரு வயசுக்கு மேல ஆகிட்டதனால் இனி சாலிட் ஃபுட் கொடுக்கலாம்னு சொல்லி நானே கொடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன் நல்லா தான் சாப்பிடுறான் ஒன்னும் பிரச்சனை இல்ல சாலிட் ஃபுட் அவனுக்கு ஒத்துக்குது" என்று அவள் கூற "எதுக்கும் டாக்டர் கிட்ட ஒரு தடவை கேட்டுடலாமா மா?" என்றாள் கயல்
"இல்ல அத்தை ஒன்னும் பிரச்சனை இல்ல குழந்தைகளுக்கு எல்லாம் எட்டு மாசம் ஆன பிறகு நம்ம திட உணவு பழக்கப்படுத்த ஆரம்பித்து விடனும். அவங்களும் கொஞ்சம் கொஞ்சமா அதை ஏத்துக்குவாங்க இவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல சாலிட் போட்டு நல்லா தான் சாப்பிடுறான் பாலும் கொடுக்கலாம் திட உணவும் கொடுக்கலாம்' என்று யட்சிணி கூற சரி என்று தலை அசைத்து ஏற்றுக் கொண்டாள் கயல். ஆரன் அதற்கு மேல் அங்கு அமராமல் எழுந்து தன்னறைக்கு செல்ல முற்பட "இப்ப எதுக்கு இங்கிருந்து எழுந்து போற எப்ப பாத்தாலும் உன்னோட ரூம்ல தான் போய் அடைஞ்சிக்கணுமா? இங்க எல்லாரும் கூட ஒண்ணா உக்காந்து இருந்தா தான் என்ன உனக்கு?" என்று குரலை உயர்த்தினான் ஆருரம் அவன் சத்தத்தில் குழந்தை மிரண்டு விழிக்க யட்சணியோ "மாமா தம்பி பயப்படுறான் கோபப்படாதீங்க அமைதியா பேசுங்க" என்றாள்.அவனை அமைதிப்படுத்தும் வகையில்
அதில் கொஞ்சம் தன்னை சமம் செய்து கொண்டவன் "எல்லார்கிட்டயும் இருந்து விலகி விலகி பிரிந்து இருக்கிறதுல எல்லாம் உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்குது நான்தான் என் மேல எந்த தப்பும் இல்லை என்று உன்கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டேனே அப்பவும் என்ன மன்னிச்சு ஏத்துக்கணும்னு தோணலையா உனக்கு?" என்று ஆரூரன் கோபமாய் கேட்க அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்த
ஆரன் உடல் இறுக துவங்கியது
அதை உணர்ந்து கொண்ட யட்சிணி "மாமா ப்ளீஸ் கோபப்படாதீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க" என்று மீண்டும் அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் கூற இவர்கள் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் வந்துவிட்டனர் ஆருத்ரன் இவ்வளவு நேரம் தன் அறையில் அமர்ந்து அலுவலக சம்பந்தப்பட்ட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவன் வெளியே வந்து தன் அண்ணன் முகத்தைப் பார்த்தான் "என்ன ஆச்சு ஆரூரா எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்க? குழந்தை நீ கத்துறத பார்த்து பயப்படுறான் பாரு" என்று அவனை அமைதிப்படுத்தும் நோக்கில் கூற "நான் என்னதான்டா பண்றது எல்லாத்தையும் உ
இவன்கிட்ட சொல்லியும் இவன் என்ன புரிஞ்சிக்காம இப்படி என்னை விலக்கி வைக்கிறான் எந்த ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணனோ தெரியல பெத்த புள்ள வெறுக்கிறத ஏத்துக்கிட்டு வாழ வேண்டிய ஒரு நிலைமையில நான் இருக்கேன்" என்று தலையில் அடித்துக் கொண்டான் ஆரூரன்.
குழந்தை இருக்கும்போது இப்படி பேசுவது சரி இல்லை என்பது உணர்ந்த தஷிகா வேகமாய் ஆருரன் அருகே சென்று " பெரியப்பா தம்பியை என்கிட்ட கொடுங்க அவன் நீங்க கத்துறத பார்த்து பயப்படுறான் நான் அவனை ரூமுக்கு தூக்கிட்டு போறேன்" என்றாள் ஒரு வித பயத்துடன் எங்கே அவன் திட்டி விடுவானோ என்று. ஆரூரன் அதுக்கு எந்த பதிலும் கூறாமல் குழந்தையை அவள் கையில் ஒப்படைக்க "விருஷா வா நம்ம ரூமுக்கு போலாம் தம்பி கூட இருக்கலாம்" என்று ஓரமாக பயத்துடன் நின்று இருந்த விறுஷாலியை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் அவர்கள். அங்கிருந்து செல்லும் வரை அமைதியாக இருந்த ஆருரன் வேகமாய் தன் மகனை நெருங்கினான்
அப்போது தான்யட்சிணியை காண வீட்டிற்கு வந்த துரியம் அந்த அசாதாரண சூழ்நிலை கண்டு அமைதியாக நின்றான் வெளியே. அவன் அருகில் சென்று அவனைப் பிடித்து தன் புறம் திருப்பிய ஆரூரன் "சொல்லுடா இன்னும் எவ்வளவு நாளைக்கு எனக்கு தண்டனை நீ கொடுக்க போற நான் சாகுற வரைக்கும் இப்படியே தான் உன்னோட அன்பிற்காக ஏங்கிட்ட சாகனுமா?" என்று அவன் கோபமாய் கத்த.அவன் கரத்தை விலக்கிவிட்டு வேறு புறம் திரும்பி நின்று கொண்டான் ஏனோ கண்கள் கலங்குவது போல் இருந்தது அவனுக்கு. தன் தந்தையின் குரலைக் கூட கேட்க முடியவில்லை அவனால் ஏனெனில் ஆரூரன் குரலில் அவ்வளவு வலி வேதனை வெளிப்பட்டது
"ஐயாவுக்கு நான் தொட்டா கூட பிடிக்கலையோ விலக்கி விடுறீங்க" என்று அவன் தன்னை விலக்கி நிறுத்தியதை கண்டு கோபத்தில் ஆரூரவன் கூற "தயவு செஞ்சு இப்ப எதுவும் பேசாதீங்க என்ன கொஞ்சம் தனியா விடுங்க" என்றான் தலையை இறுக பிடித்துக் கொண்டு ஆரன். ஆருத்தனோ "அமைதியா இருடா அவன் ஏதாவது அப்புறம் கோபப்பட்டு கத்தி உடம்புக்கு பிரச்சினை இழுத்து வச்சுக்க போறான் எதுவா இருந்தாலும் நம்ம அப்புறம் பேசிக்கலாம் இவ்வளவு நாள் அமைதியா இருந்துட்ட இன்னும் கொஞ்ச நாள் அவனுக்கு டைம் கொடுக்கலாம்" என்று ஆருத்ரன் அண்ணனை சமாதானம் செய்யும் வகையில் கூற "இன்னும் எவ்வளவு நாள்தான் நான் காத்துக்கிட்டு இருக்குறது. காலம் முழுக்க இப்படியேதான் இருக்கணுமா? அவள பாரு என் மேல இருக்குற கோவத்துல அவளையும் விலக்கி வச்சிருக்கான் ஒருவேளை கோபம் என் மேல அத என் கிட்ட காட்ட வேண்டியது தான அதை விட்டுட்டு ஏன் அவங்க அம்மாவையும் எதுக்கு கஷ்டப்படுதனும். எங்களுக்கு என்ன 10 பிள்ளைகளா இருக்காங்க ஒருத்தன் இல்லன்னா இன்னொருத்தன் மேல பாசம் காட்டிட்டு போறதுக்கு. ஒத்த புள்ளையா இவனை பெத்து வச்சிருக்கோம் இப்படி எங்கள விலக்கி வைத்திருக்கிறது எங்களுக்கு ஒவ்வொரு நொடியும் நரகத்தில் வாழ்ற மாதிரி இருக்கு இதை எப்பதான் புரிஞ்சுக்க போறானோ தெரியல " என்று ஆருரன் கூற அப்படியே மடங்கி அமர்ந்து விட்டான் ஆரூரனின் வார்த்தை தாக்கத்தில் ஆரன்
அவன் செயலில் அதிர்ந்து போனவர்கள் அவனை நெருங்குவதற்கு முன்பு யட்சிணி வேகமாய் ஓடி சென்று அவனை தாங்கியவள் ஆரூரனை நிமிர்ந்து பார்த்தாள் கண்ணீருடன் இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்று. அவளின் கண்ணீரை கண்ட ஆருரன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. துரியம் யுதிக்கு கவலையாக இருந்தது ஆரன் நிலை கண்டு. கயல் தன் மகன் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் முகத்தை தன் கரங்களில் ஏந்தினாள் "நீ எதுவும் யோசிக்காதப்பா உங்க அப்பா ஏதோ கோவத்துல பேசுறாரு அதையெல்லாம் நீ காதுல வாங்காதே எங்களுக்கு நீ முக்கியம், நீ ஆரோக்கியமா இருக்கணும் தேவையில்லாத ஏதையாவது பத்தி யோசிச்சு உடம்பு நீயே கெடுத்துக்காத நீ கடைசி வரைக்கும் எங்களை ஏத்துக்கலன்னா கூட பரவால்ல ஆனா ரொம்ப யோசிச்சு உன்னோட ஹெல்த்த ஸ்பாயில் பண்ணிக்காதப்பா" என்று கூறும் பொழுதே அழ ஆரம்பித்து விட்டாள் கயல்விழி
அதற்கு மேல் முடியாமல் தன் தாயை தன் தோளோடு இறுக்குமாய் அணைத்துக் கொண்டு ஆரன் தன் கண்ணீரை மறைத்தான் அவள் அணைப்பின் மூலம். வெகு நாட்களுக்கு பிறகு தன் மகனின் அணைப்பில் உடல் சிலிர்த்து போனது அந்த தாய்க்கு. வேகமாய் அவனை அணைத்துக் கொண்டவள் கதறி தீர்த்தாள் மனம் வெடித்து. அவர்களின் நிலையை கண்ட மற்றவர்களும் கண்ணீர் வடிக்க தன் அண்ணனை பிடித்து தள்ளினான் அவர்கள் அருகே ஆருத்ரன்
அதில் திரும்பி அவன் தன் தம்பியை முறைக்க "போடா என்று வேடிக்கை பார்த்துட்டு இருக்க இந்த சான்ச விட்டா வேற நல்ல சான்ஸ் கிடைக்காது போ" என்றான் ஆருத்ரன் மெல்லிய குரலில்ம். பற்களை கடித்துக்கொண்டு அதில் ஒரு பெரும் மூச்சை ஒன்றை விட்டு ஆருரன் அவர்கள் அறிய சென்று தானும் மண்டியிட்டு அமர்ந்தவன் அவர்கள் இருவரையும் சேர்ந்து தன்னோடு இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் இப்போது எந்த தயக்கமும் இன்றி ஆரன் தன் தந்தையையும் இறுக்கமாய் அணைத்துக் கொள்ள அவன் அனைத்திலேயே அவன் தங்களை ஏற்றுக் கொண்டான் என்பதை உணர்ந்தனர் ஆரூரன் மற்றும் கயல்விழி
யட்சிணி இதையெல்லாம் விழி சிமிட்டாமல் இல்லாமல் ஆனந்த கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்க தன் தந்தையின் அணைப்பில் இருந்தவாறு அவள் புறம் கையை மட்டும் நீட்டினான் ஆரன். அதில் நெகிழ்ந்துபோனவன் அவன் கரத்தை இறுக்க பிடித்துக் கொண்டு கயலை அணைத்துக் கொண்டாள் ஆனந்தமாக. மனதளவில் அவன் தன்னை மனைவியாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஒரு தோழியாகவாவது ஏற்றுக் கொண்டானே என்ற சந்தோஷம் அவளுக்கு உண்மையிலேயே அவன் இப்போது அவளிடம் ஒரு தோழி என்னும் மனநிலையில் தான் பழகிக் கொண்டிருக்கிறான் அதை பெண் அவளும் உணர்ந்து கொண்டாள். அதற்கு மேல் அவளும் அவனிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை
இதை எல்லாம் தீயூதா தன் கண்களில் விழுந்த கண்ணீருடன் மன மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க தன் மனைவியை தோளோடு அணைத்து தன் அண்ணன் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததை ஆனந்தமாக பார்த்துக் கொண்டு நின்றான் ஆருத்ரன்.
எதேர்ச்சியாக திரும்பி வாசல் புறம் பார்த்த ஆருத்ரன் துரியனை கண்டு "உள்ள வா துரியா ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க?" என்று அவனை அழைக்க அப்போது தான் அவனை கவனித்தனர் அனைவரும்
தொடரும்...
Comments
Post a Comment