பெண் கவிதை 45

"யுதி கார் ஓட பின்பக்க கதவை திறந்து விடு" என்று எப்பொழுது போல் கணீர் குரலில் ஆரன் கூற அவன் கூறியதை கேட்டு விழி விரித்து அவனை பார்த்தாள் யட்சிணி. எங்கே அவன் அருகே சென்று அமர்ந்தால் ஏதாவது கோபமாக கத்துவானோ என்று நினைத்தாள். ஒருவேளை முன் சீட்டில் ஏறி அமர்ந்தால் "இது என்ன உன்னுடைய காரா உன் இஷ்டத்துக்கு முன்னாடி போய் உட்காருற?" என்று திட்டுவானோ என்று அதுவும் பயமாக இருந்தது. இப்பொழுது அவனே அவன் அருகில் அமருமாறு கூறியதை கேட்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது 

வெளிவர துடித்த புன்னகையை அடக்கிக் கொண்டு பின்பக்க கார்கதவை யுதிஷ்டிரன் திறந்து விட தயக்கத்துடன் உள்ளே ஏறிய அமர்ந்தாள் யட்சிணி. குழந்தை அவள் மடியில் வாகாய் அமர்ந்து கொண்டு அவள் நெஞ்சில் சாய்ந்து கொள்ள தன் மகனை அவளிடம் இருந்து வாங்கினான் ஆரன். குழந்தையை வாங்கும் பொழுது அவனின் விரல் பெண் அவளின் விரலை உரச அதில் உள்ளுக்குள் சிலிர்த்து போனது மங்கைக்கு. என்ன விதமான உணர்விது என்று அவள் உணர்ச்சியின் தாக்கத்தில் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருக்க தன் மகனை வாங்கி தன் மடி மீது அமர வைத்தவன் அவன் முகத்தை தடவினான் தன் வன்மை கரங்களால். குழந்தையை அவனின் கரத்தின் வன்மையை தாங்க இயலாமல் அவன் கரத்தை பட்டென்று தட்டி விட்டான் முகம் சுருக்கியவாரே. டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்த யுதி முன்னே இருந்த கண்ணாடியின் வழியே குழந்தையின் செயலை கண்டு வாய்விட்டு சிரிக்க யட்சிணியும் ஓரக் கண்ணால் தந்தை மகன் இருவர்களின் சம்பாஷனைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் அமைதியாக. குழந்தையின் செயலில் புருவம் சுருக்கியவன் மீண்டும் அவன் கன்னத்தை வேண்டும் என்று நறுக்கென்று கிள்ளிவிட அதில் ம்ம்ம்ம் என்று சத்தம் கொடுத்தவாறு மீண்டும் அவன் கரத்தை தட்டி விட்டவன் தன் கன்னத்தை தடவினான் நுனி மூக்கு கோபத்தில். தன் குழந்தையின் கோபத்தை அந்த தந்தையவன் உணர்ந்து கொண்டானோ என்னவோ அவனை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு அவன் முதுகில் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான் அவனின் வாசத்தை உள்ளெடுத்தவாறு 


ஏனோ தன் மகனின் நெருக்கத்தில் நற்பவியே தன் அருகில் இருப்பது போல் தோன்றியது ஆரனுக்கு. குழந்தையும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்து யட்சிணியை தான் பார்த்துக் கொண்டிருந்தது விழி சிமிட்டாமல். யுதி காரை இயக்கத் துவங்க யட்சிணி குழந்தையின் முகத்தை அமைதியாக பார்த்தவள் இருமுறை கண்களை சிமிட்டினாள் குறும்பாக. அதில் குழந்தையின் இதழ் தானாக வளைந்தது சிரிப்புடன். மீண்டும் அதே போல் அவள் குழந்தைக்கு சிரிப்பு காட்டும் வகையில் செய்ய இந்த முறை வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான் குழந்தை. ஆனால் சிரிக்கும் பொழுது கூட அவன் குரல் சத்தம் அவ்வளவாக வெளியே வரவில்லை அதை கண்ட ஆரனுக்கு புருவம் சுருங்கியது 


குழந்தையின் பிஞ்சு கரத்தை பிடித்துக் கொண்ட யட்சிணி அவன் கரத்தில் முத்தம் கொடுக்க அதில் உடல் கூசி உடலை வளைத்து சிரித்தான் குழந்தை. "அப்பு குட்டிக்கு என்ன வேணும் தங்கப் புள்ளைக்கு சிரிப்பு வருதோ அம்மாவை பார்த்து சிரிக்கிறீங்களா?" என்று அவள் ஆரன் இருப்பதையே மறந்து குழந்தையுடன் விளையாடிக்கொண்டே வர அவள் குழந்தையுடன் எவ்வாறு நெருக்கமாக உள்ளாள் என்பதை அமைதியாக உள்வாங்கியபடி அமர்ந்திருந்தான் ஆரன். அலுவலகத்திற்கு முன்பு கார் வந்து நிற்கவும் யட்சிணி குழந்தையை அவனிடமிருந்து வாங்க முற்பட்டாள். அதை தடுத்தவன் "நானே தூக்கிட்டு வரேன்" என்று கணீர் குரலில் கூறிவிட்டு காரில் இருந்து கீழே இறங்கினான் 


அவனின் செயலில் முகம் சுருங்கி போனது அவளுக்கு. அதை பார்த்த யுதிக்கு கஷ்டமாக இருந்தது குழந்தையின் உடைமைகளை எடுத்துக்கொண்டு தொங்கிய முகத்துடன் அவள் மறுபுறம் இறங்கி நிற்க காரை சுற்றிக்கொண்டு வந்து நின்ற ஆரன் யட்சிணியின் கரங்களை பிடித்தான். அவனின் செயலில் அவள் விலுக்கென்று நிமிர்ந்து அவனை புரியாமல் பார்க்க ஒரு கையால் தான் மகனை ஏந்தியபடி மற்றொரு கரத்தை பெண்ணவளின் கரத்தோடு பினைத்துக்கொண்டு கம்பீரமாக உள்ளேன் நுழைந்தான் ஆரன் 

ஏனோ இப்பொழுது அவனின் செயலில் உள்ளம் குளிர்ந்து போனது அவளுக்கு. அவன் தன்னை நிராகரிக்கவில்லை என்று அவளுக்கு நன்றாக புரிந்துவிடவே முகமூழுவதும் புன்னகையுடன் கம்பெனிக்குள் நுழைந்தாள் யட்சிணி. வேலை செய்யும் அனைத்து பணியாளர்களும் இவர்களை ஒன்றாக கண்டு விழித்து பார்க்க அதை எல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன் தங்கள் அறை நோக்கி சென்றான். அறைக்குள் நுழைந்தவுடன் குழந்தையை அவளின் கரத்தில் திணித்தவன் "எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போய் அதை முடிச்சுட்டு வரேன் நீ தம்பிய பாத்துக்கோ டேபிள்ல நான் செக் பண்ண வேண்டிய பைல்ஸ் எல்லாம் இருக்கு அது எல்லாத்தையும் ஒரு தடவை நீ செக் பண்ணு நான் வந்து அகைன் செக் பண்ணிட்டு சைன் பண்ணிக்கிறேன்" என்று கூறிவிட்டு அவன் வெளியேறிவிட "என்ன இவரு வந்த வேகத்தில் திரும்பி வெளியே போறாரு என்ன ஆச்சு இவருக்கு?" என்று புரியாமல் அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் யட்சனி 

அவளின் முகத்தை தன் பிஞ்சு கரம் கொண்டு தன் புறம் திருப்பிய குழந்தை அவள் மூக்கை பிடித்து ஆட்டிக் கொண்டு விளையாடினான். அவனில் செயலில் வாய்விட்டு சிரித்தவள் அவன் மூக்கோடு தன் மூக்குரசி அவனை செல்லம் கொஞ்சியவாரே டேபிளில் இருந்த பைல்களை எடுத்துக்கொண்டு வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்து குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டு சரி பார்க்க துவங்கினாள். குழந்தை அமைதியாக அவள் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளை தொந்தரவு செய்யாமல் அறையையே சுற்று சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆரன் அறைக்குள் நுழைய யுதியும் அவன் பின்னே வந்தான் "முக்கியமான மீட்டிங் என்ன இருக்குன்னு சொல்லு யுதி" என்று கூறியவாறு தன் இருக்கையில் அமர்ந்தான் ஆரன். அவன் அன்றைய நாளுக்கான அவனது வேலைகளை அவனுக்கு பட்டியலிட ஆரம்பிக்க ஆரன் மீது ஒரு கண்ணை பதித்தவாறு கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தாள் யட்சிணி. யுதி அனைத்தையும் கூறி முடிக்க "பைல்ஸ் செக் பண்ணிட்டியா மாயா?" என்றான் கம்பீரமான குரலில் இப்பொழுது அவள்புறம் திரும்பி ஆரன் 


அவனின் புது விதமான அழைப்பில் முதலில் அதிர்ந்து போனவள் உடனே தன்னை சமன் செய்து கொண்டு"பண்ணிட்டேன் சார் எல்லாத்தையும் செக் பண்ணிட்ட. சில கரெக்ஷன் ஒர்க் மட்டும் இருக்கு அத மட்டும் சரி பண்ணிட்டா நீங்க சைன் பண்ணிடலாம்" என்று அவள் அமைதியான குரலில் கூற "என்னென்ன கரெக்ஷன் ஒர்க் இருக்கோ அத எல்லார்கிட்டயும் கொடுத்து சரி பண்ணி என்கிட்ட பைல ஃபைனலா ஒரு தடவை செக் பண்ணி எடுத்துட்டு வந்து குடு அதுக்கப்புறம் நான் சைன் போடறேன் இப்ப எனக்கு மீட்டிங் இருக்கு நான் மீட்டிங் ஹால் போகிறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்


அவளும் சரி என்று தலை அசைத்து விட்டு மீண்டும் கோப்புகளை யார் யாரிடம் கொடுக்க வேண்டும் என்று ஆராய ஆரம்பிக்க குழந்தை பசியில் சினுங்க ஆரம்பித்தான். அதில் பதறிப் போனவள் வேகமாய் பால் பவுடரை எடுத்து பிளாஸ்க்கில் இருந்த சுடு தண்ணீரில் கலக்கி பக்குவமான சூடு வந்தவுடன் பால் புட்டியில் அடைத்து குழந்தைக்கு புகட்ட தொடங்கினாள் குழந்தையோ அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் தாலியை அவள் சேலைக்குள் இருந்து வெளியே எடுக்க முயற்சி செய்து கொண்டே பாலை குடித்துக் கொண்டிருக்க அதை கவனிக்கும் நிலையில் இல்லை பெண்ணவள். குழந்தை பால் அருந்தும் அழகைதான் ரசித்துக்கொண்டிருந்தாள் 

ஒரு வழியாக அவள் உடைக்குள் மறைத்திருந்த தாலியை வெளியே எடுத்துவிட்ட குழந்தை தாலியை கையில் வைத்து விளையாடியவாறே பாலை அருந்தி அப்படியே தூங்கிவிட்டது அப்பொழுதுதான் கவனித்தால் குழந்தையின் கையில் தாலி சிக்கி இருப்பதை. அதை கண்டு ஒரு மென் புன்னகை சிந்தியவள் குழந்தையை சோபாவில் படுக்க வைத்து அவன் கீழே விழாதவாறு அரவணைப்பாக தான் அமர்ந்து கொண்டு இன்டர்காம் மூலம் பைலில் கரெக்ஷன் செய்ய வேண்டிய ஆட்களை வரவைத்து அவர்களிடம் பைலை கொடுத்துக் கொண்டிருந்தாள் பெண் அவள்

மாலை வேலை தான் அறைக்குள் மீண்டும் வந்தான் ஆரன். அவன் முகமே சோர்ந்து இருப்பதை கண்டவள் இன்று அவனுக்கு நிறைய வேலை என்பதை உணர்ந்து கொண்டாள் குழந்தை சமத்தாக சோபாவில் அமர்ந்து யட்சிணி கொடுத்த பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்க "கிளம்பலாம் மாயா" என்றான் ஆணவன். இம்முறை அவள் அதிரவில்லை. அதற்கு சரி என்று தலை அசைத்து விட்டு பொருட்களை எல்லாம் எடுத்து மீண்டும் பைக்குள் அடக்கிக் கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தாள் அவள் காருக்குள் ஏறியவுடன் யுதி காரை இயக்கத் துவங்க 'நான் சொல்ற ஹாஸ்பிடல்க்கு போ யுதி" என்றான் ஆரன். அவள் கூறியதை கேட்டு "என்ன ஆச்சு மாமா எதுக்கு ஹாஸ்பிடல் போகணும்னு சொல்றீங்க உடம்பு எதுவும் சரி இல்லையா என்ன?" என்று அவன் பதட்டமாக கேட்க பெண்ணவளுக்கு பதட்டமாக தான் இருந்தது அவன் கூறியதை கேட்டு. ஆனால் ஆரன் அவனின் கேள்விக்கு பதில் கூறாதவன் "சொன்னது மட்டும்  செய்
****ஹாஸ்பிடலுக்கு போ" என்று ஒரு மருத்துவமனையின் பெயரை கூறிவிட்டு அதற்கு மேல் எதுவும் பேசவில்லை ஆனவன். யுதியும் அவனை எதிர்த்து பேச முடியாமல் அவன் கூறிய ஹாஸ்பிட்டலை நோக்கி காரை இயக்க துவங்கியிருந்தான்


மருத்துவமனை வந்தவுடன் குழந்தையை தூக்கிக்கொண்டு யட்சிணி இறங்கும் முயல மீண்டும் குழந்தையை அவள் கையில் இருந்து வாங்கிக் கொண்டவன் முன்னே நடக்க எதற்காக மருத்துவமனைக்கு இவன் வந்துள்ளான் என்று பதட்டத்துடனே அவன் பின்னே வந்தாள் யட்சிணி
யுதியும் அவர்களுடன் வர ரிசெப்ஷனில் சென்று தங்கள் விவரத்தை கூறினான் ஆரன். அந்த பெண்ணும் "செகண்ட்ல ரூம் நம்பர் 24 சார் அங்க போங்க" என்றாள் தாழ்மையான குரலில். அதை ஏற்று இவன் அங்கே விரைய அவன் பின்னே ஓடாத குறையாக சென்றனர் இருவரும். ரிசப்ஷனில் வேலை செய்யும் பெண் கூறிய அறைக்குள் ஆராய்ந்து நுழைய அவன் பின்னே நுழைந்தனர் யுதிஷ்டிரன் மற்றும் யட்சிணி. அங்கே உள்ளே 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மருத்துவர் இவர்களை வரவேற்றார் 


"வாங்க கரிகால் ஆரன் உங்களுக்காக தான் காத்துகிட்டு இருந்தேன் இவன்தான் உங்க பையனா?" என்று அவர் சிரித்த முகமாக அவர்களை வரவேற்க அதற்கு தாமும் ஒரு சிறு தலை அசைப்பை கொடுத்து அவர் முன்பு இருந்த இரு கையில் அமர்ந்த ஆரன் "ஆமா இவன் தான் என்னோட பையன் இவனுக்கு ஹெல்த் செக் பண்றதுக்காக தான் நான் இவனை இங்கே கூட்டிட்டு வந்து இருக்கேன்" என்றாம் உணர்ச்சிகள் துடைத்த குரலில் . அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து நெஞ்சில் கையில் வைத்துக் கொண்டாள் யட்சிணி.


தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....