பெண் கவிதை 44
காலை வேளையில் யட்சிணி தன் அறையில் இருந்து குளித்து முடித்து விட்டு வெளியே வந்தாப் வேலைக்கு கிளம்புவதற்காக. அன்று ஆரன் அவளை அனைத்து தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியவன் அதன் பின்பு அவளை கண்டுகொள்ளவே இல்லை. அவளோ அவனின் இந்த நிராகரிப்பில் பரிதவித்து போனாள்
குழந்தை ஆனால் அவளிடம் தான் இருந்தது. வேகமாக குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவள் குழந்தைக்கு பால் கலக்குவதற்காக சமையல் அறைக்குள் புகுந்தாள். எப்பொழுதும் கலகலப்பாக பெண்களின் சத்தத்துடன் இருக்கும் சமையலறை இப்பொழுதெல்லாம் அசாத்திய அமைதியால் சூழ்ந்திருந்தது ஒரு புறம் தியூதா கடனே என சமைத்துக் கொண்டிருக்க கயல்விழி ஒரு புறம் அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்தாள் அவள் முகத்தில் வெறுமை சூழ்ந்திருப்பதை காண சகிக்கவில்லை இவளுக்கு
அவள் அருகே சென்றவள் "மேடம்" என்று மெல்லிய குரலில் அவளை அழைக்க ஏதோ நினைவில் நின்றிருந்தாள் பெண் அவள். அடுப்பில் பால் பொங்கி வழிவது கூட தெரியவில்லை அவளுக்கு. அதை கண்டு பதறிப்போன யட்சிணி வேகமாய் அடுப்பை அணைத்துவிட்டு "மேடம்" என்று அவளை போட்டு உலுக்கினாள் அதில் சுயநினைவிற்கு வந்தவள் "என்ன என்ன வேணும்?" என்றாள் அவசரமாக "அடுப்புல பால் பொங்குது நீங்க பாட்டுக்கு ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க என்ன ஆச்சு மேடம்?" என்று இவள் கேட்க "எனக்கு என்னமா ஆக போகுது என் புள்ளையோட வாழ்க்கையை பற்றி யோசித்து யோசித்து என்னோட மீதி காலமும் இப்படியே கஷ்டத்தில் கழிய போகுது போல" என்று கண்களின் ஓரம் துளிர்த்த கண்ணீரை புடவை தலைப்பால் துடைத்தவாறு கயல்விழி கூற அதைக் கேட்ட யட்சிணிக்கு மனம் மேலும் வலித்தது
தியூதாவை திரும்பி பார்த்தவள் "நீங்களும் எவ்வளவு நாளைக்கு மேடம் இப்படியே இருக்க போறீங்க நீங்கதான் கயல் மேடத்துக்கு ஆறுதல் சொல்லணும் அவங்கள இந்த கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டு வரணும். ஆனால் நீங்களும் அவங்க கூட சேர்ந்து இப்படி வருத்தப்பட்டு இருக்கீங்களே" என்று இவள் மெல்லிய குரலில் கேட்க "என்னம்மா பண்றது ஆரன் கயல் அக்கா வயித்துல பொறந்தாலும் என் புள்ளையா தான் வளந்தான் இந்த கையில தான் அவனை தூக்கி வளர்த்தேன் என் பிள்ளை இப்படி வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்துட்டு இருக்கிறதை பார்க்கும்போது எனக்கும் கஷ்டமா இருக்கத்தானே செய்யும்" என்று கூறும் பொழுதே அழ ஆரம்பித்து விட்டாள் அவள். அதை கண்டவளுக்கு மேலும் கஷ்டமாகி போனது
என்ன சொல்லி இருவரையும் ஏற்றுவது என்று தெரியாமல் இவள் திணறிக் கொண்டிருக்க சற்று தன்னைத்தானே சமம் செய்து கொண்டு கயல்விழி "குழந்தைக்கு பால் எடுத்துட்டு போவதற்காக வந்தியா?" என்றாள் அவளின் நோக்கம் அறிந்து அதற்கு ஆம் என்று அவள் தலை அசைக்க "இரு பால் கலக்கிட்ட பாட்டில்ல ஊத்தி தரேன் எடுத்துட்டு போய் அவனுக்கு கொடு ஆரன் இன்னும் கீழே வரல இந்நேரம் அவனும் ஆபீஸ் கிளம்பி போவதற்காக தயாராதான் இருப்பான் ஆனா இன்னும் அவனை காணல" என்று கயல்விழி கூறியவாறேவேகமாய் குழந்தைக்கு பாலை ஆற்றி பால்புட்டியில் ஊற்றி யட்சணியின் கையில் திணிக்க "நான் போய் என்னன்னு பாக்குற மேடம்" என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் இருந்து வெளியே வந்தாள் யட்சிணி
அந்நேரம் சரியாக தூக்கத்தில் கண்களை கசக்கியவாறு சிணுங்கிக் கொண்டிருந்த தன் மகனை கையில் ஏந்தியவாறு கீழே இறங்கி வந்தான் ஆரன் குழந்தையோ அவன் கழுத்தை இறுக்கமாய் கட்டிக்கொண்டு அவன் தோள் வளைவில் புதைந்து சினுங்கிக் கொண்டே மீண்டும் தூங்க முற்பட அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவாரே கீழே இறங்கி வந்த ஆரன் யாராவது இருக்கிறார்களா என்று அறிய முற்பட அதற்குள் அவன் முன்பு வந்து நின்ற யட்சிணி "தம்பியை என்கிட்ட குடுங்க சார்" என்றாள் மெல்லிய குரலில் தலை குனிந்தவாறு
அதில் எந்த பதிலும் கூறாமல் அவள் கையில் தன் மகனை திணித்தவன் எப்பொழுதும் போல் அவளிடம் "பையன பத்திரமா பாத்துக்கோ உன்ன நம்பி தான் விட்டுட்டு போறேன் ஒரு வாரம் லீவு எடுத்து இருந்த. அதனால கூடவே இருந்து இவனை பார்த்துக்கிட்ட. இனி என்ன பண்ணலாம்னு இருக்க" என்று இவன் எப்பொழுதும் போல் கணீர் குரலில் கேட்டான். இவ்வளவு நாட்கள் தன்னிடம் ஒரு வார்த்தை பேசாதவன் இப்பொழுது பேசுவதை எண்ணி உள்ளுக்குள் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு
இந்த ஒரு வாரமும் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக அலுவலகத்திற்கு செல்லாமல் விடுப்பு எடுத்திருந்தாள் பெண் அவள். இப்பொழுது பிள்ளையை இங்கே விட்டுவிட்டு செல்வதா அல்லது தன்னுடனே அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டு செல்வதா? என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க சரியாக அந்த கேள்வியை அவளிடம் கேட்டு விட்டான் ஆணவன். என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தவள் "நான் முதல்ல தம்பிய குளிக்க வைத்து அவனுக்கு குடிக்கிறதுக்கு பால் கொடுக்கிறேன் சார் அதன் பிறகு இதை பத்தி பேசலாம் அவனுக்கு இந்நேரம் பசி எடுக்க ஆரம்பிச்சி இருக்கும்" என்று இவள் மெல்லிய குரலில் கூற அதற்கு இறுகிய முகத்துடன் சரி என்று மட்டும் தலை அசைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து விட்டான் ஆரன். அந்நேரம் அலுவலகம் கிளம்புவதற்காக தயாராகி வெளியே வந்த யூதி அலுவலகம் சம்பந்தமாக ஆரனிடம் பேச ஆரம்பிக்க குழந்தையை தூக்கிக் கொண்டு தன்னறைக்கு சென்று விட்டாள் பெண் அவள்
வேகமாய் குளியல் அறைக்குள் குழந்தையை தூக்கி சென்று அவனை வேகவேகமாய் குளிக்க வைத்து தான் அவனுக்காக வாங்கி வைத்திருந்த உடையை அணிவித்தவள் கயல் கொடுத்த பால் பாட்டிலில் இருந்த பாலை அவனுக்கு புகட்ட தொடங்கினாள் குழந்தையும் அவள் நெஞ்சில் சுகமாய் சாய்ந்து தன் பிஞ்சு கரங்களால் தனக்கு ஊட்டிக் கொண்டிருந்த யட்சிணியின் கரங்களை பிடித்துக் கொண்டு விழிகளை உருட்டி உருட்டி அறையையே ஆராய்ந்த வண்ணம் பாலை அருந்தி கொண்டிருந்தான்
ஏனோ அவனைப் பார்க்க பெண்ணவளுக்கு உள்ளுக்குள் தாய் பாசம் பொங்கிக்கொண்டு வந்தது தாயன்புடன் அவன் நெற்றியில் ஆழமாய் முத்தமிட்டவள் முழுவதுமாக அவனுக்கு பாலை புகட்டி விட்டு பின்பு அது அவனுக்கு ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக அவனை தூக்கிக் கொண்டு அறையில் அங்கும் இங்கும் நடந்தாள் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவாறு.
சிறிது நேரம் கழித்து அவனை தூக்கிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தவள் ஆரனை கண்டு அவன் அருகே சென்றாள் அவளின் வாசத்தை வைத்து எப்போதும் போல் அவளின் வருகையை உணர்ந்தவன் "என்ன முடிவெடுத்து இருக்க நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல" என்றான் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து. அதில் என்ன கூறுவது என்று தெரியாமல் அவள் திணறி நிற்க "குழந்தையை தூக்கிட்டு நீ ஆபீஸ்க்கு போய் யட்சிணி" என்று கூறியவாறு கீழே இறங்கி வந்தான் ஆரூரன். அவன் கூறியதை கேட்டு அவனை அதிர்ந்து பார்த்தாள் அவள். "சார் நான் எப்படி? இதுக்கு எல்லாரும் ஒத்துக்குவாங்களா" என்று அவள் தடுமாறியவாறு கேட்க "யாரு ஒத்துக்கணும் உன் புருஷன் மட்டும் ஒத்துக்கிட்டா போதும் வேற யாரும் உனக்கு பர்மிஷன் கொடுக்கணும்னு அவசியம் இல்ல இவனுக்கு நீ தான் அம்மா. இவன் மேல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அதனால நீ இவனை தாராளமா ஆபிஸ்க்கு கூட்டிட்டு போகலாம். ஏன் இவனை கூட்டிட்டு போறதுக்கு உனக்கு ஒரு வேலை விருப்பம் இல்லையோ?" என்று ஆரூரன் வேண்டுமென்றே கேட்க " அய்யோ சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க அப்படி எல்லாம் எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது இவனை என்கூடவே வச்சிக்கிறதுல்ல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான். ஆனா கயல் மேடம் எதுக்கு ஒத்துக்குவாங்களா?" என்று அவள் தயக்கமாக நிறுத்த "அதான் என் புருஷன் சொன்னாருல இவன் உன்னோட பிள்ளை இவன் மேல உனக்கு முழு உரிமையை இருக்குனு. அப்படி இருக்கும்போது நான் கூட இந்த விஷயத்துல உன்ன எதுவும் சொல்ல முடியாது யட்சிணி. உன் பிள்ளையை நீ தாராளமா உன்கூட கூட்டிட்டு போலாம் எனக்கு எந்த ஆச்சோப்பனையும் இல்லை மா" என்று கூறியவாறு கயல்விழி சமையல் அறையில் இருந்து வெளியே வர அதை கேட்ட பின்பு அவள் முகத்தில் சிறு புன்னகை பூத்தது
இப்பொழுது ஆரன் என்ன கூறுவானோ என்று மங்கை தயக்கத்துடன் அவனைப் பார்க்க அவனும் அனைவர் பேசுவதையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தான் தன் கோர்ட்டை ஒரு முறை நீவி சரி செய்து கொண்டவன் "யுதி அவளை கூட்டிட்டு வா ஆபீஸ்க்கு போகலாம் டைம் ஆயிடுச்சு" என்று கூறிவிட்டு முன்னே நடக்க அதைக் கேட்டவளுக்கு மேலும் மகிழ்ச்சியானதும் தன் கரங்களில் இருந்த தன் பெறாத மகனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் "அம்மா கூட இன்னைக்கு ஆபீஸ் வரீங்களா தங்கம் நாம் அங்க போய் ஜாலியா எல்லார் கூடவும் இருக்கலாம்" என்று அவனை கொஞ்சியவாரே அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் யுதியை பார்த்து "அண்ணா ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் இருங்க தம்பிக்கு தேவையான திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடறேன்" என்று கூறிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு ஒருவித துள்ளாத உடன் தன் அறைக்கு சென்றாள். ஆரூரன் கயல்விழி அவளை பார்த்தவர்கள் மனதுக்குள் நெகிழ்ந்து போயினர். கயல் வாய்விட்டு கேட்டுவிட்டாள் "எப்படிங்க இந்த பொன்னால இப்படி இருக்க முடியுது எந்த ஒரு பெண்ணும் தன் கணவரோட முதல் குழந்தையை இப்படி பார்த்துக்கணும் நினைக்க மாட்டா. ஆனால் இவ மட்டும் எப்படி வெள்ளந்தியா இருக்காளே" என்று கயல்விழி கேட்க "அதுதான் அவளோட குணம் விழி அதனாலதான் இவ நம்ம பிள்ளைக்கு ஏத்தவான்னு நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன்" என்று ஆரூரன் கூட அதை தலையசைத்து ஏற்றுக் கொண்டாள் கயல்விழி
கூறியது போல் ஐந்து நிமிடத்திற்குள் குழந்தைக்கு தேவையான பால் பவுடர் பால் புட்டி பஞ்சினால் ஆன சிறிய துணிகள் மற்றும் குழந்தை தேவையான மற்றொரு செட் உடை என்று அனைத்தையும் ஒரு பையில் போட்டுக்கொண்டு தூக்கிக்கொண்டு வெளியே வந்தவள் "சார் மேடம் நான் போயிட்டு வரேன் பாய்" என்று கூறியவள் குழந்தையின் பிஞ்சு கரங்களை பிடித்து "தாத்தா பாட்டிக்கு பாய் சொல்லுங்க செல்லம்" என்றாள் அவளும் குழந்தை போல் கிங்கினி பாஷையில். குழந்தையோ மலங்க மலங்க விழித்து விட்டு கையை மட்டும் ஆட்டியது அவர்களை. பார்த்து அதை கண்டு பூரித்துப் போன கயல்விழி யட்சணியின் கரங்களில் இருந்தவாறு குழந்தையின் கண்ணத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு அவனுக்கு நெட்டி முறித்தாள்.
"போதும் யட்சிணி இதுக்கு மேல நம்ம இங்கே நின்னுகிட்டு இருந்தா அப்புறம் மாமா கோபப்பட்டு கத்த ஆரம்பிச்சிடுவாரு வா போகலாம் குட்டி பையா நம்ம கார்ல போலாமா வரீங்களா எங்க கூட" என்று யுதி கூறிவாறே குழந்தையை கொஞ்ச சரி என்று தலையசைத்துவிட்டு அவர்களிடம் இருந்து விடை காரை நோக்கி சென்றாள் யட்சிணி. காரின் பின் சீட்டில் எப்பொழுதும் போல் இறுகிய முகத்துடன் ஆரன் அமர்ந்திருக்க இப்பொழுது எங்கே அமருவது என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தாள் யட்சினி முன்னே சென்ற அமர்ந்தால் அதற்கும் ஏதாவது திட்டுவானோ என்று அவள் யோசித்து இருக்க "யுதி பின் பக்க கதவை திறந்து விடு" என்றான் ஆளுமையான குரலில் யுதிஷ்டிரன் இடம் ஆரன். அதில் விழி விரித்து அவனைப் பார்த்தாள் ஆச்சரியமாக யட்சணி.
தொடரும்...
தொடரும்
Comments
Post a Comment