பெண் கவிதை 50
துரியன் ரோகனை கண்டவுடன் பயத்தில் எழுந்து நின்று விட்டான் ரோகன் என்ன கூறுவானோ என்று உள்ளுக்குள் பயம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே சென்றது துரியனுக்கு. ரோகனோ அழுத்தமான காலடிகளை ஊன்றி அறைக்குள் நுழைந்தவன் நேராக ஆருரன் முன்பு வந்து நின்றான்
விழிகள் சிவக்க கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்ட ஆரூரனயே ரோஹன் உறுத்து விழித்துக் கொண்டிருக்க வித்யூத் "டேய் கோவப்பட்டு எதுவும் பேசிடாத அவன் எது பண்றதா இருந்தாலும் யோசிச்சு தான் பண்ணுவான் முதல்ல எதுக்காக இவன் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கான்னு நம்ம அவன்கிட்ட பொறுமையா கேப்போம் டா அவன் நம்மளோட நண்பன் அதை மறந்துடாத" என்று இங்கு ரோஹன் மகள் வாழ்வில் முடிவெடுப்பதற்கு இவன் யார் என்று ஆரூரனை ஏதாவது பேசி விடுவானோ என்ற பயத்தில் அவனிடம் வித்யூத் கூற"வாய மூடுடா இடியட்" என்று கத்தினான் ரோகன்
அதில் மேலும் பயந்து போனான் வித்யூத் இனி இவனை தன்னால் கூட அடக்கிய இயலாது என்று இயலாமையுடன் அவன் தன் நண்பனை பார்க்க ஆரூரன் புறம் திரும்பிய ரோகன் "துரியன் கிட்ட விருப்பத்தை கேளு சீக்கிரமா அப்பதான் பொண்ணோட கல்யாண வேலையை ஆரம்பிக்க முடியும்" என்றான் தன் நண்பனை முறைத்துக் கொண்டே. அதில் அனைவருக்கும் இப்பொழுது விழி பிதுங்கியது. ஆரன் மட்டும் உதட்டின் ஓரம் பூத்த மர்ம புன்னகையுடன் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் கவனமாக
வித்யூத் தன் நண்பனை நோக்கியவன் "என்னடா நீ அவனை முறைச்ச ரேஞ்சுக்கு அவன போட்டு நல்லா நாலு வெலாசு வெலாசுவான்னு பார்த்தால் இப்படி உடனே ஓகே சொல்லிட்ட" என்று ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்க அவன் புறம் திரும்பியவம் "நான் எதுக்குடா அவளை திட்டனும்?" என்றான் விழிகள் சுருக்கி ரோகன் வித்யூத்தை பார்த்து. ஆரூரன் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்க "பின்ன என்னடா. நீ வெளியே இருந்து வரும்போது உன்னோட பொண்ணு வாழ்க்கைல முடிவெடுக்கறதுக்கு அவனுக்கு உரிமை இல்லைன்னு சொல்லி அவகிட்ட சண்டை போட போறேன்னு பயந்துட்டேன்" என்று நெஞ்சில் கை வைத்து நீவிக்கொண்டே பெருமூச்சு விட்டவாறு வித்யூத் கூற "அறிவு கெட்டவனே என் பொண்ணுனா அவனுக்கும் பொண்ணு மாதிரி தான் டா அவனுக்கு எல்லா உரிமையும் விருஷாலி மேல இருக்கு அவனுக்கு உரிமை இல்லைன்னு சொல்றதுக்கு எனக்கு தான் உரிமை இல்லை. ஆனா இந்த நாய் என்ன பண்ணான்னு தெரியுமா?" என்று ரோகன் கோபமாய் கத்த அவன் கூறியதை கேட்டு புரியாமல் அவனை அனைவரும் பார்த்தனர்
"என்ன பண்ணான்?" என்று ஆருத்ரன் கண்டிப்பாக தன் அண்ணன் ஏதோ வில்லங்கம் செய்துள்ளான் என்று உணர்ந்து கொண்டு ஆரூரனை பார்த்து கேலி சிரிப்பு சிரித்தவாறு கேட்க அதில் தன் தம்பியை முறைத்தான் ஆருரன். "என்ன பண்ணானா காலையில போன் பண்ணி உர்ராங் குட்டான் குரல்ல இன்னிக்கு ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்து சேரு ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும் அப்படின்னு ரோபோட் மாதிரி பேசுறான் டா என்ன ஏதுன்னு கேட்டாலும் டீடைல்ஸ் சொல்லல இவன் பேசறது வச்சு கேட்கும்போது ஏதோ பெரிய பிரச்சனை இருக்குனு நினைச்சு நானே இவனை இழுத்துகிட்டு அடிச்சு புடிச்சு ஓடி வந்தா இவன் இங்க சாவகாசமா சம்பந்தம் பேசிகிட்டு இருக்கான் இதுதான் விஷயம்னு போன்லயே சொல்லித் தொலைத்திருந்தா கூட எனக்கு இவ்வளவு பயம் இருந்திருக்காது நான் இவனுக்கு தான் ஏதோ பிரச்சினை ஆயிடுச்சு போல வீட்டுக்கு ஓடி வரேன் எல்லாம் இந்த நாயால வந்தது எப்பயும் என்ன இப்படி பயப்பட வைக்கிறது இவனுக்கு வேலையா போச்சு" என்று ரோகன் குதியோ குதி என்று குதிக்க அதைக் கேட்ட யுதிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை
வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் சிரிக்க ஆரம்பித்து விட வித்யூத் தன் மகனின் தோளில் அடித்தவன் "சும்மா இருடா அவனே ஏற்கனவே கோவத்துல கத்திக்கிட்டு இருக்கான் இதுல நீ வேற சிரிச்சே அவனோட கோபத்தை அதிகமாக ஆக்காத" என்றான் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு வித்யூத். "சித்தப்பா இது தான் விஷயமா இதுக்கு தான் நீங்க இவ்ளோ கோவப்பட்டீங்களா ஆரூரன் மாமாவோட குரல் எப்படி இருக்கும்னு நம்ப எல்லாருக்குமே தெரியும் அவர் சாதாரணமாக பேசினால் கூட சண்டைக்கு போற மாதிரி தான் பேசுவார் அவர் பேசுவதை போய் நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டு இப்படி உயிரை கைல புடிச்சுகிட்டு அரக்கப் பறக்க ஓடி வந்து இருக்கீங்க பாத்தீங்களா உங்களை சொல்லனும்" என்று அவன் மேலும் சிரித்தவாறு கூற துரியனுக்கு கூட அவ்வளவு நேரம் இருந்த பதட்டமும் பயமும் சென்று சிறு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது உதட்டில் ஆனாலும் ஒரு பக்கம் பயமாகத்தான் இருந்தது ஆரூரன் முடிவை எண்ணி
"இப்படி நின்னு கத்திக்கிட்டு சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்து பரலோகம் போய் தொலையாத இப்படி வந்து உட்காரு" என்று ஆரூரன் தன் நண்பனை முறைத்தவாறு அழைக்க அவன் அருகே சென்று அமர்ந்த ரோகன் அவன் தோளில் பட்டென்று அடித்தான் கோபமாய் . அதில் ஆரூரன் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் விழிகளை உருட்டி தன் நண்பனை முறைத்து விட்டு இப்பொழுது மீண்டும் அனைவரும் திரும்பியவன் "ரோகனை இந்த விஷயம் பேசுவதற்காக தான் காலையில வர சொல்லி இருந்தேன் துரியனையும் வீட்டுக்கு நான் வர வைக்கணும்னு நினைச்சேன் ஆனா அன் எக்ஸ்பர்ட்டட்லி அவனே வீட்டுக்கு வந்துட்டான் இட்ஸ் ஓகே லீவ் இட். இப்போ விஷயத்துக்கு வருவோம் நான் யுதிக்கும் தஷிக்கும் கல்யாணம் முடிஞ்ச பிறகு விஷாலிக்கும் துரியனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன்" என்று ஆரூரன் நேரடியாகவே கூற "இப்பவே எதுக்கு மாமா அவளுக்கு கல்யாணம்? அவ காலேஜ் தானே படிச்சிட்டு இருக்கா இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே சின்ன பொண்ணு அவ" என்று தன் தங்கைக்காக பரிந்து பேசினான் மெல்லிய குரலில் யூதி
"நீ சொல்றது கரெக்ட் தான் யூதி ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உன்னோட அத்தைய நான் கல்யாணம் பண்ணும் போது அவளுக்கு 19 வயசுதான் அந்த வயசுலயே அவ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப வரைக்கும் நல்லா தானே இருக்கா எந்த பிரச்சினையும் எங்களுக்குள்ள இல்லையே அப்பப்போ பிரச்சினை வந்தாலும் நாங்க அதை எங்களுக்குள்ளே சரி பண்ணிக்கலையா? அத பத்தி இப்ப பேச வேண்டாம் இதுல விருஷாலிக்கும் துரியனுக்கும் விருப்பம் இருக்கான்னு கேக்கணும் அதைவிட முக்கியம் ரோகன் யஷ்வி ஓட விருப்பம். ரோகன் சம்மதம் சொல்லிட்டாலே யஷ்விக்கும் சம்பந்தம்னு தான் அர்த்தம் ஏன்னா இவங்க ரெண்டு பேரும் எப்படியான அண்டர்ஸ்டாண்டிங் கப்பில்னு நம்மளுக்கு நல்லாவே தெரியும் அது மட்டும் இல்லை என் தங்கச்சி என்னோட பேச்சுக்கு கண்டிப்பா மதிப்பு கொடுப்பா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" என்று ஆரூரன் கூறும் பொழுதே "சரியா சொன்னீங்க அண்ணா நீங்க என்ன சொன்னாலும் அதை நான் கேட்டு நடப்பேன் என் புருஷனோட பேச்சுக்கு நான் மறுப்பேச்சு பேசமாட்டேன் அது உங்களுக்கு நல்லாவே தெரியும் அதனால எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான் இப்ப பொண்ணு மாப்பிள்ளையோட விருப்பத்தை தான் நீங்க கேக்கணும்" என்று கூறியவாறு அறைக்குள் நுழைந்தாள் யஷ்விகா
"இவளையும் கூட கூட்டிட்டு வந்துட்டியாடா?" என்று ஆரூரன் கேட்க "பின்ன என்னமோ ஏதோன்னு பயந்து வரும்போது இவளை தனியாக விட்டு வர முடியும் அதுதான் எல்லாரும் கிளம்பி வந்துட்டோம் மான்வி கீழ கயல் கூட இருக்கா" என்று ரோகன் கூற இப்பொழுது அனைவரின் பார்வை துரியன் புறம் திரும்பியது அவனோ "அய்யய்யோ என்ன எல்லாரும் ஒரே மாதிரி அட்டாக் பண்றாங்க இப்ப என்ன பண்றது?" என்று கைகளை பிசைந்து கொண்டு தலை குனிந்து கொள்ள ஆரன் கட்டிலில் இருந்து எழுந்தவன் தன் தொண்டையை செறும்பிக்கொண்டு பேண்ட் பாக்கெட்டுக்குள் இரு கரங்களை நுழைத்தவாறு துரியன் புறம் திரும்பியவன் "உன்னோட முடிவு என்னன்னு சொல்லு துரியா விருஷா கிட்ட நாங்க பேசிக்கிறோம்." என்றான் கணீர் குரலில் ஆரன். அதற்குள் கயல் தியூதா என அனைவரும் வந்துவிட்டனர் ஆரன் அறைக்கு. யட்சிணியும் உடனேயே இழுத்து வந்து விட்டாள் தஷிகா
"நீங்கள் மட்டும் கீழே என்ன பண்ண போறீங்க வாங்க. மேல என்ன நடக்குதுன்னு தெரியல ஆனா பெரிய மாநாடு நடக்குதுன்னு மட்டும் தெரியும் போய் பார்ப்போம்" என்று அவளை இழுத்துக் கொண்டு வர உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தனியாக விட்டு விட்டு வர முடியாது என்று அவனையும் தூக்கிக் கொண்டு வந்து விட்டாள் யட்சிணி குழந்தை அவள் தோளில் சாய்ந்து விட்ட தூக்கத்தை தொடர தன் கணவனின் அருகே சென்று நின்று கொண்டாள் அமைதியாக யட்சிணி அவளின் வாசத்தை வைத்து அவளின் அருகாமையை உணர்ந்தவன் எதுவும் பேசிக்கொள்ளவில்லை அவளிட.
துரியன் அமைதியாக நின்று இருக்க தியூதாவின் பின்னே மறைந்து நின்று அவள் தோளில் முகம் புதைத்து ஓரக்கண்ணால் துரியனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் விருஷாலி வெட்கத்துடன். துரியனோ "சார் நான் எப்படி அவங்களுக்கு கணவனா... அதுவும் உங்க வீட்டுக்கு மருமகனா வர முடியும் எனக்கு என்ன தகுதி சார் இருக்கு?" என்று அவன் கைகளை பிசைந்து கொண்டு கூற யட்சினியோ ஏன் இந்த அண்ணன் இப்படி பேசிகிட்டு இருக்கான் இந்த நேரத்துல என்று அவனை மனதிற்குள் கரித்துக் கொட்டினாள்
ஆரன் விழிகளை ஒரு சுழட்டு சுழற்றியவன் "அந்தஸ்து பார்க்கிற பழக்கம் எங்ககிட்ட கிடையாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும் துரியா அதனால இடியட் இந்த மாதிரி பேசுறத விட்டுட்டு உனக்கு விருப்பம் இருக்கா இல்லையா என்று மட்டும் சொல்லு" என்றான் மீண்டும் அழுத்தமாக துரியன் தயங்கி நிற்க ஆரன் இப்பொழுது யட்சுமியின் புறம் திரும்பியவன் "இங்கே இருப்பதுல நீ அவனுக்கு முக்கியமான உறவு மாயா. இப்ப நீ தான் அவன் வாழ்க்கைல முடிவெடுக்கணும் நீ சொன்னா அவன் கேட்பான் அவன் மனசுல என்ன என்ன இருக்குன்னு உனக்கும் தெரியும் அவன் கிட்ட பேசிட்டு சொல்லு" என்று ஆரன் கூற யட்சிணி துரியன் சென்றவள் "அண்ணா அதான் இவ்வளவு பேர் சொல்றாங்கல உனக்கும் அவ மேல விருப்பம் இருக்கு ஏன் இப்படி எல்லாம் கைக்கூடி வரும் போது வேணாம்னு மறுக்கிற ஒத்துக்கோ ண்ணா" என்று அவள் மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காத வண்ணம் பேச "ஆனா எனக்கு" என்று இழுத்தான் துரியன்.
விஷாலி தான் "எனக்கு சம்மதம் நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஆளுக்கு முன்பாக கத்தினாள் எங்கே துரியன் வேண்டாம் என்று கூறிவிடுவானா என்ற பயத்தில் அவளின் சத்தத்தில் யஷ்வி ரோகன் தலையில் அடித்துக் கொண்டனர் தங்களின் மகளின் லட்சணத்தை கண்டு.
தொடரும்....
Comments
Post a Comment