பெண்கவிதை 54

ஆரன் யட்சிணியிடம் நீதான் குழந்தைக்கு தாய் அதனால நீ தான் பெயர் வைக்க வேண்டும் என்று அவளிடம் கூற அவன் கூறியதை கேட்டு அவனை அதிர்ந்து பார்த்தாள் யட்சிணி

"நான் எப்படி குழந்தைக்கு பேர் வைக்கிறது அதெல்லாம் வேண்டாம் நீங்களே வைங்க" என்று அவள் அவசரமாக கூற "மாயா உன்ன நான் நேம் வையினு சொன்னேன் சும்மா சும்மா என்ன திரும்பி பேச வைக்காத ஒழுங்கா குழந்தைக்கு பேர் வை" என்று மீண்டும் அழுத்தமான குரலில் ஆரன் கூற அதற்கு மேல் அவனை எதிர்த்துப் பேச முடியாமல் அமைதியானவள் அப்படியே நின்றிருந்தாள் 


வீட்டில் இருந்த அனைவருக்கும் ஏதோ போல் ஆகியது அவளின் அமைதி. "என்னம்மா அவன் இவ்வளவு சொல்றான் நீ அமைதியா நிக்கிற ஏன் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கிறது என்று நீ எதுவும் யோசிச்சு வைக்கலையா?" என்று ஆருத்ரன் கேட்க "அது வந்து மாமா பேர் என்னனு செலக்ட் பண்ணி வச்சிருக்கேன் ஆனா அது உங்க எல்லாருக்கும் பிடிக்குமான்னு எனக்கு தெரியலையே" என்று அவள் அப்பாவியாக கூற அவள் கூறியதை கேட்டு அனைவருக்கும் சிரிப்பாக இருந்தது 


"குழந்தையோட அம்மா அப்பா நீங்கதான். அவனுக்கு என்ன பெயர் வைச்சு நல்லா இருக்கும்னு உங்களுக்கு தான் தெரியும் அதனால நீங்களே ஒரு நல்ல பேரு வையுங்க" என்று ஐயர் கூற அதை ஏற்றுக் கொண்டவள் தயக்கத்துடன் ஒருமுறை ஆரனை நிமிர்ந்து பார்த்தாள் அவனோ நேர்கொண்ட பார்வையுடன் அமைதியாக நின்று இருக்க ஒரு பெரும் மூச்சை ஒன்றை வெளியிட்டு குழந்தையின் காது அருகே குனிந்தவள் "சூர்யக்கர்ணா சூர்யகர்ணா சூர்யகர்ணா என்று மூன்று முறை தன் மகனுக்கு பெயர் சூட்டினாள் தாய் அன்புடன் 


அவள் கூறிய பெயர் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது போல கைதட்டி ஆரவாரம் செய்தனர் . அவர்களின் ஆரவாரத்தை கண்டு குழந்தையும் கைதட்டி சிரித்தான்.  "வாவ் செம பேரு சூப்பரா இருக்கு அண்ணி. தம்பிக்கு ஏத்த பேருதான்" என்று தஷிகா ஒருபுறம் அவளை பாராட்ட "ஆமா எனக்கு பேரு ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப யூனிக்காவும் இருக்கு ஏன் தம்பிக்கு நீங்க இந்த பெயரை செலக்ட் பண்ணுங்க க்கா?" என்றாள் புரியாமல் விருஷாலி. அதில் குழந்தையை தூக்கி தன் கரங்களில் வைத்துக் கொண்ட யட்சிணி அவன் தலையை வருடிவிட்டவாறு "என் பையன் நல்ல பண்புகளை கொண்டவனாகவும் எல்லாருக்கும் உதவுற குணம் இருக்கிறவனாகவும் வளரனும் என்று நினைக்கிறேன் மகாபாரதத்தில் கர்ணனுக்கு கொடைவள்ளல் என்று ஒரு பெயர் உண்டு அந்த மாதிரி என்னோட பையனும் எல்லாருக்கும் உதவி செஞ்சு கொடைவள்ளல் என்று பெயர் எடுக்கணும் அதுக்காக தான் இவனுக்கு இந்த பெயரை நான் வச்சிருக்கேன் அது மட்டும் இல்ல கர்ணன் வீரத்தில எவ்வளவு உயர்ந்தவர்னு நம்ம எல்லாருக்கும் தெரியும் அதே மாதிரி வீரம் பொருந்தியவாவும் இருக்கணும்னு தான்  இந்த பேரு வச்சிருகேன்" என்று அவள் குழந்தையின் கண்ணத்தில் முத்தமிட்டவாறு கூற "எங்களுக்கு இந்த பேரு ரொம்ப புடிச்சிருக்கு மா" என்று கூறினாள் கயல்விழி

யட்சிணி ஆரன் என்ன கூறுவான் என்று எதிர்பார்ப்புடன் அவன் முகம் நோக்க அவனும் எதுவும் கூறிக் கொள்ளாதவன் "அதான் பங்க்ஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சு இல்ல அடுத்து என்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்று கூறிவிட்டு அங்கிருந்து இரண்டு அடி எடுத்து வைத்தவன் மீண்டும் அங்கேயே நின்று துரியன் யுதி இருவரையும் அழைத்துக் கொண்டவன் தன் தந்தைக்கு தொலைபேசியில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவாறு அங்கிருந்து நகர்ந்தான் 


அவர்கள் மூவரும் அங்கிருந்து வெளியேறிய பின்பு ஐயருக்கு கொடுக்க வேண்டிய தட்சணையை கொடுத்து அவரை அனுப்பி வைத்து ஆரூரன் அலுவலகம் சம்பந்தமாக ஏதேனும் வேலைகள் இருக்கிறதா என்று பரிசோதிக்கலாம் என்று தன்னறைக்கு செல்ல முற்பட அவன் தொலைபேசியில் வந்திருந்த ஆரன் குறுஞ்செய்தியை கண்டு புருவம் சுருக்கினான் 


அதில் ஆரன் அவனையும் ஆருத்ரனையும் ஓரிடத்திற்கு வருமாறு இடத்தின் பெயரை கூறிவிட்டு மெசேஜ் முடித்து வைத்திருக்க அதை கண்டு குழம்பிப் போனவன் ஆரன் கூறி இடத்திற்கு ஆருத்ரனை அழைத்துக் கொண்டு சென்றான். இங்கு துரியன் மற்றும் ய்யுதிக்கு அவன் எங்கே அழைத்து செல்கிறான் எதற்காக அழைத்து செல்கிறான் என்று தெரியவில்லை.. ஆனாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் தங்களை அழைத்து செல்கிறான் என்று நன்றாக புரிந்து விட்டது அவர்களுக்கு. யுதி காரை இயக்கிக் கொண்டிருக்க பின்னே ஆரன் அருகே அமைதியாக அமர்ந்திருந்தான்.   ஆரன் கூறிய இடத்திற்கு வந்து விட்டனர் அனைவரும். அது ஊரை விட்டு சற்று ஒதுக்கப்புறமாக இருந்த ஒரு ஆள் அரவமற்ற இடம். அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய குடோன் போன்று ஒன்று காட்சியளிக்க காரில் இருந்து இறங்கிய ஆரன் அமைதியாக அந்த குடோனுக்குள் நடக்கத் தொடங்கினான் 


சிறிது நேரத்தில் ஆரூரன் மற்றும் ஆருத்ரன் இருவரும் வந்துவிட்டவர்கள் அங்கு. உள்ளே வந்தவர்கள் கண்டது என்னவோ அங்கு தரையில் மண்டியிட்டு அமர வைக்கப்பட்டு கை கால்கள் கட்டிய நிலையில் இருந்த இரண்டு பேரை தான். அதுவும் அந்த இரண்டு பேரும் உருகுலைந்து காணப்பட்டனர். உடலில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்து போய் இருக்க இருவரும் அரை மயக்கத்தில் அமர்ந்திருந்தனர் அங்கு நிறைய பேர் கையில் துப்பாக்கி இந்திய வண்ணம் நின்று இருக்க நடுநாயகமாக அங்க போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் ஆரன்  கம்பீரமாக 


ஆரூரன் ஆருத்ரன் இருவரும் ஒருவரை மற்றொருவர் பார்த்துக் கொண்டவர்கள் அமைதியாக அங்கு வந்து நின்றனர் துரியனுக்கு அந்த இருவரையும் பார்க்கும் பொழுது ஏதோ சரியில்லை என்று தோன்ற யுதியிடம்  "என்ன ஆச்சு இவங்க ரெண்டு பேர் யாரு? எதுக்கு இப்படி இருக்காங்க? பாஸ் எதுக்கு நம்மள இங்க கூட்டிட்டு வந்து இருக்காரு? ஏதாவது பிரச்சனையா?" என்று அவனிடம் ள் கேட்க "எனக்கும் அதான் ஒன்னும் புரியல துரியா ஆனா ஏதோ பெரிய பிரச்சனை மட்டும் தெரியுது எதுவா இருந்தாலும் மாமா நம்மகிட்ட சொல்லுவாரு பொறுமையா இருப்போம்" என்று அவனை சமாதானம் செய்தான் .  ஆரூரன் தன் மகனை தீர்க்கமாய் நோக்கியவன் "இவனுக்கு ரெண்டு பேரும் யாரு கரிகாலா?" என்று அழுத்தமான குரலில் அவனிடம் வினவ தான் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியை இருக்க பிடித்துக் கொண்டு கோபத்தை அடக்கிய வண்ணம் அமர்ந்திருந்த ஆரன் தன் தந்தையின் கேள்வியில் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான் விலுக்கென்று.  அவனுடல் கோபத்தில் இரும்பாய் இருக்க முகம் கோபத்தில்  சிவந்திருந்தது. அதில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டு ஆருரன் தன் மகனின் தோளை தொட "இவனுங்க தான் ப்பா நவி சாகறதுக்கு காரணமா இருந்தவனுங்க இவனுங்களால தான் என் நவி என்ன விட்டு போனா" என்றான் வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி கர்ஜனையாக 


அவனின் சத்தத்தில் மயக்கத்தில் இருந்த அந்த இருவரும் கண்விழித்து விட்டார்கள். மருண்ட விழிகளுடன் சுற்றி முற்றி பார்ப்பது கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை "டேய் யார்ரா பீங்க எல்லாம்? எதுக்கு அடிச்சு இப்படி கட்டி வச்சிருக்கீங்க நாங்க யாருன்னு தெரியுமா தேவையில்லாம எங்க கிட்ட மோதறீங்க ஒழுங்கு மரியாதையாக விட்டுடுங்க இல்ல உங்கள உரு தெரியாம அழிச்சிடுவோம்" என்று சிங்கத்தின் முன்பு நின்று கத்தும் நரி போல் ஊளை இட்டுக் கொண்டிருந்தனர் 


அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆரனுக்கு அதற்கு மேல் கோபத்தை அடக்க முடியவில்லை அவனால். அவர்கள் சப்தம் வந்த திசை நோக்கி ஆக்ரோஷமாய் சென்றவன் சரியாக குறி பார்த்து வீரபாண்டியனின் நெஞ்சில் ஓங்கி மிதித்திருந்தான். அவன் மிதித்த மிதியில் அவன் நெஞ்செலும்பை உடைந்த சத்தம் நன்றாக கேட்டது அனைவருக்கும். அவனின் இந்த ஆக்ரோஷத்தை கண்ட அனைவரும் பயந்து போய் இருக்க தன் மகனின் நிலை கண்டு அதிர்ந்து போனான் முத்துப்பாண்டி. ஆம் நற்பவியை  அடித்து காயப்படுத்தி அவளை கொல்ல நினைத்த முத்துப்பாண்டி மற்றும் வீரபாண்டியை தான்  தன் கஸ்டடிக்கு கொண்டு வந்திருந்தான் ஆரன்..அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து போன ஆருத்ரன் "இவங்களா இவங்கதான் அப்படி பண்ணாங்களா? என்னடா சொல்ற எங்களுக்கு  புரியல" என்று அவன் கூற ஆரன் தன் தொண்டையை செரும்பி கொண்டவன் நற்பவி எப்படி இருந்தால் என்பதை யட்சிணிஇடம் கூறியது போல் இவர்களிடமும் ஒன்று விடாமல் கூற அதைக் கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது 


அதிலும் யுதி மற்றும் துரியனுக்கு அவன் கூறுவதை மிகவும் புதிதாக இருந்தது இவன் நற்பவி என்ற ஒரு பெண்ணை காதலித்தானா என்பதே அவர்களுக்கு ஆச்சரியம் அதிலும் அவன் அனைத்து விடயங்களையும் கூற கூறஇவர்களுக்கு தலையே சுற்றியது

அவள் கூறியதை கேட்டு முகம் இரறுக நின்றிருந்த ஆரூரன் "இவன்கள எப்போ கஷ்டடிக்கு கொண்டு வந்த?" என்றான் அவர்களை உறுத்து விழித்தவாறு. "ரெண்டு நாளா என்னோட கஸ்டடியில் தான் இருக்கிறானுங்க சிறப்பான கவனிப்புதான் இவனுங்களுக்கும் ஆனா இவனுங்களை இப்படியே விடக்கூடாதுப்பா என் நவியை எவ்வளவு காயப்படுத்தி இருக்காங்க தெரியுமா அநியாயமா அவளோட பாட்டி இவன் கொன்னு இருக்கானுங்க இவனுங்கள உயிரோடவே இருக்க கூடாது என் கையாலே துடி துடிச்சி இவனுங்க சாவணும்" என்றவன் பாடிகார்டு ஒருவன் கொடுத்த இரும்பு ராடை வைத்து அவர்கள் இருவரையும் அடித்து நொறுக்க ஆரம்பித்து விட்டான் இப்பொழுது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அனைவருக்கும் வெறி தான் ஏறியது 

ஒரு பெண்ணையும் அவளின் வயதான பாட்டியையும் எவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் இவர்கள்  இவர்களுக்கெல்லாம் இந்த தண்டனை பத்தாது இன்னும் அதிகமான தண்டனையை இவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று அனைவரும் அவர்கள் அலறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு நின்றனர் வீரபாண்டி மற்றும் முத்துப்பாண்டிக்கு அனைத்தும் புரிந்து விட்டது. நற்வியின் மரணத்திற்கு தான் தங்களுக்கு இந்த தண்டனை கிடைக்கிறது என்று நன்றாக புரிந்து கொண்டவர்களுக்கு அவர்களிடம் மன்றாட கூட உடலில் தெம்பு இல்லை. ஆக்ரோஷமாய் அவர்களை தாக்கிக் கொண்டிருந்த தன் மகனை தடுத்த ஆருரன் "இவனுங்களை நீ அடிச்சு கொன்னுட்டா இவனுங்க கஷ்டமே தெரியாமல் செத்துப் போயிடுவானுங்க ஆனா இவனுக்கு இருக்கிற கொஞ்ச நாளும் அணு அணுவா துடித்து சாகனும்" என்று அழுத்தமான குரலில் ஆரூரன் கூற அவன் கூறியதை கேட்டு தன் தந்தையை புருவம் சுருக்கி யோசனையாக பார்த்தான் ஆணவன். 


"இவனுங்கள கைய கால கட்டி நடு காட்டில் கொண்டு போய் போட சொல்லு அங்க சோறு தண்ணி இல்லாம மிருகங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா இரையாகட்டும் அப்பதான் இவனுங்களுக்கு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தும் போது அவங்களோட வலி எப்படி இருந்திருக்கும்னு தெரியும் இவன்ல நம்ம கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும் இவனுங்க கொஞ்சம் கொஞ்சமா சாகிரதை பற்றி நமக்கு அப்டேட் வந்துகிட்டே இருக்கும் அந்த மாதிரி செட் அப் பண்ணிடலாம்" என்று தன் அண்ணனை தொடர்ந்து ஆருத்ரன் கூற அவர்கள் கூறிய தண்டனை சரியாக தான் தோன்றியது அனைவருக்கும். ஆரனும் தன் நற்பவியின் மரணத்திற்கு இந்த நீதிதான் அவளுக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணினானோ என்னவோ  தன் தந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டான் மனவேதனை தாளாமல்.


தொடரும்...


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....